(Reading time: 24 - 47 minutes)

த்தனைக்கும் ப்ரிகேஜி இயிலிருந்து பள்ளி இறுதிவரை ஒரே வகுப்பில் படித்தவர்களாம். அழகான அங்கீகரிகப்பட்ட நட்பு அவர்களுடையது.

 ஒஃபிலியாவின் உடை முறையும், உடல் மொழியும் கண்ணிய எல்லையை தாண்டியதே கிடையாது...வியனின் கண்ணியத்திற்கு இவளுக்கு சாட்சி தேவையில்லை.

மேலும் இவளுக்கும் வியனுக்குமான உரிமை எல்லைகளில் ஒஃபிலியா மூக்கை நுழைத்ததும் இல்லை. அவர்கள் நட்பின் கற்பின் மீது இவளுக்கு சந்தேகமில்லை. ஆனாலும் ஏனிந்த பொறாமை?

கம்பெனி விவகாரம்தான் காரணமெனினும் வியன் இவளைவிட அதிக நேரம் அவளுடன் செலவிட்டதாலா...?

எம் எம் வரவர நீ இந்த பெரியாள்கள் மாதிரி பொறாம பொடலங்கான்னு கெட்ட பிள்ளையாகிட்டு போற.....ஒழுங்கா வழக்கம்போல சின்ன பிள்ளையாவே இரு... சின்னவெங்காயம் போட்டாதான் குழம்பு டேஸ்டா இருக்கும்...நீலாம்மா சொல்லி கொடுத்தாங்களே ...சின்னவெங்காயம் இஃஸ் த பெஸ்ட் டேஸ்ட் மேக்கர் யூ நோ.....

 

ன்று இரவு வேலை முடிந்து வீடு திரும்பிய ஒஃபிலியாவின் வீடு வெளிச்சமின்றி மொத்த இருளை குத்தகை கொண்டிருந்தது. அவளுடன் அவள் வீட்டிற்கு வந்திருந்த வியனுக்கு வீட்டு முகப்பை கண்டதும் பக்கென்றது.

அவனறிந்தவரை ஷெட்யூல்படி மிர்னா இன்நேரம் வீட்டிற்குள் இருக்க வேண்டும். மிஹிர் அங்கு வீடு திரும்பிவிட்டானே. மிஹிரும் மிர்னாவும் தான் பயிற்சிக்கு ஒன்றாய் சென்றவர்கள்.

அவசரமாக மிஹிரை அழைத்தான்.

“நான் தான் மிர்ரை வீட்ல ட்ராப் பண்ணிட்டு வந்தேன்....” என்றான் அவன்.

ஒஃபிலியாவிடமிருந்த சாவியைக் பிடுங்கி அவசர அவசரமாக கதவை திறந்தான் வியன். வரவேற்பறையிலிருந்து டைனிங் டேபிள் வரை வரிசையாய் மெழுகுவர்த்திகள் கண்சிமிட்டிக் கொண்டிருந்தன. மேஜையும் வித வித உணவுகளாலும் சில வண்ண மலர்களாலும் அலங்கரிக்க பட்டிருக்க மூன்று வெண்ணிற மெழுகு வர்த்திகள் மேஜைக்கு ஒளியுதவி செய்து கொண்டிருந்தன.

 அருகில் பச்சை நிற பாவாடை, மாம்பழ மஞ்சள் தாவணி, ஒற்றை பின்னல் அதில் சூடப்பட்டிருந்த ஒற்றை ரோஜா. மிர்னா என்று அடையாளம் காண்பிக்கும் அவளது ட்ரேட் மார்க் விஷம புன்னகை.

“ஹப்...”நெஞ்சில் கை வைத்துவிட்டாள் ஒஃபிலியா.

செத்தான் பின்னால நிக்றவன்.. மனதில் நினைத்த ஒஃபிலியா கதவை திறந்து உள்ளே பார்த்ததும் அசையாது நின்றுவிட்ட வியனை திரும்பிப் பார்த்தாள்.

“மவனே...நீ....காலி....” என்ற வகையில் அவள் போர்ச்சுகீசில் முனங்க....

“திரும்பி பார்க்காம ஓடு...” கண் சுருக்கி அவளது தாய் மொழியில் சிறு குரலில் கட்டளையிட்டான் வியன்.

“க்கும்...அங்க என்ன சதி ஆலோசனை...இதுல எந்த ட்ரஅப்பும் இல்ல..ட்ரிக்கும் இல்ல.....நீங்க நம்பி உள்ள வரலாம்....பை த வே தப்பு செய்ற பாவி மனம் திரும்புறப்ப பரலோகத்துல பார்ட்டி இருக்குமாம்...அதுமாதிரி......இது ஒரு ரிப்பண்டன்ஸ் பார்ட்டி...இன் ஹானர் ஆஃப் மை ஃப்ரெண்ட் சின்ன வெங்காயம் அலைஸ் ஒஃபிலியா....” வரவேற்றாள் மிர்னா.

“வாட்...? சின்ன வெங்காயம்...?” ஒஃபிலியா அதிர்ச்சியாய் முகம் சுருக்கி பார்க்க

வியன் கன்னத்தில் கை வைத்துவிட்டான்.

எப்டி எம் ஹெச் உனக்குமட்டும் இப்டில்லாம் ஐடியா வருது...?

“சின்ன வெங்காயம் இஸ் த பெஸ்ட் டேஸ்ட் மேக்கர் யூ நோ....சோ முழு கதையும் கேட்டுட்டு....அப்புறமா அடிக்கலாமா அறையலாமான்னு நீங்க முடிவு செய்துகிடலாம்.... மிர்னா இஸ் அட் யுவர் சர்வீஸ்...” ஒஃபிலியாவைப் பார்த்து சொன்னவள்

“பைதவே வியன் சார் என்ன தான் நீங்க பல்லுவலின்னு சீன் போட்டாலும் இன்னைக்கு நைட் சாப்பாடு இங்க எங்க கூடதான்....ரெண்டு பேர் மட்டும் கொண்டாடினா அது பார்ட்டி ஃபீல் வராது பாருங்க...அதனால...நீங்க தான் இன்னைக்கு ஹானரபிள் ஒப்புக்கு சப்பாணி.... ஆங்...சாரி அதுக்கு ஈக்வலண்ட்டான டீசண்ட் டேர்ம் எனக்கு தெரியலை...” வியனைப் பார்த்து சொல்லி முடித்தாள்.

பல்வலி என்று அவள் சொன்னதும் கன்னத்திலிருந்து பட்டென கை எடுத்த வியன், ஒப்புக்கு சப்பாணியில் முறைக்க தொடங்கி....முடியாமல் சிரித்துவிட்டான்.

கையிலிருந்த கைப்பையால் அருகில் நின்ற வியனை சின்னதாய் ஒரு அடி வைத்தாள் ஒஃபிலியா “சீஃப் கெஸ்ட்ட ஒப்புக்கு சப்பாணின்னு சொல்லி வரவேற்கிற டெக்னிக் தெரிஞ்ச ஒரே ஆளு உன் ஆளுதான்...” 

வியனுக்கு மட்டும் கேட்கும்வண்ணம் அவளது தாய்மொழியில் முனங்கிவிட்டு டைனிங் டேபிளை நேக்கி நடந்தாள் அவள்.

 “ஹானர் இஸ் அக்சப்டட் வித் லவ் அண்ட் ப்ரெய்ஸ்” என்று மிர்னாவிடம் சொல்லியபடி.

பார்த்து பார்த்து தான் சமைத்து வைத்திருந்த பதார்த்தங்களையும், பார்த்ததில் பிடித்தது என்று அவள் கடையில் வாங்கி வந்திருந்த உணவு வகைகளையும் பரிமாறியபடியே சொன்னாள் மிர்னா...” சாரி....ரியலி சாரி...என்னதான் தன் அம்மாதான், தான் கூடதான் எப்பவும் இருக்க போறாங்கன்னு தெரிஞ்சாலும்....அடுத்த குழந்தைய தான் அம்மா தூக்கினதும் கோப படுற குழந்தையோட ஃபீலிங் எனக்கும் நீங்க வியன்ட்ட பேசிகிட்டதை பார்க்கிறப்ப.........மனசுகுள்ள ஒரு சின்ன வெங்காய கரிப்பு ...அதான் உங்க நேமை சின்ன வெங்காயம் ஷார்ட்டா சி.வென்னு வச்சிருந்தேன்...”

ஆ...என்று அதிர்ச்சியாய் பார்த்தாள் ஒஃபிலியா. இப்படி ஒரு ஓபன் கன்ஃபஷனை அவள் நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. அதோடு மனதிற்கு கஷ்டமாகவும் இருந்தது.

வியனுமே திடுக்கிட்டுப் போய்தான் இருந்தான்.

“அப்புறம் நேத்துதான் நீங்களும் என்னை மாதிரியே வியனோட வெல்விஷர்னு புரிஞ்சுதா...ஃப்ரெண்ஷிப்தான் இதுக்கு சொலுஷன்னு தெரிஞ்சிட்டு....சாரி...என்னையும் உங்க ஃப்ரெண்டா சேர்த்துகிடுவீங்களா....?”

சட்டென எழுந்துவிட்டாள் ஒஃபிலியா...

அவள் கைகளை பிடித்துக்கொண்டாள் மிர்னா.”.பிஸினஸ் நிலவரம் ரொம்ப சேலஞ்சிங்கா போகுதுன்னு எனக்கு புரியுது....இவ்ளவு டைம் கூட உங்களுக்கு போதலைனும் புரியுது.... அதனால நான் இப்டி கேட்கிறது தப்போன்னு கூட தோணுது....ஆனா ரொம்ப நேரமெல்லாம் வேண்டாம் ஒரு 15 மின்ஸ் பிஸினஸ் இல்லாத விஷயங்கள் என்ட்ட பேசுவீங்களா...?”

.” வெரி சாரி....நான் இதை யோசிக்கவே இல்ல....நீங்க டயர்டா இருப்பீங்க....நான் பிஸியா இருக்கேன்னு...ஐ ஜஸ்ட் மிஸ்ட் த மார்க்....”

குழந்தைகளைப் போல மனதிலிருப்பதை பேசிவிட வேண்டும் என்று மிர்னா முடிவெடுத்திருந்தாலும்.... ஃப்ரெண்ட்ஸ் என்று சொல்லிக்கொண்டவுடன் இணைந்து விளையாடிவிடும் குழந்தை மனம் பெரியவர்களுக்கு சாத்தியமா? ஆனாலும் இதன் பின் நிலை முன்னிலையிலும் இலகுவாக இருக்கும் என்று அங்கிருந்த மூவருமே எண்ணினர். அதைப்போல அதன் பின்னாக உணவு மேஜையில் பொழுது பேச்சும் சிரிப்புமாக இலகுவாகவே சென்றது. .

மிர்னா மனம் விட்டு பேசியதும் சற்று குன்றலும் உறுத்தலுமாக முதலில் உணர்ந்த ஒஃபிலியாவுமே மிர்னா நாடுவது நட்பையே என்ற வகையில் சிறிது நேரத்தில் இயல்பிற்கு வந்திருந்தாள்.

உணவு மேஜையிலிருந்து மூவரும் எழும்போது ஒஃபிலியா மிர்னாவிற்கு ஃபில் ஆகி இருந்தாள். மிர்னா அவளுக்கு மிர் ஆகி இருந்தாள். நீ, போ என ஒருமை பேச்சு வழக்கில் வந்திருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.