(Reading time: 53 - 106 minutes)

இப்பதான் நோட் பண்ணீங்களா?.....ஆமா ஃப்யூ இயர்ஸ் முன்னால ப்ரெய்ன் ஃபீவர்ல ஐ சைட்டை லாஸ் பண்ணிட்டேன்.” கிருபா இயல்பாய் சொன்னாள்.

அவள் முன் அழக்கூடாது என என்னதான் வேரி எண்ணினாலும் இருந்த அனைத்து உணர்ச்சி குவியல்களின் காரணமாக கண்ணில் இருந்து நீர் அதுவாக வழிய தொடங்குகிறது...

“என்னங்க வேரி....”

“ம்...அது...”

“அழுறீங்களா...என்னங்க இது..இவ்ளவு சென்சிடிவ் டைப்பா இருக்கீங்க....?”

“அது...அது ...என்னாலயே இங்க சமாளிக்க முடியலை...நீங்க....இவ்ளவு சின்ன வயசில...நீங்க...” எதை சொல்லவென தெரியவில்லை வேரிக்கு.

“பட் உங்களுக்கு இந்த இடம் ரொம்ப நல்லா தெரியும் போல என்ன...?” அழுகையை கைவிட பேச்சை மாற்ற விரும்பினாள் வேரி.

“இல்லைங்க.....எனக்கும் இடம் புதுசுதான்.....நான் ஒரு நியூஸ் ஏஜென்சில வொர்க் பண்றேன்....ஒலிம்பிக் கவரேஜ்காக இப்பதான் வந்தோம்...”

ஆச்சர்யமாகி போனாள் வேரி.

காரை ஸ்டேஷன் பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு இறங்கி ஓடி வந்த கவின் நிலையத்திற்குள் ஓடினான்.

தூரத்தில் அவன் உயிர்.

“உங்க ஜாப் ப்ரொஃபைல் எப்படி இருக்கும்...?” கிருபாவால் என்ன வேலை செய்ய முடியும் என்றே வேரிக்கு புரியவில்லை.

“எங்க ரிபோர்ட்டர் கலெக்ட் செய்ற நியூசை எல்லாம் டெக்ஸ்ட், வாய்ஸ், விடியோ ஃபார்மட்ல எங்கெல்லாம் அனுப்ப சொல்றாங்களோ அங்க அனுப்றது என் வேலை..எங்கள மாதிரி .நியூஸ் எஜென்ஸில இருந்துதான நியூஸ் பேப்பர்ஸ் டி வி சனல்ஸ்லாம் நியூஸ் வாங்கிப்பாங்க..”

“ஆனால்......??.” இது எப்படி சாத்தியம் என்று எப்படி கேட்க.

“எங்களுக்குன்னு JAWS , e speak அப்டின்னு சாஃப்ட்வேர்ஸ்லாம் இருக்குது ...மொபைல் கம்ப்யூட்டர் எதுலனாலும் அது டெக்ஸ்டை வாய்ஸா கன்வர்ட் செய்து கொடுத்திடும்...இப்ப கூட உங்களுக்கு தேவையான ட்ரெய்ன் டீடெய்ல்ஸ் நெட்ல இருந்துதான் எடுத்தேன்...காதிலிருந்த ஹண்ட்ஸ் ஃப்ரீயை சுட்டி காண்பித்தாள்.”

“வாவ்...சிம்ப்லி வாவ்...” பேச்சற்று போனாள் வேரி. “எனிவே...இது எனக்கு ஐ ஓபனர் ....நான் உங்களை மீட் பண்ணது காட் ஆர்டைன்ட்...”

குல்ஸ்ஸ்ஸ்..”.கவினின் இறுகிய அணைப்பினில் இருந்தாள் அவன் மனைவி.

கொண்டிருந்த தவிப்பனைத்தையும் முகவரியற்ற முத்தங்களாக்கி மனையாள் முகம் எங்கும் பரப்பினான்.

அது  அவள் உயிருக்குள் இறங்கியது.

“சாரி...கவிப்பா....வெரி சாரி....நிஜமா உங்க மேல சந்தேகப்பட்டுல்லாம் நான் இப்படி வெளிய வரலை.....ப்ளீஸ் என்னை நம்புங்கப்பா.....கடவுள்ட்ட நேர்ந்துகிட்டத செய்யதான் வந்தேன்....”

இன்னுமாய் இறுகியது அவன் அணைப்பு.

“நீ எதுக்கு வந்தன்லாம் எனக்கு தோணவே இல்லடா கண்ணம்மா.... உன்னை காணோம்ங்றத தவிர வேற ஒன்னுமே மனசுல படலை...நீ வேணும் எனக்கு.....நீ எனக்கு எப்பவும் வேணும்..”

எல்லாம் முடிந்து கிருபாவையும் அவளது தங்குமிடத்தில் ட்ராப் செய்துவிட்டு காரில் வீடு திரும்பிக் கொண்டு இருந்தனர் கவின் தம்பதியினர்.

கவினின் தோளோடு சாய்ந்து கண் மூடி இருந்தாள் அவன் மனைவி.

“குல்ஸ் “

“ம்”

“ஒன்னு சொன்னா கரெக்டா புரிஞ்சிப்பியா...”

“ஒலிம்பிக் முடியுற வரையும் இப்ப மாதிரியே நான் மிர்னு கூட ஸ்டே பண்ணனும்...அவ்ளவுதான?” கண் திறக்காமல் தலை உயர்த்தாமல் வேரி  கேட்க

மனைவியை ஆச்சர்யமாய் பார்த்தான் கவின்...

“என்னை என் அம்மாவாலயே விரும்ப முடியலை...அப்டின்னா யாராலயும் விரும்ப முடியாது... அதையும் தாண்டி யாரும் பழகினா அவங்க என்னை ஏமாத்தி காரியம் சாதிக்க பார்காங்க... இப்படின்னு ஒரு தவறான நம்பிக்கை என் அடி மனசுல பதிஞ்சிட்டு....அது சரியாக என் வீட்ல உள்ளவங்களோட நான் சரியான கோணத்தில் பழகனும்....அம்மா வேற முன்னமாதிரி காசேதான் கடவுளடான்னு  இப்ப இல்லை...அதனால முதல்ல அம்மாட்ட விட்டுட்டு போனீங்க... இப்ப மிர்னுட்ட...இந்த சான்ஸை விட்டா....இனி இப்டி மிர்னு கூட சேர்ந்திருக்க  முடியாது... வியன் சண்டைக்கு வந்துடுவார்...சோ இன்னும் மிர்னு கூட தங்க சொல்றீங்க... ஹப்பா...ரொம்ப நீள டைலாக்...திரும்ப சொல்லனும்லாம் எதிர்பார்க்காதீங்க.....”

“ஹேய்...குல்ஸ் கலக்குற போ....அதோட.”

“அதோட இவளுக்கு அணிவேரே ஓட்டை...அன்பா இருந்தா அகில உலக சதியோட வந்துட்டான் அழகப்பன்னு நினைக்கிற பார்ட்டி....இவட்டபோய் கஷ்ட நஷ்டங்களெல்லாம் சொல்லிவச்சா....தாங்காது மட்டின்னு இவ்ளவு நாளா நீங்க எந்த கஷ்டத்தையும் என்ட்ட  ஷேர் பண்ணலை...எதையும் என்னை தனியா ஹேண்டில் பண்ணவும் விடலை... வேரே சரி இல்லாதப்ப கிளையை சுத்தம் செய்து என்ன ப்ரயோஜனம்னு விட்டுடீங்க...சரியான நேரத்துல சரி செய்துகிடலாம்...இப்டி பாப்பா பாப்பாக்குள்ள இருக்கிறப்ப வேண்டாம்னு நினச்சிருந்தீங்க...”

“அம்மாடியோவ்....இனிமேல் எதையாவது நினைக்கனும்னா....நான் என் மனச சுத்தி மல்டிபிள் லேயர்ல செக்யூரிட்டி போடனும் போலயே...”

“போட்டுகோங்க...நல்லா போட்டுகோங்கா....அப்டி நீங்க போடுற செக்யூரிட்டிலாம்...சல்யூட் அடிச்சு எனக்கு கதவு திறந்து விடுவாங்களாங்கும்...மனசோட ஓனரம்மா நானாச்சே....”

அவள் தோளோடு அவனது கண நேர  அணைப்பு...

“என்னதான் இருந்தாலும் நான் அன்னைக்கு வீட்டை விட்டு போனதுல உங்களுக்கு என் மேல கொஞ்சம் கோபமும் உண்டு....ஆனா இன்னைக்கு எப்டி கோபம் வரலை...?? அதுதான் புரிய மாட்டேங்குது...”

“கொஞ்சம் இல்லை நிறையவே கோபம் வந்துச்சு....ஏமாற்றம்...வலி...எல்லாம்...ஏன்னா அப்ப நீ மிர்னாவ காப்பாத்த போறேன்னு சொல்லி இருந்ததால உங்க அம்மா வீட்டுக்குதான் போயிருப்பன்னு தெரியும்...நீ ஸேஃபா இருப்பன்னு தெரியும்... 3 டூ 4 அவர்ஸ்ல உன்னை பார்திடுவேன்னும் தெரியும்... அதனால நீ ஏன் போனங்கிறதைப் பத்தி நினைச்சு கோப்பட முடிஞ்சிது....பட் இப்ப...நீ எப்டி இருக்கியோ...? அடுத்து நீ என் கண்லயாவது கிடைப்பியான்னு....”

காரை நிறுத்திவிட்டான்.

அவன் அணைப்பும் தலையில் இறங்கிய அவன் முத்தமும்...

ன்று மிர்னாவிற்கு ஃபைனல்ஸ்.

இதுவரை நடந்த சுற்றுகளில் மூன்று முறை தன் சாதனையை தானே முறியடித்து இருந்தாள் மிர்னா. எது எப்படி ஆயினும் இன்றைய போட்டி முடிவுக்கு எதுவும் ஈடாகாது.

அவள் முறை இது.

ஓடுகளத்தின் ஆரம்பத்தில் நின்றாள். தூரத்தில் தெரிந்த மிஹிரையும் வியனையும் பார்த்தாள். டி வியில் மூவி பார்ப்பவர்கள் போல் இயல்பாய் அமர்ந்திருந்தனர் அவர்கள்.

 இதில் தான் உன் மொத்த முயற்சியின் பலன் அடங்கி இருக்கிறது என்ற நினைப்பை அவளுக்கு வராமல் இருக்க செய்ய...இட்ஸ் ஜஸ்ட் அனதர் டே ங்கிற மனநிலையில் அவள் நிலைக்க இப்படி படு இயல்பாய் அவர்கள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.