(Reading time: 19 - 38 minutes)

 

ப்படின்னா மரகதவீணைக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையா...?”

தயனி விழிக்க இப்பொழுது விளக்கம் சொன்னது அபிஷேக்.

“நான் கண்டுபிச்சவரை அப்பா இறந்ததும் அம்மாவுக்கு இந்த நாட்டில தனியா முன்னால மதிரி வாழமுடியாதுன்னு தோணி இருக்குது. அவங்களுக்கு இந்த வீணை பற்றியும் எப்படியோ தெரிஞ்சிருக்குது. அவங்களுக்கு அப்பாவை எப்படியும் திருப்பி கொண்டுவந்திரனும்னு வெறி. அதனால அவர் உடலை பாதுகாத்துட்டு, தயனிக்கு எதிரா இவ்ளவு வேலையும் செய்திருக்காங்க. ஆனால் காரியம் வாய்க்கலை. இதுக்கு இடையில் எங்க கல்யாணதுக்கு பிறகு  அவங்களே எதிர்பாராம இயற்கை மரணம் அவங்களுக்கும் நேரிட்டிருக்குது. அதனால விஷயம் வெளிவந்துட்டு. “

“அப்படினா அந்த வீணையில அப்படி என்ன ரகசியம் இருக்குது....”சொல்லியபடியே அதை எடுத்து திறக்க முயன்றாள் தயனி.

அவள் பலத்திற்கு அது திறக்க மறுத்தது. அபிஷேக்கின் கை நிலையில் அது சாத்தியம் இல்லை என்பதால் அந்த இரு அங்குல சிறு வீணையை மஹிபனிடம் கொடுத்தாள் தயனி.

அவன் பலத்திற்கு அடங்கி திறந்தது அது. நகத்திற்குள் மறைக்கு மளவிற்கான சிறு சுருளைத்தவிர அதில் வேறு எதுவும் இல்லை.

சுருளை விரித்தால் உருபெருக்கியால் மட்டுமெ படிக்குமளவிற்கு சிறு எழுத்துகளில் எழுதபட்டிருந்தது. 

 நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்-இயேசு

ஓ....மரணத்திற்கு பிறகும் மனிதன் கடவுளடுன் வாழ முடியும்னு சொன்ன இதைத்தான் அவங்க விஷயம் தெரியாம தப்பா புரிஞ்சிகிட்டாங்களோ...?

‘சரி நீங்க எப்படி இப்படி டைம்க்கு வந்தீங்க’ன்னு யாருமே மஹிபனையும் சுகந்தினியையும் கேட்கவில்லை. ஏற்ற நேரத்தில் மனம் திருந்தினவங்களுக்கு  எப்படி உதவி அனுப்பவதுன்னு கடவுளுக்கு தெரியாதா?                                                                                                        

று மாதங்களுக்கு பிறகு:

மேடிட்டிருந்த மனைவியின் வயிற்றில் மெல்ல கைவைத்தபடி அவள் அருகில் படுத்திருந்த அபிஷேக் கேட்டான்.

“தயூமா.....நம்ம செல்லகுட்டி பொண்ணா இருந்தா உனக்கு எதுவும் குழப்பம் வந்துடாதே...”

சின்னதாக சிரித்த தயனி தன்னவனைப் பார்த்து சொன்னாள்  “ இது என் சின்ன பொக்கிஷம், என்னையும் என் அபியையும்  ஆண்டவர் நம்பி கொடுத்த கிஃப்ட்..யாரையும் திருட விட மாட்டேன்..”

நான்கு வருடங்களுக்கு பிறகு:

யனி அவசர அவசரமாக பர பரப்புடன் வேலை செய்து கொண்டிருந்தாள். அவள் வீட்டில் இன்று விருந்து.

சுகந்தினி அவளுக்கு உதவியாக பர பரத்துக் கொண்டிருந்தாள்.

“அம்மா.....”அழைத்தபடி வந்து நின்ற அந்த பொடியனுக்கு நான்கு வயதுக்குள் இருக்கும். அபிஷேக்கின் முகம் தயனியின் கண்கள்.

“என்ன சின்ன செல்லு...அம்மா கொஞ்சமே கொஞ்சம் பிசி...இப்ப வந்துடுவேன் குட்டிபா...”

“அதுல்லமா...நான் எல்லாரையும் நல்லாதானமா பார்த்துகிறேன்...”

மழலையின்றி தெளிவாக பேசுவது அவிவ் குட்டியின் பழக்கம்.

“ஆமாண்டா...குட்டிபா”

“நம்ம ஜீவு குட்டிய கூட நீங்க சொன்னமாதிரி ஸாஃப்டாதானே பிடிக்கிறேன்...” சொல்லியவன் சுகந்தினி முகம் பார்த்தான்.

ஜீவுகுட்டி எனப் படும் ஜீவ்யா சுகந்தினி மஹிபனின் முதல் வாரிசு.

சுகந்தினி முகத்திலும் புன்னகை. குனிந்து அவிவ் முன் முழந்தாள் படியிட்டாள்.

“உன் அளவுக்கு அஅன்டி கூட அவள ஸாஃப்டா பிடிக்கிறது இல்லமா... அவிவ் குட்டிக்கு இப்போ என்ன வேணும்....”

“இல்ல ஆன்டி இத அம்மாட்ட தான் கேட்கனும்... “

ஓ..ரொம்ப பெரிய ரகசியம் போல...சரி குட்டிபா...அம்மாட்டயே கேளுங்க..” தயனி தன் மகன் முன்பாக குனிந்து அவனுக்கு ஒரு முத்தம் வைத்தாள்.

“அம்மா நான் நல்லா பார்த்துபேன்மா...உங்கள ...அப்பாவ...இன்னும்...ஜீவுகுட்டிய...இன்னும் எல்லாரையும்மா...”

“ஆமாம் பட்டு...நீ நல்லா பார்த்துப்ப...” தயனியின் அகமும் முகமும் கனிந்தது.

“நம்ம வீட்டிலும் ஜீவு மாதிரி ஒரு குட்டி பாப்பா ஹாஸ்பிட்டல்ல இருந்து வாங்கிடலாம்மா...அந்த பாப்பாவையும் கூட நல்லா பார்த்துபேம்மா..” மகனை வாரிக் கொண்டாள் தயனி.

தன் பின்னான இருபத்து இரண்டு வருடங்களுக்கு பிறகு:

ன்று அவிவ் ஜீவ்யா திருமணம்.

உலக ப்ரசித்திபெற்ற பல கால்ஃப் விளையாட்டு வீர்ர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொள்கின்றனர். காரணம் அவிவ் இன்று  உலகபிரசித்தியான கால்ஃப் ப்ளேயர்.

மேடையில் மணமக்கள்  அருகில் அவன் தங்கை  அன்யுத்தா. அவளுடன் இணைந்து தாய் தந்தை வீட்டிலிருந்து வந்த தொழில்களை சிறப்புடன் நடத்தி வருகிறான் அவிவ்.

திருமணத்தில் குழந்தைகள் கூட்டம் அதிகம். காரணம், உலகம் முழுவதும் போரினால் பாதிக்கபட்ட குழந்தைகளுக்காகவும், சிறையிலிருக்கும் பெற்றோரின் தெருவோரத்து அனாதரவற்ற குழந்தைகளுக்காகவும் பல கல்வி நிறுவனங்களையும்,சிறார் இல்லங்களையும் நிறுவி நடத்தி வருகிறான் அவிவ்.

அவன் அம்மாவிடம் சொன்னதுபோல எல்லோரையும் நல்லா பார்த்துக் கொள்கிறான்.

இதை தடுக்கத்தான் அந்த ஆவிகளின் போராட்டம் போலும்.

எந்த குழந்தையும் கடவுள்ட்ட இருந்து வர்ற பொக்கிஷம்.

தன்னவன் கரம் பற்றியபடி தயனி தன் மகனையும் , அவனது காதல் மனைவியையும், அவன் வாழ்வின் மிக முக்கிய தருணத்தையும் இமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருந்தாள். இதயம் இன்பத்தால் நிரம்பி வழிந்தது. மனைவியின் ஈரக்கண்களை துடைக்க நீண்டது அவளது அபிஷேக்கின் கை.

மென் பனிகாற்றாய் ஒரு உணர்வு. இறைவனின் ப்ரசன்னம்.

இன்பம் தொடரும்.

முற்றும்.

கதை தந்த கடவுளுக்கு முதல் நன்றி

களம் தந்த சில்சீக்கும் அதன் தலைமைக்கும் பெரு நன்றி.

ஒத்துழைத்து, உதவிசெய்த தேன்மொழி & குழுவிற்கு திரள் நன்றி

பிழை பொறுத்து, உடன் வந்து, ஊக்குவித்த உங்களுக்கு ஓராயிரமாயிரம் நன்றி.  

(பேயை பற்றி பேசியதும், அதன் நிமித்தம் ஆன்மீகம் அலசியதும் இப்போதைக்கு போதும். அடுத்து இனிமையான காதலுடனும் காதலர்களுடனும் உங்களை சந்திக்க திட்டம். ஆதரவை தொடருங்கள் தோழியரே.)

Episode # 11

{kunena_discuss:762}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.