(Reading time: 30 - 60 minutes)

ரு வகையில் இவள்  கதையும் என் கதையும் ஒன்றுதானோ??? இதோ இவளை பாசத்தை கொட்டி வளர்க்க போகிறேன் நான்.!!!! என்றாவது ஒரு நாள் அவள் உண்மையை புரிந்துக்கொண்டு விட்டால் நான் அந்நியமாகி போய் விடுவேனா என்ன??? தவிப்புடன் அவனையே பார்த்துக்கொண்டிருந்த அப்பாவை ஒரு முறை திரும்பி பார்த்தான் ரிஷி.

மூச்சை ஒரு முறை இழுத்து விட்டுக்கொண்டவனின் கரம் குழந்தையை மெதுவாக  வருடிக்கொடுத்தது.  மெல்ல அவர்கள் அருகில் வந்து மண்டியிட்டு அமர்ந்தாள் அருந்ததி.

'எனக்கு கூட ரெண்டு அம்மாதான். ஒரு அம்மா சாமி கிட்டே போயிட்டாங்க. இன்னொரு அம்மா எல்லாரையும் பாடா படுத்தறாங்க' அவன் கையை மெல்ல அழுத்தி கொடுத்தாள் அருந்ததி. அதில் மன்னிப்பு கேட்கும் பாவமும் இருந்தது. மெதுவாக கரம் உயர்த்தி அவள் மூக்கை செல்லமாக கிள்ளினான் ரிஷி. மனம் கொஞ்சம் கொஞ்சமாக லேசாக மாறுவதைப்போல் ஒரு உணர்வு.

சில நொடி அமைதி அங்கே. பின்னர் திடீரென கேட்டது அந்த குரல்  

'இந்த கண்ணன் இருக்கானே... மகாபாரத கண்ணன் அவனுக்கு கூட ரெண்டு அம்மாதான் தெரியுமா???' .----- இது அப்பா. எழுந்து வந்து அவன் நாற்காலியின் அருகில் தரையில் அமர்ந்துக்கொண்டார்

'அவனுக்கு யசோதா தேவகின்னு ரெண்டு அம்மா. கண்ணன் பிறந்ததும் தேவகிக்கு இருந்த ஒரே கவலை அவன் நல்லா வளரனும், வாழணும் அப்படிங்கறதுதான். அதனாலே தான் அவனை யசோதைகிட்டே அனுப்பிட்டா...' சொல்லிக்கொண்டே அவர் ஜானகி அம்மாவை பார்க்க ரிஷிக்கு இன்னமும் அதிகமாக புரிதல்..

'தேவகியும் பாவம் தான். கண்ணனோட சின்ன வயசு விளையாட்டு, பாசம் எல்லாம் யசோதைக்குதானே. தேவகிக்கு எதுவும் இல்லையே ??? மகன் ஒரு நொடி அம்மாவின் பக்கம் திரும்ப  இமைக்க கூட தோன்றவில்லை ஜானகி அம்மாவுக்கு.

'இதெல்லாம் கண்ணன் கிட்டே சொல்லக்கூடாதுன்னு இல்லை. ஆனா எப்படி சொல்றதுன்னு கவலை யசோதைக்கு. என் கண்ணன் இதையெல்லாம் தாங்க மாட்டான்ன்னு தவிப்பு...... ஒரு வேளை உண்மை தெரிஞ்சதும் கண்ணன் தன்னை விட்டுட்டு போயிடுவானோன்னு பைத்தியக்காரத்தனமா ஒரு பயம் யசோதைக்கு. பாவம்.....' அப்பா சொல்லிக்கொண்டே போக விழிகளை நகர்த்தி யசோதையை பார்த்தான் நம் கண்ணன். அவன் கண்களில் சிறியதிலும் சிறியதாக ஒரு நீர் கோடு.

அவன் கரம் அவனது தோளில் சாய்ந்துக்கொண்டு அமர்ந்திருந்த குழந்தையை இன்னமும் வருடிக்கொண்டுதான் இருந்தது. அந்த இடத்தில் தன்னையும் தீக்ஷாவையும் பொருத்தி பார்த்துக்கொண்டே இருந்தது அவன் மனம்.

சஞ்சா இவளை சொந்தம் கொண்டாடிய போது கூட  'போடா..... இவ என் பொண்ணு...' என்று அள்ளிக் கொண்டேனே இவளை???? நான் சொல்வேனா தீக்ஷாவிடம்??? நான் உன் தந்தை இல்லை சித்தப்பா என தைரியமாக சொல்வேனா??? இல்லை அதற்கான தேவை வரும் வரை சொல்ல வேண்டாம் என எனக்குள்ளே புதைத்துக்கொள்வேனா??? பதில் தெரியவில்லைதான் அவனுக்கு. மெல்ல முத்தமிட்டான் குழந்தையை.

'இத்தனை வருஷ வாழ்க்கையிலே எத்தனையோ பிரச்சனைகள் வந்தபோது கூட அவ கண்ணிலே கொஞ்சம் கூட தண்ணி வந்ததில்லை. ஆனா நேத்து தண்ணி வந்திருச்சு பா நம்ம யசோதைக்கு. அது இந்த கண்ணனுக்காக. கண்ணனுக்காக மட்டும் தான்'  மகன் அவரை திரும்பி பார்க்க, சுவாசிக்க கூட மறந்திருந்தார் நம் சந்திரிக்கா!!!!

அப்போ நம்ம கண்ணனை மாதிரியே ரெண்டு அம்மாவுக்கும் வலி அதிகம்தான்  இல்லையாபா' கேட்டாள் அவனது ரோஜாப்பூ.  அப்பா ஆமென தலை அசைக்க....

'அது சரி!!!! அப்போ ரெண்டு அம்மாவையும் இந்த கண்ணன் தான் பார்த்துக்கணும். கண்ணனே இப்படி தளர்ந்து போய் உட்கார்ந்திட்டா எப்படி??? என்றாள் அவள்.

'இந்த கதையிலே இந்த நந்தகோபனுக்கு ஏதாவது ரோல் இருக்கான்னு தெரியலை. அப்படி இல்லைன்னாலும் என்னையும் சேர்த்து கொஞ்சம் பார்த்துக்க சொல்லுமா' அப்பா அவனை பார்த்து புன்னகைத்த படியே சொல்ல....

'அப்பா....' அழைத்தான்  வாய் திறந்து. அவன் எப்போதும் அவரை அழைக்கும் அதே தொனி.

'நீங்க இல்லைன்னா இந்த கண்ணனே இல்லையேபா. வெறும் கல்லுதானே??? அதுக்கு அப்புறம் எங்கே யசோதை, தேவகி எல்லாம்??? என்னை கொஞ்சம் கொஞ்சமா செதுக்கினது நீங்கதானே பா??? அருகில் இருந்த அவர் கை பிடித்துக்கொண்டு ரிஷி சொல்ல அவர் கண்களில் நீர் ஏற்றம். நிறைவான புன்னகை.

சில மணி நேரங்கள் இவர்கள் மனதை பற்றியெல்லாம் சிந்திக்காமல் என்னை பற்றி மட்டுமே யோசித்து விட்டேனோ??? என்று நினைத்தவனின் அடி மனதில் இருந்து அந்த கேள்வி மட்டும் இன்னும் மறையவில்லைதான். 'நான் நிஜமாகவே என் அம்மா வயிற்றில் பிறக்க வில்லையா???

தலையை குலுக்கிக்கொண்டு சட்டென சந்திரிக்காவின் பக்கம் திரும்பியவன் குழந்தையை கீழே இறக்கி விட்டு எழுந்தே விட்டான். விறுவிறுவென அவர் அருகில் வந்தான். மகனின் முகம் பார்த்தபடியே அமர்ந்திருந்தார் சந்திரிக்கா. இன்னும் என் இதயம் உடையாமல் இருக்கிறதே  எப்படி???

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.