(Reading time: 46 - 91 minutes)

தவைத் திறந்ததும் மலர்ந்திருந்த பாலாவின் முகத்தினைக் கண்டதும், அவளுக்குள் சந்தோஷம் பெருகிற்று…

“வா…. இந்து….” என்று சொல்லத் துணிந்தவள், சட்டென்று தன்னை சமாளித்துக்கொண்டு, அனைவரையும் பார்த்து, “வாங்க….” என்றாள்…

அப்போது, பாலா, வள்ளியின் வார்த்தை சமாளிப்பை பார்த்துவிட்டு, “வா இந்துன்னு சொல்லமாட்டியா வள்ளி?... நான் தான் சின்னப்பிள்ளைத்தனமா தப்பா நடந்துகிட்டேன்னா என்னை அப்படியே ஒதுக்கிடுவியா வள்ளி?... எங்கிட்ட பேசமாட்டியா?... நான் உன் இந்து இல்லையா?.... என்னை மன்னிக்க மாட்டியா?...” என்று கேட்டதும் தான் தாமதம் போல்,

பாலாவை அணைத்து அவள் நெற்றியில் முத்தமிட்டாள் வள்ளி கண்ணீருடன் நிறைவாய்…

“சாரி வள்ளி… என்னை மன்னிச்சிடு…. உனக்கு நான் நிறைய கஷ்டம் கொடுத்திட்டேன்…” என்று பாலா சொல்ல…

“இல்லடா… நீ எந்த கஷ்டமும் எனக்கு தரலை… முதலில் அழறதை நிப்பாட்டு…” என்று வள்ளி கூற,

“நான் ஒருநாள் அழறதையே உன்னால தாங்க முடியலையே… நீ எத்தனை நாள் உன் மனசுக்குள்ள யாருக்கும் தெரியாம அழுதுருப்ப…???... அது எனக்கு இப்போ புரியுது வள்ளி…. என்னை மன்னிச்சிடு…”

“அய்யோ… அப்படி எல்லாம் இல்லடா… யாரு சொன்னா?... நான் அழுதேன்னு… நான் கஷ்டப்பட்டேன்னு… அதெல்லாம் எதுவும் இல்லை… என் இந்து எங்கிட்ட வந்துடுவான்னு எனக்கு தெரியும்… அது போலவே வந்துட்ட… அதுபோதும்டா எனக்கு…” என்று சொல்லி பாலாவை அணைத்துக்கொண்டாள் வள்ளி…

அவர்கள் இருவரின் மேலும் அப்போது ஒரு கரம் விழ, அங்கே மஞ்சரி இருந்தாள் கலங்கிய விழிகளோடு சிரிப்புடன்,

அவளையும் அவர்கள் இருவரும் அணைத்துக்கொள்ள, அங்கே யுவி, துணா, மைவிழியனுக்கும் கூட கண்கள் கலங்கி விட்டது…

டந்த நிகழ்வுகளை கணவனின் நெஞ்சில் மேல் சாய்ந்து நினைவு கூர்ந்தவளிடம்,

“என்ன ஒரு குட்டி பிளாஸ்பேக் போயிட்டு வந்துட்டியா?...’ என்று துணா கேலிசெய்ய…

“ஹ்ம்ம்…. ஆமா…” என்றாள் அவளும்…

“அது சரி… இப்படி இருந்தா எப்படி பொங்கல் வைக்கப் போறதாம்?...” என அவன் கேலியாய் கேட்க

“அச்சச்சோ….” என அவளை தள்ளியவள், “சீக்கிரம் வாங்க… கிளம்பலாம்…” என அவனை விட்டுவிட்டு உள்ளே விரைந்தாள்…

அனைவரும் கோவிலுக்கு வந்து பொங்கல் வைத்து விட்டு மன நிறைவுடன் சாமி கும்பிட்டு விட்டு இரவு அங்கேயே தங்க முடிவெடுத்து தங்கினர்…

றுநாள், துணா-பாலா, விழியன்-மஞ்சரி, வள்ளி என ஐவரும் அங்கே வயல்வெளிகளில் நடக்கச் சென்றுவிட,

யுவி மட்டும் தனியாக அங்குள்ள தோப்பிற்குள் சென்றான்…

பல மணி நேரம் கழித்து, தாயைத் தேடி வந்தவனின் முகத்தில் இதுவரை தொலைத்த சந்தோஷத்தை கண்டார் தேவி…

“என்ன வேலா?... இவ்வளவு சந்தோஷமா இருக்குற?...”

“ஆமா தேவிம்மா… ரொம்ப சந்தோஷமா இருக்குறேன்…” என்றான் அவனும்…

“என்னப்பா என்ன சந்தோஷம்?... அம்மாகிட்ட சொல்லமாட்டியா?...” என அவரும் கேட்க…

“உங்கிட்ட சொல்லாமலா?... தேவிம்மா?...”

“அதுசரி… அப்ப சொல்லு… ஆமா வள்ளி எங்க?...” என்று அவர் வள்ளியைப் பற்றி கேட்டதே காதில் விழாது போல இருந்தவன்,

“தேவிம்மா… நான் தொலைச்ச சந்தோஷம் எனக்கு கிடைச்சிட்டு… என்னைத் தேடி வந்துட்டு என் வரம்….” என்று சொல்ல

அவருக்கு எதுவும் புரியவில்லை…

“என்ன தேவிம்மா… புரியலையா?... என் த்வனி கிடைச்சிட்டா தேவிம்மா…. என் த்வனியை இன்னைக்கு நான் பார்த்துட்டேன் தேவிம்மா… என் த்வனி வந்துட்டா தேவிம்மா என்னைத் தேடி…” என்று சந்தோஷத்தில் ஆர்ப்பரித்தவன்,

“உங்கிட்ட காட்டணும்னு கூட்டிட்டு வந்தேன்…” என்றவன், திரும்பி, “த்வனி வா…” என்றழைக்க,

ஒரு பெண் வட இந்திய பாணியில் புடவைகட்டி வந்தாள்… தூரத்தில் தெரிந்த அவளின் நிழல் உருவமும், மகனின் ஆர்ப்பரிப்பும் அவர் நெஞ்சில் துக்கத்தை விதைக்க, மனம் எங்கும் வலியுடன் கண் மூடி அப்படியே சரிந்தார் தேவி…

அவர் நிலத்தில் விழாதவாறு சட்டென தன் கைகளில் தாங்கியவன், த்வனி… வா சீக்கிரம்….” என்று அவளை அவசரப்படுத்தியவன்

“தேவிம்மா… என்னாச்சு… என்னைப் பாரு… இங்க பாரு….” என கதறினான் யுவி…

ஹாய்… ஃப்ரெண்ட்ஸ்… சாரி கொஞ்சம் லேட்டா அப்டேட் கொடுத்ததுக்கு…

கொஞ்சம் லாங்க் எபிசோட் இந்த தடவை கொடுத்திருக்கேன்னு நினைக்கிறேன்…

வள்ளி-பாலா பிரச்சினை ஒருவழியா தீர்ந்துச்சு…

கதையை படிச்சிட்டு சொல்லுங்க எப்படி இருக்குன்னு…

ஹ்ம்ம்ம் தேவி அம்மா கண் முழிச்சு என்ன சொல்லுவாங்க…

ஹ்ம்ம்… யோசிச்சிட்டே இருங்க…

அடுத்த வாரம் நான் உங்களை மறுபடியும் மீட் பண்ணுறேன்… டாட்டா…ச்

வரம் தொடரும்…

Episode # 16

Table of Contents

Episode # 18

{kunena_discuss:866}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.