(Reading time: 17 - 34 minutes)

பெரியவன் சின்னவன் ரெண்டு பேருக்கும் உன்ட்ட இந்த விஷயத்தை இப்ப சொல்றதுல இஷ்டம் இல்லமா....உன் மனச கலைக்க கூடாதாம்...ஒலிம்பிக் லட்சியம் தடையில்லாம நிறைவேறனுமாம்......”

“ஆனா எனக்கு தான் உனக்கு வியன் மேல விருப்பம் இருக்குன்னு தெரிஞ்ச பிறகு.... எங்க எல்லாருக்கும் இஷ்டம் இருக்கிற விஷயத்தை சொல்லாம.... உன்னை விழுந்து விழுந்து கவனிக்க மட்டும் செய்தா,  குழப்பமாவும் கஷ்டமாவும் தான் இருக்கும்னு தோணிச்சு.... அது மட்டும் உன் பெர்ஃபார்மன்ஸை பாதிக்காதா...? அதான் உன்ட்ட விஷயத்தை சொல்லிடனும்னே நினச்சுகிட்டு இருந்தேன்....இப்ப கவின் உன்னை வியன் நம்பர்ல கான்டாக்ட் செய்ய சொன்னப்ப கூட அம்மா இந்த விஷயத்த சொல்லாதீங்கன்னு அட்வைஸ் மழை....”

“கவி....பெரியத்தானா பேச சொன்னாங்க இப்ப....?”

“ஆமா...இப்போ வேரி நம்பரை ட்ரை பண்ணியாமே....இப்போ இங்க இந்தியால  ரொம்ப லேட் நைட் இல்லையா, அவ தூங்றாபோல....அதான் கவின் என்னை கூப்பிட்டான்..... என்ன ப்ரச்சனைனு தெரியலைமா வியன் நம்பர்ல இருந்து மிர்னு வேரிய கூப்டுறா.... நீங்க பேசுங்கம்மா, எதுனாலும் வேரிய விட நீங்க பக்குவமா ஹேண்டில் பண்ணுவீங்கன்னு சொன்னான் அதான்...”

அப்பொழுதுதான் உறைத்தது மிர்னாவிற்கு. எத்தனை மணிக்கு இவள் அழைத்திருக்கிறாள்....? அதற்கு எப்படியான ஒரு பதில்.... மனதிற்குள் கவினை பாராட்டாமல் இருக்க முடியவில்லை மிர்னாவால்.  வியன் நம்பரிலிருந்து வேரிக்கு இத்தனை மணிக்கு மீண்டும் மீண்டுமாக அழைப்பு என்றவுடன் அது இவள்தான் என்று யூகித்ததோடு, இவளிடம் பேசாமலிருக்கும் வேரியைவிட இவள் ப்ரச்சனை எதுவாயினும் ஏற்ற தீர்வு சொல்ல அவன் தாய் தான் சரியான நபர் என உணர்ந்து  இவளை அழைக்க சொல்லி இருக்கிறான். இவளுக்கு கடவுள் நியமித்திருக்கும் குடும்பம் எத்தகையது....

“பை த வே நீ அவனை கவின்னு கூப்பிட்டாலும் எனக்கு எதுவும் வித்தியாசமா தோணாது....”

“தேங்க்ஸ்மா....எனக்கு அவ்ளவு சந்தோஷமா இருக்குது....எப்படி சொல்லனே தெரியலை.....உங்களுக்கு என் மேல கோபம் வருத்தம் எதுவும் இல்லையாமா?”

“சே....அப்படி எதுவும் இல்ல மிர்னு...ஒரு வார்த்தை நானோ, உங்க மாமாவோ, இல்ல பெரியவனோ உனக்கு இந்த கல்யாணத்துல சம்மதமான்னு கேட்டிருந்தா நீ தேவையில்லாம இவ்ளவு கஷ்டபட்டிருக்க வேண்டாமே...அதோட கஷ்டபட்டது நீ அதோட பலன் கவினுக்கும் எங்களுக்கும்ங்கிற மாதிரி வேரி எங்களுக்கு கிடச்சிருக்கா....கவின் இந்த கல்யாணத்தால எவ்ளவு சந்தோஷமா இருக்கான் தெரியுமா...? பிள்ளைங்க சந்தோஷமா வாழ்றத பார்க்கிறதவிட பேரண்ட்ஃஸுக்கு என்ன வேற சந்தோஷம் இருந்திரமுடியும்?..... இதுல உன மேல நாங்க என்ன காரணத்துக்காக கோபபட....

ஒரு வருத்தம் இருந்துச்சு.....உன்னை முதல் தடவை பார்தப்பவே இது உன் மருமகன்னு மனசுக்குள்ள அப்படி ஒரு உணர்வு....அது நிறைவேறாம போய்ட்டேன்னு....கொஞ்சம் குழப்பம்...கவின் மிர்னுதான் வியனுக்குன்னு எங்கட்ட சொன்னப்பதான் எனக்கு அந்த உணர்வோட அர்த்தமே புரிஞ்சிது...பரம சந்தோஷம்...”

“..............”

“மிர்னு...”

“எனக்கு இதுக்கெல்லாம் என்ன பதில் சொல்லனே தெரியலமா...அழதான் வருது... “

 “அப்படின்னா இன்னைக்கு வேரிய கூப்பிட காரணம் இந்த குழப்பம் தானோ...?”

ஆயிர கணக்காண மைல்களுக்கு அப்பாலிருந்து ஒரு தாய் தன் மகளின் மன ஓட்ட்த்தை புரிந்து கொள்வாளா தெரியவில்லை. ஆனால் இங்கு  இவள் மன ஓட்டத்தை புரிந்து கொள்ளும் இவர் யார்...?

“அம்மா...”

“மிர்னுமா...இனி இதெல்லாம் போட்டு குழப்பிட்டு இருக்காத...ஆனா எனக்கு உன்ட்ட இருந்து ஒரு ஹெல்ப் வேணும்....முதல் தடவையா கேட்கிறேன்...கண்டிப்பா செய்து தரனும்....”

“சொல்லுங்கம்மா....”

“இந்த விஷயத்தை நான் உன்ட்ட சொல்லிட்டேங்கிறதையோ...இது உனக்கு தெரியும்கிறதையோ வியனா உன்ட்ட வந்து  உங்க கல்யாண விஷயம் பேசுற வரைக்கும் நீ அவன்ட்டயோ இல்ல வேற யார்ட்டயுமோ சொல்ல கூடாது...”

அன்பு வாசகர்களே இந்த எபிசோடும் அடுத்த வார எபிசோடும் சற்று சிறியதாகதான் கொடுக்க முடிகின்றது.  12வது எபிசோடிலிருந்து மீண்டும் பெரிதாக கொடுக்க முயற்சிக்கிறேன். தயை கூர்ந்து பொறுத்தருள்வீராக. நன்றி. 

தொடரும்

Ennai thanthen verodu - 09

Ennai thanthen verodu - 11

{kunena_discuss:831}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.