(Reading time: 24 - 47 minutes)

..என் பா..பாட்டுக்கு ப..பயந்துபோய் வி..வியன் உ..உங்கள த..தள்ளிவிட்டுட்டு த..தப்பிச்சுகிட்டார் போல...” இவள் சிரிக்க

“இ..இப்டி எ..எல்லாநேரமும் சி..சிரிச்சுகிட்டு, கு..குழந்தையாவே இ..இருக்கிற உ..உன்ன போய்.....சே...” என்ற மிஹிரின் முகத்தில் கோப வலி எப்படி இருக்கும் என்று பார்க்காமலே உணர முடிந்தது மிர்னாவால்

“ஹ..ஹலோ.....பா..பாஸ் பா..பாட்டு பா...பாடிடுவேன்னு ப..பயந்து போய்.....அ..அடி வி..விழுறதுக்கு மு..முன்னாடியே அ..அழுற பா..பாப்பா மா..மாதிரி சீ..சீன் போ..போடாதீங்க... சி..சிரிச்ச மு..முகமாவே இ..இருங்க... பா...பாருங்க போ..போட்டோலாம் எ..எடுக்காங்க.....ந..நாளைக்கு பே..பேப்பர்ல அ..அழகான பொ..பொண்ணுக்கு அ..அழுவினி கோ..கோச்னு நி..நியூஃஸ் போ..போடுவாங்க..”

“தெ..தெய்வமே....” நொந்துகொண்டான் மிஹிர்.

தற்க்குள் லைஃப் போட்டை கழற்றி நீருக்குள் போட்டு, அதில் இவர்களை நெருங்கி இருந்தான் வியன். வரும்போதே கையில் கிடைத்த முரட்டு துணிகள் சிலதை அள்ளி வந்திருந்தான்.,

முதலில் மிர்னாவை லைஃப்போட்டில் போட்ட மிஹிர், அடுத்து தானும் ஏற...அவனுக்கு ஏற உதவினான் வியன்.

“மு..முதல்ல மி..மிர்ர வ்..வ்ராப் ப..பண்ணுங்க...அ..அவ உ..உடம்புல.ஃபாஅட் ரொ..ரொம்ப க..கம்மி...ஹை..ஹைபோதெர்மியாவாகிட ...கூ...கூடாது...”

அவளுக்கு தேவையான அத்தனை முதலுதவிகளையும் செய்து, ட்ரோலரிலிருந்தவர்கள் உதவியுடன் கரையேறி, மருத்துவமனை சென்று எல்லாம் இயல்புக்கு வரும் வரையுமே....வியன் மிர்னாவை சுவாசமென சுமந்தான்.

ஆனால் எல்லாம் முடிந்து அவள் முழுபாதுக்காப்பும் உறுதியான பின்பு “என்ன மிர்னு இப்படியா விளையாடுவ? கவனமா இருக்கமாட்டியா?” என கடிந்து கொண்டான். கவனமின்றி இவள் விழுந்துவிட்டாள் என்றுதான் அவன் நினைத்திருந்தான்.

“ஆமா யாரோ பிடிச்சு தள்ளிவிட்டாங்களா.....சரி விழுந்துதான் பாப்போமேன்னு விழுந்துட்டேன்...தள்ளுனவங்களுக்கும் ஏமாற்றம இருக்க கூடாது  பாருங்க....அதோட நாளைக்கு என் போட்டோலாம் பேப்பர்ல வரும்தானே...எப்டி இருப்பேன்....நல்லா இருப்பேனா...இல்ல நனஞ்ச பல்லி மாதிரியா? அந்த டிரஸ் எப்படி...ஃபோட்டாக்கு சூட் ஆகுமா..?”

பேச்சின்றி அவளை ஒரு பார்வை பார்த்தான் வியன்.

இத என்ன லுக்குன்னு எடுத்துகிறதாம்...ரொமாண்டிக் லுக்கா...இல்ல போதும்மா தாயே இன்னும் மொட்ட ப்ளேடு போட முழு ஆயுளும் இருக்குது...இப்பவே அறுத்து முடிச்சுட்டன்னா, அப்ப அறுக்க கழுத்துக்கு கடன் வாங்கவா போவன்னு கேட்கிற அட்வைஃஸ் லுக்கா? எதுனாலும் சொல்லிட்டு முழிங்கப்பா....புரிய மாட்டேங்கிதுல்ல...எம் எம் சில விஷயத்துல சின்ன பாப்பு தெரியுமுல்ல.... 

டுத்து அதை ஒரு கொலைமுயற்சி வழக்காக பதிவு செய்தனர் இவர்களது வழக்கின் பேரில்.

. இதுவரை இவள்  மீதான கொலை முயற்ச்சி வழக்கு ரகசியமானதாகவே இருந்து வந்தது. ஏதென்ஸ் காவல் துறை கையாண்ட விதம் அப்படி. ஆனால் இன்றைய இது பத்திரிக்கையில் செய்தியானது.

 அந்த ட்ரோலரில் பயணம் செய்த அத்தனை பேரையும் ட்ரேஸ் செய்ய தொடங்கியது காவல்துறை.

ன்று இரவு மிர்னாவும் சின்ன வெங்காயமும் தங்கி இருந்த வீட்டின் அழைப்பு மணி ஒலிக்க, யாரென்று செக்யூரிட்டி கேமிராவில் பார்த்தால் வியனின் அம்மா. கதவை திறந்தால் மனோகரும் நின்றிருந்தார்.

அப்பொழுதுதான் கிளம்பி தன் கணவர் இருந்த பாரீஸுக்கு சென்றிருந்த நீலா, செய்தி கேள்விபட்டு தம்பதி சகிதமாக ஓடி வந்திருக்கிறார்.

“இவ்ளவு நடந்திருக்கு, எங்கட்ட ஒரு வார்த்தை நீயும் சொல்லலை, கவினும் சொல்லலை, இதுக்கு அப்புறமும் நீ ஒரு இடத்துல தனியாவும், சின்னவன் ஒரு இடத்தில தனியாவும் எந்த செக்யூரிட்டியும் இல்லாம இருக்கிறத கண்டிப்பா ஒத்துக்க முடியாது. ஒன்னு அவனை இப்பவே உன்னை கல்யாணம் செய்துட்டு கூட வந்து இருக்க சொல்லு, கல்யாணதுக்கு அப்புறம் ஒலிம்பிக் ஜெயிக்க முடியாதுன்னு யார் சொன்னது, ஜெயிச்சவங்க இல்லையா? அல்லது  நீ எங்க கூட இரு...நாங்க உன்னை பார்த்துகிறோம்...” இதுதான் வியனின் பெற்றோரின் பேச்சின் சாரம்சம்.

இப்பொழுது கல்யாணமா, நினைக்க நினைக்க ஆசையாகத்தான் இருக்கிறது....

இப்படி கண்ணா மூச்சி ஆடாமல், கண்பார்வையில் மட்டுமின்றி மொத்த உயிராலும் உடலாலும் காதல் சொல்லும் உரிமை கொள்வதென்றால்....நினைவே அடிவயிற்றிலிருந்து ஆனந்த மத்தாப்பை அள்ளி எரியவில்லையா?

ஆனால் இப்பொழுது திருமணம் என்றால் விளையாட்டின் நிலை என்னவாகும் என்று தெரியவில்லை! இவளது திறமையை நம்பி இப்பொழுது இவள்மட்டும் கனவு விதை தூவவில்லை

வியன் விதைத்திருக்கிறான், மிஹிர் தண்ணீர் பாய்ச்சுகிறான், மின்மினி காத்திருக்கிறாள், அம்மச்சி தொடங்கி ஆயிரமாயிரம் இந்தியர்கள் கனவு காண்கிறார்கள். இதில் இவள் அவசரபடலாமா?

அதோடு இன்றைய நிலையில் இவளுக்கு வியனுடன் திருமணம் என்றால் இப்படி வழி சொல்கிறார்களே அவனது பெற்றோர் அவர்களே அதைக் காண வரமுடியுமா? தெரியவில்லை.

ஆனால் அப்படி நடக்ககூடாது வியனின் திருமணம்.

மாறாக இவர்களுடன் மிர்னா தங்க சம்மதித்தால் வியன் இவளைவிட்டு விலகி நிற்க நேராதா? இவளுக்காக அனைத்தையும் விட்டுவந்தவனை விலக்கி நிறுத்தி இவள் ஜெயிக்கவா? அது அவளால் கூடுமா? அதோடு முதியவர்களை இவளது ஆபத்து சூழலுக்குள் இழுப்பது சரியாகுமா?

டெல்லியில் இருந்தது போல், ஏதென்ஸில் இருந்தது போல்  தங்களுடன் வேறு சிலரையும் வைத்துக்கொண்டு சேர்ந்து ஒரேவீட்டில் இருக்க முயலுகிறோம் என்று எதையெல்லாமோ சொல்லி சமாதனபடுத்தி அவர்களை அனுப்பி வைக்கும் முன் மிர்னாவிற்கே மூச்சு வாங்கிபோனது. ஆனால் மனம் மகிழ்ந்திருந்தது.

வர்கள் கிளம்பிச்செல்லவும் ஒஃபிலியா சொன்னாள் ” அம்மா அப்பா வந்துட்டுபோனதை வியன்ட்ட சொல்லாத....இப்பவே அவன் அவங்கள மிஸ் பண்றான்...அவங்க இவ்ளவு பக்கத்துல வந்தும் அவனால பார்க்க முடியலையேன்னு ரொம்பவும் ஃபீல் பண்ணுவான்...”

அந்த நிமிஷம் சின்னவெங்காயத்தை மனதுக்குள் பிடிக்க தொடங்கியது மிர்னாவிற்கு. காரணாம் அதே காரணத்திற்காக அவளும் வியனுக்கு இந்த விஷயம் செல்லகூடாதே ஒஃபிலியாவிடம் எப்படி கோர என்றுதான் யோசித்துக்கொண்டிருந்தாள்.

வியனின் நலத்தை இவளைப்போல் விரும்பும் இன்னொரு உயிர். மனதிற்குள் நட்பு மழை.

அதுவரை அவளைப் பார்க்கும் போது வரும் சின்ன வெங்காய உணர்விற்கு பெயரும் சட்டென புரிந்து போனது - பொறாமை.

சே...இத்தனைக்கும் வியனுக்கும் ஒஃபிலியாவிற்கும் இடையில் கண்ணிய குறைவாக உணரும் வகையில் ஒரு வார்த்தை ப்ரயோகமோ, விளையாட்டுகளோ எதுவும் கிடையாது.

எத்தனைதான் ஒருமையில் குறிப்பிட்டாலும், வியனும், ஒஃபிலியாவும் ஒருவரை ஒருவர் தொட்டு பேசும் வழக்கம் கூட இல்லாதவர்கள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.