(Reading time: 53 - 106 minutes)

டுத்து பெரியவர்களை அங்கு தங்க செய்துவிட்டு....ஒலிம்பிக் வில்லேஜை நோக்கி சென்றனர் இளையவர் மூவரும்.

மிர்னாவிற்கு அத்தனை பேரும் குறிப்பாக அவள் பேற்றோர் ரியோ வந்திருப்பது தெரியாது. கல்யாணதிட்டத்தை கண்டுபிடித்து விடுவாள் என்று காரணம் சொல்லிக் கொண்டாலும்.... போட்டி இத்தனை அருகில் இருக்க மனதை அசைக்கும் எந்த காரியங்களும் அவளுக்கு தெரிய  வேண்டாம் என வியன் உட்பட அனைவரும் நினைத்ததே காரணம்.

வியன் இதற்கு மேலும் திருமணத்தை தள்ளிப் போட தயாராயில்லை. போட்டி முடிந்ததும் திருமணத்தை நடத்திவிட வேண்டும் என்று ஆசைப் பட்டான். மிர்னாவிற்கும் அத்தகைய ஆசை இருக்கும் என்பது அவன் எண்ணம். ஆனால் அதைப் பற்றி அவள் மனதில் இப்பொழுதுக்கு ஒரு சிறு நினைவை கூட கொண்டு வர அவன் விரும்பவில்லை.

ஒலிம்பிக் அவளைப் பொறுத்தவரை ஒரு யுத்தம். அதை அவள் முடிக்கட்டும்.அதன் பின் முழு வாழ்நாளும் இருக்கிறதே இருவருக்கும். ஆக ஒலிம்பிக் முடியவும் திருமணம் பற்றி மிர்னாவிடம் பேசப் போகிறான். அவள் சம்மதித்தால் உடனே திருமணம்.

இல்லை எனில் அவள் விரும்பும் நாளில் அது நடக்கும் என்று திட்டமிட்டு இருந்தான். ஆனால் அவன் புரிந்து வைத்திருந்த வரை தம்பதி சகிதமாகத்தான் இனி இங்கிருந்து அவர்கள் கிளம்புவார்கள்.

எது எப்படி ஆயினும் மிர்னாவைப் பொறுத்தவரை மிக முக்கியமான இந்த ஒலிம்பிக் நிகழ்விற்கு அவள் பெற்றோர் வரவேண்டும் என்ற எண்ணம் வியன் குடும்பத்தில் அனைவருக்கும் இருந்ததால் அனைவரையும் இங்கு கூட்டிச் சேர்த்தாயிற்று.

வேரிக்கும் இது தெரியுமாதலால் அவளும் எதையும் மிர்னாவிடம் பேசப்போவதில்லை என்ற முடிவுடன் தான் மிர்னாவை காணச் சென்றாள்.

“ஏய்ய்ய்ய்......க்யூட்டா ஒரு குட்டி கங்காரு வந்துருக்குது....” வேரியைப் பார்த்தவுடன் துள்ளிக் குதித்தபடி வந்து அணைத்துக் கொண்டாள் மிர்னா.

“செம அழகா இருக்க வேர்ஸ்.... “ தங்கையின் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டாள் . “பார்த்தாலே கொஞ்சம்னும் போல இருக்கு...நீயே பாப்பா மாதிரிதான் இருக்க...பஞ்சு பாப்பா...”

“போ நீ...அழகா இருக்கன்னு சொன்னதால அடிக்காம விடுறேன்...என்னைப் பார்த்து கங்காருன்னு சொல்லிட்ட... உன் வியன் கூட சேர்ந்துகிட்டு நீயும் என்னை திட்டம் போட்டு கலாய்க்கிறியா?.”

உன் வியனா...? வியனைப் பார்த்தாள் மிர்னா. அதில் காதல் வாசம். நீயும் அப்டிதான் சொன்னியா பி கே?

“அண்ணியர் திலகமே இப்படி அடிப்படை அஸ்திவாரத்திலேயே சென்று ஆப்பு அடிக்க கூடாது....பாவம் வியன்..சிறியவன்...இடப்பக்கம் இருப்பது உங்கள் அறை தாங்கள் சென்று சற்று நேரம் ஓய்வெடுங்கள்....” வியன் விளையட்டு போல் கவனப் படுத்தினான்...

வேரிக்கு தான் உளறி இருப்பது இப்போதுதான் புரிகிறது.

“வாங்கத்தான் வாங்க....இப்படி நீங்க என் கையில் வந்து  மாட்ற நாளுக்காகத்தான் நான் இத்தனை நாளா வெயிட் செய்துஃபையிங்....உங்களை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனிச்சுஃபையிங்....என் சமையல்ல இருந்து நீங்க் இந்த தடவை  நோ எஸ்கேப்ப்பிங்....”

மிர்னா கவினை வரவேற்க முகபாவத்தில் விழி மொழியில் மன்னிப்பு வேண்டினாள் வேரி தன் கொழுந்தனிடம்...

இதுக்குல்லாம் போய்....போங்கண்ணி என்றான் அவனும் மொழி இன்றி...

து இரண்டு படுக்கை அறை கொண்ட ஃப்ளாட்.....ஒரு அறை கவின் தம்பதிக்கும் மற்றொன்று மிர்னாவிற்கும் கொடுத்துவிட்டு ஹாலை  வியனும் மிஹிரும் பகிர்ந்து கொள்ளலாம் என திட்டம்.

ஆனால் கவினோ பெண்கள் ஒரு அறையிலும் ஆண்கள் மறு அறையிலும் தங்கலாம் என்று சொல்லிவிட்டான்.

கவினின் கோபத்தின் அளவு புரிகின்றது வேரிக்கு. தாய்வீட்டிலும் இவளை விட்டு விலகிப் போனான். விசா ஏற்பாடு செய்ய என்றாலும் இவன் தான் அதற்கு போகவேண்டும் என்று என்ன அவசியம்...?

இவள் தவறுக்கு இந்த தண்டனை வேண்டும் தான்.

கவின் இதைத்தான் விரும்புகிறான் என்றால் முறுமுறுக்காமல் இவள் இந்த துன்பத்தை  ஏற்றுக்கொள்ள போகிறாள்.

ஆனால் இந்த நாட்களில் இவள் உடல் உபாதைகள் மிர்னாவிற்கு தெரியாமல் மறைப்பதில் இவளுக்கு சாமர்த்தியம் தேவை.

அதோடு இப்பொழுது அந்த மெயிலைப் பற்றி கவினிடம் பேச தேவையான தனிமைக்கு என்ன செய்வதாம்...?

இரவு உணவு முடிந்தபின் கவினிடம் வந்து பரிதாப முகத்தோடு நின்றாள் வேரி. “எனக்கு உங்கட்ட கொஞ்சம் பேசனும்...”

அத்தனை சிறிய வீட்டிற்குள் ஒருவருக்கும் தெரியாமல் கவினிடம் இதை எப்படி கேட்க...

ஆக அருகில் மிர்னா இருக்கும் போதுதான் இப்படி ஒரு கோரிக்கையை வைத்தாள் வேரி.

“இதுக்குதான் அத்தான் சொல்றேன்.....நீங்க அவ கூட இருங்க....நாங்க சமாளிச்சுபோம்...” மிர்னா சொல்ல

“ஹேய்....அதெல்லாம் கிடையாது.....என்ட்ட இருந்து தப்பிசுகிடல்லாம்னு நினைக்காதே.....நான் உன் கூடதான்....”வேரி எதையோ சொல்லி சமாளித்து வைக்க...ஒரு அறைக்குள் மனைவியை அழைத்துக் கொண்டு வந்தான் கவின்.

“கொஞ்சம் வெயிட் செய்திருந்தன்னா யாருக்கும் வித்யாசமா தோணாம நானே வந்திருப்பேன்...சரி சொல்லு....அந்த மெயில் பத்தி தான...”

“ம்....”அந்த மெயிலை ஓபன் செய்து அவனிடம் படிக்க கொடுத்தாள் தன் டஅபில்...

சற்று நேரம் அமைதியாய் அதை பார்த்திருந்த கவின்...

“இதுல ஒரு காபி எனக்கு வேணுமே...எடுத்துக்கலாமா..?”

“ப்ளீஸ்பா இப்டில்லாம் தயவு செய்து கேட்காதீங்க.....உங்களை என்னால ...சாரி  நான் தப்பா நினச்சதுக்கு சாரி...”

அழுகை வந்தது.

“தயவு செய்து அழாத...அது இன்னும் அதிகமா என் மனசை கஷ்டபடுத்துமே தவிர...”

அவன் பேச்சை பாதியில் நிறுத்த இவள் அழுகையை முழுதாக நிறுத்திவிட்டாள்.

இப்ப தானே பொறுமையா காத்துட்டு இருப்பேன்னு மனசுக்குள்ள உறுதி எடுத்துட்டு வந்தேன்...

“எனக்கு ஒன்டே டைம் கொடு இந்த மெயிலை பத்தி விசாரிச்சுட்டு என்ன செய்யலாம்னு சொல்றேன்....உன்ட்ட சொல்லாம எதையும் செய்ய மாட்டேன்...”

“தேங்க்ஸ்...”

“கவனாமா இருமா...”

“உங்க கூட தான இருக்கேன்...அப்புறம் என்ன....?”

“ம்..சரி தான்”

“நீ சீக்கிரம் படு....ஜெட் லாக் வேற இருக்கும்....” கவினுடன் பேசியபின் ஹாலில் வந்து அமர்ந்திருந்த வேரியை அழைத்தாள் மிர்னா.

“ம்...அப்டில்லாம் இல்லை...பகல் முழுக்க தூங்கிருக்கேனே....” வேரிக்கு கவினின் முகத்தையாவது  பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும் போல் இருக்கிறது. அவனின்றி தூக்கம் வரும் என்று தோன்றவில்லை.

“அதெல்லாம் போதாது....நீ ரொம்ப டயர்டா இருக்க.....வா வா வந்து படு...”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.