(Reading time: 30 - 60 minutes)

'ங்கே நான் உங்க கிட்டே ஒண்ணு சொல்லணும்' மேடையில் நின்றுக்கொண்டு மைக்கில் சொன்னான் ரிஷி.

'டிசம்பர் 31 எனக்கு எப்பவுமே மறக்க முடியாத நாள்.!!! இதே மாதிரி ஒரு டிசம்பர் 31தான் என்னோட முதல் படம் ரிலீஸ் ஆகி, அது நல்லா ஓடினதுக்காக எங்க டைரக்டர் வீட்டிலே ஒரு பார்ட்டி. இதோ இந்த மேகலா மேடமோட உட்கார்ந்து சாப்பிட்டேன்'

அன்றைய நிகழ்வுகள் மேகலாவின் தலைக்குள் ஓடி மறைய இன்னும் கொஞ்சம் கூடுதலான பயத்துடனே அவனை பார்த்தார் மேகலா.

அந்த பார்ட்டி தான் என்னோட வளர்ச்சிக்கே ஒரு அடித்தளம். மறக்க முடியுமா???? மறக்க முடியுமா அதை??? என்னாலேயும் மறக்க முடியாது அவங்களாலேயும் மறக்க முடியாது. என்ன மேடம்??? உள்ளுக்குள் கனல் கொதித்தாலும், அது மேகலாவுக்கும் புரிந்தாலும் முகத்தில் சிறிதளவு கூட மாற்றத்தை காட்டாமல் புன்னைகையுடன் கேட்டான் ரிஷி.

உள்ளுக்குள்ளே பூகம்பங்கள் நிகழ்ந்துக்கொண்டிருந்தாலும் சின்னதாக புன்னகைத்தார் மேகலா 'ம்... ஆமாம்...'

அவன் எதை பற்றி பேசுகிறான் என்று புரிந்தவர்கள் சஞ்சாவும், இந்திரஜித்தும். கொஞ்சம் யோசனையுடனே பார்த்திருந்தனர்.

'எஸ்....' என்றான் ரிஷி. 'அதுக்கெல்லாம் சேர்த்து வெச்சு அவங்களுக்கு நன்றி சொல்லத்தான் இந்த வீடியோ. இது நான் அவங்களுக்கு கொடுக்கிற ஒரு நினைவு பரிசு. என்ன மேடம் போட்டுடடலாமா அந்த வீடியோவை.???'

வாழ்கையில் முதல் முறையாக மேகலாவின் கண்களில் அப்படி ஒரு கெஞ்சல்.

'இந்த வீடியோ ஒரு கதை. ஒரு சின்ன கதை. என் வாழ்க்கை சம்மந்த பட்ட கதை அப்படின்னு வெச்சுக்கோங்களேன். இது முடிஞ்சதும் இந்த கதைக்கு ஒரு தீர்ப்பு சொல்லணும். இந்த அரங்கத்திலே இருக்கறவங்க நிறைய பேர் என்னை விட வயசிலே அனுபவத்திலே பெரியவங்க. இந்த கதையை பார்த்து அதுக்கு என்ன தீர்ப்பு சொல்லணுமோ அதை தயவு செய்து சொல்லுங்க...' அவன் மேடையின் கீழே அமர்ந்து இருப்பவர்களை பார்த்து சொல்ல அரங்கத்தில் திடீரென அமைதி படர்ந்தது.

இதயம் தாறுமாறாக துடிக்க துவங்க, கீழே அமர்ந்திருந்தவர்களை பார்த்தார் மேகலா. எல்லாரும் பெரிய பெரிய நடிகர்களும் திரை பிரமுகர்களும். இவர்கள் முன்னால்???? நான் இப்போது என்ன செய்ய போகிறேன்????

இவங்களுக்கு விருது கொடுக்க போறது ஒரு மிகப்பெரிய நடிகர். அவரை நாம மேடைக்கு அழைச்சிடலாமா??? என்றபடியே அழைத்தான் அவரை. அவர் மேடைக்கு வர அவரிடமே சொன்னான் ரிஷி.

'இந்த கதைக்கு நீங்க தீர்ப்பு சொல்வீங்களா சார்???'

'கண்டிப்பா....' புன்னகைத்தார் அவர். 'அவரெங்கே அறிந்தார் இது எப்படி பட்ட கதை என???' ரிஷி ஏதோ விளையாட்டு தனமாக செய்வதாக நினைத்துக்கொண்டே சம்மதித்தார் அவர்.

'என்ன மேகலா மேடம் போட்டுடலாமா அந்த வீடியோவை.??? மறுபடியும்  மேகலாவை பார்த்து அவன் கேட்க....... உயிர் வரை பயம் பரவியது மேகலாவுக்கு.

'ரி... ரிஷி... வே... வேண்டாமே இப்போ...'  மேகலா பயத்துடனே முணுமுணுக்க

'மேடம்... ஏதோ சொல்றாங்க அவங்க கிட்டே ஒரு மைக் கொடுங்க' பின்னால் திரும்பி சொன்னான் ரிஷி. வந்தது மைக்.

'வீடியோ எல்லாம் எதுக்கு. நான் அவ்வளவு பெரிய சாதனை எதுவும் செய்யலையே....'

'நீங்க அப்படித்தான் சொல்வீங்க. நீங்க செஞ்ச சாதனை எல்லாம் எங்களுக்குதான் தெரியும் மேடம்... என்ன சார் நீங்க என்ன சொல்றீங்க??? நாமெல்லாம் அந்த வீடியோ பார்க்கணும் இல்லையா????'

'நிச்சியமா பார்க்கணும். இவங்க இப்படிதான். நாங்க எல்லாரும் காத்திட்டு இருக்கோம் நீங்க போடுங்க .' சொன்னார் அந்த நடிகர்.

'அப்படி சொல்லுங்க சார். இன்னைக்கு எல்லாருக்கும் தெரியணும் அவங்க செஞ்சதெல்லாம் எல்லாருக்கும் தெரியணும் .' அழுத்தமான குரலில் சொன்ன ரிஷியின் கண்களில் அப்படி ஒரு தீவிரம். குலை நடுங்கியது மேகலாவுக்கு. சுவாசம் கிடைக்கவில்லை.

அவ்வளவுதானா எல்லாமே???? தன்னை அவமானம் அணைத்துக்கொள்ள போகிறதா??? அவமானம் என்றால் இப்படித்தான் இருக்குமா???? மனம் பதைபதைத்த அதே நேரத்தில்  சந்திரிக்காவுக்கும் இப்படித்தான் இருந்திருக்குமோ என்ற எண்ணம் வந்து போக தவறவில்லை.

மேடையில் நின்ற அந்த நடிகர் உட்பட அனைவரும் சுவாரஸ்யமாக பார்த்திருக்க...... 'கிளிப்பிங்க்ஸ் ப்ளீஸ்... ' ரிஷி பின்னால் திரும்பி சொல்ல... அந்த மேடையில் இருந்த பெரிய திரை ஒளிர.......

திரையில் காட்சிகள் ஓடத்துவங்குவதற்கு முன்பாகவே ஒலித்தது மேகலாவின் குரல். உடலும் மனமும் சகலமும் பயத்தின் பிடியில் இருக்க மூளை யோசிக்கும் சக்தியை இழந்து விட்டிருக்க தான் என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல்......

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.