(Reading time: 53 - 106 minutes)

ரு கணம் சந்தோஷப் பிளம்பாய் அவள்....மறுகணம் வெட்கம் வெட்கம்...

எந்திரிடா பி.கே.....மானத்தை வாங்குறியே...

வியன் இன்னும் அப்படியே...

“எந்திரிங்க....ப்ளீஸ்...எல்லாரும் பார்க்காங்க....”

வெட்கமும் ஆசையுமாய் அவள் குரல்....

“பதில் சொல்லு....எந்திரிக்கிறேன்....”

“ஐ...வில்....”

எழுந்தவன் இவள் கரம் பிடித்து அதில் ஒரு மோதிரத்தை அணிவித்தான்.

“கல்யாணத்தை எப்ப வச்சுகிடலாம்....இன்னைக்கு ஈவ்னிங்.....இல்லைனா நாளைக்கு.....?” சாக்லேட் வேணுமா...இல்ல ஐஸ்க்ரீமா என்பது போல் இயல்பாய் வியன் கேட்க

“ஈவ்னிங் வர இன்னும் 3 அவர்ஸாவது இருக்குமே.. ஏன் அவ்ளவு போஸ்ட்போன் செய்யனும்...? வாரினாள் மிர்னா. என்ட்டயேவா??

“இல்ல....இங்க மெடல் செர்மனி எல்லாம் முடிஞ்சு கிளம்ப  அந்த டைம் போயிடும்....அதான்....”

வாய் நீண்டு போச்சு...ஹான்...

“இப்டி ஒரு இடஞ்சலா....?? அதுக்கு,நீங்க பாஸ்டர் யாரையாவது கூட்டிட்டு வந்திருந்தீங்கன்னா...இப்பவே இங்கயே கல்யாணம் செய்திருக்கலாமே....” இது எப்டி இருக்கு...?

“அதையும் தான் ட்ரை பண்ணேன்... உங்கள பார்த்து எல்லோரும் ஒலிம்பிக்ல கல்யாணம் செய்ய ட்ரை பண்ணாங்கன்னா நிலமைய சமாளிக்க முடியாதுன்னு சொல்லி ஒத்துக்க மாட்டேன்டாங்க.... ப்ரபோஸ் செய்ய பெர்மிஷன் வாங்கவே பெரிய கஷ்டமாகிபோச்சு...”

அப்பொழுதுதான் அவன் கிண்டலாக இல்லாமல் உண்மையாகவே சொல்லிக்கொண்டு இருக்கிறான் எனபதே அவளுக்கு புரிந்தது.

“பால்கொழுக்கட்டை பி.கே...இப்ப புயல் காத்து பி.கே வா ஆகி போச்சே....”

 “என்ன முழி இது.... பால்கொழுக்கட்டை பி.கே... புயல் காத்து பி.கே வா ஆகிபோச்சேன்னு யோசிக்றியோ..இதுக்கே இப்டினா....இன்னும் எவ்ளவு இருக்குது....?” கண்சிமிட்டினான்...

திக்கென்றது பெண் உளம்....புயலாய் ஒரு ஆனந்த மாருதம். பயம் பயம் என்றது அடிமனம். சரி இல்லை இது என்றது அவள் குணம்.

“சரி...சரி...இப்பவே இவ்ளவு டென்ஷனாகாத....அதத அப்பப்ப பார்த்துகிடலாம்...இப்போ முதல் புயல் நாளைக்கு நடக்ற நம்ம கல்யாணம்...அதைப் பத்தி மட்டும் டென்ஷனாகிக்கோ...”

முறைத்தாள்.

“என்னடா...?”

 “எங்கம்மா அப்பாட்ட பேசணும்...இவ்ளவு அவசரப்பட்டா எப்டியாம்..?”

“இவ்ளவுதான இங்கதான் இருக்காங்க...மெடல் செர்மனி முடிஞ்சதும் எல்லோரையும் பார்க்கலாம்....”

“ஆங்....இன்னும் என்ன வம்பெல்லாம் செய்து வச்சிருக்கீங்க...?”

“மொத்த வாழ் நாளும் இருக்குது அத ஒன்னொன்னா பார்த்துக்கோ...”

“இப்ப முதல்ல மின்னியையும் மிஹிரையும் பார்க்கனும்....”

“ம்....கூட்டிட்டு போறேன்...”

மெடல் செர்மனி முடிந்து அரங்கத்தை விட்டு வெளியேறும் வழியில் காத்திருந்தான் மிஹிர்.

“சோ மிஹிர் இதெல்லாம் உங்களுக்கு முன்னமே தெரியும்...” மிர்னா தன் யூகத்தை கேட்டாள்.

“சாரி மிர்..எனக்கு அந்த போட் இன்சிடென்ட்லதான் தெரியும்...ட்ரோலர் ல ஏறும்போதே புர்கால பொண்ணை பார்த்ததும் கொஞ்சம் உறுத்தலா இருந்தது.....அந்த பொண்ணுவேற என் பார்வையை வித்யாசமா அவாய்ட் செய்ற மாதிரி தோணிச்சு.... கூட்டம்.... எல்லாரும் ஒன்னுபோல தண்ணிய பார்த்துட்டு இருந்தோம்... ஒரு இன்ஸ்டிங்ட்ல நான் பின்னால பார்கிறப்பதான் மின்னி உன்னை பின்னால இருந்து தள்ளுனது...கூட்டத்துல எனக்கு உன்னை தள்ளுன அவ கை மட்டும்தான் தெரிஞ்சிது....அதுல இருந்த எங்க எங்கேஜ்மென்ட் ரிங்...

முதல் வேலை உன்னை காப்பாத்தனும் அப்புறம் அவள கவனிச்சுகிடலாம்னு ...

அதுக்கு பிறகுதான் ஏதென்ஸ்ல இருந்து நடந்த எல்லாத்துக்கும் இவள்தான் காரணம்னு தெரிஞ்சிது...

நாம ட்ரெக்கிங் போகபோறது அவளுக்கு நான் சொல்லி முன்னமே தெரியும்...அவ ப்ளான் செய்து வந்து உன் ரோப்பை கட் செய்துட்டு...அதுக்கு பிறகுதான் ஏதென்ஸ் வந்த மாதிரி வந்து நம்மை ஏமாத்தி இருக்கா....

பார்ட்டிக்கு அவ வந்ததே அங்க வச்சு உனக்கு எதையாவது பாய்சன்டா தரனும்னுதான்... உனக்காக வியன் ஜூஸ் தேடுறதை கவனிச்சுட்டு அவர்கைல பாய்சன்ட் ஜூஃஸ் கிடைக்கிறமாதிரி செய்திருக்கா.....

மாட்டிக்காம உன்னை கொன்னுட்டு....அப்புறம் வந்து என் கூட மனசாட்சி உறுத்தாம குடும்பம் நடத்தலாம்னு நினைச்சிருக்கா பாரு....

விஷயம் தெரிஞ்சப்ப என்னால தாங்கவே முடியலை.

“அவட்ட காரணம் கேட்டா...நான் உன்னை மிர் நு கூப்டுவேன்....நீ அவள மிர் நு கூப்டுற....என்னைய நீ முத நாள்ல இருந்து நீ போன்னு பேசலை...ஆனா அவளை அப்டிதான் பேசுற...எப்ப ஃபோன் செய்தாலும் அவ கூட ட்ரெய்னிங்ல இருக்கேன்னு சொல்றன்னு லூசு மாதிரி பேசுகிட்டே போறா...இத்தனைக்கும் வியனுக்கும் உனக்கும் கல்யாணம் நடக்கப் போகுதுன்னு அவளுக்கு நல்லாவே தெரியும்.

.அப்பவே வார்ன் செய்துட்டு எங்கேஜ்மென்டை ப்ரேக் செய்துட்டேன்.......எல்லா எவிடன்ஸும் என்ட்ட இருக்குது மிர்னாவுக்கு எப்ப என்ன ஆனாலும் நீதான் முதல்ல அரெஸ்டாவன்னு சொல்லியிருந்தேன்...போலீஸ்ட்ட போயிருவேன்னு சொன்னதும் அடங்கிட்டா.....

 உங்களைவிட்டு விலகியே இருக்கனும்னு சொல்லி இருந்தேன்....போலீஸ் ஜெயில்னதும் ரொம்ப மிரண்டு போய் அழுதா....அதான் கொஞ்சம் இரக்கபட்டு விஷயத்தை வெளிய சொல்லாமவிட்டேன்...ஆனா அது இவ்ளவு ப்ரச்சனையாகும்னு நான் எதிர்பார்க்கலை...

அவ கல்யாணம் நின்னு போக நீ தான் காரணம்னு அவளுக்கு பயங்கரமா ஆத்திரமாகி இருக்குது...அப்டி இருக்கப்ப நீ மட்டும் கல்யாணம் செய்றதான்னு ஒரு குரோதம்....குறுக்குப்புத்தி.....

அந்த டைம்தான் வியன் பெர்த் டேக்காக நீங்க திருநெல்வேலி போனது.... அப்ப நான் டில்லி போயிருக்கேன்னதும்....நீங்க என் கூட இல்லைனு யோசிச்சு அதான் எனக்கு தெரியாம உங்களை அட்டாக் செய்ய ஆப்ட் டைம்னு உங்களை ஒரு டிடெக்டிவ் ஏஜென்சி மூலமா ட்ராக் செய்திருக்கா.... ஆக்சிடெண்டல் டெத் மாதிரி திருநெல்வேலில எதாவது ஏற்பாடு செய்யலாமான்னு யோசிச்சிருக்கா........அந்த டிடெக்டிவ் ஏஜென்சில கல்யாணவிஷயம்னு சொல்லி இருப்பா போல...அதனால அவங்க ஃபமிலி ஆங்கிள்ள நிறைய துருவி இருக்காங்க...அந்த லேண்ட் இஷ்யூ தெரிய வந்திருக்கு...

ஏற்கனவே ஓரளவு உங்க ஃபமிலி விஷயங்கள் உன் கூட அவ தங்கி இருக்கிறப்ப உன் மூலமாவே அவளுக்கு தெரியும்....அதனால வேரி மூலமா வியன் குடும்பத்தை தெருவுக்கு கொண்டு வந்துட்டா....நெட் நெட் வேரிக்காக, வியனுக்காகன்னு எல்லா வகையிலும் கஷ்டபடப் போறது நீயா தானே இருக்கும்.......அப்டின்னு நினைச்சிருக்கா....

மர்டர் செய்தா எப்படியும் என்னால ப்ரிசனுக்கு போயிருவோம் அதுக்கு இது நல்ல வழின்னு அவளுக்கு தோணிட்டு...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.