(Reading time: 31 - 61 minutes)

'து எப்படி சார்... பெத்தவங்க பெத்தவங்க தானே??? ஜானகி அம்மாதானே உங்களுக்கு எல்லாம்.. சந்திரிக்கா உங்களை சும்மா வளர்த்தவங்க தானே???' வார்த்தைகள் இதயத்தை கிழிக்க...  வலித்தது  சந்திரிக்காவுக்கு. இப்போது மேகலாவின் கண்களில் சந்தோஷ தாண்டவம். 'இதே வார்த்தைகள் இன்னும் கொஞ்ச நாட்களில் அவர் மீதே திரும்ப வீசப்படும் என்று அறிந்திருக்கவில்லை அவர் பாவம்!!!!'

உடலில் உள்ள ரத்தம் மொத்தமும் கொதிக்க, தன்னை கட்டுப்படுத்திக்கொள்ள ரிஷி பெரும் பாடு பட்டுக்கொண்டிருக்க.......

'உங்களுக்கு கொஞ்சம் கூட வருத்தம் இல்லையா மேடம் ரிஷி உங்க வயித்திலே பிறக்கலைன்னு... பதில் சொல்லுங்க', காற்றே இல்லாத ஒரு அழுத்தமான இடத்தில் அடைப்பட்ட ஒரு உணர்வில் சந்திரிக்கா நொடிகள் கண் மூடி சில நிற்க... எல்லாரும் சந்திரிக்காவையே பார்த்திருக்க...........

'ஆமாம் ரிஷி எனக்கு பிறக்கலை...'  அவள் அப்படியே உடைந்து அழுது விடும் தருணத்தை மேகலா எதிர்பார்த்திருக்க, 'அம்மா அழுது விடுவாளோ????', ரிஷியினுள்ளே கூட கொஞ்சம் பயம் பரவ... அவன் அம்மாவின் கையை இன்னமும் இறுக்கமாக பற்றிக்கொள்ள

திடீரென 'ஆமாம் ரிஷி எனக்கு பிறந்த பையன் இல்லைதான்.' கணீரென ஒலித்தது சந்திரிக்காவின் குரல். 'ஜானகி எங்க வீட்டிலே வேலை செய்தவங்கதான். அவங்களாலே ரெண்டு குழந்தைகளை வளர்க்க முடியாது அப்படிங்கறதுனாலே நான் ரிஷியை கூட்டிட்டு போய் வளர்த்தேன். ஜானகி தான் அவனோட அம்மா இதை சொல்றதிலே எனக்கு எந்த வருத்தமும் இல்லை'

இப்படி ஒரு அதிரடி பதிலை எதிரே பார்க்கவில்லை மேகலா!!! ரிஷியிடமுமே வியப்பு!!!!

கேள்வி கேட்ட அந்த பத்திரிக்கையாளரை நேருக்கு நேராக பார்த்தார் சந்திரிக்கா. 'என்னை இத்தனை கேள்வி கேட்டீங்களே நான் உங்களை சில  கேள்விகள் கேட்கிறேன்...'

'உங்க அம்மா, அதாவது உங்களை வயத்திலே சுமந்து பெத்த அம்மா இப்போ எங்கே இருக்காங்க???'

'ஊரிலே.. எங்க கிராமத்திலே...'

''கடைசியா எப்போ பார்த்தீங்க அவங்களை.???'

'மூ... மூணு  மாசம் முன்னாடி ...'

'மூணு மாசம் முன்னாடி .... ம்.....சரி அது போகட்டும்....... அவங்க அழுது நீங்க பார்த்திருக்கீங்களா???

'இதிலே என்ன இருக்கு??? நிறைய பார்த்திருக்கேனே. அடிக்கடி அழுவாங்களே. அவங்களுக்கு வேறே என்ன வேலை??? நான் ஊருக்கு போகும் போதெல்லாம் ஏதாவது சொல்லி அழுதிட்டுதான் இருப்பாங்க இதெல்லாம் ஒரு விஷயமா???.' பெருமையாக சொன்னான் அந்த மகன்.

'அப்போ அவங்க அழறது உங்களுக்கு ஒரு பெரிய விஷயமே இல்லை... அப்படிதானே???

'??????' கொஞ்சம் திடுக்கிட்டு வாயடைத்துதான் போனான் இத்தனை நேரம் நிறுத்தாமல் கேள்வி கேட்டவன்

'அப்போ நீங்க அவங்க வயித்திலே பிறந்த பையன்னு சொல்லிக்கறதிலே எந்த அர்த்தமும் இல்லையே சார்... இதோ நிக்கறான் பாருங்க என் பையன், என் கண்ணிலே தண்ணி வந்திடுமோன்னு பயந்து...... என் கையை பிடிச்சுக்கிட்டு..... அம்மா உள்ளே போயிடு....... அம்மா உள்ளே போயிடுன்னு...... துடிச்சு போய் நிக்கறான் பாருங்க.... இவன் தான் சார் பிள்ளை... வயத்திலே பிறந்திட்டா மட்டும் பிள்ளையா ஆயிட முடியாது சார்... இவனை நான்தான் வளர்த்தேன்னு சொல்ல ரொம்ப பெருமை படறேன்.....'

நெகிழ்ச்சி சிரிப்பு ரிஷியினிடத்தில், நிறைவான புன்னகை ஜானகியினிடத்தில். இறுகிப்போனது மேகலாவின் முகம்.

'வேறே யாருக்காவது என்கிட்டே ஏதாவது கேள்வி கேட்கணுமா???' அம்மா நிமிர்ந்து பார்த்து கேட்க யாரிடத்திலும் பேச்சில்லை.

'உங்களை எல்லாம் சந்திச்சதிலே ரொம்ப சந்தோஷம். நன்றி..' எல்லாரையும் கையெடுத்து வணங்கிவிட்டு, 'நீ பேசிட்டு வாப்பா...' ரிஷியை பார்த்து சொல்லிவிட்டு மேகலாவை ஒரு முறை பார்வையால் உரசி விட்டு அறை நோக்கி கம்பீரமாக நடந்தார் சந்திரிக்கா. ஜானகி அம்மாவையும் உள்ளே அனுப்பிவிட்டு திரும்பினான் ரிஷி.

'உங்களுக்கு ஏதாவது சொல்லணும்னா சொல்லுங்க சார்' மைக்கை நீட்டினார் இன்னொரு பத்திரிக்கையாளர். அவர் குரலில் மரியாதை இன்னமும் கூடி இருந்ததை போல் தோன்றியது ரிஷிக்கு.

மைக்கை வாங்கிக்கொண்டு அனைவரையும் பார்த்து புன்னகைத்தான் ரிஷி. அப்போது அந்த கூட்டத்தின் இடையே அவன் கண்ணில் பட்டார் அவர்!!!! பரந்தாமன்!!!! லேசான உறுத்தல் மனதிற்குள்ளே இவர் எப்படி இங்கே வந்தார்???

ஊருக்கு கிளம்பும் முன்னால்தான் போன் செய்து சொன்னான் சஞ்சா 'பரந்தாமன் அரரெஸ்ட்டெட் டா'

நாம அன்னைக்கு பெங்களூர்லேர்ந்து சென்னை வந்தப்போ நம்மை ரெண்டு பேர் அட்டாக் பண்ணாங்க தெரியுமா??? சென்னை ஏர்போர்ட்லே நீ இறங்கினா எல்லாருக்கும் தெரிய வரும் தேவை இல்லாம பிரச்சனை வரும்னு தான் நான் பெங்களூர் வந்தேன். அப்படியும்  சரியா அந்த ரூட்லே  அவனுங்க வந்ததும்தான் எனக்கு கொஞ்சம்  டவுட் வந்தது'

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.