(Reading time: 9 - 18 minutes)

ன்ன அம்மா... ஏன் ஒருமாதிரி இருக்கீங்க?...” என்று கேட்டாள் பவித்ரா காவேரியிடம்….

“ஒன்னுமில்லை பவித்ரா….”

“எனக்கு தெரியாதா அம்மா?.. உங்க மனசு?...” என்ற பவித்ரா, காவேரியின் கையைப்பிடித்துக்கொண்டாள்…

அவளின் கையில் பாசத்துடன் தட்டிக்கொடுத்தவர், சிறு புன்னகையுடன்,

“என்னன்னு சொல்லத் தெரியலை பவித்ரா… ஆனா மனசுல ஏதோ கொஞ்சம் வெற்றிடம்…”

“அம்மா… இன்னும் கொஞ்ச நாள் தானம்மா… நதிகா வந்துடுவாம்மா…”

“ஹ்ம்ம்… பவித்ரா… இங்க இருக்குற எல்லா குழந்தைங்களும் எனக்கு நதிகா மாதிரி தான்… என்ன ஒன்னு நதிகா என் ராஜாவோட பொண்ணு…. அதுதான் கொஞ்சம் ஸ்பெஷல்…”  

“அது நீங்க சொல்லித்தான் எனக்குத் தெரியணுமா அம்மா?... நீங்க சொல்லாமலே எனக்கு அது தெரியும்மா…”

“நீ சாப்பிட்டியா பவித்ரா?...”

“சாப்பிட்டேன்மா நீங்க?...”

“சாப்பிட்டேண்டா…” என்று அவர் சொல்லி முடித்ததும் அங்கே ருணதி வந்தாள்…

“அடடே வாம்மா ருணதி…”

“குட்மார்னிங்க் மேடம்… குட்மார்னிங்க் பவித்ரா…” என்று புன்னகையுடன் வந்தாள் ருணதி…

“குட்மார்னிங்க் ருணதி…” என இருவரும் அவளிடம் சொல்ல,

அவள், “என் வேலையை ஆரம்பிக்கலாமா மேடம்?...” என காவேரியிடம் கேட்க

அவர் “சரி…. ருணதி….” என்றார்…

சரி என்றபடி அந்த அறையை விட்டு வெளியேறி குழந்தைகளைப் பார்க்கச் சென்றாள் ருணதி…

You might also like - Mounam etharku... A family drama...

 

“அம்மா… நான் ஒன்னு கேட்கவா?...”

“என்ன பவித்ரா… கேளு…”

“நீங்க ருணதியைப் பற்றி என்ன நினைக்குறீங்க?...”

“நல்ல பொண்ணு…. நல்ல குணமாவும் இருக்குறா…. பெரியவங்க கிட்ட மரியாதையா நடந்துக்குறா… குழந்தைங்க கிட்ட அன்பா நடந்துக்குறா…”

“ஹ்ம்ம்… அவ்வளவுதானா?...” என கேள்வியோடு அவள் நிறுத்த

“எனக்கு தெரிஞ்சது அவ்வளவுதான்…” என்றார் அவர்…

“ஹ்ம்ம்… ஆனா பெரியவங்ககிட்ட இவ்வளவு மரியாதையா நடந்துக்குற இவங்களை ஏன் இவங்க மாமனார் ஒதுக்கி வச்சிருக்காங்கன்னு தெரியலை…” என அவள் சொன்னதும்,

காவேரி யோசனையுடன், “இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும்?...” எனக் கேட்க,

“கோகிலவாணி பாட்டிதான் சொன்னாங்க….” என்றாள் அவள்…

“என்ன சொல்லுற பவித்ரா?...” என காவேரி சற்றே பதட்டமாய் கேட்க

அவள் நடந்ததை சொன்னாள்…

அன்று ஆசிரமத்திற்கு வந்திருந்த கோகிலவாணி ஒரு ஓரமாக செடிகளின் பக்கத்தில் நின்றிருந்த போது, அவர் அருகில் சென்ற பவித்ரா,

“என்ன பாட்டி இங்க நின்னுட்டு என்ன பண்ணிகிட்டிருக்கீங்க?...” என்று கேட்டதும், அவர் திரும்பியபோது அவர் விழிகளில் சில நீர்த்துளிகள்…

“பாட்டி என்னாச்சு?... ஏன் அழறீங்க?...”

“…..”

“சாரி பாட்டி… நான் கேட்கலை… நீங்க முதலில் உள்ள வாங்க… போகலாம்…” என அவள் அழைக்க,

அவர் அவள் கைப்பிடித்து தடுத்தார்…

“ருணதி இங்க சந்தோஷமா இருக்குறாளா பவித்ரா?...”

“ஆமா பாட்டி… நீங்களே பாருங்க அவங்க சந்தோஷமா தான் இருக்குறாங்க….” என தூரத்தில் குழந்தைங்களோடு விளையாடிக்கொண்டிருந்த ருணதியை கைகாட்டி அவள் சொல்ல

அவர் சிரித்தார் விரக்தியாக…

“மனசுல நிறைய காயத்தை வச்சிட்டு வெளிய சிரிச்சிட்டிருக்காம்மா அவ…”

“நீங்க சொல்லுறது எனக்கு புரியலை பாட்டி…”

“அவளோட மாமா அவளை வீட்டுக்குள்ள வரக்கூடாதுன்னு சொல்லிட்டார்… குடும்பத்துக்குள்ள சண்டை… ஜிதேந்தரும் முயற்சி பண்ணுறார்… ஆனாலும் பாவம் அவரால முடியலை… இவளும் இறங்கி போக மாட்டிக்கிறா… துருவ் குட்டியும் இரண்டு பேருக்கும் இடையில மாட்டிகிட்டு முழிக்கிறான்… எனக்கு என்ன பண்ணுறதுன்னே தெரியலைம்மா… இவ வாழ்க்கை என்னாகுமோ?...” என்று அழுதவரை சமாதானம் செய்தாள் பவித்ரா..

“இதெல்லாம் உனக்கு தெரியும்னு காட்டிக்காதம்மா… நான் ஏதோ உளறிட்டேன்… மனசுலயே வச்சிட்டிருக்கிறது பாரமா இருந்துச்சு… அதான் உங்கிட்ட இறக்கி வச்சிட்டேன் கொஞ்சம்… நீ எதும் நினைச்சிக்காதம்மா…” என அவர் கண்கலங்கி கொண்டே சொல்ல,

“நிச்சயமா நான் ருணதிகிட்ட இதைப் பத்தி கேட்கமாட்டேன் பாட்டி… என்னை நம்பலாம்…” என்றாள் அவள்…

“சரிம்மா…” என்றபடி அவரும் சென்றுவிட அவள் யோசித்தாள்…

நடந்ததைக் கேட்ட காவேரி, “பாவம் நல்ல பொண்ணு… இவளுக்கு இப்படி ஒரு பிரச்சினை இருக்கும்னு நான் நினைக்கவே இல்லை பவித்ரா…”

“நானும் நினைக்கவே இல்ல அம்மா…”

“ஹ்ம்ம்… நல்லவங்களுக்குத் தான சோதனையும், கஷ்டமும் கடவுள் கொடுத்து இப்படி பரீட்சை செய்வார்…”

“அதுவும் உண்மைதான்ம்மா,,,”

“இதனால தான் ரெஸ்யூமில் கூட மேரீட்னு போடலை போல அந்த பொண்ணு….”

“இருக்கலாம் அம்மா…”

“அவ குணத்துக்கு எனக்கு தெரிஞ்சு அவ வீம்பு பிடிக்கக்கூடிய ஆள் இல்ல… அதையும் பழகின இந்த கொஞ்ச நாள் வச்சு நான் அடிச்சி சொல்லுறேன்… ஆனா, அவ மாமனார் வீட்டோட பிரச்சினைன்னு சொல்லுறப்போ எனக்கு நிஜமாவே குழப்பமா இருக்கு பவித்ரா…”

“எனக்கும் அப்படித்தான்ம்மா தோணுது… ஆனா, எனக்கென்னவோ ருணதி வாழ்க்கையில எதுவோ நடந்திருக்குன்னு தோணுதும்மா…”

“ஹ்ம்ம்… ஆனா நாம அதுல எதுவும் செய்யமுடியுமா பவித்ரா?...”

“நீங்க மனசு வச்சா முடியும்மா… நீங்க நினைச்சா நாம ருணதி வாழ்க்கையில என்ன நடந்துச்சுன்னு கண்டுபிடிக்கலாம்…. என்ன சொல்லுறீங்கம்மா?...”

“நாம… எப்படீ பவித்ரா?...”

“ஒகேன்னு சொல்லுங்கம்மா… மிச்சத்தை நான் பார்த்துக்கறேன்…”

“சரிதான் பவித்ரா… ஆனா நான் ராஜாகிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்கறேன்…”

“நாம ஹெல்ப் கேட்கப் போறதே சார் கிட்ட தான்ம்மா…” என்று பவித்ரா சொல்ல,

காவேரி சிந்தித்தார்…

“ராஜா இதுக்கு சம்மதிக்கணுமே…”

“நீங்க சொன்னா கேட்பார்ம்மா… ப்ளீஸ்ம்மா… சொல்லுங்கம்மா சார்கிட்ட… நாம ருணதிக்கு ஹெல்ப் பண்ணலாம்…”

அவள் சொன்னதைக் கேட்டவர், சற்று நேரத்திற்குப் பிறகு, “சரி பவித்ரா, நான் ராஜாகிட்ட பேசுறேன்…” என்றார்…

பவித்ராவின் முகமும் அப்பதிலைக் கேட்டு புன்னகையில் மலர்ந்தது…

தொடரும்

Episode # 07

Episode # 09

{kunena_discuss:907}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.