(Reading time: 40 - 79 minutes)

நெஞ்சுருகிப்போனாள் இந்துஜா. உலகத்தின் எல்லா வரங்களையும் ஒரு சேர அடைந்து விட்டதை போன்றதொரு ஆனந்தம்.

தனது இரண்டு பிள்ளைகளின் திருமணத்தையும் ஒன்றாக முடித்து விட்ட ஆனந்தத்தில் மிதந்துக்கொண்டிருந்தார் மைதிலி.

கண்களில் நீர் கோர்த்திருக்க விஷ்வாவையே பார்த்தபடி நின்றிருந்தாள் அபர்ணா. ' கொஞ்சம் கொஞ்சமாக உன் வாழ்கையில் மகிழ்ச்சி நிரம்ப துவங்கி இருக்கிறது. இன்னும் வர வேண்டும். நிறைய வரவேண்டும். உன் வாழ்கையில் இன்பங்கள் மட்டுமே நிறைய வேண்டும் என் தோழா'

இரண்டு ஜோடிகளையும் எல்லாரும் மாறி மாறி வாழ்த்திக்கொண்டிருந்தார்கள்..

சிறிது நேரம் கழித்து, ஜனனியுடன் மேடை ஏறினான் சுதாகரன். விஷ்வா இந்துவின் எதிரே சென்று நின்றனர் இருவரும்

சில நொடிகள் நால்வரிடதிலும் அசைவில்லை. பின்னர் மெல்ல கைநீட்டினான் சுதாகரன். விஷ்வாவின் கையை பற்றி குலுக்கி சொன்னான் .'பெஸ்ட் விஷஸ் மிஸ்டர். விஷ்வா. நீங்க எப்பவும் சந்தோஷமா இருக்கணும்.

இந்துவின் கையை பற்றி குலுக்கினாள் ஜனனி. அவள் இதழ்களில் அழகான புன்னகை. அவள் 'இருவரையும் பார்த்து மானதார சொன்னாள் அவள். நீங்க ரெண்டு பேரும் ரொம்ப சந்தோஷமா இருக்கணும்.'

விஷ்வாவினுள்ளே பல் உறுத்தல்கள் விலகிப்போன ஒரு உணர்வு. ஏனென்றே தெரியாத ஒரு நிம்மதி பிரவாகம். அந்த நான்கு உள்ளங்களிலும் அப்படி ஒரு நிறைவு.

எல்லாம் நல்லபடியாக முடிந்து எல்லாரும் சாப்பிட்டு முடித்திருந்தனர். திடீரென்று  கிடைத்த ஒரு வாய்ப்பில் இந்துவை அப்படியே தனது அறைக்குள் இழுத்து கதவை மூடினான் விஷ்வா. அவள் சுதாரிக்கும் முன் அவள் கன்னங்களில் மாறி மாறி முத்தமிட்டான். பல நொடிகள் கழித்து அவளை விடுவித்தவன் 'லவ் யூ டா' நிலாப்பொண்ணு' என்றான் புன்னகையுடன்.

முகம் நிறைய வெட்கத்துடன் மெல்ல மெல்ல கண்களை நிமிர்த்தி அவனைப்பார்த்தாள் இந்து. இதெல்லாம் இத்தனை நாள் எங்கே போச்சாம்?

இல்லடா நிலாப்பொண்ணு ஏற்கனவே ஒரு பொண்ணுக்கு காதல் தோல்வி அப்படிங்கிற வலியை நான் கொடுத்திட்டேன். காரணம் ஆயிரம் சொன்னாலும் அவளுக்கு நான் அந்த வலியை கொடுத்ததை மறுக்கவே முடியாதுதான். அதே வலியை உனக்கும் கொடுத்துடகூடாதேன்னு ஒரு பயம். அதனாலேதான் உன் பக்கத்திலே வர்றதுக்கே கொஞ்சம் தயக்கம்.' என்றான் அவள் கண்களை பார்த்துக்கொண்டே.  

அவனையே சில நொடிகள் பார்த்தவள் என்ன தோன்றியதோ, சட்டென அவனை இழுத்து தன்னோடு சேர்த்துக்கொண்டாள்.

இரவு அந்த அலங்கரிக்கபட்ட அறைக்குள் நுழைந்தாள் இந்து. அவளுக்காகவே காத்திருந்தவன் 'வாங்க, வாங்க என்றபடி அவளை கட்டிலில் அமரவைத்து தானும் அவள் அருகில் அமர்ந்தான்.

சில நொடிகள் அவளையே புன்னகையுடன் பார்த்தவன்., அவள் காலை எடுத்து தனது மடியில் வைத்துக்கொண்டான்.

கட்டிலின் மீதிருந்த அந்த சின்ன பெட்டியின் உள்ளே இருந்து அதை வெளியில் எடுத்தான். பளபளத்துக்கொண்டிருந்த மெட்டிகள் அவை.

ஒரு பூவை ஏந்திக்கொள்வதைப்போல் அவள் பாதத்தை ஏந்திக்கொண்டு மெதுமெதுவாய் அணிவித்தான் மெட்டிகளை.

கன்னத்தில் கை வைத்துக்கொண்டு தனது அன்பு கணவனையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள் இந்துஜா.

புன்னகையுடன் கேட்டான் விஷ்வா 'பிடிச்சிருக்காடா?'

ம்.

என்ன பிடிச்சிருக்கு? மெட்டி பிடிச்சிருக்கா? விஷ்வா பிடிச்சிருக்கா? அவன் மெல்ல கேட்க

விஷ்வா...விஷ்வா.. விஷ்வா...என்றபடி அவன் நெஞ்சில் முகம் புதைத்தாள் இந்துஜா.

அஸ்வினியையும் உள்ளே அனுப்பி விட்டு மண்டபத்து ஹாலில் அமர்ந்து தாத்தாவுடனும், அத்தையுடனும் அங்கே இருந்த இன்னும் சில உறவினர்களுடனும் கதை அளந்துக்கொண்டிருந்தாள் அபர்ணா.

அவர்கள் அருகில் வந்தான் பரத். 'அந்த confrenceக்கு பிரசென்டேஷன் ரெடி பண்ண சொன்னேனே பண்ணியா இல்லையா? என்றான்

எந்த  பிரசென்டேஷன்?

மறந்துட்டியா? போச்சு. இன்னும் ரெண்டு நாளிலே வேணும்டி. என் லேப்டாப் வேறே வீட்டிலே போட்டுட்டு வந்திட்டேன். சரி வா வீட்டுக்கு போயிட்டு இன்னைக்கு நைட் உட்கார்ந்து முடிச்சிடுவோம்.

வீட்டுக்கா.?.. இப்பவா.?

ஆமாம். வா... நான் போயிட்டு மார்னிங் வந்திடறேன் தாத்தா. ஏதாவது வேணும்னா போன் பண்ணுங்க' என்றபடி . அவள் கையை பிடித்து இழுத்துக்கொண்டு நடந்தான் பரத்.

காரின் அருகில் வந்தவள் 'என்ன பிரசென்டேஷன் கண்ணா?' எனக்கு எதுவுமே புரியலை.

கேள்வி கேட்காம காரிலே ஏறு தாயே .வீட்டிலே போய் எல்லாம் சொல்றேன். என்றான் பரத்.

சில நிமிடங்களில் வீட்டை அடைந்திருந்தனர். வீட்டின் கதவை திறந்தவன் 'வருக மகாராணி வருக' என்றான்.

அவன் பார்வையே கொஞ்சம் வித்தியாசமாக இருக்க, அவனை விநோதமாக பார்த்தபடி உள்ளே நுழைந்தாள் அபர்ணா.

கதவை சாத்திவிட்டு அவள் கண்களை பின்னாலிருந்து, மூடிக்கொண்டான் அப்படியே நட பார்ப்போம் என்றான் அவன்.

அவர்கள் அறையை அடைந்து அவன் கைகளை விலக்க, அவள் கண் திறக்க அவள் இதழ்களில் வெட்க புன்னகை. அவர்கள் படுக்கை அரை பூக்களால் அலங்கரிக்க பட்டிருந்தது.

அவனை திரும்பி பார்த்தாள் அபர்ணா. இது தான் அந்த பிரசென்டேஷனா? என்றாள். இதுக்குதான் ஈவினிங் கொஞ்ச நேரம் காணாம போயிட்டீங்களா?

எஸ் டார்லிங் என்றபடி அவளை இழுத்து தன்னோடு சேர்த்துக்கொண்டான். எல்லாம் என் கண்ணமாவுக்காக..... அவன் முகம் அவள் அருகில் வந்த நேரத்தில் வெளியில் மெலிதான இடி சத்தம்.

ஹேய்...இருங்க...இருங்க அவனை விலக்கிவிட்டு ஜன்னலுக்கு அருகில் ஓடினாள் அபர்ணா. ஹை...மழை கண்ணா... என்றாள் அவள்.

'சரி பெய்யட்டும் நல்லது தானே.' என்றபடி அவள் அருகில் வந்தான்.

நான் கொஞ்ச நேரம் நனைஞ்சிட்டு வரேன் கண்ணா.... என்றாள்

விளையாடுறியா நீ. நான் இவ்வளவு ஏற்பாடு பண்ணி வெச்சிருக்கேன். ஒரு ரெண்டு மணி நேரம் கழிச்சு நனைவோம்டா  கண்ணம்மா ....... அவன் கைகள் அவளுக்கு மாலையாக

அதுக்குள்ளே மழை நின்னு போயிடும்.... சிணுங்கியபடி அவனை விலக்கினாள்.

ஹேய்.. ராட்சசி இது அநியாயம்டி... அவன் சொல்வதை காதில் வாங்காமல் கதவை திறந்துக்கொண்டு வெளியில் ஓடி விட்டிருந்தாள் அபர்ணா.

அவள் பின்னாலேயே வந்து நின்றான் அவன். அவன் தவிப்பை உள்ளுர ரசித்தபடியே அவள் மழையில் நனைந்துக்கொண்டிருக்க, வேறு வழியே இல்லாமல்,  சின்ன புன்னகையுடன் அவள் அருகில் வந்து அவனும் மழையில் நனைய துவங்க, அவர்கள் இருவரையும் பூஞ்சாரலாய் வாழ்த்திக்கொண்டிருந்தது மழை!!!!!!!!!!!!!

நிறைந்தது

Go to episode # 18

{kunena_discuss:726}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.