(Reading time: 30 - 60 minutes)

'ம்மா... இப்போ என்ன ஆச்சுன்னு இப்படி சோகமா உட்கார்ந்திருக்கே??? ஜானகி அம்மா என்னை சுமந்தது பத்து மாசம் தான். நீ எத்தனை வருஷமா என்னை தாங்கு தாங்குன்னு தாங்குறே??? அது எப்படி அது??? உண்மை தெரிஞ்சிட்டா நான் உன்னை விட்டு போயிடுவேனாக்கும்.??? நான் உன்னை விட்டு போறதுன்னா மொத்தமா மேலே தான் போகணும்..'

திடுக்கென சந்திரிக்கா எழுந்துக்கொள்ள 'அய்யோ.. ஏன் பா இப்படி??? ஒரே நேரத்தில் நால்வரிடமிருந்தும் குரல்.

'பின்னே வேறே என்ன சொல்றதாம்??? உயிரை பிரிஞ்சு போறதுன்னா அதானே???

'ப்ளீஸ் டா கண்ணா... அப்படி எல்லாம் சொல்லாதே' அவன் கன்னம் வருடினார் சந்திரிகா. அவன் சட்டென இயல்பாக மாறிய விதமே அவரை நிறைவின் உச்சிக்கு தள்ளி இருந்தது.

'அப்போ நீயும் இனிமே சோகமா இருக்காதே புரியுதா??? எனக்கு எப்பவும் நீ தான் அம்மா' சொல்லியே விட்டவனை சுருக்கென ஏதோ ஒன்று தைத்து இருக்க வேண்டும்.

மெதுவாக ஜானகி அம்மாவின் அருகில் வந்து நின்றான்.

'அ.. ம்மா...' புன்னகையுடன் அவர் கையை பற்றிக்கொண்டான் ரிஷி. எல்லார் முன்னிலையிலும் தான் பெற்ற மகன் தன்னை அம்மாவென்று அழைப்பதே உயிர் வரை இனித்தது ஜானகி அம்மாவுக்கு.

'போதுமடா மகனே. என் ஆயுள் முழுவதற்கும் இந்த மகிழ்ச்சி போதும்...' மகன் கன்னம் தொட்டு முத்தமிட்டார் ஜானகி.

'ரிஷி... என்றார் அவர். 'நீ என்ன 'ஜானகி அம்மா' ன்னே கூப்பிடு...'

'ஏன் ஜானகி??? அருகில் ஓடி வந்தார் சந்திரிக்கா. 'அவனை பெத்தவ நீ தானே???'

'இல்லை. இல்லை. 'ஜானகி அம்மா' தான்  சரி'

'ஏன்மா அப்படி சொல்றீங்க???' தவிப்புடன் கேட்டான் மகன். 'நான் உங்களையும் பாசமா பார்த்துப்பேன்..'

'அது தெரியும்பா. ஆனா 'ஜானகி அம்மா' தான் எனக்கு பிடிச்சிருக்கு.' என்றார் உறுதியாக. 'இவங்க தான் உனக்கு எப்பவுமே அம்மா. அதிலே எந்த மாற்றமும் இல்லை'

ரிஷியே கொஞ்சம் வியந்து தான் போனான். பெற்றவளின் குணத்தை மெச்சாமல் இருக்கவே முடியவில்லை அவனால்.

'அதெல்லாம் சரி ' என்றான் சுதாரித்துக்கொண்டு  'நீங்க இனிமே இப்படி டல்லா எல்லாம் டிரஸ் பண்ணக்கூடாது. உங்க பையன் எவ்வளவு பெரிய பணக்காரன் தெரியுமா?? நீங்களும் சும்மா குயின் மாதிரி இருக்கணும் புரியுதா??? அருந்ததி நீ தான் இதுக்கு பொறுப்பு சரியா???  

அவன் சொல்லிக்கொண்டிருந்த நேரத்தில் ஒரு போலீஸ்காரர் வந்து அறையின் கதவை தட்டினார். கதவை திறந்தார் ராமன்.

'சார்.. சாரி டு டிஸ்டர்ப் யூ...  சார்... வாசலிலே ரிஷி சாரோட ரசிகர்கள், ப்ரெஸ்காரங்க எல்லாரும் கூடிட்டாங்க. சாரை பார்க்காம போக மாட்டேன்னு சொல்றாங்க. பப்ளிக்  பிளேஸ்..... கொஞ்சம் சார் வந்தார்ன்னா...'

அப்பா யோசித்தபடியே ரிஷியின் பக்கம் திரும்பினார். 'டூ மினிட்ஸ்...... இதோ வரேன்.' ரிஷியிடமிருந்து பளீரென வந்தது பதில்!!!! சொல்லிவிட்டு அந்த அறையை ஒட்டி இருந்த அந்த சின்ன அறைக்குள்  சென்று நின்றவன் உள்ளிருந்து......

'அருந்ததி......' என்றான்

'சொல்லு வசி..' உள்ளே வந்தாள் அவள்.

'கதவை சாத்து..' அவன் சொல்ல, அவள் கதவை சாத்திவிட்டு அவன் அருகில் வந்தாள்.

'என்ன வசி???"

'ரெண்டு நிமிஷம் இப்படி உட்காரு.' அங்கே இருந்த கட்டிலில் அமர்ந்தாள் அவள். அப்படியே அவள் மடியில் சரிந்தான்  ரிஷி. கண்களில் வெள்ளம் கரை புரண்டது.

'வசிப்பா... என்னப்பா???' அவள் குரல் பதற..

'கொஞ்ச நேரம் எதவுமே பேசாதே ப்ளீஸ்....' அவள் மடியில் குலுங்கினான் ரிஷி.

'தாங்க முடியலைடி. என்னாலே!!!! எங்க அம்மா என்னோட உயிருடி!!!. நான் நிஜமாவே அவங்க வயித்திலே பிறக்கலையா???? பதில் பேசாமல் அவன் கேசத்தை வருடிக்கொண்டே இருந்தாள் அவள். அவள் கண்களிலும் நீர் துளிகள். 'இதற்கு தான் சஞ்சா பயந்தானோ???'

இரண்டு அன்னையர், ஒரு தந்தை என அனைவரும் இருக்க, அவர்கள் முன்னால் வெளிப்படுத்த முடியாத அவனது வலிகளை எல்லாம் அவள் மடியில் கொட்டிக்கொண்டிருந்தான் ரிஷி. இது தான் கணவன் - மனைவி உறவின் அற்புதமான பக்கமா??? அவளிடத்தில் மட்டுமே அவனால் அவனாக இருக்க முடிந்தது.

சில நிமிடங்களில் அழுது, குலுங்கி, தேம்பி, முடித்து....... இத்தனை நேரம் அவனை உலுக்கிக்கொண்டிருந்த அழுத்தங்களை, வலிகளையெல்லாம் அவள் மடியில் மொத்தமாக இறக்கி வைத்திருந்தான் ரிஷி. கைக்குட்டையால் முகத்தை துடைத்துக்கொண்டு தெளிவாக நிமிர்ந்தான்.

'வசி...' அவள் தவிப்புடன் அவன் முகம் பார்க்க... புன்னைகைதான் அவன் '

'முடிச்சிட்டேன்!!!!  அவ்வளவுதான்!!! . ஐ யம் ஆல் ரைட்...'

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.