(Reading time: 17 - 34 minutes)

ப்ச்...எல்லாருக்கும் நான் வேண்டாதவளா ஆகிட்டேன்....

அஸ் யூஸ்வல் என்றது உள்மனம்.

உண்மைதானே முன்பும் யாரும் இவளை கண்டுகொண்டது இல்லை, ஆனால் மனம் இப்படியா வெறுமை கீதம் வாசித்தது?

இப்பொழுது என்ன புதிய கதை...?

பிறவியிலேயே பார்வை இல்லாதவனை விட அதை அனுபவித்துவிட்டு பாதியில் இழப்பவனுக்குதான் தவிப்பு அதிகமாக இருக்குமாம்.....அப்படி ஆகிவிட்டதோ இவள் நிலை??

சோகப்பட என்னால முடியாது சொக்கி....சொடக்கு போட்டு துள்ளலோட நீ மாத்தி யோசி...

ற்று யோசித்துப்பார்த்தவளுக்கு இப்பொழுதைக்கு அவளுக்கு பேச இருக்கும் ஒரே நபர் மிஹிர் என்று தோன்ற அவனுக்கு அழைத்தாள்.

மிஹிர் நம்பர் பிசி.

ஓ மின்மினி....

மெத்தையில் ரூஃபை பார்த்தபடி படுத்தாள். சிறிது நேரம் சென்றிருக்கும் அவள் கையிலிருந்த மொபைல் சிணுங்கியது...

எடுத்துப் பார்த்தால் மிஹிர்.

“ஹலோ...மிர்...”

நான்தான்னு எப்படி நினச்சீங்க மிஹிர்..?

“வியன் தான் பிஸினஸ் டாக்ல முங்கி போயிருந்தாரே....நீதான் நாளைக்கு நம்ம ஷெட்யூல் என்னன்னு கேட்க கூப்பிடுவன்னு நினச்சேன்...”

“ஆமா....அதனால தூங்க போறேன்....ஷெட்யூல் சொல்லுங்க அலார்ம் செட் பண்ணனும்...”

அடுத்த 60 வினாடிகளில் அவனிடமும் பேசி முடிக்க, இப்பொழுது மொபைலை வியனிடம் சென்று கொடுக்க என அடுத்த காரணம் கிடைக்க மொபைலை எடுத்துக்கொண்டு வரவேற்பறைக்கு சென்றாள்.

அங்கு மெல்லிய இரவு விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருந்தது. எதிரிலிருந்த சோஃபாவில் அந்த சி.வெ உடை மாற்றாமல் போட்டிருந்த ஜீன்ஸ், ஷர்டிலேயே தூங்கிக்கொண்டு இருந்தது.

வியனை காணவில்லை. வீட்டின் கதவு உட்புறமாக பூட்டி இருந்தது.

ஒன்றும் புரியாமல் ஒரு நிமிடம் அங்கு நின்றாள் மிர்னா.

அதற்குள் உறக்கம் சற்று கலைந்த அந்த சி.வெ, “மிர்னு நீங்க தூங்கலையா...? வியன் நீங்க தூங்கி இருப்பீங்க உங்கள டிஸ்டர்ப் செய்ய வேண்டாம்னு சொல்லிட்டு போய்ட்டார்... நாளைக்கு உங்கட்ட இருந்து மொபைல வாங்கிப்பார்...குட் நைட்...” தூக்க கலக்கத்தில் பேசிமுடித்துவிட்டு மீண்டுமாய் தூக்கத்தை தொடர்ந்தது சி.வெ.

உரிமையில்லாத இடத்தில் நிற்பது போல் உணர்ந்தாள் மிர்னா. சி.வெ வின் மிர்னு வேறு எரிச்சல் கூட்டியது.

ன் அறை மெத்தையில் விழுந்தவளுக்கு வாய்விட்டு பாட வேண்டும் போலிருந்தது.

“யேசப்பா ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருக்குது....வியன் விஷயத்தை எப்படி ஹேண்டில் செய்யனே தெரியலை...ஹெல்ப் மீ...இப்ப பாட போறேன்....கொஞ்சம் பூமிய தாங்கிக்க சொல்லுங்க ப்ளீஃஸ்....”

“ம...” இவள் வாயை திறக்கவும் ஒரு அழகிய ஆண் குரலில் பாட்டு கேட்டது.

“மோர் லவ்....மோர் பவர்...மோர் ஆஃப் யூ இன் மை லைஃப்...”

திரு திருவென விழித்தாள் மிர்னா.

இவ பாட்ட கேட்கிறதுக்கு பதிலா நாமளே பாடிரலாம்னு கடவுளே முடிவு செய்துட்டாரா....?

“ஜீசு...இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியல....கருப்பு காக்கா தன்ன கருப்பு காக்கான்னு சொல்லிகிடலாம்.....ஆனா கருப்பு காக்காவோட அம்மா தன் குஞ்சு காக்காவ கருப்பு காக்கான்னு சொல்ல கூடாது....”

இன்னும் அந்த பாடல் தொடர்ந்தது.

சில நொடிகள் கழித்துதான் புரிந்தது அது வியனின் மொபைலில் இருந்து வருகிற ரிங் டோன் என.

“ஹி...ஹி...ஜீசு...திரும்பியும் பல்பு எனக்கு....”

இந்நேரத்தில் யார்...? ஒருவேளை மிஹிர் எண்ணிலிருந்து வியன் இவளை அழைக்கிறானோ..?

அவசரமாக மொபைலை எடுத்துப் பார்த்தாள். அம்மு குட்டி மை லவ் என்றிருந்தது அழைப்பவரின் பெயர்.

வியன் இதுவரை எந்த அம்மு குட்டியை பற்றியும் இவளிடம் சொன்னதில்லை.

ஆமா....ஐயா பெரிய ஓபன் புக்...அங்க ஒரு ரகசியமும் கிடையாது....நீ வேற...நேரம் காலம் தெரியாம....அவன் இப்ப வரைக்கு உன்ட்ட எதை தான் சொல்லி இருக்கான் இத சொல்ல....

இப்பொழுது என்ன செய்ய வேண்டும்...? இணைப்பை ஏற்கவா வேண்டாமா?

இன்னும் அது நிற்காமல் தொடர்ந்து அழைக்க, இணைப்பை ஏற்றாள்.

“ஹலோ...மிர்னுமா....நான் அத்தை பேசுறேன் “ என்றது ஒரு பெண் குரல்.

அத்தையா.....???? அம்முகுட்டியும் அத்தையும் இடிச்சு உதைக்குதே....

“நீ அம்மான்னு கூப்பிட்டாலும் எனக்கு ஓகே தான்மா......”

மிர்னாவுக்கு புரிந்துவிட்டது....அது வியனின் அம்மா....ஆனால் நம்பதான் முடியவில்லை...

“.............”

“என்னமா லைன்ல இருக்கியா...? இல்ல ஏன் மேலயும் எதாவது கோபமா..?”

கவினிடம் இவள் பேசாதது இவருக்கும் தெரிந்திருக்கும் போலும். இதற்கு மேல் மௌனம் காக்க கூடாது. ஆனால் அத்தையா அம்மாவா எப்படி கூப்பிட?

அத்தை தான் ஸேஃபர் சைட்..

“அ...அத்தை...அப்படி எதுவும் இல்ல....நீங்க ...உங்கட்ட இருந்து இந்த காலை இப்ப எதிர் பார்க்கலை....”

அதான் கொஞ்சம் டென்ஷனாயிட்டுது....அவங்க....வியன் இங்க இல்ல அத்தை....

அவங்க ஃபோன இங்க விட்டுட்டு போய்டாங்க....நான் இங்க சி...ஒஃபிலியா வீட்ல இருக்கேன்....”

தனக்கு கூட பேசமுடியாமல் இப்படி வாய் தந்தி அடிக்கும் என்று அரை நிமிடம் முன்னால் வரை யாரும் சொல்லி இருந்தால் நம்பி இருக்க மாட்டாள் மிர்னா.

என்ன வகை தடுமாற்றம் இது...?

“என்ன மிர்னு, சின்னவன் என்னை பத்தி எதையும் சொல்லாம பயங்காட்டி வச்சிருக்கான் போல....மிர்னு அப்டியே அம்மா மாதிரினு ஒரு நாளைக்கு அரை மணி நேரமாவது மொட்ட ப்ளேடு போடுறான் வியுன்னு கவின் சொன்னான்....எனக்கு பயமே வராதே...”

உங்க மாமியார்ட்ட முதல் தடவ பேசுறப்ப கூடவா .....? பை த வே...வெட்டி பேச்சு வியு...இரு உன்ன கவனிச்சுகிறேன்...என் பெருமைய என்ட்ட சொல்லாம......

“என்ன மாமியார்ட்ட பேசுறப்ப கூடவான்னு நினைக்கிறியா....?”

புரையேறியது மிர்னாவுக்கு.

அப்படியானால்...??!!!

“இல்ல என்ன தவிர எல்லார்ட்டயும் என் பெருமைய பத்தி சொல்றியேன்னு சின்னவனுக்கு திட்டு விழுதா....?” 

இதற்குள் அடி முடியற்ற ஆனந்த ஆகாயத்தில் காற்றாய் கலந்திருந்தாள் மிர்னா.

ஏனோ அழுகை வெடித்துக்கொண்டு வந்தது.

“மிர்னு....மிர்னுமா.... அழுறியாடா...அவன் முதல்ல சொல்றத விட்டுட்டு நான் முந்திரிகொட்ட மாதிரி முன்ன சொல்லிட்டனோ..?”

“ஐயோ...அப்டில்லாம் இல்ல அத்தை...”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.