(Reading time: 20 - 40 minutes)

னால் லியா தான் சங்கல்யா என பார்த்தவுடன்…..ஆச்சர்யம். அதோடு வேறுபல சிந்தனைகள்….இவள் எந்த சூழலிலும் சுகவியை துன்புற செய்ய மாட்டாள். இவள் இங்கு வர முக்கிய காரணம், கிடைத்த அரை குறை தகவலினால் அரண் மேல் வந்த கோபமாய் இருக்கும்.

எதிரில் நின்றவள் பாதாதி கேசம் இவன் பார்வைப் பயணம். அவனையும் உணராமல் அவன் கண்கள் அவள் கையிலும் கழுத்திலும் இன்னும் இருக்கும் அந்த மங்கிய தழும்பை தொடுகின்றன.

ஆண் மகனின் பார்வை தொட்டதும் பெண்மைக்கே உரிய பாதுகாப்பு உணர்வில் அவள் கை மெல்ல கழுத்துப் பகுதியில் துப்பட்டாவை இன்னுமாய் இழுத்து அவன் பார்வை தொட்ட தழும்பு பகுதியை மறைக்கிறது.

ஒரு ஆண் மகனுக்கு எப்பொழுது எதைப் பார்த்து காதல் வருமென்றெல்லாம் யாருக்கும் தெரியாது. ஆனால் அதன் அடிப்படை ஆதாரப் புள்ளி இவள் என்னவள் என்ற ஒற்றை நினைவுதான். அந்த நினைவு ஏன் வருகின்றது என்பது இறைவனுக்கே வெளிச்சம்.

அந்த நினைவு அந்த நேரத்தில் வந்து சேர்ந்தது ப்ரபாத்திற்கு.

அவள் ராட்சசி அதுவும் ஆண்களை பொறுத்தவரை அது சர்வ நிச்சயம். மனம் எடுத்துரைக்கிறது.

இல்லை அவள் காயம்பட்ட குழந்தை, மருத்துவ கரம் சுகம் செய்யும், ராட்சச உணர்வெனும் கடலுக்குள் மாட்டிக் கொண்ட வலம்புரி சங்கு, கரை கொணர்வான் இவன்.

ஆனால் இது தேவைதானா இவனுக்கு?

அழைக்கப்படாத எல்லையில் போய் ஊழியம் செய்யாதேனு சொல்லி இருக்குதே……இவள் இவனது எல்லைதானா? நிதானமாய் யோசித்துக்கொண்டிருந்தான் அவன்.

ங்கல்யாவோ வேறுவிதமாய் நிலை தடுமாறிப் போய் இருந்தாள். அவள் ப்ரபாத்தை இதுவரை கிரிகெட் ப்ளேயர் என்ற அளவைத் தவிர தெரிந்து வைத்திருக்கவில்லை.

அவன் இவளை கண்ட எந்த நிகழ்விலும் இவள் அவனை கண்டுகொண்டது இல்லை. ஆக அவளைப் பொறுத்தவரை அவன் அக்மார்க் புதுமுகம்.

அனவரதன் இவளை அரண் வீட்டிற்குள் எளிதாக அனுப்பி வைத்துவிடுவார் என்றெல்லாம் அவள் நம்பி இருக்கவில்லை.

இந்த கேள்விக்கான அவரது பதில் அடுத்து என்ன செய்யலாம் என வழி வகுக்கும் என்று அவள் நம்பி இருந்தாள். ஒரு வேளை அவர் தப்பி தவறி இதற்கு சம்மதித்தால் அவளுக்கு வேலை சுலபம் அவ்ளவுதான் அவளது எண்ணம்.

ஆனால் அந்த அனவரதன் இவள் யாரிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று எண்ணி இருந்தாளோ அந்த ப்ரபாத் ஜோனதனிடம் வந்து நிறுத்துவார் என சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதிர்ந்து போனாள்.

இவள் திட்டத்திற்கு சம்மதிப்பது போல் சம்மதித்துவிட்டு இப்படி இவள் எதிர்பார்க்காத இடத்தில் மாட்டிவிட்டாரே இந்த அனவரதன்.

இப்பொழுது இவள் என்ன செய்ய வேண்டும்? அவள் திரட்டிய தகவல் வரை இந்த ஜோனதன் பைபிள் ஜோனதனே தான் நட்பு விஷயத்தில்….இவனாவது அரணுக்கு எதிராக எதாவது ஒன்று செய்வதாவது?

இவளுக்கே இது தெரியும் போது அந்த அனவரதனுக்கா அது தெரியாமல் இருக்கும்? வேண்டுமென்று வந்து மாட்டிவிட்டாரே!!

அது எப்படி இந்த ப்ரபாத்தால் அனவரதனுக்கும் அரணுக்கும் நட்பாய் இருக்க முடிகின்றது?

ஒருவேளை அரணுக்கும் அனவரதனுக்குமே உறவு சுமுகமாய்தான் இருக்கிறதோ….கொன்னா பாவம் தின்னா போச்சுன்னு மகளை கடத்திட்டு போனவன் அவளை கல்யாணம் செய்ததும் என்னதான் இருந்தாலும் மாப்பிள்ளைனு இவரும் விழுந்துட்டாரோ!!

பாவம் சுகவிதா!!! இப்படி ஒரு அப்பாட்டயும் அப்படி ஒரு பொறுக்கிட்டயும் மாட்டிட்டு என்ன பாடுபடுறாளோ?

அதுக்கு முன்ன இப்ப இந்த மிஸ்டர் ஃப்ரெண்ட் ஜோனதன்ட்ட இவ என்ன பாடு படப் போறாளோ? கடவுளே!!!

“அங்கிள் எனக்கு இவங்கட்ட கொஞ்சம் டெர்ம்ஃஸ் அண்ட் கன்டிஷன்ஃஸ் பேசனும் அதுக்கு ஒத்துக்கிட்டாங்கன்னா எனக்கு டீல் ஓகே…”

பாவிஉன் ஃப்ரெண்ட்ஷிப்லாம் நடிப்பா….பாவம் சுகவிதா உன்னைமாதிரி ஒரு கேடுகெட்ட ஃப்ரெண்டுட்ட வேற மாட்டிகிட்டு முழிக்கிறா போல

“ஓகே பிரபு…கவனமா செய்…கால் மி அப்” சங்கல்யா முன்பு வேறு எதுவும் பேச விரும்பாமல் அனவரதன் விடை பெற்றார். அவரைப் பொறுத்தவரை தன் மகளின் உண்மை நிலை தெரிய வேண்டும் நடுநிலையாளர் ஒருவர் வாயிலாக.

அந்த விஷயத்தில் அவர் ப்ரபாத்தை கூட முழுமையாக நம்ப தயாராக இல்லை. நட்பு என்ற அடிப்படையில் இந்த ப்ரபாத்தை கூட ஏமாற்றி கைக்குள் போட்டு தனக்கு சாதகமாக பேச வைத்துவிடுவான் அரண்.

ஆக அவர் வெளியாளை உள்ளே அனுப்ப வேண்டும் உண்மை அறிய. டிடெக்டிவ் யாரையாவது அனுகலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தார். அவர்கள் இவருக்கு மட்டும்தான் மகள் விவகாரத்தை சொல்வார்கள் என என்ன நிச்சயம்?

போட்டோஃஸ் விடியோஃஸ் என அனைத்து ஆதாரங்களுடன் மீடியாவுக்கும் கொடுத்துவிட்டால்? அவர்களை எப்படி கட்டுபடுத்த?.....கண்காணிக்க? அதைப் பற்றி யோசிக்கும் வேளையில் வந்து நின்றாள் இந்த சங்கல்யா.

 இப்படி ஒருவள் தானே வந்து வாய்ப்பு தரும் போது…? இவரது நிபந்தனைகளுக்கு கட்டுப் பட சம்மதிக்கும்போது? அதுவும் அவள் மகளுடன் தங்கி இருந்து விஷயம் அறிந்து வந்து தருவதாக சொல்லும் போது….. இந்த சங்கல்யாவை கட்டுபடுத்தும் வழியை மட்டும் பார்த்துக் கொண்டால் இவருக்கு மட்டுமாக மகளின் உண்மை நிலை வந்து சேர்ந்துவிடுமே…..

அதோடு மகள் அங்கு கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தால் ஒரு பெண்ணின் உதவி அவளுக்கு உடனடியாக கிடைக்குமே…பேபி சிட்டரை வேறு இவளுடன் அனுப்ப முடிகிறதே….இதையெல்லாம் ஒத்துக் கொள்ளும் பெண் டிடெக்டிவ் கிடைப்பார்களா?

ஆக அவர் வேலைக்கு சரியான ஆள் இவள்தான் என முடிவு செய்துவிட்டார்.

ப்ரபாத் தவிர வேறு யார் வழியாகவும் சங்கல்யாவை அரண் வீட்டிற்குள் அனுப்ப முடியாது….ஆக அவனிடம் இவ்வேலையை கொடுத்துவிட்டு சென்றார் அனவரதன். ப்ரபாத் நட்பினால் ஏமாறுவான் தவிர நல்லவன் என்பது அவர் எண்ணம்.

அனவரதன் கிளம்பிப் போகவும் “கொஞ்சம் வெய்ட் செய்ங்க” அவளிடம் சொல்லிவிட்டு உள்ளறைக்கு திரும்பிய ப்ரபாத் குரலிலும் முகத்திலும் கண்ணியம் இருந்தது. ஆனால் அடுத்த நிமிடம் “யு ஆர் அன்டர் கேமிரா சர்வைலன்ஸ்” என சொல்லும் போது அவன் முகத்தில் வந்திருந்த உணர்வுக்கு பெயரென்ன?

காமிரா எங்கு இருக்கிறது? அது கண்ணில் படாமல் இந்த அறையில் எதை குடையலாம்? இவள் நினைத்துக் கொண்டிருக்கும் போதே திரும்பி வந்துவிட்டான் அவன்.

“உங்களுக்கு இப்போதைக்கு கல்யாணம் செய்ற ஐடியா இருக்கா சங்கல்யா?” வேலையில் சேரும் முன் அலுவலகத்தில் கேட்கபடும் கேள்விதான். ஆனால் இவன் ஏன் கேட்கிறான்?

“அப்டி ஒரு முட்டாள்தனத்துல மாட்டிகிடுற மாதிரி ப்ளான் எப்பவுமே இல்லை” வெட்டி தெறித்து வருகிறது சங்கல்யாவின் வார்த்தைகள்.

“தட்ஸ் குட்….தென் வி ஆர் கெட்டிங் எங்கேஜ்ட் நவ்…”

“வாட்?”

“நமக்கு இப்போ கல்யாணம் நிச்சயம் ஆகுது……என் ட்ரான்ஸ்லேஷன் கரெக்டுனு நினைக்கிறேன்…”

ப்ரபாத் சொல்ல எரிச்சலும் அதிர்ச்சியுமாய் அவனைப் பார்த்தாள் சங்கல்யா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.