(Reading time: 46 - 91 minutes)

பாலா வேலைக்கு சேர்ந்த ஒரு மாதத்தில், துணா வள்ளியையும் வேலையில் சேர சொல்ல, அவள் இம்முறை மறுக்கவில்லை…

மேலும் துணா, பாலாவோடு சேர்த்து, அவள் படித்த கல்லூரியில் இருந்து பாதி பேரை தேர்வு செய்து அவர்களுக்கும் இன்டெர்வியூ கார்ட் அனுப்ப, அது யாருக்கும் சந்தேகம் வராமல் இடமளித்தது… அப்படித்தான் மஞ்சுவும் அந்த கம்பெனியில் அவர்களுடனே வேலைக்கு சேர்ந்தாள்…

தனது கேபினில் அமர்ந்திருந்தவன், வள்ளியை தனது அறைக்கு வரசொல்லி பியூனிடம் சொல்லிவிட,

“மே ஐ கம் இன் சார்?...”

“யெஸ்… “ என்றவன், உள்ளே வந்தவளை கவனிக்காது, “நேற்று நான் கொடுத்த அந்த ஃபைல்ஸ் டீடெய்ல்ஸ் எல்லாம் ரெடியா ஆகிட்டா?.... இன்னும் ஒன் ஹவரில் எனக்கு வேணும்… முடியுமா வள்….” என்று சொல்லிக்கொண்டே நிமிர்ந்தவன், அங்கே வேறு ஒரு பெண்ணைக் கண்டதும், வார்த்தையை முடிக்காமல் அவன் நிற்க,

“அவங்க இன்னைக்கு லீவ்… அதான் நான் வந்தேன்…” என்றாள் உள்ளே வந்தவள்…

“ஓ… சரி… நீங்க?....” என்று அவன் கேட்டபோது

“பாலா…” என்று பதில் அளித்தாள் அவள்…

“சரி… பாலா.. நான் கேட்ட ஃபைல்ஸ் டீடெய்ல்ஸ் ரெடி பண்ணிடலாமா இன்னும் கொஞ்ச நேரத்துல?...”

“யெஸ். சார்….” என்றாள் அவளும்…

“ஒகே… ரெடி பண்ணி எடுத்துட்டு வாங்க….” என்று அவன் சொல்ல , அவளும் அறையை விட்டு வெளியேறினாள்… அவள் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்தவனின் மனதில் ஏனோ ஒருவித இனம் புரியாத சுகம் பரவியது… அது ஏன் என்று அவனுக்கு அப்போது தெரியவில்லை…

அவன் சொன்ன நேரத்திற்குள், அவள் அவன் கேட்டதை கொண்டு வந்த கொடுத்த போது, அவன் பார்வையில் அவளை மெச்சியது அல்லாமல், வார்த்தைகளிலும் வெளிப்படுத்தினான்….

அவளும் புன்னகையுடன் நன்றி தெரிவித்துவிட்டு அறையை விட்டு செல்ல,

அவன் ஏனோ அவள் சென்ற பின்பும், அவள் போன திசையையேப் பார்த்துக்கொண்டிருந்தான்…

சட்டென்று தலையை குலுக்கி வெளியே வந்தவன், என்ன இது நான் இப்படி வித்தியாசமா ஒரு பெண்ணிடம் இவ்வாறு தொலைகிறேன்… என்றெண்ணியவன், அதன் பின் வந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், அவளிடம் தொலைந்து தான் போனான் முற்றிலும்….

அவன் மனதிற்குள் அவளை எண்ணி எண்ணி, காதல் வளர்க்க, பாலாவோ அவன் மீது கோபத்தில் இருந்தாள்…

அவனும், வள்ளியும் சிரித்து சிரித்து பேசுவதை எல்லாம் அவளால் பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை…

ஏனோ இனம் புரியாத கோபம் அவள் மனதில் உண்டாயிற்று…

அந்த நேரத்தில் தான், வ்ருதுணன் தனக்கு பாலாவைப் பிடித்திருக்கிறது கல்யாணம் செய்துகொள்ள விரும்புவதாக வள்ளியிடம் சொல்ல, அவளுக்கோ சந்தோஷம் தாங்கவில்லை…

வீட்டில் வந்து முறைப்படி பேச சொல்லி அவள் சொன்னதை கேட்டு, அவனும் வந்தான் பாலாவை பெண் கேட்டு விஸ்வமூர்த்தி-அம்பிகா, மற்றும் வில்வமூர்த்தியுடன்…

ஆனால் எல்லாம் சுபமாக முடியும் நேரத்தில், “எனக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை….” என்று அனைவரின் முன்னிலையிலும் கோபமாக சொல்லிவிட்டு பாலா சென்றுவிட,

வ்ருதுணன் உடைந்தே போனான்… முற்றிலும்…

எதற்காக இப்படி விருப்பமில்லை என்று சொன்னாள் என எண்ணி எண்ணி குழம்பிப் போனான் வ்ருதுணன்…

என்ன தான் உடைந்து போனாலும் வெளியே அதை அவன் காட்டிக்கொள்ளவில்லை… ஆனால் அவன் வலியை வள்ளி உணர்ந்து கொண்டாள்…

“என்னால தானே உங்களுக்கு இந்த நிலை?...” என்று தினமும் அவனிடம் சொல்லி வருத்தப்படுபவளை “அப்படிஎல்லாம் எதுவுமில்லை…. நீயாக நினைத்துக்கொள்ளாதே…” என்று துணாவும் சமாதானப்படுத்துவான்…

அந்த நேரத்தில் தான் வள்ளிக்கு ஒரு மாப்பிள்ளை வீடு வர, அவள் குதித்தாள்… முடியவே முடியாது… எனக்கு கல்யாணமே வேண்டாம் என்று…

ஏன் என்று கேட்டதற்கு, வேண்டாம் என்றால் விட்டு விடுங்களேன்… என்று சொல்லி மறுத்துவிட்டாள்…

வ்ருதுணனுக்கு தகவல் தெரிந்து அவன் அவளிடம் அதுபற்றி கேட்டபோது, அவள் மௌனமாய் இருந்தாள்… ஏனோ அவனிடம் பேசும் பல தருணங்களில் அவள் அமைதியாகவே இருப்பாள்… அவளின் அந்த மௌனம் அவனுக்கு ரொம்ப பிடிக்கும்… அதை அவனும் பல நேரங்களில் அவளிடம் தெரியப்படுத்தியதும் உண்டு…

“ஏண்டா கல்யாணம் வேண்டாம்னு சொல்லுற?...”

“ப்ளீஸ் விட்டுடுங்க… நான் சபிக்கப்பட்டவ… எனக்கு எதுவும் வேண்டாம்… என்னை விட்டிருங்க…” என்று அவள் கெஞ்ச…

“சரி… உனக்கு உன் பிடிவாதம் முக்கியம்னா எனக்கு என் பிடிவாதம் முக்கியம்… பாலா தான் என்னைக்கு இருந்தாலும் என் மனைவி… அது மாறாது… அது போல நீ என்னைக்கு கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லுறியோ அதுவரை நானும் என் கல்யாணத்தைப் பத்தி யோசிக்க மாட்டேன்….” என்று அவன் சொல்ல அவளுக்கு தூக்கிவாரிப் போட்டது…

“எனக்காக உங்க வாழ்க்கையை பாழாக்காதீங்க… ப்ளீஸ்… நான் சொல்லுறதைக் கேளுங்க…” என்று அவள் கெஞ்சியதை அவன் காது கொடுத்து கேட்கவே இல்லை…

“நீ சொல்லுற மாதிரி உன் இந்துவுக்கே எல்லாம் முதலில் கிடைக்கட்டும்… ஆனா என் தங்கை வாழ்வில் நல்லது நடக்குறதுக்கான அறிகுறி தெரியாம பாலா கழுத்துல நான் தாலி கட்ட மாட்டேன்…. இது உன் மேல சத்தியம்…” என்று அவன் பட்டென்று சொல்ல…

அவள் வாயடைத்துப்போனாள்…

“நீ ஏன் என்னை அண்ணன்னு ஒரு தடவை கூட சொல்லலைன்னு எனக்கும் தெரியும்… அதுவும் உன் இந்துவுக்கு முதலில் அண்ணன் என்ற உறவு கிடைக்கணும்னு தான?...” என்று கேட்க

அவள் பேச்சற்று போனாள்…

அதன் பின்னர் அனைத்தும் வேகவேகமாய் நடந்து முடிந்தது…

மைவிழியன் வந்தது, பாலாவிடம் அண்ணன் உறவு கொண்டாடியது… யுவி வந்தது… அவர்கள் அனைவரின் திருமணம் என அனைத்தும் கண் மூடி இமைப்பதற்குள் நடந்து முடிந்தே விட்டது…

அனைத்தையும் பாலாவிடம் சொல்லிவிட்டு,

‘என்னை காப்பாற்றியது அவள் தான்… அது உனக்கு தெரிந்ததா இன்று வரை?... நீ முதலில் வேலையில் சேர்வதற்காக ஒரு வருடம் காத்திருந்தவள் அவள்?... அது உனக்கு தெரியுமா எப்போதாவது?... எதுவாக இருந்தாலும் உனக்கே முதலில் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அவள், உனக்கு அண்ணன் என்ற உறவு கிடைத்த பின்பும், இன்னும் என்னை அண்ணா என்று அவள் அழைத்ததில்லை… அதுதான் தெரியுமா உனக்கு?... இவ்வளவு ஏன் திருமணம் முடிந்த அன்று, நீ இந்த அறைக்குள் வந்ததையும், உன் வாழ்க்கை நல்லபடியா இருக்கணும் என்றும் கைகூப்பி வேண்டி உன்னை ஆசையாய் பார்த்தாளே… வள்ளி… அதுவாவது உனக்கு தெரியுமா திரபா?... இப்பொழுது கூட உனக்கு முதலில் குழந்தை பிறக்கணும் என்பதற்காக தான் குழந்தைப் பெற்றுக்கொள்வதை கூட தள்ளிப் போட்டாலும் போட்டிருப்பாள் அந்த முட்டாள் பாசக்கார பெண் வள்ளி… ஆனால், இது எதுவுமே உனக்குப் புரியப்போவதில்லை அப்படித்தானே திரபா?...” என்று கேட்ட வினாடியே அவன் காலடியில் விழுந்து கதறினாள் பாலா…

“என்னை மன்னிச்சிடுங்க… நான் தெரியாம தப்பு பண்ணிட்டேன்… நான் என் வள்ளியை பார்க்கணும்… உடனே… என்னை கூட்டிட்டு போங்க…” என்று அவள் கெஞ்ச… அவன் அவள் வார்த்தைகளில் நிறைவு கொண்டான்….

அதன் பின் மஞ்சரி, மைவிழியன், பாலா, துணா என அனைவரும் யுவியைத் தேடி வீட்டிற்கு வர,

ஜாக்கிங்க் முடித்து படிகளில் ஏறியவன் காதுகளில் அழைப்பு மணி சத்தம் கேட்க… தானே சென்று திறக்கலாம் என அவன் செல்லும் முன், வள்ளி கதவைத் திறந்திருந்தாள்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.