(Reading time: 46 - 91 minutes)

தே நேரம்,

சிவநாதன், “விஸ்வா… நம்ம ராமசாமி மாமா… கோவிலை எடுத்துக்கட்டுறதை பத்தி அன்னைக்கு பேசினாங்கல்ல… நீ என்ன முடிவு பண்ணியிருக்க?...” என விஸ்வ மூர்த்தியிடம் கேட்க…

“செலவை நாமளே ஏத்துக்கலாம்னு சொல்லலாம்னு இருக்கேண்டா சிவா…” என்றார் விஸ்வமூர்த்தி..

“ரொம்ப சரியா சொன்னடா… வா… இதை நாமளே இப்ப இன்னைக்கு திருவிழா நேரத்துல சொல்லிடலாம்…” என சொல்ல… விஸ்வமும் அதை ஆதரித்தார்…

அதைத் தொடர்ந்து நண்பர்கள் இருவரும் கிளம்பினர் அங்கிருந்து…

அனைவரும் சென்றதும், யுவி, தேவியை நோக்கிச் சென்றான்…

“தேவிம்மா…” என்றவன், அவரின் கைகளைப்பிடித்துக்கொள்ள,

“வேலா… நல்லா இருக்குறீயா?...” என்றபடி அவர் மகனின் முகம் பற்றி உச்சி முதல் பாதம் வரை ஆராய,

“நான் நல்லா இருக்குறேன்ம்மா… நீ எப்படி இருக்குற?... என்னை விட்டுட்டு இத்தனை நாள் இங்க இருந்துட்டல… தனியா?....” என அவன் சோகமாய் சொல்ல….

“என் வேலனைப் பார்த்துட்டேன்ல… இனி என் முகத்துல சந்தோஷத்துக்கு என்ன குறை வந்திட போகுது?...” என அவர் சிரித்துக்கொண்டே சொல்ல…

அவனின் முகத்திலும் புன்னகை தவழ்ந்தது…

பாவம் அந்த சந்தோஷத்திற்கு தான் சற்று நேரத்தில் மகன் வந்து சொல்லும் வார்த்தையில் பெரிய குறை வரப்போகிறது என்று அந்நேரம் அவருக்கு புரியவில்லை…

அவர்கள் இருவரும் பேசிக்கொள்ளட்டும் என்று வள்ளி நகரப்போகையில்,

“வள்ளி இங்க வா…” என்ற துர்காவின் குரல் அவளை நிற்க வைக்க… அவரின் அருகில் வந்தாள்…

“எப்படி இருக்கீங்க அத்தை?...”

“எனக்கென்ன மா?... அதைவிடு… நீ எப்படி இருக்குறம்மா?... வேலன் உன்னை நல்லா பார்த்துக்கறானா?...” என அவர் கேட்க

அவள் அவனை ஏறிட்டாள்… அன்று அவன் அவள் கைப்பிடித்து “என்னை ஏண்டி கொல்லுற?...” என்று கேட்ட வார்த்தையே அவள் காதுகளில் அதன் பின்பும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது இன்றளவும்…

“நான் உங்களை கொல்லுறேனா?... நானா கொல்லுறேன்….” என அவளும் அவனிடத்தில் விழிகளால் பல முறை அவனிடம் கேட்க… அவன் பதிலோ மௌனமாய்…

இன்றும் அதுபோல், அவள் அவனைப் பார்க்க… அவனோ அவளைப் பார்ப்பதை தவிர்த்தான்…

அவர்களின் இந்த பார்வை பரிமாற்றம் தேவியின் கண்களில் பட்டுவிட, அவர் மனதில் பயம் குடிகொண்டது முழுமையாய்…

தாயின் மனநிலையை ஊகித்த யுவி, சட்டென்று நிலைமையை சரி செய்தான்…

“சொன்ன மாதிரியே நீ ஜெயிச்சிட்டியே……” – யுவி…

“என்னப்பா என்ன சொல்லுற?... என்ன ஜெயிச்சா வள்ளி?...” – தேவி….

“ஆமாம்மா… நீங்க நாங்க வந்த உடனே , அவகிட்ட இந்த கேள்வியை தான் கேட்பீங்கன்னு சொன்னா… அதே மாதிரி நீங்களும் கேள்வி கேட்டீங்களா?... அதான் வள்ளி நான் சொன்ன மாதிரிதான நடந்துச்சுன்னு என்னைப் பார்த்தா… நானும் அதான் நான் தோத்ததா காட்டிக்க கூடாதுன்னு அங்க இங்கன்னு பார்த்து சமாளிச்சேன்…” என்ற யுவியை இமைக்காமல் பார்த்தாள் வள்ளி…

தன் தாயின் சந்தோஷத்திற்காக தான் இத்தனையுமா?... எனில் உன் சந்தோஷத்தை என்று தான் நான் காண்பேன்?... என்றவளுக்கு உள்ளம் வலிக்க… மெல்ல பார்வையை அவனிடமிருந்து திருப்பினாள்…

“அடடா… இதுதானா?... யார் ஜெயிச்சா என்னப்பா?.... நிஜமாவே என் மருமக என்னைப் புரிஞ்சி வைச்சிருக்கா… சந்தோஷம்…” என்றவர், “சரி… வாங்க… கோவிலுக்கு போகணும்… கிளம்புங்க…” என அவர்கள் இருவரையும் கிளம்ப சொல்லிவிட்டு சென்றுவிட,

யுவி, வள்ளியிடம், “சாரி… தேவிம்மா என்னை…” என்று சொல்ல ஆரம்பிக்க…

“பரவாயில்லங்க… நீங்க சொல்லித்தான் எனக்கு புரியணும்னு இல்ல… அத்தை சந்தோஷத்துக்கு எந்த இடைஞ்சலும் என்னால வராது….” என்று சொல்ல…

அவன் அவளிடம் எதுவோ சொல்ல வந்து கடைசியில், தன்னை சமாளித்துக்கொண்டு, “வா… போகலாம்…” என முன்னே செல்ல… அவள் பின் தொடர்ந்தாள் அவனை…

அப்போது,

“ஏங்க… நில்லுங்க… சொல்லுறேன்ல… நில்லுங்க…” என்றபடி ஓடிவந்த பாலா, துணாவின் முன் சென்று மூச்சு வாங்க நிற்க…

“எதுக்குடி இப்போ இப்படி ஓடி வர்ற?... என்ன விஷயம்?...” என அவன் கேட்க…

“உங்களை நிப்பாட்டுறதுக்குத்தான் ஓடி வந்தேன்…” என அவள் சொல்ல…

“அவனை நாலு அடி அடிக்காம நான் வரமாட்டேன்…” என அவனும் வீம்பாக சொல்ல…

“நான் சொன்னா கேட்கமாட்டீங்க?...” என அவள் முறைத்துக்கொண்டே சொல்ல…

“அவனை அடிச்சிட்டு வந்து நீ சொல்லுறதை கேட்குறேன்… சரியா?...” என அவனும் விடாப்பிடியாக சொல்ல….

“முதலில் குடுங்க அந்த குச்சியை…” என அதைப் பிடுங்கி அவள் எறிய, சரியாக அதே நேரம் அங்கு வந்த மஞ்சரி அதை எடுத்துக்கொண்டு,

“நீங்க கவலைப்படாதீங்க… துணா சார்… நீங்க விட்ட வேலையை நான் பார்த்துக்கறேன்…” என்றபடி மஞ்சு துரத்தினாள் விழியனை…

“அச்சோ… போச்சு… அந்த குரங்கை அடிக்க முடியாம பண்ணிட்டியே… ஹ்ம்ம்…” என அவன் வருத்தமாக சொல்ல…

“என் மேல நிஜமாவே உங்களுக்கு வருத்தம் இல்லையா?...” என்ற அவளின் கேள்வி அவனை கூர்ந்து பார்க்க வைத்தது…

“எதுக்கு திரபா?... வருத்தம் வரணும்?...”

“உங்களை கொஞ்சம் நஞ்சமா நான் காயப்படுத்தியிருக்கேன்… அதுக்குத்தான்…”

“நீ சும்மாவே இருக்கமாட்டியாடி?... இதையே இன்னும் எத்தனை நாள் தான் சொல்லிட்டே இருப்ப?...”

“தெரியலை…. ஆனா,…” என்று அவள் சொல்லி முடிக்க விடாது அவன் அவள் இதழை முத்தமிட,

அவள் சற்று நேரம் அமைதியானாள்…

“இனி எதாவது இப்படி உளறின, இதுதான் உனக்கு தண்டனை… சொல்லிட்டேன்…” என்று அவன் சிரிக்க…

அவள் அவனை இறுக அணைத்துக்கொண்டாள்…

அவன் நெஞ்சத்தில் சாய்ந்து கண் மூடியவள், அன்று அவன் நேராக ஊருக்குப் போகவில்லை என்று சொன்னதை நினைவு கூர்ந்தாள்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.