(Reading time: 9 - 17 minutes)
Malaiyil yaaro manathodu pesa...
Malaiyil yaaro manathodu pesa...

தான் இருந்தது... 

   

ஆனால் நல்லவேளையாக அவளும் நிஷாவும் வந்த பிறகு இதுவரை மித்ரன் ஒரு நாளும் இரவு உணவு நேரத்திற்கு முன் வீடு திரும்பவில்லை... அதனால் இதுவரையில் பரவாயில்லை... 

   

இப்படியே எப்போதும் இருக்க முடியாது தான்... ஆனால் மித்ரனை பார்க்காமல் இருக்கும் வரை மட்டுமே அவளுக்கு நிம்மதி...!!!!! 

   

சரண்யாவின் மனதினுள் மின்னலென எண்ணங்கள் ஓடிய நேரத்தில், நளினி சரண்யா போட்டிருந்த கோலத்தை ரசித்துக் கொண்டிருந்தாள். 

   

“ரொம்ப அழகா இருக்கு சரண்யா... இவ்வளவு பெரிய கோலத்தை நீயே தனியா போட்டேன்னு நம்பவே கஷ்டமா இருக்கு...” 

   

“பார்க்க தான் ஆன்ட்டி பெருசா தெரியும்... போட்டா ரொம்ப சிம்பிள் தான்...” 

   

“நான் இது வரைக்கும் கோலம் போட்டதில்லை அதனால எனக்கு அதை பத்தி எதுவும் தெரியாது... நான் போட்டா அந்த கோலம் அலங்கோலமா இருக்கும்னு வேணா கட்டாயம் சொல்லலாம்..”

   

சரண்யாவின் புன்னகை பெரிதானது...! 

   

“குட்! இப்படியே ஸ்மைல் செய்துட்டே போய் ஆஃபிஸ்க்கு ரெடி ஆகு... உன் லேடி பாஸ் சரியான பங்க்சுவாலிட்டி பைத்தியம்...!” 

   

நளினி சொன்னதை அப்படியே தான் செய்தாள் சரண்யா... 

   

முகத்தில் தவழும் புன்னகையுடனே அவளும் ரெடி ஆகி, நிஷாவையும் கிளப்பினாள்... 

   

ஆஃபிஸ் நடக்கும் தூரத்தில் இருந்ததால், பஸ் பிடிக்க அரக்க பறக்க ஓட வேண்டி இருக்கவில்லை... பொறுமையாக வேலைகளை முடித்து விட்டு கிளம்ப முடிந்தது...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.