(Reading time: 30 - 60 minutes)

ண்களை மூடிக்கொண்டு அமர்ந்திருந்தான் ரிஷி. என்ன ஓடிக்கொண்டிருக்கிறது அவனது மனதில் என்று யாராலும் கணிக்க முடியவில்லை.

'எப்படி வெளியானது இந்த புகைப்படம்??? நான் கைப்பையை மறந்த நேரத்தில், அந்த சில நிமிடங்களில் பிரதி எடுக்கப்பட்டதா??? எல்லாம் என அம்மாவின் வேலையா??? திகைத்து போய் நின்றிருந்தாள் அருந்ததி.

கடைசியாக அந்த நாளிதழை படித்து முடித்தார் ஜானகி அம்மா. மெல்ல விழி திறந்தான் ரிஷி. நேராக அவரை பார்த்தான். 'இவர் தான் என்னை பெற்றவரா??? ஏன் வேண்டாம் என்றாராம் என்னை??? அண்ணனை மட்டும் ஏன் தன்னுடன் வைத்துக்கொண்டாராம்.

மனதிற்குள் ஆயிரம் வினாக்கள். உயிரின் அடி ஆழம் வரை வலி. எல்லாவற்றையும் தனது தாயின் முகத்தை பார்த்து கேட்கலாம்தான். ஆனால் துவண்டு போய் கிடக்கும் அந்த முகத்தை பார்த்து.......  இந்த ஜென்மத்தில் முடியாது அவனால்!!!!

பதில் ஓரளவுக்கு புரியவும் செய்கிறது. இதற்கெல்லாம் வறுமை மட்டுமே காரணமாக இருக்க முடியும் என்று புரிகிறது. ஆனால் அதற்கு நான் தான் பலியா ???? மறுபடியும் கண்களை மூடிக்கொண்டான் ரிஷி.

நான் நிஜமாகவே என் அம்மா சந்திரிக்காவின்  வயிற்றில் பிறக்க வில்லையா???  இந்த கேள்விதான் அவன் இதயத்தை சுக்கு நூறாக உடைத்து போட்டது. சுவாசிக்க கூட பிடிக்கவில்லை அவனுக்கு. இவர்கள் இருவரும் தன்னிடமிருந்து இந்த விஷயத்தை மறைத்து வைத்ததை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை இவனால்.

வேண்டாம். எனக்கு எதுவுமே வேண்டாம். யாருமே வேண்டாம். மனம் கருங்கல்லாக இறுகிப்போய் கிடக்க கண்களை மூடிக்கொண்டு கிடந்தான் ரிஷி.

யாரும் ஒரு வார்த்தை பேசிக்கொள்ளவில்லை. பெரிய சுனாமி அலை அடித்து, ஓய்ந்த நிசப்தம். அறையின் ஓரத்தில் நின்றுக்கொண்டு அங்கே நடப்பதை எல்லாம் விழி கொட்டாமல் பார்த்திருந்தது தீக்ஷா. என்ன தோன்றியதோ அந்த பிஞ்சுக்கு மெதுவாக நடந்து அவர்கள் அருகில் வந்தது.

தீக்ஷா காலில் போட்டிருந்த கொலுசின் ஒலி மட்டுமே எல்லார் காதிலும் கேட்டது. சின்ன சின்ன நடசத்திரங்கள் மின்னிக்கொண்டிருந்த அந்த ஊதா நிற ஃப்ராக் அணிந்து சின்ன முயல் குட்டியாய் நடந்து வந்து ஒவ்வொருவர் அருகிலும் சில நொடிகள்!!! ஒவ்வொருவர் முகத்திலும் தீவிரமாக ஏதோ ஒரு ஆராய்ச்சி!!!

அந்த நேரத்து மன அழுத்தத்தையும் மீறி அதன் துறு துறு பார்வையில் எல்லார் முகத்திலும் புன்னகை கோடுகள் தோன்ற தவறவில்லை. கடைசியாக கண்களை மூடி அமர்ந்திருந்த ரிஷியிடம் வந்தாள் அவனது பட்டுசெல்லம்.

'அப்பா...'  புல்லாங்குழல் குரலில் அவனுக்குள்ளே இருந்த வலிகளையெல்லாம் கரைத்து விடும் ஆனந்த சாரல்.

'பட்டு பாப்பா...' அள்ளிக்கொண்டான் தீக்ஷாவை. 'இவள் என் அண்ணன் பெற்ற மகளா???' முதற்கேள்வி அவனுக்குள்ளே. அழுத்தமாக முத்தமிட்டான் அதன் கன்னங்களில். இதமாக கோதினான் அதன் தலையை.

'ஏதாவது சாப்பிட்டியாடா ...'

'ம்...' பூஸ்ட் குடிச்சேன்....'

'வெரி குட்...' அவன் சொல்ல அவனை விட்டு பார்வையை அகற்றவில்லை தீக்ஷா.

அவன் முகத்தில் பழைய சிரிப்பு இல்லை என்று தேடி இருக்க வேண்டுமோ அந்த முயல் குட்டி???? அவனது பிரச்சனை அதற்கு என்னவாக புரிந்திருந்ததோ தெரியவில்லை. மெதுவாக வெளியே வந்தது அடுத்த கேள்வி

'அப்பா... உனக்கு ரெண்டு அம்மாவா???' அத்தனை பேரும் ஒரு சேர அதிர்ந்து நிமிர்ந்தனர்.

'ம்??? அது... அது உனக்கு யார் சொன்னது???"

'நேத்து தாத்தா பாட்டிகிட்டே சொல்லும்போது கேட்டேன்..' தெளிவாக வந்தது பதில். ஒரு முறை திரும்பி சந்திரிகாவையும் ராமனையும் பார்த்தான் ரிஷி.

'அப்படி என்றால் நேற்றே இதை பற்றிய விவாதங்கள்  நடந்திருக்கிறது போலும்!!!!'

'ஏன்டா??? திடீர்னு... அ.. அங்கே போறேங்கறே???.' என்றைக்குமே அவன் அம்மாவின் கண்களில் பார்த்திராத அந்த நீர் துளியுடன் கேட்டாரே சந்திரிக்கா இதனால் தானா???

'உனக்கு ஜாலி....' அந்த மழலை சொல்ல புருவங்கள் உயர பார்த்தான் ரிஷி. 'உனக்கு ரெண்டு அம்மாவும் நிறைய சாக்லேட், அப்புறம் இவ்வளவு முத்தம் எல்லாம் தருவாங்க. கைகளை பெரிதாக விரித்துக்காட்டி சொன்னது தீக்ஷா. 'ஆமாம்தானேபா???'

'ஆங்.??? ம். ஆமாம் டா'  சொன்னவனுக்கு  சட்டென ஏதோ ஒன்று புரிந்தது போலே இருந்தது.

'என்ன சொல்கிறதாம் குழந்தை??? என்னை சுற்றி எப்போதும் அன்பு மட்டுமே நிறைந்திருக்கிறது என்றா??? அது கூட உண்மைதானோ.???

'எனக்கு கூட ரெண்டு அம்மா தான். ஆனா ஒரு அம்மா சாமி கிட்டே போயிட்டாங்க. இன்னொரு அம்மா இதோ...' அருந்ததியை நோக்கி தீக்ஷா கை நீட்ட சட்டென குழந்தையை தன்னோடு சேர்த்துக்கொண்டான் ரிஷி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.