(Reading time: 53 - 106 minutes)

தான் வேரிக்கு அந்த  மெசேஜஸ்.... மின்னி உன் கூட எஃப் பி ல ஃப்ரெண்ட் நு இருந்ததால வேரி ஐடிய ஈசியா கண்டு பிடிச்சி இப்படி செய்திருக்கா....

அந்தவிஷயம் அவ எதிர்பார்த்த மாதிரி வெடிக்கலை.....இதுல நீ ஒலிம்பிக் வேற வின் செய்றதான்னு இன்னைக்கு இப்டி செய்திருக்கா.....

மர்டர் செய்தாதான மாட்டிக்க வேண்டி இருக்கும்னு...அவ கோபத்தை இப்டி காமிச்சிருக்கா போல....இன்னைக்கு உன் ஈவென்டுக்கு முன்னால அவள க்ரவ்ட்ல பார்த்த மாதிரி இருந்துது...அப்பவே அவளை கால் செய்து வார்ன் செய்தேன்....நான் உங்களதான் பார்க்க வந்தேன்....உங்கள பார்க்காம இருக்க முடியலைனு அழுதுட்டு....இங்க உன்னை டிஸ்டர்ப் செய்திருக்கா....பக்கா கிரிமினல்.....

எனக்கு டவ்ட் ஆகி அவளை தேடிப் போனேன்....மாட்டிகிட்டா.....இதுக்கு மேலயும் போலீசுக்கு போகாம இருந்தால் சரி இல்லைனு எனக்கு படுது....

ஐம் வெரி சாரி...ஒருவகையில இது எல்லாத்துக்கும் நானும் காரணமாயிட்டேன்...அதுவும் மின்னி தான் இவ்ளவும் செய்றான்னு தெரிஞ்சும் அவ மேல இரக்கப்பட்டு உங்கட்ட சொல்லாம இருந்தது உங்களுக்கு நான் செய்த நம்பிக்கை துரோகம்...

அதுக்கு லீகலி எனக்கு என்ன பனிஷ்மென்ட் உண்டோ அதை நான் அனுபவிக்க போறேன்.....அஸ் அ ஃப்ரெண்ட் நான் உன்னையும்,  நீ என் மேல வச்சிருந்த நம்பிக்கையையும் ஒருவகையில் ஏமாத்திட்டேன்னு இப்ப தோணுது... நீ எனக்கு என்ன பனிஷ்மென்ட் குடுத்தாலும்  ஏத்துகிறேன்...”

மிஹிரைப் பொறுத்தவரை அவன் முடிவெடுத்துவிட்டான் என்பது மிர்னாவிற்கு தெளிவாக புரிகின்றது.

“நான் மின்னிய பார்க்கனும்” மிர்னா சொல்ல...

ப்ரைவேட் செக்யூரிட்டி குழு ஒரு வாகனத்தில் பின் தொடர கவினும் வியனும் மிர்னாவும் ஒரு காரில்

செல்லும் வழியிலேயே வியன் சொன்னான்....

‘அது ஒரு வாட்டர் கன் மாதிரிதான்.. .டாய்ங்க்றதால ஈசியா வென்யூக்குள்ள கொண்டு வந்துட்டாங்க போல... மின்மினி அப்பா கெமிகல்ஸ் பிஸினஸ்தான...அவங்களோட ஆர்&டி செக்க்ஷன் ஆக்சிடெண்டலி ஒரு கெமிகல் டெவலப் செய்துருப்பாங்க  போல.... இன்விசிபிள் லிக்யூட்...காத்துபட்டு ஃப்யூ செகண்ட்ஸ்ல எவாப்ரேட்டும் ஆகிடும்...உன் அட்டென்ஷன் ஸ்லிப் ஆகும்ன்ற மாதிரி....ஏதோ சின்னப்பிள்ளத்தனமா செய்துட்டாங்க....”

“ஓ..”

“என்னடா...?”

“எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு வியன்.. மிஹிரும் மின்னியும் பிரிய நான்தான் எதோ ஒருவகையில காரணமாயிட்டேன்... .”

“அப்டியெல்லாம் நினைக்காத மினு...எதையும் பார்க்கிறவிதமும்  ஹன்டில் பண்றதும் அவங்கவங்க சாய்ஸ்...இதுக்கு அடுத்தவங்க எப்டி பொறுப்பாக முடியும்...?”

“இல்ல... எனக்கு உங்க மேல எந்த அவநம்பிக்கையும் இல்லாதப்பவே ஃபில் மேல...எரிச்சல் வந்துச்சுல்ல..”

“அதை நீ எவ்ளவு அழகா ஹேண்டில் செய்த....”

“பட்...அப்பவே இதே மாதிரிதான் மின்னிக்கு இருக்கும்னு நான் யோசிச்சிருகனுமே....அடுத்து மின்னி நம்ம ஈவன்ட்ஸுக்கு வராதப்ப நான் அலெர்ட் ஆகிருக்கனும்...ஐ ஃபீல் லைக்....சம் வேர் ஐ மிஸ்ட் த மார்க்....தோ நாட் இன்டென்ஷனலி...”

வரவேண்டிய ஹோட்டல் வந்திருக்க

இவளுக்காக காத்திருந்தது மின்மினியின் அப்பா.

Friends  உங்களுக்கே தெரிந்திருக்கும், என்னைத் தந்தேன் வேரோடு அடுத்த எபிசோடில் நிறைவு பெறும்.  நன்றி.

தொடரும்

Ennai thanthen verodu - 15

Ennai thanthen verodu - 17

{kunena_discuss:831}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.