(Reading time: 24 - 47 minutes)

யோ சேம் சைட் கோல் போட்டு, சிங்கிள் ஆப்புனாலும் செல்ஃப் ஆப்பு ஜெய்ஜாண்டிக்கா அடிச்சு வச்சிருக்கனே....

“ அது...வந்து...”

“இன்னொரு தடவை எனக்கு தெரியாம உன்னை அவங்க பார்த்தாங்க...அப்புறம் இருக்குது.......”

ஆமோதிப்பாக தலை ஆட்டினாள் மிர்னா. பரிதாபமாய் ஒரு பார்வை.

அவள் பார்க்காமல் சிரித்துக் கொண்டான் வியன்.

உண்மையில் அவள் பேசிய விதத்தில் வியனுக்கு எல்லாமே புரிந்து போனது. இவனைப் பற்றி குறிப்பிடும் போதும் அந்த சமையல் ஆண்டியின் மகன் என்று குறிப்பிடும் போதும் இவன் மிர்னுவின் கண்களில் வரும் காதல் கசிவு ஒன்றல்லவா? ஆக அந்த கேட்டரிங்க் க்ளாஃஸ் டீச்சர்  அவனது அம்மா. அவர்கள் ஈரோப் டூரில் இருந்த நேரம் இங்கு இவளுடன் இருந்திருக்கிறார்கள். இவர்களது கல்யாணத்தை அவசர படுத்தி இருக்கிறார்கள். காரணமும் என்னவாய் இருக்கும் என்று இவனுக்கு புரிகின்றது.

இப்படியாய் இவன் காதல் செய்தி இவன் குடும்பம் மூலமாக உரியவளை அடைந்தாயிற்று. மனதிற்குள் மகிழ்ச்சியும் திருப்தியுமாய் ஒரு ப்ராவகம்.

இதுவும் ஒரு வகையில் நன்மைக்கு தான். அவள் குழப்பமின்றி இருப்பாள். ஆனால் இவன் அவளிடம் இதை இப்போதைக்கு பேசப்போவது இல்லை. அவளையும் அதற்க்கு அனுமதிக்க போவதில்லை. அதற்கு காரணம் இருக்கிறது.

ஆனாலும் இந்த மிர்னுவை  இப்படி அதட்டி வைக்கவில்லை எனில் இவளின்  ஆட்டம் அதிகமாகிக் கொண்டே தான் போகும்.... இன்னும் சில மாதங்கள்...ஒலிம்பிக் முடியட்டும்..... அதன் பின் தடை என்ன?

வியனின் பெற்றோர் வந்துபோன விஷயத்தை சொல்லாமல் ஆனால் பாதுகாப்பு நிமித்தம் எல்லோரும் சேர்ந்திருக்கும் ஐடியாவை வியனிடம் முன் வைத்தாள் ஒஃபிலியா. ஆக இந்த விஷயத்தில் இவளும் கூட்டா....? மனதிற்குள் சிரித்துக்கொண்டான் வியன்.

 

தன் பின் வந்த நாட்களில்  யாரையெல்லாம் உடன் வந்து தங்க சொல்லலாம் என்று ஒரு குட்டி பட்டி மன்றமே நடந்து முடிந்தது.

அம்மச்சிக்கு குளிர் தாங்க முடியாது என்ற காரணத்தாலும், மின்மினிக்கு வரும் சூழல் இல்லை என்ற காரணத்தாலும் வரமுடியாமல் போக, இவர்கள் யாரையெல்லாம் வரசொல்லலாம் என்று எண்ணினார்களோ அத்தனைபேருக்கும் ஒன்று மாற்றி ஒன்று என பல தடை. நாட்கள் மட்டும் நகர்ந்து கொண்டு போனது.

கடைசியில் வெறுத்துபோன ஒஃபிலியா “ நானும் நம்ம ஊர்பட்டு, நகைலாம் போட்டு ரொம்ப நாளாயிட்டு.... பேசாம எனக்கு ஒரு மாப்ளைய பார்த்து கல்யாணம் செய்து வச்சிடுங்கப்பா... .மாப்ளை என் அம்மா மாதிரி போர்ச்சுகல் சிட்டிசனா இருந்தாலும் ஓகே..... இல்ல என் அப்பா மாதிரி செந்தமிழ் நாட்டுகாரரா இருந்தாலும் ஓகே... நிறைய அண்ணன்மார், அக்காமார் இருக்கிற மாப்ளைய பார்தீங்கன்னா, அத்தனை பேரையும் இல்லாட்டியும் அரைடஜன் பேரையாவது நம்ம வீட்ல டெம்ப்ரரியா குடியேத்தி, கூடவே ஜோதியில நீங்களும் ஐக்கியமாகிடலாம்.” என்று ஐடியா சொன்னாள்..

“இத்தனை குவாலிஃபிகேஷனோட இன்ஸ்டன்ட் இளிச்சவாய் மாப்ளைக்கு எங்க போறதாம்....? ஒன்னு செய்யலாம்...பேசாம என்னைய மாப்ளயாக்கிடுங்க....அலறி அடிச்சு என் அக்கா அண்ட் கோ வந்து இறங்கிறும்...டெம்ப்ரரி கூட்டு குடும்பமும் ரெடி...எரியும் ஜோதியும் ரெடி...சேர்ந்து ஜமாய்ச்சுடலாம்....” நொந்து  போய் மிஹிர் சொல்ல

“நான் கல்யாணத்துக்கு வழி சொல்லிட்டு இருக்கேன்....நீங்க கடப்பாரைக்கு வழி  காட்டிகிட்டு இருக்கீங்க....மின்மினி கண்ணுல வர தீ இப்பவே எனக்கு தெரியுது....அவங்க கைல கடப்பாரை எடுத்தாங்கன்னா உங்க நடுமண்டைலதான்  நச்சுனு போடுவாங்க.. நினச்சு பார்க்கவே அமோகமா இருக்குது.” ஒஃபிலியா தனக்கு வரபோறவனை மிஹிர் இளிச்சவாய் என்று சொல்லிவிட்ட கோபத்தை இப்படி வெளிப்படுத்த....

“அதத்தான் நான் எரியும் ஜோதின்னு சொன்னேன்....அவ வந்து நின்னா வேறு யாரு வரபோறா?” மிஹிர் மனகண்ணில் தெரிந்த மின்மினியை அனைவராலும் கூட உணர முடிந்தது.

படு தீவிரமாக ஆரம்பித்த கூட்டம் சேர்க்கும் திட்டம் நாளாக ஆக இப்படி கிண்டல் கேலி என்ற அளவுக்கு பிசு பிசுத்துப்போனது.

அதோடு நாட்களும் எந்த புதிய ப்ரச்சனைகளும் இன்றி கடந்து சென்றதால் மனித மன இயல்பின்படி ப்ரச்சனை சின்னதாக தோன்ற தொடங்கி, அதன் முக்கியதுவத்தையும் இழந்துவிட்டது.

தொடரும்

Ennai thanthen verodu - 11

Ennai thanthen verodu - 13

{kunena_discuss:831}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.