“அப்படி இல்லை ஆன்ட்டி... உங்களுக்கு எதுக்கு எக்ஸ்ட்ரா வேலைன்னு யோசிச்சேன்...”
“நான் எங்கே செய்றேன்... சமையல் செய்ய ரெண்டு பேர் இருக்காங்க சரண்யா... நீ அதெல்லாம் நினைச்சு கவலை படாதே... நாளைக்கு நைட் வேலைல இருந்து வரும் போது நேரா எங்க வீட்டுக்கு வந்திரு... நீயும் நிஷாவும் டின்னர் சாப்பிட்டு, அப்புறம் இங்கே வரலாம்...”
அரை மனதுடன் சரி என தலை ஆட்டினாள் சரண்யா!
சாப்பிட்டு முடித்து கை கழுவிய நளினி, “சரி சரண்யா, மைத்தி எழுந்ததும் உன்னை பார்க்க வர சொல்றேன்... அதுக்கு முன்னாடி ஏதாவது வேணும்னா தயங்கிட்டு இருக்காம, நேரா வந்து கேளு, சரியா?” என்றாள்!
சரண்யா தலையை அசைத்தாள்!
நளினி கிளம்பி செல்லவும், சரண்யா ஆச்சர்யத்துடன் கதவின் அருகிலேயே நின்றிருந்தாள்!
நளினி மைத்ரேயியின் அம்மா என்பதை அவளால் நம்ப முடிந்தது! ஆனால் அவளே தான் மித்ரனின் அம்மா என்பதை நினைத்துப் பார்க்க கூட அவளுக்கு கடினமாக இருந்தது! எப்படி இப்படி ஒரு அம்மாவிற்கு அப்படி ஒரு மகன்???
ஆனால் மித்ரனை பற்றி தொடர்ந்து யோசிக்க பிடிக்காமல், வேலையில் கவனத்தை திருப்பி பொருட்களை அடுக்கி வைக்கும் வேலையை தொடங்கினாள் சரண்யா!
✽✽✽
மார்கழி மாதம் என்பதால் வீட்டு வாசலில் பெரிய கோலம் போட்டுக் கொண்டிருந்தாள் சரண்யா...
“குட் மார்னிங் டா...”