(Reading time: 22 - 44 minutes)

பேசி முடித்துவிட்டு சொன்னது மறுமுனை 'இந்த விஷயம் நமக்கு முன்னாடியே தெரிஞ்சிருந்தா இதை வெச்சே எல்லாரையும் ஆட்டி வெச்சிருக்கலாம். முக்கியமா அந்த ரிஷியை. சரி விடு இப்போ தெரிஞ்சிடுச்சு இல்ல. இனிமே பார்த்துக்கலாம்' அழைப்பு துண்டிக்கப்பட்டது. மனதில் அலை அலையாக ஏதேதோ உணர்வுகள் எழ சோபாவில் கண் மூடி சாய்ந்துக்கொண்டார் மேகலா.

சில நிமிடங்கள் கழித்து அப்பாவும் அம்மாவும் இருந்த அறைக்குள் நுழைந்தனர் ரிஷியும் அருந்ததியும். அவர்களது முக வாட்டமே ரிஷியை சுருக்கென தைத்தது. 'என்னாச்சுப்பா? பயந்துட்டீங்களா? என்னமா நீயுமா? இது மாதிரி நீ  எத்தனை பார்த்திருக்கே இதுக்கு போய்.... ?

'அதுக்கில்லைடா கண்ணா ...' என்றவரால் ஏனோ அதற்கு மேல் பேச முடியவில்லை. ஆபத்பாந்தவனாக அந்த நேரத்தில் உள்ளே நுழைந்தான் சஞ்சா. உள்ளே நுழைந்தவன் பேசாமல் அந்த அறையில் இருந்த டி.வியை உயிர்பித்தான்.

'இது யாருடைய குழந்தை என்பதே இப்போது மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது' பேசிக்கொண்டிருந்தார் அந்த டி.வி தொகுப்பாளர். அறையிலிருந்தவர்களின் பார்வை திரையை தொட்டது.

'ஒரு வேளை இதில் நடிகர் சஞ்சீவும் சம்மந்த பட்டிருப்பரோன்னு தோணுது. இரண்டு நாட்களுக்கு முன்னால் சமூக வலைத்தளங்கள்லே அவரும் நடிகை அஹல்யாவும் பேசிக்கொண்டது வெளிவந்திருந்தது. அதிலிருந்து ஒரு துளி' என்று அவர் சொல்ல ஒலித்தது அந்த பேச்சு ....

'நான் தான் பிரச்சனை பண்ணேன் சஞ்சா. எல்லாம் அந்த குழந்தை விஷயம் தான்.'

You might also like - Ullamellam alli thelithen.. A sweet romantic story 

'குழந்தை ஒரு மேட்டரே இல்லை. அதை எப்படி டீல் பண்ணனும்னு எனக்கு தெரியும் நான் பார்த்துக்கறேன்'

'இந்த உரையாடலில் இவர்கள் இருவரும் குழந்தை என்று குறிப்பிடுவது இந்த குழந்தையை தானா?' கையில் மைக்குடன் திரையை பார்த்து கேள்வி எழுப்பினார் தொகுப்பாளர்.

தலையில் அடித்துக்கொண்டான் சஞ்சா. 'நான் தான் பேசறேன்ன்னு நினைச்சு  இந்த அஹல்யா லூசு என்னென்னவோ உளறி வெச்சிருக்கு டா'

'இன்னொரு பக்கம் இதில்  ரிஷி சம்மந்த பட்டிருப்பரோ என்றும் ஒரு கேள்வி எழுகிறது. இது துணை ஒரு துணை நடிகையின் குழந்தை என்றும் கூறப்படுகிறது. அவர் சமீபத்தில் நோய்வாய் பட்டு இறந்து போனார் என்று தெரிய வருகிறது. அவர் நடிகர் ரிஷி நடித்த கடைசி  திரைப்படத்தில் அவரது தங்கையாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது''

'ச்சே!!!  பற்றி எரிந்தது ரிஷிக்கு. 'பாவம்டா அந்த பொண்ணு... அதை போய் இப்படி என்கூட ...'

இப்போது கேமரா மறுபடியும் அங்கே அமர்ந்திருந்தவனிடம் வந்தது. அவன் மடியில் உறங்கிக்கொண்டிருந்த தீக்ஷாவுக்கு ஒரு க்ளோஸ் அப். அப்போது தான் அந்த குழந்தையை முதல் முறையாக பார்த்தான் ரிஷி. அவன் இதழ்களில் ஒரு புன்னகை எழுவதை அவனாலேயே தடுக்க முடியவில்லை.

'நிஜமாவே அழகா இருக்குடா இந்த குழந்தை. பார்க்கும் போதே தூக்கி கொஞ்சணும் போலே இருக்கு.' அந்த நிலையிலும் அதன் மீது சட்டென சின்னதாக ஒரு பாசம் பிறந்தது அவனுக்கு . அப்பா, அம்மா, சஞ்சா மூவர் உதடுகளிலும் சின்ன புன்னகை.

சில நொடிகள் டி.வியை வெறித்துக்கொண்டிருந்தவன் என்ன தோன்றியதோ சட்டென திரும்பி சஞ்சாவை பார்த்து சொன்னான் 'சஞ்சா. இது கண்டிப்பா எனக்கு வெச்ச குறிதான்டா. இதிலே நம்ம தங்கிச்சியும் சேர்ந்து கஷ்டபடறதுதாண்டா கஷ்டமா இருக்கு. அதனாலே.... ரிஷி சொல்லிக்கொண்டிருக்கும் போதே  மைக் அங்கே அமர்ந்திருந்தவனிடம் சென்றது.

'மண்டபத்திலிருந்து யாரும் வெளியே வர மாட்டேங்கறாங்க. நீங்களும் பேசாம இருந்தா என்ன அர்த்தம்? ஒரு வேளை கல்யாண மாப்பிள்ளை, பொண்ணு யாராவது இதிலே...' முடிக்கவில்லை அந்த செய்தியாளர் 

'அடி ராஸ்கல்..' ஒரே நொடியில் கொத்தித்து எழுந்தனர் ரிஷியும் சஞ்சீவும். எரிமலை பொங்கியது இருவருக்குள்ளும். 'எப்படி எல்லாம் திசை திருப்புகிறார்கள் இதை?'. சுவாசம் அழுந்துவது போல் உணர்வு சஞ்சாவுக்கு  .சில நொடிகள் மௌனமான யோசனை ரிஷியிடம். பின்னர் ஒரு முடிவுடன் நிமிர்ந்தான் அவன்.

'சஞ்சா.. இது சரியில்லை சஞ்சா. நான்தான் இறங்கி ஆகணும். நான் போய் .இது என்னோட குழந்தைன்னு சொல்றேன் சஞ்சா. அதுக்கு மேலே என்ன நடக்குதுன்னு பின்னாலே பார்ப்போம். இப்போ தங்கச்சி கல்யாணம்தான்டா முக்கியம்'

கைகளுக்குள் முகம் புதைத்துக்கொண்டு அப்படியே அமர்ந்தான் சஞ்சா அவனருகில் அவன் தோளை அணைத்துக்கொண்டு அமர்ந்து சொன்னான் ரிஷி........

'சஞ்சா... டென்ஷன் ஆகாதே. நாம தப்பு பண்ணா தான்டா பயப்படணும். எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. என்ன நாலு நாள் ஊரிலே தப்பா பேசுவாங்களா? பேசிட்டு போறாங்க வீடு. நீ போய் முதலிலே தங்கச்சியை பாரு. அது அழுதிட்டு இருக்கும்டா பாவம். அது சந்தோஷமா இருக்க வேண்டிய நேரம் இது. அம்மா பயந்து போயிருப்பாங்க.. நாம எதை வேணும்னாலும் ஃபேஸ் பண்ணலாம் அவங்க எல்லாம் பாவம்டா'

மெல்ல நிமிர்ந்தான் சஞ்சா. 'நீ எப்படிடா.????.' அவன் இப்போது வெளியே போனால் பல உண்மைகள் வெளி வரக்கூடுமோ? பயம் சந்ஜாவுக்கு.

'ஒண்ணுமில்லைடா.... சொல்றேன் இல்ல..... போ சஞ்சா நான் பார்த்துக்கறேன்...' உறுதியாக சொல்லிக்கொண்டே அம்மாவின் பக்கம் திரும்பினான் ரிஷி.......

'அம்மா நான் சொல்றது சரியாமா?'

சில நொடி யோசனைக்கு பிறகு 'நீ சொல்றதுதான் சரி ரிஷி. இப்போ நமக்கு இந்த கல்யாணம் தான் முக்கியம். போயிட்டு வா ரிஷி. அதுக்கு மேலே வர்றதை அப்புறம் பார்த்துக்கலாம்' அம்மாவின் குரலில் அப்படி ஒரு உறுதி. மனம் நிலைப்பட்டிருந்தது அவருக்கு.

'சஞ்சா ...' என்றார் அப்பா. 'நடக்கறது நடக்கட்டும் நீ தைரியமா இரு. பார்த்துக்கலாம்'

அந்த நிலையில் இதை தவிர வேறெதுவும் செய்ய முடியாது என்று புரிய எழுந்தான் சஞ்சா . எல்லாரையும் பார்த்து தலை அசைத்துவிட்டு ஒரு பெருமூச்சுடன் அறையை விட்டு வெளியேறினான்  அவன்.

நகரும் முன் கண்கள் முழுக்க கேள்விகளுடன் அருந்ததியை பார்த்தான். ரிஷி. ஒரு நொடி கூட யோசிக்கவில்லை அவள். 'எது வந்த போதும் உன் தோளோடு தோள் கொடுத்து அதை சந்திப்பேன்' என்பதாக ஒரு தீர்மானம். அதை பிரதிபலிக்கும் ஒரு தலை அசைப்பு அவளிடத்தில்.

'நீங்க யாரும் வர வேண்டாம். இங்கேயே இருங்க. நான் போய் பேசிட்டு குழந்தையை தூக்கிட்டு வரேன்' சொல்லிவிட்டு வாசலை நோக்கி நடந்தான் ரிஷி.

அவன் வாசலை நோக்கி வர சர சரவென அவன் பக்கம் திரும்பின காமெராக்கள். அவனை நோக்கி நீண்டன மைக்குகள். எல்லார் பார்வையும் அவன் மீதே. வீட்டில் டி.வியை விட்டு விழி அகற்றவில்லை மேகலா. அவரருகே ஆர்வத்துடன் அஸ்வத். எப்படியும் அவன் வருவான் என்பது இந்த விளையாட்டை ஆரம்பித்தவர்களுக்கு தெரியும் என்றபடியால் அவனை தோற்கடிப்பதற்கான கேள்விகள் அங்கே தயாராக இருக்க........எதையும் சந்தித்து விடும் முடிவுடன் அவன் பேசுவதற்கு வாய் திறந்த அந்த நொடியில்.....

'கொஞ்சம் இருங்க ரிஷி. நானே எல்லாத்தையும் சொல்லிடறேன்' அவன் பின்னாலிருந்து குரல் கேட்க ரிஷி மட்டும் இல்லாது எல்லாரும் அந்த திசை நோக்கி திரும்பினர்.

Episode # 09

Episode # 11

மழைச்சாரல் தொடரும்......

{kunena_discuss:886}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.