(Reading time: 22 - 43 minutes)

 

ஜாஷ் பின்னால் வர்ற கூட்டத்தை பார்த்தால் பயமா இருக்கு.”

“இப்போதைக்கு அவங்க நமக்கு பாதுகாப்பு, சட்டிலைட் கேமிராவில் பார்க்க ஒரு கூட்டம் விளையாடுவதாய்தான் தோணும். நம்மளை நினைக்கமாட்டங்க”

“ஜீனியஸ் நீங்க ஜாஷ்”

“....................................”

உரையாடல் ஆங்கிலத்தில் நடந்து கொண்டிருந்தது. அவளோ தமிழில் “சரியான சிடுமூஞ்சி சிங்காரம்” என முனங்கினாள்.

. திரும்பி அவள் முகம் பார்த்தான். “என்ன குறை சொல்றியா?”

“உங்களுக்கு சிரிக்க தெரியலைனு சொன்னேன்”

மென் புன்னகை அவன் முகத்தில். “நன்றாக மேக்கப் போடுறீங்கன்னும் அர்த்தம்”

“..............................”

“ஒரு தேங்க்ஃஸ் சொன்னால் என்ன?”

“புகழ்ச்சியே மனிதனுக்கு ஏற்படும் சோதனை”

“இதுக்கு மட்டும் பைபிளை சொல்லுங்க. கொலை செய்றது தப்பில்லையா?”

“தண்டனை கொடுக்க அரசாங்கத்தால் அதிகாரம் கொடுக்கபட்டிருப்பவர்கள், சட்டம் சொல்லும் தண்டனையை கண்டிப்பாக கொடுக்கவேண்டும். கொடுக்காவிட்டால் தப்பவிடப்பட்டவனுக்கான தண்டனை இவன் மீதும், இவன் தலைமுறை மீதும் வரும்.அப்படின்னு அதே பைபிளில் சொல்லியிருப்பது தெரியுமா?”

“ஆக நீங்க ஏதோ ஒரு நாட்டிற்கான காமாண்டோ?”

ஒரு சிறு புன்னகை பதிலாக வந்தது.

“இத ஒத்துகொண்டால் என்னவாம், வாழ்நாளுக்கும் உங்கள பத்தி பெருமையா நினைச்சுப்பேன். இல்லைனா புத்திகொடு தெய்வமே அந்த போக்கத்தவனுக்குன்னு தினமும் புலம்பிட்டு இருப்பேன்.”

“இன்னைக்கே என்னை மறந்திடு. நீ என்னை நினைக்கவே வேண்டாம். மனதில இருக்கிற விஷயங்களை வாய் வெளிய பேசும். என்ன பத்தி உளறிர போற” அழுத்தமாய், கட்டளை போலும், ஒரு வித நட்பான ஆலோசனை போலும் அவன் சொல்ல, திடுக்கிட்டது பெண் மனது.

மறக்கவா இவனையா?

ண்ணுக்கெட்டிய தூரம் வரை கடல்., இவர்களை படு சத்தத்துடன் துரத்தும் கூட்டம்.

திடீரென படகை திருப்பி துரத்தி வந்த கூட்டத்தை நோக்கி ஓட்டினான். பகீரென்றது அவளுக்கு. “ஜ்ஜாஆஆஷ்ஷ்ஷ்..........”

இவர்களுக்கும் அந்த கூட்டத்திற்கும் இடையே இருந்த இடைவெளி கொதிகலன் பட்ட தண்ணீர் துளியாய் சுருங்கியது. அக்கூட்டத்தின் இரைச்சல் அவளது உயிர் வரை சென்று உலுக்கியது.

அந்த இரைச்சலையும் தாண்டி ஒரு சத்தம் வளர்ந்தது. வானத்தில் ஹெலிகாப்டர் வெளிச்சம் பாய்ச்ச ஏதோ எச்சரிக்கை அறிவிப்பு.. முதலில் அம்மக்களின் தாய் மொழியிலும் பின்பு ஆங்கிலத்திலும்.

அனைத்து படகுகளும் வந்த வழியே திரும்ப, இவனும் அதே போல் யு டர்ன் எடுத்து திரும்பினான். அதாவது பின் தொடர்ந்தவர்கள் திரும்பி போக இவர்கள் மாத்திரம் செல்ல நினைத்த திசையில் முன்னேறினர். இவர்களை இப்புறவாசிகளாக நம்பி விட்டனர் ரோந்து படையினர்.

ரோந்தை சமளித்தாயிற்று, இவர்களது பயண பாதையும் மாறவில்லை. கூட்டத்தையும் கழற்றிவிட்டாயிற்று.

“வாவ், ஜ்ஜாஷ்ஷ்.............., யு ஆர் சிம்ப்ளி சூப்பர்”

“இப்ப ரோந்து வரும்னு எப்படி தெரியும்? “

“இந்த தீவை பார்த்து பறந்துகிட்டு இருக்கேன்னதும், நிறைய டீட்டேய்ல்ஸ் கொடுத்தாங்க. நாம இருந்த வீட்டோட ப்ளூ ப்ரின்ட்ல இருந்து இந்த கூட்டம், ரோந்து வரை எல்லாம் அதில் அடக்கம்.”

“முதலில் ஹெலிகாப்டரிலும் கண்காணித்தாங்களோ?”

“என் மீது மைக்ரோ போன் இருந்தது. சாட்டிலைட் காமிராவில் ஹெலிகாப்டரை வெளிப்புறம் பார்த்திருப்பாங்க, அந்த வீட்டிற்குள் போனதும் என் காமிராவை வேற ஆன் செய்யனும். அதான் நீ மூவ் ஆகாம இருக்க கட்டி வச்சேன், காமிரா சார்ஜ் போனதும் தான் வந்தேன். மைக்ரோ போன் அதுக்கும் அப்புறம்தான் ஆஃப் ஆச்சு.”

“நல்லா சமாளிச்சீங்க”

“..................................”

“அப்பதான் ஹெலிகாப்டரில் வைத்து நீங்க அந்த தடியன்ட்ட பேசினதில இருந்தே உங்க மைக்ரோ போன்வழியா என்னைதான் கடத்திருக்கீங்கன்னு உங்க தலைமைக்கு தெரிஞ்சிருக்குமே! இப்ப நான் செத்துட்டதா நினைச்சுட்டு இருப்பவங்க நான் உயிரோட போனதும் உங்கள கண்டு பிடிச்சிரமட்டங்களா?” குரலில் பிராதனமாய் தெரிந்தது கவலை.

இவள் புறம் திரும்பவே இல்லாமல் பதில் சொன்னான்.

“கடத்தினவன் தப்பா வேற பொண்ணை கடத்திட்டான்னு நினைச்சுப்பாங்க.”

“வாவ், அப்படி என்ன செய்ய போறீங்க?”

“நானில்ல.செய்துட்டு இருக்கிறது உங்க அப்பா?”

“வாட்?”

“நீ காணாமல் போனது இன்னும் மீடியாவுக்கு வரலை.”

“அப்டின்னா, அப்பாவுக்கு நான் வேண்டாமா?”

“அறிவில்லாத மாதிரி பேசகூடாது, ரகசியமா தேடுராங்களா இருக்கும். அதனால பொண்ணை மாத்திட்டாங்கன்னு என் சீஃப் நினைச்சிகிடுவார்.”

“உங்க சீஃப்ட்ட எதுக்கு என்னை மறைக்கிறீங்க?” அவங்க உங்களை நம்புறவங்க............

“அப்ப ஒன்னு செய்யலாம், நீ இந்த கடல்ல அப்படியே குதிச்சுறு!”

“ஹான்!”

“இல்லைனா என்னத்தான் உன்னை தூக்கி போட சொல்லுவாங்க”

“............................”

“இந்த மிஷன் ரொம்பவும் ரகசியமா இருக்க வேண்டியது கட்டாயம், அதனால இந்த விஷயம் தெரிந்த உன்னை, கண்டிப்பா உயிரோடு விடமாட்டாங்க. பலபேர காப்பாத்த ஒருத்தர் சாகலாம்னுதான் முடிவு எடுப்பாங்க.”

“நான் யார்ட்டயும் பொய் சொல்லலை, பொய் சொல்லவும் மாட்டேன். சில விஷயத்தை மறைக்கிறேன் அவ்வளவுதான். உண்மைய சொல்லனுங்கிறதுக்கு அர்த்தம் எல்லாத்தையும் எல்லார்ட்டயும் சொல்றதுன்னு கிடையாது.

அதோட என் நாடு எனக்கு குடுத்த வேலைய குறையில்லாம செய்துட்டு இருக்கேன். தேவையில்லாம ஒரு உயிர் கொல்லபடுவதை தடுக்க முடியுறப்ப தடுக்காம இருந்திரகூடாதுன்னுதான் உன்னை காப்பாத்த இவ்வளவு முயற்சியும்.

உன்னை காப்பத்தனும்னு ஒரு இன்ஸ்டிங்க்ட், அத ஃபாலோ பண்றது எப்பவும் என் பழக்கம். அது கடவுளே சொல்ற மாதிரி எனக்கு. அதே மாதிரி சூழ்நிலையும் இப்பவரைக்கும் அதுக்கு ஃபேவரா இருக்குது.”

“ஹும், இதுக்கு இந்த முயற்சியை என்ன கிட்னஅப் செய்றதை தடுப்பதில் காண்பிச்சிருக்கலாம்!”

“உன் வீடு பக்கத்தில் வரும் வரையும் உன்னை கடத்தபோறாங்கன்னு தெரியாது. 2 வருஷமா இவங்க ட்ரெயினிங்க் கேம்பில் காத்திருந்து இந்த குரூப் தலைவர்கள சந்திக்க வந்தேன். கிளம்புறப்ப இந்த தலைவர்கள் இடத்துக்கு வர்றேன்னு மட்டும்தான் தெரியும். உன் வீட்டு பக்கம் வரவும்தான் இந்த தீவில்தான் அவங்க இருக்காங்கன்னும் அதிலுள்ள இந்த வீட்டபத்தியும் சொல்லிகொடுத்துட்டு உன்னை தூக்க வந்தான் அவன்.”

“அதான் சூப்பர் சான்ஃஸுன்னு, அப்படி அவன் வந்திருக்கப்ப அவனை போட்டு தள்ளிட்டு போயிருக்கலாமே?” ‘ஐன்ஸ்டீன்னுக்கே ஐடியா குடுக்குற பரம்பரையாங்கும் நாங்க’ மனது மார்தட்டி கொண்டது.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.