(Reading time: 9 - 18 minutes)

பார்த்தீர்களா பிரபு, இறந்தும் இவன் திருந்தவில்லை. நேற்றுவரை நாம் இவனைக் கொல்லவில்லை என்று இவன் நம்மைத் திட்டினான், இப்போது கொன்றதற்காக திட்டுகிறான். இவன் நாம் எது செய்தாலும் திட்டுவான் போலிருக்கிறது பிரபு” மேலும் கொளுத்திப் போட்டார் சித்ர குப்தர்.

“ஹலோ குப்தா சார், நேற்றுவரை கோடி தடவைக்கு மேல் நான் என்ன கொன்றுவிடுங்கள் என்று கெஞ்சியிருப்பேன், அப்போதே என்னைக் கொன்றிருக்க வேண்டியதுதானே, அப்போதெல்லாம் விட்டுவிட்டு, இப்போதுதான் எனக்கு வாழவேண்டும் என்று ஒரு சின்ன ஆசை வந்தது, அதற்குள் இப்படி பண்ணிட்டிங்க” சித்ர குப்தரிடம் பதிலுக்குப் பதில் கூறினேன்.

“என்ன சித்ர குப்தரே, இவனுக்கு திடீரென்று வாழும் எண்ணம் தோன்றும் அளவுக்கு இன்று என்ன நடந்தது” சித்ர குப்தரை பார்த்து எமன் கேட்டார்.

“அது ஒன்றும் இல்லை பிரபு, இவன் நீண்ட நாட்களாக, இல்லை இல்லை நீண்ட வருடங்களாக ஒரு பெண்ணை ஒருதலையாக்க் காதல் செய்துவந்தான், அந்தப் பெண் இன்றுதான் இவனிடம் முதல் முறையாகப் பேசினால், அது கூட இவனை தன் பின்னால் வரக்கூடாது என்றுதான் கூறினாள், அதற்கே இவன் தலை கால் புரியாமல் வாகனத்தில் சென்று, காரில் அடிப்பட்டு இங்கு வந்து சேர்ந்துவிட்டான்” மிகவும் நக்கலாகப் பதில் சொன்னார் சித்ர குப்தர்.

அவரது அவ்வளவு அலட்சியமாகப் பதில் கூறியது எனக்குக் கோபத்தை வரவழைத்தது. “குப்தா சார் என்ன பேச்சு பேசுரிங்க, அனு மாதிரி ஒரு பெண் என்னைப் போல் ஒரு பையனை பார்ப்பதே பெரிய விஷயம் அதிலேயும் அவளாக வந்து என்னிடம் பேசியது எவ்வளவு பெரிய விஷயம் என்று உங்களுக்கு எப்படித் தெரியும். இப்படி அனு என்னிடம் பேச மாட்டலா? என்று நான் எத்தனை நாள் ஏங்கிறுக்கேனும் உங்களுக்குத் தெரியுமா?” எனது பதில்.

சித்ர குப்தர் அதற்குப் பதில் எதோ கூறத் தொடங்கியபோது, “அவனை விடும் குப்தரே. ஏய் மானிடா, இதனை வருடங்களாக அந்தப் பெண்ணை காதலிக்கிறாய் என்று குப்தர் கூறுகிறார், ஆனால் இன்றுதான் அவளிடம் முதலில் பேசினாயா, இத்தனை காலம் என்ன செய்து கொண்டிருந்தாய், ஏன் அவளிடம் பேசவில்லை” எமனின் கேள்வி இது.

“அதற்கும் கடவுள் நீங்கதான் காரணம்” நான் சோக முகத்துடன் பதில் கூறினேன்.

“என்ன பிதற்றுகிறாய்? நீ அந்தப் பெண்ணிடம் பேசுவதற்கும் எங்களுக்கும் என்ன சமந்தம்” எரிமலை பிழம்பாக சீறினார் எமன்.

“சிறு வயதில் இருந்தே, நான் ஆசைப்பட்ட எதுவுமே எனக்குக் கிடைத்ததில்லை, கிடைக்கவும் நீங்கள் விட்டதில்லை. ஸோ நான் சென்று அனுவிடம் பேசி, அதற்குப் பிறகு அவளை பார்க்கவேக் கூடாது என்று சொல்லிவிட்டாள், என்னுடைய லைபுல இருக்கின்ற ஒரே சந்தோஷமான விஷயத்தையும் என்னை இழக்க சொல்றிங்களா?” வேகமாகப் பதில் கூறினேன்.

“அப்படி என்றால் உன் வாழ்வில் நடந்த அனைத்தும் பிரச்சனைதான், அது அனைத்திற்கும் நாங்கள்தான் காரணம் என்கிறாயா?” கோவத்தின் உச்சியில் இருந்த எமனின் நாவில் இருந்து  வந்தது அந்தக் கேள்வி.

“அதில் உங்களுக்கு டவுட் வேறா?” என்னுடைய பதில்.

“டேய் விஷ்ணு, நன்றாக என்னை உற்றுப் பார்த்து பதில் கூறு” எமனின் முகத்தில் நூறு எரிமலை வெடித்தது.

எமனின் முகமும், கண்களும் கோவத்தில் சிவந்து, பார்ப்பதற்கே பயங்கரமாக இருந்தது “நீங்க எவ்வளவு கோவமா கேட்டலும் சரி என்னுடைய பதில் இதுதான். என்னுடைய லைபுல இருந்த எல்லாப் பிரச்சனைக்கும் நீங்கதான் காரணம், நீங்க மட்டும்தான் காரணம்” எனக்கு அந்தப் பதிலை கூற எங்கிருந்துதான் தைரியம் வந்ததென்று தெரியவில்லை, கூறிவிட்டேன்.

“அப்படியென்றால், உன் வாழ்வில் கடவுள் நாங்கள் குறுக்கிடாமல் இருந்திருந்தால் நீ நன்றாகவும், சந்தோஷமாகவும் இருந்திருப்பாய் அல்லவா?”

“கண்டிப்பாக, என்னுடைய அனுவை கல்யாணம் செய்து கொண்டு, சந்தோஷமா இருந்திருப்பேன்” என்று பதில் கூறினேன்.

எனக்கும், எம தர்மருக்கும் வார்த்தையால் யுத்தம் நடந்து கொண்டிருந்தது. நடப்பது அனைத்தையும் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் சித்ர குப்தர். 

தொடரும் . . .

Episode # 03

Episode # 05

{kunena_discuss:906}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.