(Reading time: 53 - 106 minutes)

னால் ஸ்டேடியத்தின் பெரிய மெகா டிவி திரையில் மிர்னாவைப் பார்த்து உலகபார்வையாளர்களே ஒருவித அமைதிகாத்தனர்.

உப்...

பாரைப் பார்த்தாள் மிர்னா.

வலதுகாலை பின்னால் வைத்து வலது கையை முன்னால் நீட்டி...மீண்டும் பாரின் மீது ஒரு பார்வை. மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டாள்.

ஃபாஸ்பரி ஃபாப் முறையில் குதிக்க தேவையான ஜே ஷேப்பில் ஓடி வரத்தொடங்கினாள். முதல் மூன்று எட்டுகளின் நீளம் சற்று குறைவு. பின் நீள நீள காலெட்டுகள். கடைசி காலெட்டு கொஞ்சம் குறுகும். மொத்தம் 11 எட்டுகள் இவள் ஓட வேண்டும்.

முழு வேகம், பெர்ஃபெக்ட் கோணம் 7....8...9...10... பாருக்கு அருகிலிருந்த வெள்ளை கோட்டை கடந்தாள். அதே நேரம் பாருக்கு பாதி முதுகாட்டும் வண்ணம் திரும்புகிறாள்... 11 வலது கை நீள தொடங்க...காற்றில் எம்பி எழுந்தாள். சுகம் சுக ப்ராவாகம்.....வலக்கை பாரை கடக்கிறது. தலை.....கடக்க தொடங்க.... முட்டுக்கு கீழான கால்கள் இரண்டையும் கீழ் நோக்கி இறக்க.....அது தந்த நெம்பு விசையில்  முதுகு....பாரை கடக்க.....இப்பொழுது கால்களை நேராக நீட்டி... இடகால் சற்று முன்னும் வலகால் சற்று பின்னும் பாரை கடந்து கொண்டிருக்க...கால்களை மேல் நோக்கி உயர்த்தினால்......சிலீர்.... எதோ ஒரு திரவம் இவள் முகத்தில் மோதுகிறது. ஷ்...ஆ....உடல் அனிச்சை செயலாய் தன்னை குறுக்க பாரை கடக்கவேண்டிய விதத்தில் கடக்காமல் பாதை மாறுகிறது கால்கள்.

 வலகாலின் குதிகால் பாரை தட்டுவது புரிகிறது. ஆடும் பாரின் மீது கண்கள் வைத்தபடி முதுகை தரைக்கு காண்பித்தபடி வந்து விழுகிறாள் ஃபோமில்.

ஆடிய பார் ஆடியதோடு சரி. விழவில்லை.

ஹேய்ய்ய்ய்ய்ய்ய்......அதிர்கிறது ஆடிட்டோரியம்.

முகத்தை தொட்டுப் பார்த்தாள் எந்த ஈரமும் இல்லை. சுற்றுமுற்றும் பார்த்தாள். எதுவும் வித்யாசமாக இல்லை.

 விளையாடும் நேரத்தில் அவளது முந்தைய உயரம் தாண்டுதலை டிவி யில் பார்க்கும் வழக்கம் இல்லாதவள் மிர்னா.

ஆனால் இன்று நிமிர்ந்து பார்த்தாள். அவள் முகம் சுழித்தல் உடல் குறுக்கல் எல்லாம் ரிப்ளேயில் தெரிகிறது....ஆனால் எத்திரவ வீச்சும் பதிவாகவில்லை.

ஹான்...????

வியனையும் மிஹிரையும் பார்க்கிறாள். அடுத்து என்ன செய்ய? ப்ரச்சனை அவர்களுக்கு புரிந்திருக்குமா??

வியன் இவள் முகத்தைப் பார்த்தபின் முகம் மாறுகிறான். இவளுக்கு எதோ ப்ரச்சனையாய் இருக்கிறது என்று புரிந்துகொள்ளும் முக பாவம்.

ஆனால் மிஹிர் இவள் பார்க்கும் போதே ஒருவித டென்ஷனில்...

அப்படியானால் மிஹிருக்கு ப்ரச்சனை புரிகிறதா?

ஆனால் இப்பொழுது என்ன செய்ய வேண்டும்..??

மிஹிரின் கண்கள் வேறு எங்கோ பார்க்கிறது. இவளுக்கு எந்த குறிப்பும் தரவில்லை அவன்.

காத்திருந்தாள்..

இன்னும் சில நிமிடங்களில் இவள் முறை.

மிஹிரைப் பார்க்கிறாள்.

“கோ அகெட் “என உதடசைக்கிறான்.

அப்படியானல் அவளுக்கான திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை.

அப்படியானால் நடந்தது என்ன?

“லீவ் இட்.....பின்னானவைகளை மறந்து முன்னானவைகளை நோக்கி.....ஓடு எம் எம்.....”

இது மிர்னாவின் இரண்டாவது அட்டெம்ப்ட்...ஃப்ளாலெஸ்....என்றுதான் இருந்தது தொடக்கம்.

இம்முறை தலை பாரை கடந்து கொண்டிருக்கும்போதே...சிலீர்.......அன்னிச்சை செயலாய் உடல் திசை மாற......மிர்னாவிற்கு முன்பாக தரை தொட்டது பார்.....ஃபவுல்

“ஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.......................................” சந்தோஷமாய் தொடங்கி ஏமாற்றமாய் முடிக்கிறது கூட்டம்.

வியன் எழுந்து நின்று இவளை ஆராய்ச்சியாய்....ஊக்குவிப்பதாய் பார்ப்பது புரிகிறது. மிஹிர் முகத்தில் அதிர்ச்சி...

அடுத்த அட்டெம்ட்டில் இதே கதை தொடர்ந்தால் தங்கபதக்கம் கனவாகிவிடும். மற்ற பதக்க வாய்ப்புமட்டுமே மிச்சமிருக்கும்.....அதோடு மூன்று அட்டெம்டுகளில் தொடர்ந்து தவறினால் போட்டியைவிட்டு வெறும் கையுடன்தான் இவள் வெளியேற வேண்டும்.

மிஹிர் எதோ சொல்லத்தொடங்குவது புரியவும் அவன் அருகில் ஓடினாள்.

“நெக்ஸ்ட் அட்டெம்ப்ட்டுக்கு அடுத்த அட்டெம்ப்ட் .நீ போறப்ப நான் திரும்பி வந்திருக்கலைனா ஆல் ஆர் நத்திங் ஆப்ஷன் போ..மறந்திராத.....ஆல் த பெஸ்ட்” கடகடவென வெளியேற தொடங்கினான் மிஹிர்..

அடுத்த முறை அவள் வாய்ப்பு  வரும்போது மிஹிர் வந்திருக்கவில்லை.

இந்த முறை இவள் தவறவிட்டால்......தவறிய முயற்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்க...நெக் டு நெக்காக வரும் அந்த ரஷ்யன் அத்லீட் இவளை தங்கத்திற்கு தகுதி அற்றவளாக ஆக்கிவிடும் சாத்தியம் 99%.

என்ன செய்யலாம்?

தாண்டும் விதத்தை மாற்றினால் நிலைமையை சமாளிக்கலாமோ...?.

ஆனால்...இப்படி கடைசி நிமிடத்தில் இவள் பாணியை மாற்றினால் அது ஒழுங்காய் வாய்க்குமா...???

தோல்வி என்பது தோல்வி இல்லை....தோற்றால் தாங்கமுடியாது என்ற வலி தான் தோல்வி....

கமான் எம் எம்...அது ஒரு கம்பு குச்சி...பாம்பு பூச்சி கூட கிடையாது.....தாண்டறதும் தாண்டாம போறதும் ஒரு பெரிய விஷயமா....ஜஸ்ட்...ஹிட் இட்...என்ஜாய் டூயிங் இட்...

ஃபாஸ் பரி ஃப்ளாப் என்ற முறையை அதாவது தாண்ட வேண்டிய பாருக்கு முதுகை காட்டி தாண்டும் இப்போதைய முறையை விட்டு...பழைய கால முறையான ஸிஸர்ஸ் முறை அதாவது முகம் பாரை பார்த்திருக்கும் நிலையில் தாண்டுவது என முடிவு செய்தாள்.

இந்த ஸிஸர்ஸ் முறையில் பாரை இவள் தாண்டும் இடம் அதன் நடுப் பகுதியாக இருக்கும். இப்போதைய ஃபாஸ் பரி ஃப்ளாப் முறையில் தாண்டினால் பாரின் ஓரப்பகுதியில் தாண்ட நேரிடும். அப்படி ஓரத்தில் இவளை குறிபார்த்து பீய்ச்சப்படும் அந்த திரவம் இம்முறை ஏமாந்துவிடுமல்லவா...?

ஆனால் இப் பழைய கால முறையில் இவளுக்கு பயிற்சி கிடையாது என்பதோடு....இதில் ஃபாஸ் பரி ஃப்ளாப் முறை அளவுக்கு உயரம் போகவும் முடியாது.

இருந்தாலும்  அது மிர்னாவிற்கு இப்பொழுதுக்கு உதவியது. ஆம் தாண்ட வேண்டிய உயரத்தை தாண்டி உலகத்தை அதிசயிக்க செய்தாள். இழப்பு எதுவும் நேராமல் அப்போதைக்கு போட்டியில் தன்னை தக்கவைத்தாள்.

ஹேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்.......அரங்கம் ஆரவரிக்க.....இது எவ்ளவு சாத்தியமில்லாத ஒன்று என புரிந்தவர்கள்  கொண்டாடுகிறார்கள்....கமெண்டரி பாக்ஸின் மொத்த பேச்சும் புகழாரமும் மிஸ் ஜயல் ஜெயல் ஜேயல்.. என அவளது சர்நேம் துடிக்க

சிந்தனையோடு தன் வெயிட்டிங் ப்ளேசை நோக்கி நடந்தவள் மீது வந்து விழுகிறது ஒரு கூட்ட கரப்பான் பூச்சிகள்.

எதோ வெறுத்துப்போன பிற நாட்டு ரசிகரின் ஆவேசம்...அவரைத் தேடி ஓடும் காவலர்கள். எதுவும் கவனம் கவரவில்லை மிர்னாவிற்கு.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.