(Reading time: 53 - 106 minutes)

ரையில் விழுந்துவிட்டவை தவிர இன்னமும் தன் மீது அமர்ந்திருந்த கரப்புகளை இயல்பாய் தட்டிவிட்டு நடந்தாள்.

மனதில் குழந்தை ரியாவின் முகம்...அவளிடம் பூச்சிக்கு இவள் பயப்படுவது போல் காண்பித்த அந்த விளையாட்டு ஞாபகம் வருகிறது.

கரப்பானை பார்த்தாலே வெகு நேரம் இயல்புக்கு வர முடியாது என காண்பிக்க இவள் தொடர்ந்து நடுங்கிக்கொண்டு இருந்தது ஞாபகம் வருகிறது.

அதை நம்பிய ரியாவின் முகம். இப்பொழுது தன்னுள் சிரித்துக் கொண்டாள்.

சட்டென எதோ புரிகிறது.

ஏன் புரிந்தது எப்படி புரிந்தது என காரணபடுத்த முடியவில்லை எனினும் புரிந்துவிட்டது.

அநத பூச்சி நிகழ்ச்சி தெரிந்த மூவரில் ரியாவிற்கும் வியனுக்கும் இவள் பயப்படுவது போல் நடித்தாள் என பின்னால் விளக்கி இருக்கிறாள்.

அந்த விளக்கம் இவள் சொல்லாத நபர் மிஹிர்.......

அப்படியானால்......????

நடந்த ஒவ்வொரு கொலை முயற்சியிலும் இவள் அருகில் இருந்தது மிஹிர் தான்.

ஆனால்...????

மிஹிர் எப்பொழுதும் இவளை காப்பாற்றவே முயன்றிருக்கிறான். அதுவும் அந்த படகு நிகழ்ச்சியில் அவன் இவளை காப்பாற்ற தன் உயிரையே பணயம் வைத்தான்....அன்று அவளை காப்பாற்ற அவன் காட்டியது வெறி.... மகா அசுரத்தனம்....அது...

முடிச்சுகள் படபடவென அவிழ்ந்தது மிர்னாவின் மனதில்....

இவள் எதற்குமே பயப்படாதவள் என்பது இத்தனைக் காலத்தில் மிஹிருக்கு அத்துப்படி ஆயிற்றே....

இதை செய்வது யாரென்று புரிந்துவிட்டது!!!!!!!!

இப்பொழுதெல்லாம் அவ்வப்போது தனியாக வாக்கிங் போகும் மிஹிர்.....இவளோடு பயிற்சியில் ஈடுபட்ட பின் அதற்கும் மேலாக எதற்கு இந்த வாக்கிங்....?

முன்பானால் மின்னியோடு அலைபேசியில் அடைக்கலமாவதல்லவா மிஹிர் வழக்கம்.

மின்னி.....!!!!

இப்பொழுதுக்கு எதற்காகவும் இவள் போட்டி ஸ்தலங்களுக்கு வராத மின்மினி....

விளையாட்டுகாக என்றாலும் மின்மினியை தவிர்த்து பேசும் மிஹிர்......

இவளுக்கு ஒஃபிலியாவின் மீது ஏற்பட்ட பொறாமையின் நினைவு இத்தனைக்கும் காரணம் என்னவாயிருக்கும் என்பதை புரிய வைக்கிறது.

மின்மினி....

ஒற்றைப்பெண்.....தனியாய் வளர்ந்தவள்....எதையும் பகிர்ந்து வழக்கம் இல்லாதவள்....பகிர பழக்கப்பட்டவர்களே....தன்னவனின் பெண் நட்பில் தடுமாறிப் போவதில்லையா...????

இது இவள் தன் சொந்த அனுபவத்தில் உணர்ந்து அறிந்த விஷயம் அல்லவா???

இவள் அதை முளையில் கிள்ளி எறிந்துவிட்டாள்.

மின்னி அதை பயிர் செய்து அறுவடை செய்கிறாள் போலும்....

முன்பே இவள் மின்னி விஷயத்தை ஏன் யோசிக்காமல் போனாள்.??

இதற்கு மருந்தும் தீர்வும் இவளுக்கு தெரியும்.....

ஆனால் அதை மின்னிக்கு கொடுக்கும் முன் நிலை எல்லை கடந்துவிடகூடாதே...???.

இவளை மின்னி சுட எவ்வளவு நேரம் ஆகும்..? சுடுவதாய் இருந்தால் இதற்குள் செய்திருக்க மாட்டாளா?? ஆனால் தன்னைத்தானேயோ......மிஹிரையோ  அழித்துக் கொண்டுவிட்டால்....

வியனை நோக்கி ஓடினாள்.

“மிஹிர் எங்கயாவது மின்னி கூட இருப்பாங்க....சிட்டுவேஷன் அவ்ட் ஆஃப் கண்ட் ரோல் போகாம பார்த்துகோங்க...”

ஒரு நொடி இவளைப் பார்த்தவன்....தன் மொபைலில் மிஹிரை அழைத்தபடி  வேகமாக தன்னிடத்தை விட்டு வெளியேறினான்....

“காட் பீ வித் யூ மினு..”.

இந்த சிஸர்ஸ் முறை எல்லா நேரமும் வாய்க்கும் என்று சொல்வதற்கு இல்லை. அதில் அதிக உயரமும் தாண்ட முடியாது...மேலும் சென்ற முறை மின்னி இவளை வழக்கம் போல் பாரின் ஓரத்தில் குறிபார்த்ததால், விதம் மாற்றி நடுவில் தாண்டிய  இவள் முயற்சி பாதிக்க படவில்லை...ஆனால் இம்முறை மின்னி இவளை நடுவில் எதிர்பார்த்து குறிபார்த்தால்???

இவளுக்கு இப்படி ப்ரச்சனை நேர்கிறது என்று சாட்சி காண்பிக்க கூட எதுவுமில்லை என்பதால்...பிறருக்கு புரிய வைப்பதற்கு மனம் செலவழிப்பதைவிட போட்டியில் ஜெயிப்பதில் கவனம் செலுத்த வேண்டிய தருணம்.

ஆக அடுத்த இவளது முறைக்கு மிஹிர் இன்னும் திரும்பி வந்திருக்காத நிலையில் ஆல் ஆர் நத்திங் ஆப்ஷனை தேர்ந்தெடுத்தாள்.

சக போட்டியாளர்கள் அனைவரும் இதுவரை தாண்டி இருக்கும் உயரத்தைவிட அதிக உயரத்தை இவள் தாண்ட முயல வேண்டும். தாண்டிவிட்டால் தங்கம் இவளுக்கு. இல்லையெனில் வெறும் கையுடன் வெளியேற வேண்டும். நாக் அவுட்

 இந்த முறை இவளது வழக்கமான பாணியான ஃபாஸ்பரி ஃப்ளாப் தான் முயற்சி செய்ய வேண்டும். தாண்ட வேண்டிய உயரத்தை தாண்ட உதவும் என்பதோடு.....சென்ற முறைக்கு எதிர்பதமாக பாரின் ஓரத்தில் இவள் தாண்டும் போது....நடு பகுதியை குறிபார்த்து வரும் அந்த பொருளிடமிருந்து தப்பிக்க வகை செய்யும்.. முடிவு செய்து கொண்டாள் மிர்னா.

மிஹிரும் வியனும் அங்கு எதாவது செய்திருப்பார்கள் மின்னியை தடுக்க என நம்புவோம்...

ட்ராக்கின் தொடக்கத்தில் நிற்கிறாள்.

அம்மச்சி ஞாபகம் வருகிறார்....

எத்தனை பேரோட கனவு இது....

வியன் அவன் அம்மா அருகில் கண்மூடி தவிப்போடு அமர்ந்திருந்த காட்சி கண்ணில் தெரிகிறது...

எத்தனை தியாகங்கள் இதற்காக....

மனதில் கிண் என ஏறுகிறது பதற்றம்...

ஷட் அப்....எம் எம்...ஜஸ்ட் இது ஒரு கம்பு குச்சி....

க்ளாப்.........க்ளாப்........க்ளாப்.......

ரிதம் மாறாமல் பார்வையாளர்களின் கரவொலி.....

1..2...3...4..5...6..7..8..9..10..11 ஜே போல் வளைந்து...... காற்றில் எழுந்து... பாரை தாண்டி.... பிழையின்றி ஃபோமில் விழுந்தாள்.

ஹேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்.......அதிர்கிறது அரங்கம்..

“ஹீரோ சார்.....சும்மா சொல்லக்கூடாது என்ன ஒரு ride ....அட்வென்சரஸ்...ஃபன்.... பெர்பெக்ட்” .வானத்தைப் பார்த்துக் கொண்டாள் மிர்னா.

“மின்னிய ஹீல் ப்ண்ணுங்க....ப்ளீஸ்.... அப்டியே இங்க சுத்திகிட்டு இருந்தாரே உங்க சிஷ்யர் ஒருத்தர் அவரை நம்ம பக்கமா பார்சல் பண்ணுங்க.....”

வானத்தைப் பார்த்து மானசீகமாக அப்ளிகேஷன் அனுப்பிக் கொண்டிருந்தவள் அரங்கத்தின் ரிதமில்லாத பெருத்த கரகோஷம் மற்றும் இயல்பிற்க்கு வித்யாசமான சத்தத்தில் வானம் பார்த்திருந்த தலையை இறக்க....எதிரிலிருந்த பெரிய டி வி திரை கண்ணில் பட்டது....அதில் இவள்.....இவள் முன் ஒரு கால் முழந்தாளிட்டு வியன்...

சட்டென குனிந்து தன் முன் பார்த்தாள்.

“ஐ லவ் யூ மினு...ஐ லவ் யூ அஸ் ஆல்வேஸ்....வில் யூ மேரி மீ...”

இடக்கை அதுவாய் அவள் வாய் மேல் அமர

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.