(Reading time: 20 - 40 minutes)

ரு பொண்ணை அவ பின் சீட்ல இருந்த ஒருத்தன் சீண்டிகிட்டே இருந்தான். சும்மா சும்மா அப்பப்ப பின்னால இருந்து தொட்டு தொட்டு கூப்டுறதும்….இந்த பொண்ணு திரும்பிப் பார்த்து மொறைக்கிறதுமா…..அந்த பொண்ணுக்கு பக்கத்துல உட்கார்ந்திருந்த பொண்ணு ரெண்டு நிமிஷம் பொறுத்து பார்த்துட்டு எந்திரிச்சு அந்த ஆள் கன்னத்துல மாறி மாறி நாலஞ்சு அறை….செம திட்டு வேற…”

“இதுல என்னமா காமெடி இருக்குது…?”

“இனிம தான்டா இருக்குது காமெடி…இவ அடிக்க ஆரம்பிச்சதும் அவன் யாரை டிஃஸ்டர்ப் செய்துட்டு இருந்தானோ அந்த பொண்ணு எந்திரிச்சு அடிக்கிறவளை பிடிச்சு நிறுத்த ட்ரை செய்றா ஐயோ விடு விடுன்னு…இவளோ இதுங்களுக்கெல்லாம் இதான் சரிக்கா, நீங்க பயப்படாதீங்க….இனி நீங்க இருக்க பக்கம் திரும்பிக் கூட பார்க்க மாட்டான் பாருங்கன்னு சொல்லிகிட்டே அடி பிண்ணிட்டா…..அந்த பொண்ணு பாய்ஞ்சு இவ கையை பிடிச்சுகிட்டு அம்மா தாயே அப்டி எதுவும் ஆகிடாமம்மா, இது என் ஹஸ்பண்டு, எனக்கு சின்னதா அவர் மேல கோபம்ன்னு சொன்னா பாரு….”

ப்ராபாத்துக்குமே சிரிப்பாக வந்தது.

“அதுல ஹைலைட் என்ன தெரியுமா அந்த அடிவங்கினாரே அவர் இந்த  பொண்ண பார்த்து சொன்னதுதான் நீ ரெகுலரா இந்த பஸ்லதான் வருவியாமா….உன்னை நம்பி இனி என் வைஃப்ப தனியா அனுப்பலாம்னார் பாரு..….”

“அப்போ பஸ்ல உங்களுக்கு பாடிகார்டு ரெடின்னு சொல்லுங்க…”  இவன் கிண்டலாகத்தான் சொன்னான். ஆனால் அடுத்து நடந்தது என்னமோ அதுதான்.

சில மாதங்கள் கழித்து ஒருநாள் இவன் வீட்டிற்கு வரும்போது அம்மா முகத்திலும் கையிலும் காலிலும் கட்டுகளுடன் உட்கார்ந்திருந்தார்.

பதறிப் போனான் ப்ராபாத். அம்மா அவனது உலகம்.

“பஸ்ல இருந்து இறங்குற்ப்ப தவறி விழுந்துட்டேன்…கீழ உடஞ்ச கண்ணாடி பாட்டில் கிடந்திருக்கும் போல அடிபட்டுட்டு…இப்போ ஒன்னும் இல்லடா….” என காரணம் சொன்னார் அவர்.

“ஏம்மா உடனே என்னை கூப்டுறுக்கலாம்ல….”

“நீ எக்‌ஃஸாம்ல இருப்பன்னு தெரியும்….அதோட விழுந்தவுடனே அந்த லியாப் பொண்ணு தான் ஆட்டோ பிடிச்சு ஹாஸ்பிட்டல் கூட்டிப் போய்…..நான் திரும்ப வர ஒரு ஆட்டோல என்னை ஏத்திவிட்டுட்டுதான் போகுது…..நீ சொன்னியே அந்த பாடிகார்ட் அவதான்…அதான் உன்னை டிஸ்டர்ப் செய்யலை….”

அடுத்து சில மாதங்களுக்கு பிறகு ஒரு சனிகிழமை அம்மா காட்டன் புடவையும் கையில் குடையுமாக கிளம்பி நின்றார்.

“எங்கம்மா வெளிய கிளம்பிட்டீங்க…? இன்னைக்குதான் ஃஸ்கூல் ஹாலிடே ஆச்சே…”

“ம்…..அந்த லியா கூப்டா அவகூட ஹாஸ்பிட்டல் போறேன்….”

அவளுக்கா அம்மாவுக்கா யாருக்கு உடம்பு சரியில்லை? புரியாமல் பார்த்தான்.

“ஏன்மா யாருக்கு என்ன செய்து?”

“அப்டில்லாம் எதுவும் இல்லடா…..அந்த லியா பொண்ணு  கவர்மென்ட் மெட்டர்னிட்டி ஹாஸ்பிட்டல் போய் நியு மதர்ஸ்க்கு ஹைஜீன் பத்தி, ஹெல்தி ஹாபிட்ஸ் பத்தி சொல்லனும்….பட் என்னைவிட உங்களுக்குன்னா நல்லா தெரியும்ல வாரீங்களான்னு கேட்டா…..காசு இருந்தாதான் அடுத்தவங்களுக்கு ஹெல்ப்பண்ண முடியும்னு இல்லைனு தோணிச்சு…அதான் ”

அடுத்து சில நாட்களுக்குப் பின் ப்ரபாத் அம்மாவின் மொபைலை சும்மா குடைந்து கொண்டிருந்த போது கண்ணில் பட்டது அந்த போட்டோ. அந்த ட்ரெய்ன் ராட்சசி இவன் அம்மாவின் கன்னத்தில் கன்னம் வைத்து……பார்த்தவுடன் இவனுக்கு முதலில் வந்தது பொறாமை….

என் அம்மா எனக்குதான்….

இந்த லூசுக்கு இங்க என்ன வேலை?...அடுத்த சிந்தனை…அவசரமாக தன் அம்மாவை கேட்டான்…

“இது யாருமா உங்கட்ட இழஞ்சுட்டு?”

“ஓ நீ பார்த்ததில்லைல…..இதுதான் லியா….”

அம்மா மொபைலை எடுத்துக் கொண்டு போய்விட்டார். இவன்தான் குழம்பிப் போய் நின்றான். முதல் நிகழ்ச்சிக்கும் மற்றவைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை….எப்படிப்பட்ட ராட்சசி இவள்? ‘ஏதோ ஜென்ட்ஸால பாதிக்கப்பட்ட பொண்ணா இருக்கும்…லேடீஸ் எல்லார்ட்டயும் சாஃப்டா நடந்துக்கிடுறா’ அதுதான் ப்ரபாத்தின் அப்போதைய முடிவு.

அதன்பின் இவளைப் பற்றி அவன் ஏதும் கேள்விப் பட்டதில்லை. அவன் இந்திய டீமில் செலக்ட் ஆனதும் சம்பாதிக்க தொடங்கிவிட்டான். அம்மா வேலையை விடமாட்டார்கள் என தெரியும். ஆதலால் முதல் வேலையாக அம்மாவிற்கு ஒரு காரை வாங்கி கொடுத்து ட்ரைவர் அரேஞ்ச் செய்து கொடுத்தான். ஆக அதன் பின் அம்மாவிடமிருந்து எந்த பஸ் கதையும் கிடையாது… லியா ஞாபகமும் கிடையாது.

அப்பொழுதெல்லாம் அவள் அவன் மனதைப் பொறுத்தவரை சிறு பெண்.அவ்வளவே. இன்று கண்ணெதிரே சங்கல்யாவாய் இது அடுத்த முகம். ஜர்னலிஸ்டாய் அதுவும் அடுத்தவர்களின் அந்தரங்கத்தை சபைக்கு கொண்டு வர துடிப்பவளாய்……

னவரதன் வந்து ஒரு பத்திரிக்கையாளரை அரண் வீட்டில் சேர்க்க வேண்டும் என கேட்ட போது இவன் அதை முதலில் முகம் கோணாமல் மறுத்துப் பார்த்தான்.

சிறு வயதில் தந்தையை இழந்துவிட்ட ப்ராபாத்திற்கு அனவரதன் மனதளவில் தகப்பன் ஸ்தானம். சுகவி திருமணம் வரையுமே அவரும் இவனை மகனாகத்தான் நடத்தினார். அவள் திருமணத்தில் மிகவும் நொந்து போனவர் சுகவிதா திருமணத்தில் இவன் பங்கும் நிச்சயம் இருக்கும் என்ற எண்ணத்தில் இவனையும் விலக்கிவிட்டார்.

ஒரே மகளை அதுவும் அவள்தான் உலகமே, உறவே என வளர்த்தவர், அவளை விலக்கி வைத்துவிட்டு சந்தோஷமாகவா இருப்பார்? உடைந்த உறவை சீர் செய்ய மகள் மருமகன் மற்றும் இவன் எல்லோரும் தயாராய் இருந்த காலத்தில் மனிதர் இவர்கள் யாரும் தன்னிடம் ஒரு வார்த்தை பேசக் கூட அனுமதித்ததில்லை.

ஆனால் இன்று மகள்  அங்கு துன்பப்படுகிறாளோ என்ற நினைவு- அப்படி அவர் நினைக்க அவர் வரையில் இப்பொழுதுதான் வலுவான காரணங்கள் இருக்கின்றனவே- அவரை இவனிடம் இழுத்து வந்திருக்கிறது உதவி கோரி.

அனவரதன் இறங்கி வரும் இந்த வேளையை பயன்படுத்தி அவரை அரணுடன் சீர் பொருந்த செய்வதற்கு இப்பொழுது முயற்சி செய்து பார்க்க வேண்டும்.

அதோடு குடும்ப விஷயம் வெளியே போய்விடக் கூடாது என அத்தனை நினைப்பவர் இன்று இவனிடம் பத்திரிக்கையாளரை அழைத்து வருவதென்றால்…? பாவம் அவரும் எவ்வளவு தவித்திருக்கிறாரோ?

இந்த நேரத்தில் அவரை முரட்டாட்டமாக மறுப்பதைவிட அந்த பத்திரிக்கை பெண்ணிடம் பேச வேண்டிய விதத்தில் பேசி அவளை விலகச் செய்தால் என்ன?

நான் வராவிட்டால் இன்னொரு பத்திரிக்கையாளர் எப்படியும் வருவார் அதனால் நானே வந்துவிட்டேன் என்றாளாமே….இதுவரை பத்திரிக்கைகள் அரண் சுகவிதா வாழ்வில் மூக்கை நுழைக்க முயலாமலா இருந்தன…? அப்பொழுது எல்லாம் விலக்கி நிறுத்த முடிந்த அரணோ அனவரதனோ இப்பொழுது பயந்துவிடுவார்கள் என இவள்  நினைக்க முடியுமா என்ன?

நிச்சயம் சுகவிதா தன் தந்தை விருப்பம் இல்லாமல் அரண் வீட்டிற்கு சென்றிருக்கிறாள் என இவளுக்கு தெரிந்திருக்கும்…..அனவரதனின் தந்தை பாசத்தவிப்பை இவள் பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறாளாய் இருக்கும். பொல்லாதவள்….இவளை ஓட ஒட துரத்த வேண்டும் என்ற எண்ணத்துடன்தான் ப்ரபாத் அவளை சந்திக்க முடிவு செய்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.