(Reading time: 17 - 34 minutes)

10. என்னைத் தந்தேன் வேரோடு - Anna Sweety

ங்ராட்ஸ்டா குல்ஸ்...நீ ஆசைப்பட்டபடியே நம்ம ஜூனியர் வர போறாங்க....” 

கவினின் அந்த வாழ்த்துதலில் அவனுக்கு விஷயம் புரிந்துவிட்டது என உணர முடிந்தாலும், அவன் வாழ்த்தியவிதம் முனுக்கென்றது வேரிக்கு.

அவன் மார்பில் சாய்ந்திருந்தவள் தலை நிமிர்த்தி அவன் முகம் படித்தாள். இயல்பில் இவளை காணும்போது அவன் முகத்தில் வரும் அந்த மலர்ச்சி அப்படியே இருந்தது. அப்படியானால் குழந்தைக்காக அவன் உணர்ச்சி வசபடவில்லை என்று அர்த்தமா?

Ennai thanthen verodu“உங்களுக்கு குழந்தை விஷயம் சந்தோஷமா இல்லையா....?”

“இல்லையே....குழந்தைய நினைச்சா சந்தோஷமா இருக்குதுதான்....ஆனால் இப்ப...உன் இந்த வயசுக்கு.....இத கொஞ்சம் தள்ளி வச்சிருக்கலாம்னு எனக்கு ஒரு எண்ணம்...முன்னமே உன்ட்ட சொன்னேன் தானே....ஆனா நீ ஆசைப்பட்ட....நீ கேட்ட பிறகு...அதுவும் நியாயமான ஒரு ஆசைக்கு நான் எப்படி நோ சொல்லுவேன்...”

“அப்படின்னா எனக்காக தானா?” அவள் குரல் மிகவும் உள்ளிறங்கி போயிற்று.

“இதென்ன குல்ஃஸ்...இப்படி பேசிகிட்டு....அது நம்ம குழந்தை...உனக்கு அடுத்தபடியா என் வாழ்க்கையில முக்கியமான உயிர்....மனசால கூட எனக்கு குழந்தை முக்கியமில்லனு நினைக்காதே...உன் நினைவு கூட பேபிய தொடும்....ஞாபகம் வச்சுகோ....”

வேரியின் முகத்தில் பழைய மகிழ்ச்சி வந்திருந்தது. ஆனால் எங்கோ உள்ளே ஒரு உறுத்தல் தடயமின்றி தஞ்சமானது.

“அத்தை மாமாட்ட சொல்லனும்....” தயங்கி சொன்னவள் முகம் வழியாக மனம் காண முயன்றான் கணவன்.

“அவங்க.....சந்தோஷ படுவாங்கதானே......ஒருவேள....”

“ஒருவேளை...??”

“அவங்க.....அவங்க....வருத்த......சாரி...பயபடுவாங்களோ...?”

“பயாமா.....? ஏன்மா...?”

“இல்ல....என்னமாதிரி...பிறந்திடும்னு.....என்னோடது ஜெனிடிகல் ப்ராப்லம் கிடையாதுன்னு அவங்களுக்கு தெரியாதுல்ல...அதான்...”

“எதையும் எதிர்பார்கிறப்பவே மனசுக்கு கஷ்டமான கோணத்துலதான் எதிர்பார்க்கிறதா....?”

“அதுக்கில்ல....அவங்க ஏற்கனவே நம்ம மேரேஜ்னால அப்சட்டா இருக்காங்கல்ல...அதுல இந்த நியூஸை எப்டி எடுத்துப்பாங்கன்னு...”

“உனக்கு ஒரு விஷயம் தெரியுமா....நம்ம மேரேஜ்னால அவங்க அப்செட்டா எதுவும் இல்ல.... அவங்க நம்ம மேல அப்சட்டா இருக்காங்கன்னு நான் எப்பவாவது சொல்லி இருக்கேனா....? நம்ம மேரேஜ் அன்னைக்கு  நாம கிளம்புறப்ப அவங்க கவனம் வியன் மேல இருந்துது...என்னதான் அவன் ஸேஃபா இருக்கான்னு நான் சொன்னாலும் அவன அதுவரை நாம யாரும் பார்க்கலை இல்லையா...? அதனால

 அப்புறம் நான் தான் கொஞ்ச நாள் நாம தனியா இருந்தாதான் ஒருத்தர ஒருத்தர் ஒழுங்கா...அடுத்தவங்க இன்ஃப்லுயென்ஸ் இல்லாம...சரியா புரிஞ்சிக்க முடியும்னு  அவங்கள வெயிட் பண்ண சொல்லி கேட்டுகிட்டேன்... இல்லனா எப்பவோ வந்து செல்லம் கொடுத்தே உன்னை இன்னும் சின்னபாப்பாவா ஆக்கி இருப்பாங்க...அவங்க நம்ம வீட்டுக்கு வரலைனதும் நீயாவே நல்லா கற்பனை செய்துகிட்ட....” 

“ஹான்...” 

“நீ வாய திறந்திருந்தாலும்  மூடி இருந்தாலும் எனக்கு ஓகே தான் குல்ஸ்....ஆனா கொசுவாவது....குருவியாது முட்டை போட்டுட்டுன்னு வச்சுக்கோ...”  

சட்டென தன் வாயை மூடிக்கொண்டாள் வேரி.

“பயங்கர சதியே நடந்திருக்கும் போல....”

“பின்னே....சாம்ராஜ்ய மகராணிய சம்மதிக்க வைக்கிறதுன்னா சும்மாவா………?”

“அதென்னங்க அப்படி ஒரு சாம்ராஜ்யம் எனக்கே தெரியாத சாம்ராஜ்யம்.....?”

“ம்...கவின் மன சாம்ராஜ்யம்தான்....ஃபர்ஸ்ட் மீட்லயே  பட்டத்து மகராணியா மனசுல மகுடம் சூட்டிட்ட.....அதுலவேற கிறுக்கு கவின்ட்ட மாட்டிவிட்டுடாதீங்க யேசப்பான்னு ஒரு அற்புதமான ஜெபம் வேற.... ”

“அது....நீங்க மிர்னாட்ட பேசாமலே கல்யாணம்னு சொன்னதும்....அப்ப எனக்கு உங்க விஷயம் தெரியாதில்லையா....சாரி...”

“சே....அதுக்கு இல்ல குல்ஸ்....அப்டி என் மேல ரொம்ப நம்பிக்கையா இருக்கிற மகராணிய மயக்றதுன்னா சும்மாவா...? அதான் தனியா கொண்டு வந்தாச்சு பொண்ண....இப்ப ஹாஸ்பிட்டல் போய்....விஷயம் கன்ஃபார்ம் ஆனதும்.....அவங்கட்ட சொல்லலாம்...எனக்கு தெரிஞ்சவரை உன் மாமியாரை நாளைக்கு இங்க எதிர் பார்க்கலாம்...”

“அ..தோட...” தயங்கி நிறுத்தினாள் வேரி.

“உன் பேரண்ட்ஸ்ட்ட சொல்லனும்...அவங்கள பார்க்கனும் அப்படிங்கிற மாதிரி எதையும் தவிர நீ வேற என்ன வேணாலும் கேளுடா...”

கவின் முகத்திலிருந்த அந்த கனிவு, குரலில் இருந்த அன்பு எதுவும் மாறவில்லை ஆனால் அவன் கண்கள்....

அதைப் பார்த்த பின்பு வேரியால் அதற்கு மேல் தன் தாய்வீடை பற்றி பேச முடியவில்லை. ஆனால் அதை அடிமனதால் முழுமையாக ஒத்துக்கொள்ளவும் முடியவில்லை.

ம்மச்சி, மின்மினி அவளது தந்தை அனைவருக்கும் விடை கொடுத்துவிட்டு வியன் மற்றும் மிஹிருடன் ஜெர்மனியின் கலோன் நகரம் சென்றடைந்த போது, மிர்னாவிற்குள் ஒரு சிறு வெறுமை. காரணம் அம்மச்சி நாடு திரும்பியது. உறவுகள் சுகம் என முதன் முதலில் உணரவைத்தவர்.

அதனால் வியனின் தோழி ஒஃபிலியா வீட்டில் இவள் தங்கும்படி ஏற்பாடு செய்திருப்பதாக வியன் சொன்னபோது மகிழ்ச்சியாக உணர்ந்தாள். வியனும் மிஹிரும் இன்னொரு வீட்டில்.

ஒஃபிலியா என்ற பெயரின் நிமித்தமும், அவளுடன் தொலைபேசியில் பேசும் போதெல்லாம்  வியன் போர்சுகீசில் பேசியதன் நிமித்தமும்  வெண்மையும் சிவப்புமாய் ஒரு போர்சுகல் ப்ரஜையை எதிர்பார்த்தாள் மிர்னா..

ஆனால் விமான நிலையத்தில் இவர்களை வரவேற்க வந்த ஒஃபிலியா உருவத்தில் தென்னிந்தியாவின் மொத்த அடையாளமாக இருந்தாள். சிவந்த தோலும் அந்த சுருண்ட கறுப்பு முடியும்....அழகு.

 வியனைப் பார்த்ததும் ஓடி வந்து அவனது இருகைகளையும், முதல் உலக சாதனை டெல்லியில் இவள் நிகழ்த்திய போது எப்படி வியன் இவளது இரு கைகளையும் பற்றிக்கொண்டானோ அப்படி பற்றிக்கொண்டு போர்ச்சுகீசில் பொறிந்து தள்ளியவள்,

‘பே’ என பார்த்துக்கொண்டு நின்ற மிர்னாவை தோளோடு அணைத்துக்கொண்டாள். வாங்க...வாங்க....என்றபடி.

வெள்ளகார சீமாட்டி வருவான்னு நினச்சா, இது என்ன ஒரு சிவப்பு தோல் சின்ன வெங்காயம் சீட்டி அடிச்சுகிட்டு வருது...

காரிலும் ஒஃபிலியா ஓட்டுனர் இருக்கையில், அவளுடன் முன்னால் வியன். பின் இருக்கையில் மிஹிரும் இவளும்.

ஒருவேளை மிர்னா நினைத்தது போல் ஒஃபிலியா ஒரு ஐரோப்பியராக இருந்திருந்தால்  இயல்பாய் இருந்திருக்குமோ என்னவோ, ஏதோ ஒருவகையில் இயல்பிழந்தது போல்....ஒரு வகை வெறுமையை உணர்ந்தாள் மிர்னா.

சற்று சத்தமாக ஒஃபிலியா எதையோ வழக்கம் போல் பொறிய, பூம் பூம் மாடு போல் வியன்.

மெடல்லு வாங்க போனேன்.......ஒரு மாடு பார்த்து நின்னேன்....

வாய்விட்டு பாடுனா பின்விளைவு எப்டி இருக்கும்னு யாருக்கு தெரியும். அதனால் மனதுக்குள் பாடிக்கொண்டால் எம் எம்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.