(Reading time: 9 - 17 minutes)
Malaiyil yaaro manathodu pesa...
Malaiyil yaaro manathodu pesa...

ரொம்ப அதிகமா தெரியுது... சிம்பிளா அம்மா இல்ல ஆன்ட்டின்னு கூப்பிடு...”

   

“அது சரியா இருக்காது மேடம்... மைத்ரேயி மேடம் கீழ வேலை செய்றவ நான்,” என்றாள் சரண்யா மீண்டும் தயக்கத்துடன்!

   

“மைத்தி ஆஃபீஸ்ல வேலை செஞ்சா என்னையும் மேடம்ன்னு கூப்பிடனும்னு ரூல்ஸ் இருக்கா என்ன? நீ ஆன்ட்டின்னு தான் கூப்பிட்டாகனும்!”

   

மறுக்க முடியாமல் சரி என தலை அசைத்தாள் சரண்யா!

   

“பொங்கல் அருமையா இருக்கு சரண்யா! ரொம்ப தேங்க்ஸ்!”

   

“என்ன நீங்க இதுக்கு போய் தேங்க்ஸ் சொல்றீங்க... எனக்கும் நிஷாக்கும் நீங்க செஞ்சிருக்க உதவிக்கு நான் தான் உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லனும்!”

   

“அதனால என்ன, நீயும் சொல்லு, நானும் சொல்றேன்,” என்ற நளினி, அவர்களின் பேச்சை கையில் பொம்மையுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நிஷாவை பார்த்து சிநேகத்துடன் புன்னகைத்தாள்!

   

நிஷாவும் வெட்கம் மின்ன பதிலுக்கு புன்னகை புரிந்தாள்!

   

மீண்டும் சரண்யா பக்கம் கவனத்தை திருப்பிய நளினி, “பொருள் எல்லாம் அடுக்கி வைக்க ஏதாவது ஹெல்ப் வேணுமா சரண்யா,” என்றாள்!

   

“அவ்வளவு நிறைய பொருள் எல்லாம் இல்லை மேடம்... நானே செஞ்சிருவேன்...”

   

“எவ்வளவு சொன்னேன்... ஆனாலும் மேடம்ன்னு கூப்பிடுற???”

   

“சாரி... சாரி... ஆன்ட்டி,” என்றாள் சரண்யா மெல்லிய சங்கோஜத்துடன்!

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.