(Reading time: 53 - 106 minutes)

..புரிஞ்சிட்டுது...”

“வேற எதுவும் கேட்கனுமா?”

மொத்த உரையாடலிலுமே, விஷயத்தை சொல்லிவிட்டேன் இதற்கு மேல் நம்புவதும் நம்பாமல் போவதும் உன்கையில் என்றவிதமான ஒரு தொனி  .

விரக்தி??

வருவதை எதிர்கொண்டுதானே ஆகவேண்டும் என்ற மனநிலை...இவள் முந்திய செயல் அவன் இதயத்தில் ஏற்படுத்திய காய ஆழம் அது பறை சாற்றுகிறது.

“நமக்கே தெரியாத இந்த விஷயம்லாம் யாருக்கோ தெரிஞ்சி...நம்மள என்ன பாடு படுத்றாங்க கவிப்பா.... அவங்களுக்கு என்னதான் வேணும்...?”

தான் அவனை குற்றவாளியாக நினைக்ககூட இல்லை என்பதை தன் ஒவ்வொரு உச்சரிப்பு உடல்மொழி விழிப் பார்வை முக பாவம் எல்லாவற்றிலும் இயல்பாய் வெளிப்படுத்த முனைந்தாள் வேரி.

“தெரியலை குல்ஸ்...உண்மையிலேயே என்னதான் எதிர்பார்க்கிறாங்கன்னு...எதாவது தெரிய வந்துச்சுன்னா சொல்றேன்...” கவின் சென்றுவிட்டான்.

குல்ஸ்...??? அப்பொழுதே முடிவு செய்துவிட்டாள் கடவுளுக்கான பொருத்தனையை உடனே செலுத்த வேண்டும் என.

என்ன செய்யலாம் என்று யோசித்தவளுக்கு ஆர்ஃபனேஜ் எதற்காவது உதவிசெய்யலாம் என தோன்ற...கடவுளுக்கு செய்வதை காலம் தாழ்த்தி செய்ய கூடாது என்பதால், உதவி கேட்ட வியனும் மறுத்ததால் இப்படி ஒரு பயணம்.

 ண்ணுக்கு மனதிற்கு தோன்றிய திசையிலெல்லாம் கவின் கரை செலுத்திக் கொண்டிருந்தான்.

வேரியின் எண்ணை திரும்ப திரும்ப முயற்சித்துக் கொண்டும் இருந்தான்.

எங்கடா போய்ட்ட...?

ஒரு டாக்ஸி அவன் காரை கடந்தது. அதில் வேரியின் மொபைல் ரிங்க் டோன் கேட்பது போல் பிரமை.

சட்டென புரிந்துவிட்டது அவளை எங்கு தேட வேண்டும் என.

வெளியே போக வேண்டும் என்றால் டாக்ஸிதானே புக் செய்திருப்பாள்?

இன்டெர் நெட்டில் ரியோவில் டாக்ஸி புக் செய்ய என்ன செய்ய வேண்டும் என கூகிள் தேடலில் பார்த்தான். முதலில்  வந்த டாக்ஸி  நிறுவனத்திற்கு அழைத்தான்.

“என் நேம் கிருபா...உங்க நேம்...”

“வெ..வெரோனிக்கா......வேரின்னு சொல்லுவாங்க.....”

“குளிருதா உங்களுக்கு...இப்படி வார்த்தை நடுங்குது...?”

“ம்...ஆமாம்....”தன் உடையை ஒரு முறை தடவிக் கொண்டாள். நனைந்த காட்டன் ஸ்கர்டும் டாப்ஸும்...காற்றுவேறு....குளிராமல் என்ன செய்யும் நினைத்துக் கொண்டாள்.

“இங்கதான் ஸ்டேஷன் என்ட்ரி...”

கிருபா சொல்ல....

“ப்ளீஸ் உள்ள வந்து டிக்கெட் எடுத்து கொடுத்துடுங்களேன்....எனக்கு இங்க டைரக்க்ஷனும் தெரியலை...லாங்குவேஜும்....புரியலை...”

“வாங்க...”

தூரத்தில் தெரிந்த டிக்கெட் பூத்தை நோக்கி நடந்தாள் வேரி.

“3.50 ரேஐஸ் ...எல்லா ஷ்டேஷனுக்கும் ஒரே ஃபேர்தான் போல...” கிருபா சொல்ல

வேரி டிக்கெட்டை கையில் எடுத்தாள்.

“இங்க இருந்து கஅவ்யா 4த் ஸ்டேஷன்....லைன் 4 ல வரும் ட்ரெய்ன்ல ஏறுங்க...ரைட் சைட்ல இருக்கிற ட்ராக்கா இருக்கும்...”

“ரொம்பவும் தேங்க்ஸ் கிருபா....நீங்க இல்லனா நான் எப்படி சமாளிச்சிருப்பேன்னே தெரியலை....”

கிருபாவின் கைகளைப் பிடித்துக் கொண்டாள் வேரி.

“ ஹலோ 21 9 81255906 ங்கிற நம்பர்ல இருந்து  கஅவ்யா... ஒலிம்பிக் வில்லேஜ் குவார்ட்டஸ் 207 க்கு டாக்ஸி புக் செய்துருந்தாங்களே....பசஞ்சர் நேம் வெரோனிகா....அவங்க ட்ராப் எங்க புக் செய்துருந்தாங்கன்னு சொல்ல முடியுமா ப்ளீஸ்...?” போர்சுகீசில் கேட்டான் கவின்.

“........”

“அவளுக்கு உதவி தேவை...”

“........”

“ நான் அவ ஹஸ்பண்ட்தான்”

மறுப்புடன் எதிர் முனை இணைப்பு துண்டிக்கபட...அடுத்த இரண்டாம் நிமிடம் காவல் நிலையத்தில் கவின்.

ஒன் ஆஃப் த டைரக்டர்ஸ் ஆஃப் க்ரூப் எம் என்ற அவனது அறிமுகம் மரியாதையை தர உதவி தானாக வந்தது.

“அவங்கள ரெடிமர்ஸ் ஹோம்ல ட்ராப் செய்தேன்....அவங்க மொபைல் என் டாக்ஸில இருக்கிறதையே இப்ப நீங்க சொன்ன பிறகுதான் பார்க்கிறேன்...” அவளை டிராப் செய்த டாக்ஸி டிரைவர் விபரம், டாக்ஸி நிறுவனத்தால் தரபட, அந்த டிரைவரை தொடர்பு கொண்ட போது அவர் இப்படி சொன்னார்.

அடுத்த நிமிடம் கவின் காரில் அந்த ரெடிமர்ஸ் ஹோமை நோக்கிப் பறந்தான். காவல் துறையும் உதவிக்கு உடன் வந்தது.

ப்பொழுதுதான் வெளிச்சத்தில் கிருபாவின் முகம் பார்த்தாள் வேரி. எதோ வித்யாசம்...இயல்பாக இல்லை...என்னது?

“இதுல்லாம் என்னங்க....எல்லோரும் செய்றதுதான.? இவ்ளவு பயந்த டைப்பா இருக்கீங்க ஏன் தனியா வந்தீங்க...? அங்க ஸ்டேஷன்கு உங்கள பிக் அப் செய்ய யாரையாவது வர சொல்லுங்க....என் மொபைலை யூஸ் பண்ணிக்கோங்க.... “

“ரொம்ப தேங்க்ஸ்....என் ஹஸ்பண்ட் அங்க ரொம்ப டென்ஷனா தேடிகிட்டு இருப்பாங்க...” இன்னும் கொஞ்ச நேரம்தான்.... உன்ட்ட வந்திருவேன் கவின்...மானசீகமாக தன்னவனுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தாள்.

மொபைலை நீட்டினாள் கிருபா ” ஓ...உங்களுக்கு கல்யாணம் ஆகிட்டா?...வாய்ஸை வச்சு ரொம்ப சின்ன பொண்ணுனு நினைத்தேன்...”

அதிர்ந்து போனாள் வேரி. தன் வயிறை குனிந்து ஒரு முறை பார்த்துக் கொண்டாள். என்னைப் பார்த்து இவ என்ன சொல்றா...???

மின்ன்லாய் மனதிற்குள் ஒரு இடி. ஐயோ...தெய்வமே ...மனதிற்கு புரியும் விஷயம் நிஜமாக இருக்க கூடாதே...உயிரும் உடலோடு சேர்ந்து நடுங்க கிருபாவின் கண்களைப் பார்த்தாள் வேரி...இப்பொழுதுதான் எது இயல்பாய் இல்லை என்பது புரிகின்றது...

கிருபாவின் அழகிய கண்கள் பார்க்கும் திசை நோக்கி இயல்பாய் சுற்றி வந்தாலும் அதில் பார்வை உணரப்படுதலின் உணர்வு இல்லை. பார்வையற்றவளா கிருபா?

“நீங்க....நீங்க...” தடுமாறினாள் வேரி.

ஹோமிற்கு சென்று விசாரித்த கவின் அங்கு தன்னவள் இல்லை என்பதை அறிந்தவன் நொடி நேரம் விரயம் செய்யாமல் அடுத்து யோசித்தது....வாட் இஸ் த நெக்ஸ்ட் மோட் ஆஃப் ட்ரான்ஸ் போடேஷன்.

அருகில் மெட்ரோ ஸ்டேஷன்.... இவர்களது குவார்டஸ் இருக்கும் காவ்யா செல்லும் லைன் 4 ட்ரெய்ன்கள் அங்கு வரும் என்ற தகவல் கிடைக்க...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.