(Reading time: 11 - 21 minutes)

தியின் மனதில் இவளே வந்தனாவை மறக்க முடியவில்லை என்றால் ஆதியால் எப்படி முடியும் என்று தோன்றியது. ஆனால் அதை மறைத்து விட்டு “எனக்கு புரிகிறது அதி. ஆனால் எத்தனை நாள் உன்னால் இப்படி இருக்க முடியும். இன்னும் கொஞ்ச நாளில் நீ திருமணம் முடித்து செல்ல வேண்டியவள்.”

 இந்த இடத்தில அதிதியின் முகம் திடுக்கிட்டு மாறியதை மதி கவனித்தாள். அதை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து “இங்கு இருக்கும் வரைதான் உன்னை நாங்கள் பார்த்து கொள்ள முடியும். நீ வேறு வீடு சென்றால் அங்கே நீ எல்லாருக்கும் பொறுப்பாக வேண்டி வரும். வந்தனாவை மறப்பது கஷ்டம்தான். ஆனால் நீ அதை ஒதுக்கி விட்டு வாழ பழகு.” என்று அறிவுரை கூறினாள்.

அதிதியும் “நீங்கள் சொல்வது சரிதான் அண்ணி. நானும் முயற்சி செய்கிறேன்.” என்று கூறியவள் கொஞ்ச நேரம் வேறு கதைகள் பேசினாள்.

பிறகு மதி “அப்புறம் .. நீ இன்னும் முழுவதும் சொல்லி முடிக்கவில்லை போல் தெரிகிறதே .. “ என்றாள்.

அதிதி ஒரு திடுக்கிடலுடன் “ வேறு என்ன .. ஒன்றும் இல்லியே .. என்று தடுமாறினாள்”

“இல்லை அதி .. இது மட்டும் உன்னுடைய பிரச்சினையாக எனக்கு தோன்றவில்லை. திருமணம் என்று சொன்னவுடன் உன் முகம் மாறியதை கவனித்தேன். “

“நீங்கள் திடீரென்று திருமணம் பற்றி கூறியதால் இருக்கும். “

“இல்லை அதி ... ஏதோ உன் மனசை குடைகிறது. வாணியை விட்டு கேட்கலாம் என்று நினைத்தேன். ஆனால் என்ன இருந்தாலும் அவள் என் தங்கை தான். இந்த குடும்பத்தை சேர்ந்தவள் இல்லை. அத்தையிடம் பேச சொல்லியிருப்பேன். ஆனால் உன்னால் சொல்ல முடியும் என்று தோன்றவில்லை.  என்னை நீ உன் தோழியாக எண்ணி சொல். உனக்கு என்ன பிரச்சினை?”

அதி சற்று நேரம் மௌனமாக இருந்து விட்டு “ஆதி வந்தனா நிச்சயத்திற்கு பிறகு சூர்யாவின் நண்பர்  பிரகாஷ் வந்து என்னிடம் திருமணம் செய்ய விரும்புவதாக கூறினார். நான் அண்ணா திருமணத்திற்கு பின் வீட்டில் கேட்க சொன்னேன். ஆனால் அதற்கு பிறகு அண்ணாவின் நிலைமையும், வீட்டின் நிலைமையும் பார்த்து விட்டு  என்னை மறந்து விட சொல்லி விட்டேன். அவரும் எங்கோ வெளியூர் சென்று விட்டார்.

இப்போ சில நாட்களாக மீண்டும் திருமணத்திற்கு கேட்கிறார். அவர்கள் வீட்டில் கேட்பதாக சொன்னார். அவர் என்னை தவிர யாரையும் மணப்பதற்கு மறுக்கிறார் . வீட்டில் இந்த நிலையில் எனக்கு பேச சொல்ல பிடிக்கவில்லை. அதனால் என்ன சொல்வது என்று புரியாமல் இருக்கிறேன்,.”

“அவர் உன்னிடம் நாகரிகமாகத்தானே நடந்து கொள்கிறார்.

“அதெல்லாம் ப்ரசச்சினை ஒன்றும் இல்லை. அவருக்கு என்ன பதில் சொல்ல என்று தெரியவில்லை.

“உனக்கு அவரை பிடிச்சிருக்கா?” என்று மதி கேட்க.. அதிதி வெட்கத்தோடு தலையாட்டினாள்.

“சரி விடு. அடுத்த முறை அவர் உன்னை கேட்டால் ஒரு வாரம் கழித்து நம் வீட்டிற்கு வந்து பெரியவர்களை விட்டு பேச சொல்லு. அவரிடம் கூறிய பிறகு என்னிடம் சொல். நான் நம் வீட்டில் பேசுகிறேன்.”  என்று முடித்தாள்.

“சரி வா. உள்ளே போகலாம். எல்லாரும் தேடுவார்கள். அதற்கு முன் நான் ஒன்று சொன்னால் கேட்பாயா?

என்ன அண்ணி

இல்லை நீ கூறியபடி பார்த்தால் உன் அம்மாவை விட அத்தையிடம் நெருக்கமாக இருந்திருக்கிறாய். நீ இன்னும் கொஞ்ச நாளில் வேறு வீடு சென்று விடுவாய். அது வரை உன் அம்மாவிடம் அந்த நெருக்கத்தை காண்பிக்கலாமே. உன் அம்மா என்பது என்றைக்கும் மாறாது. ஆனால் திருமணத்திற்கு பின் இதை உணர்வாய். அதனால்தான் இன்னும் கொஞ்சம் உன் அம்மாவிடம் நெருக்கமாக இரு, இது என்னுடைய கருத்துதான். முடிந்தால் எற்றுகொள்.”என்று கூறிவிட்டு “வா போகலாம்” என்றாள்.

ருவரும் உள்ளே செல்லும் போது ஆதியை தவிர மூன்று பேரும் சாப்பிட உட்கார்ந்திருந்தார்கள். மதி வந்து “சாரி அத்தை. பேசி கொண்டிருந்ததில் கொஞ்சம் லேட்டாகி விட்டது. இதோ அவருக்கு எடுத்து கொண்டு போகிறேன். என்றாள்.

“இல்லை மதிமா. அவனுக்கு நான் கொடுத்து விட்டேன். நீயும் சாப்பிட்டு விட்டு செல். “ என்று கூறினார்.

மதியின் மனதில் அதிதி கூறியதே ஓடிக்கொண்டிருந்தது. தான் அத்தையிடமும் பேச வேண்டும் என்று எண்ணி கொண்டாள்.

சாப்பிட்டு முடித்து விட்டு ஆதியை தேடி போனாள். அவனும் அவளை எதிர் பார்த்து இருந்தான். ஹாஸ்பிடலில் இருந்து வீட்டிற்கு வந்த பின் அவன் க்ரட்சாஸ் உதவியுடன் பாத்ரூம் மட்டும் சென்று வரலாம் என்று டாக்டர் கூறியிருந்தார். ஆனால் யாராவது உடன் இருக்கும்படியும் சொன்னதால் அவன் தனியாக செல்வதில்லை. ஒருபுறம் வாகரின் உதவியும், மறுபுறம் மதியும் பிடிக்க சென்று வருவான்.

அவள் வந்தவுடன் சென்று வந்தவன் , மதி ஏதோ யோசனையாக இருக்கவும் “என்ன மதி யோசனை?” என்றான்.

“ஒன்றும் இல்லை. நீங்கள் சொல்லியபடி அதியிடம் பேசினேன். அந்த யோசனைதான்”

“ஒஹ் .. அவள் என்ன சொன்னாள்?

உங்களால்தான் என்று சொல்ல வந்தவள் சற்று யோசித்து “வந்தனாவிற்கு பிறகு அவளுக்கு தோழிகள் இல்லாததால் நிறைய மனதில் போட்டு குழப்பி கொண்டிருந்தாள். இனி கொஞ்சம் மாறி விடுவாள் என்று எண்ணுகிறேன்.”

அவனும் யோசனையோடு “சரி “ என்றான்.

“உங்களிடம் ஒன்று கேட்கலாமா ?”

“என்ன”

அதிதியின் வயது என்ன”

“2 3 என்று நினைக்கிறன்“

அவளுக்கு திருமணத்திற்கு பார்க்கவில்லையா?

ஆதி ஒரு நிமிடம் விழித்து விட்டு “இன்னும் இல்லை. நாங்கள் இன்னும் அவளை சின்ன பெண்ணாகத்தான் எண்ணுகிறோம்.”

சரிதான். ஆனால் இது சரியான வயது என்று நினைக்கிறேன்.

“அவள் யாரையாவது விரும்புகிறாளா?

இல்லை. அப்படி சொல்ல வில்லை. ஆனால் அவள் திருமணத்தை பற்றி யோசிக்க மறுக்கிறாள். அதனால்தான்  கேட்டேன்.

ஏன் ?

அது .. உங்கள் நிலை, மாமாவின் உடல்நிலை இதை எல்லாம் எண்ணி குழம்புகிறாள்.

ஒஹ் .. ஆனால் நீ ஏன் அதை பற்றி பேசினாய்.

அவளுடைய மனதில் யாரையாவது எண்ணி அதனால் கொஞ்சம் வருத்தமாக இருக்கிறாளோ என்று எண்ணினேன்.

“அது ஏன் உனக்கு தோன்றியது” என்று விடாமல் கேட்டான்

ஹப்பா சரியான விடாக்கொண்டன் என்று எண்ணியவள் “அவள் பேசும்போது இதுதான் நீ கவலையில்லாமல் இருக்க வேண்டிய நேரம். திருமணத்திற்கு பின்னால் பொறுப்பு கூடி விடும். என்று கூறினேன். அதற்கு அவள் முகத்தில் வருத்தம் போல் தோன்றி மறைந்தது. அதனால் தான் உங்களை கேட்டேன்.

“நீ அவளிடம் கேட்டிருப்பாயே ? இல்லை என்று கூற வேண்டாம். நீயும் விடாக்கொண்டிதான். என்ன பதில் சொன்னாள்”

அவள் அதிசயித்து “அப்படி ஒன்றும் இல்லை. அவளிடம் ஒருவர் கேட்ட போது வீட்டில் பேச சொல்லியிருக்கிறாள்” என்றாள்.

சற்று நேரம் திகைத்த ஆதி “யார் அது ? “ என்றான்

“உங்கள் தம்பியின் நண்பர் பிரகாஷ் “ என்று முடித்தாள்.

ஆதிக்கு இந்த ஆக்சிடென்ட் நடப்பதற்கு முன்  பிரகாஷ் தன்னிடம் பேச வேண்டுமென்று கூறியது நினைவு வந்தது.

தொடரும்

Episode # 05

Episode # 07

{kunena_discuss:903}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.