(Reading time: 30 - 60 minutes)

முடிவெடுத்து விட்டார் அம்மா. நடித்து முடிக்க வேண்டிய படங்களை முடித்து விட்டு கிளம்பிவிட்டான் ரிஷி. அவனை இங்கேயே இருக்க வைக்க சஞ்சா எடுத்த எந்த முயற்சியும் பலிக்கவில்லை. இந்த முடிவை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை அருந்ததியால்.

அவன் கிளம்பும் நேரத்தை தெரிந்துக்கொண்டு தனது காரை எடுத்துக்கொண்டு விமான நிலையம் வந்தாள் அவள். காரை விட்டு இறங்கி விட முடியவில்லை. யார் கண்ணிலும் படுவதையும் விரும்பவில்லை அவள்.

'ஒன்றும் இல்லை. ஒன்றும் இல்லை...' என்று சொல்லிக்கொண்டிருந்தவனின் உள்ளமும் அவனுக்கு எல்லாமாக இருப்பவளை தான் தேடிக்கொண்டிருந்தது. அவள் வருவாள் என்று ஒரு நம்பிக்கை. அவனது கார் வந்து நிற்க அவன் கண்ணில் பட்டும் விட்டது அவளது கார். உள்ளே அவள் இருக்கிறாள் என்றும் புரிந்தது அவனுக்கு.

யோசித்து யோசித்து முடித்து அப்பாவையும் அம்மாவையும் உள்ளே அனுப்பி விட்டு யார் கண்ணிலும் பட்டு விடாமல் வெளியே வந்தான் ரிஷி. அப்போதே அப்பாவுக்கு அவனுக்கும் அருந்ததிக்குமான நேசம் புரியத்தான் செய்திருந்தது 

அவள் கார் அருகில் வந்து கதவை தட்டினான் ரிஷி. சட்டென கதவை திறந்தாள் அவனது தேவதை.

'எதுக்கு இங்கே வந்தே???' காரினுள் அமர்ந்த படியே கேட்டான் அவன்.

அவனை பார்த்த மாத்திரத்தில் 'என்னையும் உன் கூட கூட்டிட்டு போ வசி ..' அவன் சட்டையை கொத்தாக பிடித்துக்கொண்டு கண்ணீர் வழிய கெஞ்சியது ரோஜாப்பூ.

'சின்ன குழந்தையா நீ? இத்தனை நாள் இந்த கதையெல்லாம் உனக்கு முழுசா தெரியலை. தெரிஞ்சப்புறமும் பிடிவாதம் பிடிச்சா எப்படி? விட்டுடு எல்லாத்தையும். வேறே யாரையாவது கல்யாணம் பண்ணிக்கோ. அதுதான் நல்லது.

'நீ வேறே யாரையாவது கல்யாணம் பண்ணிப்பியா????' கேட்டாள் அவள்.

'அது... அது கண்டிப்பா பண்ணி... பண்ணிப்பேன்...'

'போடா... உன்னாலே முடியாது...'

'எனக்கு டைம் ஆச்சு. நான் கிளம்பறேன்..' அவன் காரை விட்டு இறங்க முயற்சிக்க

'நீ போ... நான் செத்து போறேன்...'

'அறைஞ்சிடுவேன் உன்னை. ஏண்டி இப்படி உயிரை எடுக்குறே??? தயவு செய்து தப்பா எதுவும் யோசிக்காதே. என்னாலே தாங்க முடியாது அருந்ததி ப்ளீஸ் .'

'அப்போ நீ போனதும் நான் என்ன செய்ய???.'

'தப்பா மட்டும் யோசிக்காதே. வேறே என்ன வேணும்னாலும் செய். எனக்கு ப்ராமிஸ் பண்ணு. தப்பா எதுவும் யோசிக்க மாட்டேன்னு' கை நீட்டினான் அவளை நோக்கி 'ப்ளீஸ்....'

'பிளீஸ் அருந்ததி ...' அவன் கெஞ்ச அவன் முகம் பார்த்தபடியே அவன் கை மீது கை வைத்தாள் அருந்ததி.

'தேங்க்ஸ்... நான் வரேன்..'

'அவன் சட்டையை பிடித்துக்கொண்டாள் மறுபடியும் 'ஒரு முத்தமாவது கொடுத்திட்டு போ..'

'பச்... வேண்டாம்பா ப்ளீஸ்... புரிஞ்சுக்கோ...'

'ப்ளீஸ் வசி... அதை நினைச்சிட்டே கொஞ்ச நாள் வாழ்ந்திடுவேன். அட்லீஸ்ட் ஒரு வருஷம். அதுக்கு அப்புறம் நீ வருவியான்னு பாப்போம். ப்ளீஸ் வசி....' கண்ணீர் வழிய கெஞ்சல்..

அவளை சட்டென இழுத்து தன்னோடு சேர்த்து..... இருவர் கண்களிலும் வெள்ளம்.

'சில நொடிகள் கழித்து கண்ணீரை துடைத்துக்கொண்டு ' நான் வரேன்....' அவன் நகரப்போக

'அப்போ திரும்பி வருவே தானே??? கேட்டாள் அவள்.

'மாட்டேன்...'

உன் லண்டன் நம்பராவது குடு..'

'அதெல்லாம் எதுவும் கிடையாது. ஃபேஸ்புக், மெயில் எதுக்கும் ரிப்ளை பண்ண மாட்டேன். தேவை இல்லாம ட்ரை பண்ணாதே'

'உன்னை பார்க்கணும்ன்னு எப்பவாவது தோணினா நான் உன்னை கூப்பிடுவேன். நீ வரணும்'

'மாட்டேன். மாட்டவே மாட்டேன். பை...' சொல்லிவிட்டு போனவன்தான்.

'ரிஷி, சந்திரிகா மேலயும் ஏதோ தப்பு இருக்கு. அதான் பயந்திட்டு நாட்டை விட்டே  போயிட்டாங்க..' ஊருக்குள் ரிஷியை பற்றி இப்படிதான் பேச்சு!!!!

பேசவில்லை!!! ஒன்றரை வருடங்கள் வீட்டில் யாருடனும் பேசவில்லை அருந்ததி!!!!! ஒன்றரை வருடங்கள் கழித்து இப்போதுதான் வந்திருக்கிறான் ரிஷி!!!!

ஏதேதோ பழைய நினைவுகள் தலைக்குள் ஓடிக்கொண்டிருக்க, மருத்துவமனையின் அந்த அறையில் இயக்குனர் உறங்கிக்கொண்டிருக்க, அறையை விட்டு வெளியே வந்தார் மேகலா.

ரிஷி இருந்த அறை கதவு மூடிக்கிடந்தது. மருத்தவமனையின் வாசலில்  அவனது ரசிகர்கள் கூட்டம். ஒரு சில பத்திரிக்கையாளர்களும் கூட இருந்தனர். ரிஷிக்கு விஷயம் சென்றதா இல்லையா??? மேகலா  சிந்தனையுடனே நின்றார் வெளியே......  

வனது அறையின் உள்ளே..

உயிர் சக்தி எல்லாம் மொத்தமாக வடிந்து விட்டதை போல் அமர்ந்திருந்தார் சந்திரிக்கா. தெரிந்துவிட்டதே என் மகனுக்கு!!!! எல்லா உண்மைகளும் தெரிந்து விட்டதே??? எது நடக்க வேண்டாம் என நினைத்தேனோ அது நடந்து விட்டதே??? அடுத்து என்னை பார்த்து என்னென்ன கேள்விகள் கேட்பானோ??? அன்று மாரடைப்பு வந்த விஷயத்தை மறைத்தற்கே அப்படி கோபப்பட்டானே இன்று என்ன செய்ய காத்திருக்கிறானோ??? ஒரு வேளை என்னை மொத்தமாக வெறுத்து விடுவானோ???

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.