(Reading time: 22 - 44 minutes)

தற்குள் அவர்களை சுற்றி அங்கே வந்திருந்த நடிகர் நடிகையர் கூடி இருந்தனர். அவன் செய்கையை பார்த்து அங்கே உற்சாக கூச்சல்களும், கைத்தட்டல்களும் கேலிகளும் கிண்டலகளும்.... ஆனால் இது எதுவுமே ரிஷியை தொடவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அவளையே இமைக்காது பார்த்திருந்தான் அவன்.

'மண்டியிடுகிறேன் உன் முன்னால். உன் அன்பிலே தோற்று உன்னிடம் சரணடைகிறேன் என்னவளே' என்பதான பாவம் அவனிடத்தில். அவளது கரம் கேட்டு முன் நீண்டது அவனது வலக்கரம். அவளே அறியாமல் அவள் கை முன்னால் நீண்ட நொடியில் அவள் கண்ணில் பட்டது அது.

அவன் கையில் மின்னிக்கொண்டிருந்தது அந்த ப்ரேஸ்லெட். விழிகள் விரிய அவள் விரல்கள் அதை மெல்ல தொட்டு பார்த்தன. அவளை பார்த்து கண் சிமிட்டி சிரித்தான் ரிஷி.

'திருடன்.... எப்போது எடுத்து வைத்துக்கொண்டானாம் இதை? முகம் நிறைய பூத்து விட்ட வெட்கப்பூக்களுடன் ஒரு புன்முறுவல் அவளிடத்தில்.

உன்னை சேர வேண்டிய முத்தத்தை எல்லாம் தினம் தினம் இதனிடம் தந்து சேமித்து வைக்கிறேன்' சின்ன சிரிப்பு அவனிடத்தில். சந்தோஷமாக அவன் கை பிடித்துக்கொண்டாள் அவள். அவனது அம்மா அப்பா , அவளது தந்தை என அனைவரும் சேர்ந்துக்கொள்ள மேடை ஏறினர் அனைவரும். கீழே பதற்றதுடன் அமர்ந்திருந்தது அகல்யா மட்டுமே. அடுத்த சில நிமிடங்களில் அவர்களை வந்து அடைந்து விடுமோ அந்த சிக்கல்? என்னவாகும் சஞ்சாவின் தங்கையின் திருமணம்?

எல்லாரும் சந்தோஷத்தில் மிதந்துக்கொண்டிருக்கும் நேரத்தில் எப்படி இதை சொல்வது அவர்களிடம்? மனம் கேட்கவில்லை அவளுக்கு. இருபதாவது முறையாக, மறுபடியும் சஞ்சாவுக்கு குறுஞ்செய்தி அனுப்பினாள் அவள். 'சஞ்சா... உன்கிட்டே கொஞ்சம்  பேசணும். ப்ராப்ளம் இஸ் ஆன் தி வே.' அவன் அதை கவனித்ததாகவே தெரியவில்லை.

மணமேடையிலா நிற்கிறாள் அவள்? கனவில் மிதக்கும் உணர்வு அருந்தியினிடத்தில். அவனுக்கு இரு புறமும் அப்பாவும் அம்மாவும் நின்றிருக்க, இயக்குனர் நின்றிருந்தார் அவளருகில். பெற்றவர்களின் முன்னால் மறுபடியும் மணம் செய்துக்கொள்ளும் ஒரு நிறைவும் பிறந்திருந்தது அவனுக்கு இரண்டு மலர் மாலைகளில் ஒன்றை ரிஷியின் கையில் கொடுத்தான் சஞ்சா. மகிழ்ச்சி கரகோஷங்களினிடையே அவள் தோள் சேர்ந்தது அந்த பூ மாலை. இப்போது அவள் முறை. கேமரா ஃபிளாஷ்கள் மின்ன, மகிழ்ச்சியில் குளித்தவளாக அணிவித்தாள் மாலையை. அடுத்தது மோதிரம். அதை அவர்கள் மாற்றிக்கொள்வதற்க்குள் அங்கே பூ மழையையே பொழிய வைத்திருந்தான் சஞ்சா.

தனது தங்கையின் திருமணத்தில் அவனுக்கு கிடைத்திருந்த அதே மகிழ்ச்சியும் நிறைவும் சஞ்சாவிடம். மகனின் திருமணத்தை பார்ப்போம் என நினைக்கவில்லை தான் அப்பாவும் அம்மாவும் ஆனந்த அலையில் மிதந்துக்கொண்டிருந்தனர் அனைவரும். அதே நேரத்தில் மண்டபத்தை நோக்கி வந்துக்கொண்டிருந்தது அந்த சிவப்பு நிற கார். அந்த காரினுள் தூக்க மாத்திரையின் தாக்கத்தில் நல்ல உறக்கத்தில் இருந்தது அந்த குழந்தை தீக்ஷா.. அதே காரில் அமர்ந்திருந்தான் அவன். கிட்டதட்ட 35 - 36 வயது மதிப்பிடலாம் அவனுக்கு. அவன் மடியில் உறங்கிக்கொண்டு கிடந்தாள் தீக்ஷா.

You might also like - Neengalum thupariyalam.. A series to bring out the detective in you...

மோதிரம் அணிவித்து விட்ட பிறகும் அவள் கையை விடுவிக்கவில்லை ரிஷி. அதை கொஞ்சம் உயர்த்தி தனது முகத்துக்கு அருகில் அவன் கொண்டு போக  சின்னதாக ஒரு சிரிப்பு எல்லாரிடமும், எதையோ எதிர்பார்க்கும் தவிப்பு அவள் முகத்தில். சில நொடிகள் அப்படியே நின்றான் அவன். அவர்களை சுற்றி ஆரவாரம்.

எல்லாரும் அவர்களையே பார்த்திருக்க, அவள் வெட்கத்தில் குளித்திருக்க அவளை நோக்கிய பார்வை சீண்டல் அவனிடத்தில். 'ம்ஹூம்....  வாய்ப்பே இல்லையடி பெண்ணே. காலம் கனியட்டும்' இடம் வலமாக தலை அசைத்தபடி கண் சிமிட்டலுடன் விடுவித்தான் அவள் கையை. கேலியும், கிண்டலும், சிரிப்பும் அந்த மேடையில் நிறைந்திருந்த அந்த நேரத்தில்....

சரியாக அதே நேரத்தில் அவர் வீட்டில் ஒலித்தது மேகலாவின் கைப்பேசி.

'ஹலோ...' என்றார் அவர்.

'டி.வி பார்த்திட்டு இருக்கியா? ஒரு சேனலின்  பெயரை சொல்லி, அந்த டி.வி. பாரு' என்றது மறுமுனை.

'என்ன விசேஷம் அதிலே?'

'இப்போ இல்லை. இன்னும் கொஞ்ச நேரத்திலே வரும் பாரு. ரெண்டு நாளைக்கு முன்னாடி தான் ஒரு விஷயம் கண்டு பிடிச்சேன். சந்திரிகா, ரிஷி, சஞ்சீவ் எல்லாரையும் ஒரே நேரத்திலே ஆட்டி வைக்கிற ஒரு விஷயம் நீ ரொம்ப சந்தோஷ படுவே..'

வியப்பின் மொத்த அடையாளமாக ஒலித்தது மேகலாவின் குரல் 'அப்...அப்படி என்ன விஷயம்?'

'பாரு, பாரு. நீ டி.வி. பாரு. உனக்கே புரியும். அந்த சேனல்காரன் நம்மாளு. நாம சொல்றதை அப்படியே செய்வான். எப்படியெல்லாம் பேசறான்னு பாரு. இப்போ நான் போனை வைக்கிறேன். ' துண்டிக்கப்பட்டது அழைப்பு. ஆர்வமாக அந்த சேனலை பார்க்க துவங்கினார் மேகலா.

சூரியன் மறைந்து இருள் சூழ ஆரம்பித்திருந்தது மேடையை விட்டு அவர்கள் இறங்கி விட்ட போதிலும் இன்னமும் ரிஷியையும் அருந்ததியையும் சுற்றி நின்று பேசிக்கொண்டிருந்தனர் அனைவரும். சஞ்சா வேறு ஏதோ ஒரு வேலையாக மாடிக்கு சென்று விட தவிப்பின் எல்லையில் நின்றுக்கொண்டிருந்தாள் அஹல்யா. அப்போது  அந்த மண்டபத்தின் வாசலில் வந்து நின்றது அந்த கார். அதிலிருந்து இறங்கினான் அவன். முகத்தில் கொஞ்சம் தாடியும், கலைந்து போன கேசமும் பஞ்சத்தில் அடிப்பட்டவனை போன்றதொரு தோற்றம் அவனுக்கு. அவன் தோளில் உறங்கிக்கொண்டிருந்தது குழந்தை.

அந்த மண்டபத்தை சுற்றி இருந்த போலீஸ் பாதுக்காப்பினால் அவனால் உள்ளே நுழைய முடியவில்லை. அதனால் மண்டபத்தின் முன்னால் சென்று சாலையில் அமர்ந்துக்கொண்டு குழந்தையை மடியில் கிடத்திக்கொண்டான் அவன். வாசலில் நின்றிருந்த அனைத்து பத்திரிக்கையாளர்களின் கவனமும் அவனை நோக்கி திரும்பியது. போலீசார்கள் அவனருகில் சென்று அவனை அங்கிருந்து கிளப்ப முயற்சிக்க உடன்படவில்லை அவன். 'எனக்கு நியாயம் வேணும். இந்த குழந்தைக்கு ஒரு நியாயம் வேணும்' திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருந்தான் அவன்.

சில நிமிடங்கள் இப்படியே கரைய கையில் மைக்குடன் அவனருகில் சென்று நின்றார் ஒரு பத்திரிக்கையாளர் 'என்ன பிரச்சனை உங்களுக்கு? ஒரு பிரபலமான நடிகர் வீட்டு கல்யாணத்திலே வந்து கலாட்டா பண்றீங்களே? இது எந்த வகையிலே நியாயம்?'

'அவங்க நியாயத்தை மட்டும் பேசறீங்க. என் பக்க நியாயத்தை யார் பாக்குறது... இந்த மண்டபத்துக்குள்ளே இருக்கறவங்கல்ல ஒருத்தருக்கு இந்த குழந்தையோட சம்மந்தம் இருக்கு.  அவங்க இந்த குழந்தையை பத்தி கண்டுக்கவே இல்லை. எனக்கு வருமானம் இல்லை. நான் இந்த குழந்தையை வளர்க்க முடியாம கஷ்டபடறேன். அவங்க வெளியே வந்து இந்த எல்லார் முன்னாடியும் இந்த குழந்தையை வாங்கிக்கிட்டும். நான் இனிமே இந்த குழந்தையை வளர்க்கறேன்னு எல்லார் முன்னாடியும் சொல்லட்டும் நான் இங்கிருந்து போயிடறேன்.'

'இந்த மண்டபத்திலே இருக்கறவங்களா யாரவங்க?'

'நான் பேரெல்லாம் சொல்ல மாட்டேன். அதுக்கப்புறம் நான் பணத்துக்காக பொய்யான குற்றச்சாட்டு சொல்றேன்னு சொல்வாங்க. அவங்களே வெளியே வரட்டும். வந்து அவங்க வாயாலேயே எல்லாத்தையும் ஒத்துக்கட்டும். அது வரைக்கும் நான் இந்த இடத்தை விட்டு போக மாட்டேன்'  உறுதியாக சொன்னான் அவன்.

மண்டபத்தில் சலசலப்பு பரவ ஆரம்பிக்க, ஒருவருக்கு ஒருவர் கிசுகிசுப்பாக பேசிக்கொண்டிருக்க செய்தி சஞ்சாவை எட்டியது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.