(Reading time: 46 - 91 minutes)

தே நேரம்,

வெளிநாட்டில்,

“தேவிம்மா… நான் இப்போ ஒன்னு சொல்லுவேன்… ஆனா, நீ பதட்டப்படக்கூடாது… சரியா?...” என்று தன் அன்னையின் கைப்பிடித்து ஒரு இளைஞன் சொல்லிக்கொண்டிருந்தான்…

‘என்ன வேலா?... சொல்லுப்பா… அம்மா பதட்டப்பட மாட்டேன்…” என்று அவர் வாக்குறுதி கொடுத்ததுமே..

“நம்ம துணாவுக்கு நேற்று ஆக்ஸிடெண்ட் ஆயிட்டு தேவிம்மா… ஆனா, இப்போ அவன் நார்மலா இருக்கான்… தலையில கொஞ்சம் அடி… அப்புறம் காலில் கொஞ்சம் முறிவு… டாக்டர் அவன் சீக்கிரம் எழுந்து நடப்பான்னு சொல்லிட்டாங்க தேவிம்மா…’ என்றான் அவன்…

“என்ன வேலா சொல்லுற?... எப்படி ஆக்ஸிடெண்ட்… இப்போ பயப்படும்படி ஒன்னும் இல்லதான?...” என அவர் தாளமாட்டாமல் கேட்க…

“நிஜமா இப்போ நல்லா இருக்கான் தேவிம்மா… ப்ளீஸ் நீ பதட்டப்படாத… சொன்னாக்கேளு…” என அவன் சொன்னதுமே

அவர் முகம் கொஞ்சம் தெளிவு அடைந்தது…

பின்னர், அவரைப் பிடித்திருந்த கையை விடாமல் அழைத்துச் சென்று அவரை அமர வைத்தவன்,

“நானும், விழியனும் இங்க பார்த்துப்போம் தேவிம்மா… நீ போயிட்டுவா… கொஞ்ச நாள் அவன் கூட இருந்து அவனைப் பார்த்துக்க தேவிம்மா… நான் உடனே நீ இந்தியா கிளம்ப ஏற்பாடு செய்யுறேன்… சரியா?...” என கேட்க…

“எப்படி வேலா…. நான் இல்லாம தனியா இரண்டு பேரும் இருப்பீங்க… பரவாயில்லைப்பா… இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு நாம இந்தியா போவோம் தான?... அப்போ பார்த்துக்கறேன்… நான் இந்தியா போகலை இப்போ…” என்றார் அவரும்….

“சொன்னாக்கேளு தேவிம்மா… போயிட்டு வா…” என அவன் அழுத்தி சொல்ல… அவர் புரியாமல் அவனைப் பார்த்தார்…

“என்ன இருந்தாலும் பெத்தவளுக்கு பிள்ளை மேல பாசம் இருக்காதா?... அவன் அடிபட்டு கிடக்குறானேன்னு நெஞ்சம் துடிக்காதா?... எனக்குப் புரியுது தேவிம்மா உன் நிலைமை… நீ போயிட்டு வா… ஆனா, ரொம்ப நாள் ஆனாலும் திரும்பி எங்கிட்ட வந்துடு தேவிம்மா… நீ இல்லாம என்னால இருக்க முடியாது… ப்ளீஸ்…” என அவன் தாயின் முன் மணிடியிட்டு அழ,

அவனுக்கு எப்படி இந்த உண்மை தெரிந்ததென்று அவர் அதிர்ச்சியாகி அவனைப் பார்க்க, அவனோ சிலையென அமர்ந்திருந்தான்… மகனின் அருகில் அவரும் அமர்ந்தவர், “பெத்தது நான் தான்… ஆனா, நான் பெறாத பிள்ளை வேலா நீ… என் பிள்ளை மட்டும் தான் நீ… உன்னை யாருக்கும் விட்டுக்கொடுக்க நான் துணியமாட்டேன் என்னைக்கும்… அதை நீ புரிஞ்சிகிட்டா எனக்கு அது போதும்?... புரிஞ்சிப்பதான?...” என்று அவர் கேட்க… அவன் அவரின் மடி சாய்ந்திருந்தான்… மகனின் தலைமுடியை கோதிவிட்டு, அவர் அழுதுகொண்டே அவனைப் பார்க்க, அவனோ அவரின் கண்ணீரை துடைத்துவிட்டான்…

அங்கே மருத்துவனையில்,

மறுநாள் கண் விழித்ததும், வழக்கம் போல் அவள் சென்றது தன் சிறிய தந்தையாகிய இந்திரனைப் பார்க்க….

அவரின் மனைவி கஸ்தூரி அவளை வரவேற்று “என்னடி… நேற்று எங்க போன?... சாயந்தரம் வரவே இல்லை?... என்னாச்சு?...” என கேட்க… அவள் அனைத்தையும் சொன்னாள் வ்ருதுணனைப் பற்றி…

“ஆமா கஸ்தூரி, நேற்றே எங்கிட்ட போனில் சொன்னா, நான் தான் உங்கிட்ட சொல்ல மறந்துட்டேன்…” என்ற கஸ்தூரியின் கணவர் இந்திரன், அவளிடம், “நல்ல காரியம் செஞ்சடா… இப்போ தான் நீ பொண்ணு… ரொம்ப பெருமையா இருக்குடா…” என நிறைவோடு மகளின் தலையில் கைவைத்து “ரொம்ப சந்தோஷம்டா…” என சொல்ல… அவளும் புன்னகைத்தாள்…

‘சரிடா…. வா…. அங்க மருத்துவனையில் உன்னை டிராப் பண்ணிட்டு நானும் போறேன்…”

“இல்ல சின்னப்பா… வேண்டாம்… நான் ஸ்கூட்டியில போயிடுவேன்…” என்று அவள் சொன்னதை காதிலேயே வாங்காமல் மகளின் கைப்பிடித்து இழுத்துச் சென்றார் காரை நோக்கி…

மருத்துமனையில், அவளை விட்டு விட்டு செல்ல வந்த இந்திரன், அங்கிருந்த விஸ்வமூர்த்தியையும், வில்வமூர்த்தியையும் இனம் கண்டு கொள்ள, அங்கே பரஸ்பர விசாரிப்பும் நீண்ட நாளுக்குப் பிறகு சொந்த பந்தத்தை பார்த்த திருப்தியும் அங்கே அவர்களுக்கு கிடைக்க, வள்ளி தான் புரியாமல் விழித்தாள்…

“இவங்க நம்ம ஊர்க்காரங்கடா… நம்ம சொந்தக்காரங்க… ரொம்ப வேண்டியவங்க கூட வள்ளி… இவர் விஸ்வமூர்த்தி… இவன் பேரு வில்வமூர்த்தி… சிவா அண்ணனும் விஸ்வா அண்ணனும் நண்பர்கள்… அதே போல வில்வமூர்த்தியும் நானும் நண்பர்கள்… இப்போ புரியுதாடா உனக்கு?...”  என இந்திரன் அவளுக்கு விளக்கமாய் சொல்ல… அவள் ஆம் என்று தலை அசைத்தாள்…

“நல்ல வேளை உன் பொண்ணு தான் எங்க பையனை காப்பாத்தியிருக்கா… ரொம்ப நன்றிக்கடன் பட்டிருக்கோம் இந்திரா… உன் பொண்ணுக்கு நாங்க…” – வில்வமூர்த்தி…

“அட என்னடா… இது… நன்றி அது இதுன்னு…. சும்மா இரு….” – இந்திரன்…

“இல்லங்க… தம்பி… உங்க பொண்ணு… என் பையன் உயிரையே காப்பாத்தி கொடுத்திருக்கா… காலம் முழுமைக்கும் இதுக்கு என்ன கைமாறு செய்யப்போறேன்னு தெரியலை எனக்கு நிஜமா?...” என்றவர் அழ ஆரம்பிக்க…

“அய்யோ ஆன்ட்டி… அதான் இப்போ உங்க பையன் சரி ஆகிட்டார்ல… இன்னும் ஏன் இப்படி அழுது உங்க உடம்பை கெடுத்துக்கறீங்க?... இப்பவும் நீங்க அழுதா நான் பேசவே மாட்டேன்… போயிட்டே இருப்பேன்…” என்று அவள் விரட்ட…

“சரி… சரி… நான் அழலை…” என்றவாறு அவர் கண்களை துடைத்துக்கொள்ள, ஆண்கள் மூவரும் அவர்கள் இருவரையும் பார்த்து புன்னகைத்தனர்…

உறங்கிக் கொண்டிருந்த துணாவை பார்த்துவிட்டு, நாளை கஸ்தூரியையும், அண்ணன், அண்ணியையும் அழைத்து வருகிறேன் என்று கூறிவிட்டு, அம்பிகாவிற்கு உதவியாக துணையாக வள்ளி இங்கேயே இருக்கட்டும் என்றும் கூறிவிட்டு இந்திரன் சென்றுவிட, வள்ளி அம்பிகாவின் அருகில் அமர்ந்து தான் கொண்டு வந்திருந்த சாப்பாடை மூவருக்கும் பரிமாறினாள்…

“சாப்பாடு வேண்டாம்…” என்று மறுத்த அம்பிகாவை கொஞ்சி கெஞ்சி, மிரட்டி சாப்பிட வைத்தாள் வள்ளி… அதைக் கண்ட அண்ணன்-தம்பி இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டனர்…

பின்னர் துணாவின் அறையில் அமர்ந்திருந்த போது, அவன் லேசாக கண்விழிக்க, விழித்தவன், நேரே பார்த்தது வள்ளியைத்தான்…

“துணா… எப்படி இருக்குறப்பா?.. இப்போ… வலிக்குதா?... ரொம்ப?...” என்றதாயின் அக்கறையாக வார்த்தைகளுக்கு செவிகொடுத்தவன், பதில் பேச சிரமப்பட்ட போது,

“வேண்டாம்… பேச முயற்சி பண்ணாதீங்க… ரெஸ்ட் எடுங்க…” என்றவாறு வள்ளி பேச, அவன் லேசான புன்னகையோடு அவளைப் பார்த்தான்…

“சொல்ல மறந்துட்டேனே துணா… உன்னை நேத்து காப்பாத்தினான்னு சொன்னேன்ல அந்த பொண்ணு இவ தான்… பேரு வள்ளி…. நம்ம சிவநாதன் அண்ணா இருக்கார்ல ஊர்ல… அவரோட பொண்ணுதான்… இன்னும் சொல்லப்போனா எனக்கு மருமகடா…” என்று சொல்ல அவன் சிரித்தான்…

“உன் முகத்துல சிரிப்பைப் பார்த்த உடனே தாண்டா எனக்கு உயிரே வந்த மாதிரி இருக்கு…” என சொல்ல…

அதன் பின் சற்று நேரம் உடன் இருந்துவிட்டு, வள்ளி சென்றுவிட, அம்பிகா வள்ளி துணாவை காப்பாற்றி அழைத்து வந்து இங்கு கொண்டு வந்து சேர்த்து உதவி பண்ணியது, தனக்கு தெரியப்படுத்தியது, அவன் உயிரை போராடி மீட்டது என அனைத்தையும் ஒன்றுவிடாமல் சொல்லி முடித்து, “உன்னை அண்ணன்னு சொல்லி சேர்த்து கையெழுத்து போட்டு உன் ஆப்பரேஷனுக்கு உதவி பண்ணியிருக்காடா… ஆயிரம் தான் மருமக உறவா இருந்தாலும், அவ எனக்கு பொண்ணு போலதான் டா துணா… ஹ்ம்ம்… நல்லப் பொண்ணுல…” என்று அவர் கேட்க…

அவனும் “நல்ல பொண்ணு தான்… ஆம்…” என்று தலை அசைத்தான்…

அதன் பின்னர், அடுத்த நாள், சிவநாதன்-உமா, கஸ்தூரி-இந்திரன் என நால்வரும் வள்ளியுடன் வந்து துணாவைப் பார்த்துவிட்டு சென்றனர்… ஒரு வாரத்தில் சரியாக துர்காவும் வந்துவிட, துணாவின் தலையில் போட்டிருந்த கட்டுப் பிரிக்கப்பட்டிருந்தது…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.