நளினியின் குரல் கேட்டு புன்னகையுடன் நிமிர்ந்தாள் சரண்யா.
“குட் மார்னிங் ஆன்ட்டி...!”
இந்த வீட்டிற்கு சரண்யாவும் நிஷாவும் குடி வந்து இரண்டே வாரங்கள் தான் ஆகின்றன... ஆனால் அதற்குள் நளினியும் சரண்யாவும் நெடுங்காலம் தெரிந்தவர்களை போல பேசி பழக தொடங்கி இருந்தார்கள்...
முதல் நாள் சரண்யாவிடம் இருந்த தயக்கம், சங்கோஜம் எல்லாம் நளினியின் எளிமை + எளிதாக பழகும் பாங்கில் காணாமல் போயிருந்தது!
நளினி முதல் நாளே அவளும், நிஷாவும் தினமும் இரவு உணவை கட்டாயம் அவர்களுடன் தான் உண்ண வேண்டும் என்று அன்புக் கட்டளை இட்டிருந்ததால், சரண்யாவிற்கு மைத்ரேயியின் கணவன் ஜெயந்திடமும் பரிச்சயம் ஏற்பட்டிருந்தது!
ஜெயந்தும் சரண்யாவுடன் நட்புடனே பேசினான். அவனின் கண்ணியமான நடத்தையும், தேவைக்கு மட்டுமான பேச்சும் சரண்யாவை மிகவும் கவர்ந்திருந்தன...
எல்லாவற்றையும் விட மேலாக, கடந்த இரண்டு வாரங்களாக மித்ரன் அவள் கண்ணில் படாமலே இருந்தது சரண்யாவிற்கு வெகு நிம்மதியாக இருந்தது...!!!
என்ன தான் மைத்ரேயி மித்ரனும் சரண்யா இந்த வீட்டிற்கு குடி வருவதை ஏற்றுக் கொண்டிருப்பதாக சொன்னாலும், சரண்யாவின் மனதுக்குள் அவனைப் பற்றிய சந்தேகம் இருந்துக் கொண்டே தான் இருந்தது...
எங்கே, எப்போது சரண்யாவை பார்த்தாலும் மித்ரன் மட்டம் தட்டி தான் பேசுவான் என்று அவளுக்கு தெரியும்...!
நளினியின் பேச்சை மீற முடியாமல் இரவு உணவை நளினியின் வீட்டில் சாப்பிட்டாலும், சரண்யாவின் மனதுக்குள் மித்ரனை பற்றிய கேள்வி அல்லது நெருடல் இருந்துக் கொண்டே