(Reading time: 31 - 61 minutes)

'சொல்லுமா...'  அவன் சொல்வதின் அர்த்தம் புரியாமல் இல்லை மேகலாவுக்கு.

'நீ சொல்லுடா...' என்றார் மெதுவாக.

'ஏன் மா??? நீ பேச  மாட்டியா??? செஞ்சது எல்லாம் நீ தானே மா. நீயே பேசு  ...'

அஸ்வத்....

'என்னடா இத்தனை நேரம் அம்மா... அம்மான்னு இருந்தவன் இப்படி பேசறானேன்னு பாக்கறியா??? எனக்கு எப்பவும் நீ முக்கியம். ஆனா அப்பாவா, நீயான்னு வந்தா அப்பாதான்.

....................

'ஏன்மா பொண்ணு கிட்டே கூட ஈகோவா??? அது சரி... அவ என்ன நீ பெத்த பொண்ணா நீ சும்மா வளர்த்தவ தானே.' சுள்ளென்று இதயம் கிழித்தன வார்த்தைகள்,

'சந்திரிக்கா உங்களை சும்மா வளர்த்தவங்க தானே???' நேற்று சந்திரிக்கா மீது வீசப்பட்ட இதே  வார்த்தைகள் நினைவுக்கு வராமல் இல்லை மேகலாவுக்கு. தன்னாலே தலை கவிழ்ந்தது. வேறு வழி தோன்றாமல் சஞ்சாவின் கெஸ்ட் ஹவுஸ் எண்ணை அழைத்தான் அஸ்வத்.

'அருந்ததி மேடம் உங்களுக்கு போன்... உங்க அண்ணன்...' வீட்டு வேலை செய்யும் அந்த பெண் சொல்ல.... சட்டென அங்கே இருந்தவர்கள் எல்லாரும் மௌனமானார்கள்.

இரண்டு நொடி யோசனை அருந்ததியிடம் 'நான் பேச விரும்பலைன்னு சொல்லுங்க' அருந்ததி சற்று சத்தமாக சொல்ல அது மறுமுனையில் இருந்த அஸ்வதின் காதை தொடாமல் இல்லை.

'இல்லை... அப்பா பத்தி ஒரு முக்கியமான விஷயம்ன்னு சொல்லுங்க...' அவன் கொஞ்சம் தடுமாற்றத்துடன் சொல்ல...

'அப்பா பத்தியா???' சட்டென எழுந்துவிட்டாள் அருந்ததி. போனை வாங்கியவள் 'சொல்லு..' என்றாள்.

'மறுமனை பேசப்பேச இங்கே மௌனம் மட்டுமே. எல்லாவற்றையும் சொல்லி  முடித்துவிட்டு கேட்டான் அஸ்வத்.

'அருந்ததி லைன்லே இருக்கியாடா ???'

'ம்...' அருந்ததியின் இமைகளை தாண்டிக்கொண்டிருந்தது கண்ணீர் .

'பேசாம இருந்தா என்னடா அர்த்தம்???'

'ம்??? அதுதான் யோசிச்சிட்டு இருக்கேன்...' என்றாள் மெதுவாக. 'நீ ஒண்ணு பண்ணு அம்மாவை இங்கே வந்து பணம் வாங்கிட்டு போக சொல்லு...' அவள் சொல்ல இங்கே இருந்தவர்கள் அனைவரும் ஒரு சேர நிமிர்ந்தனர்.

'அம்மாவா???'

'அம்மாவேதான்... இப்போ வெச்சிடறேன்...' அழைப்பை துண்டித்து விட்டு அவள் வர, அங்கிருந்த அத்தனை கண்களும் அவள் மீதே. கண்களில் கண்ணீர் வழிய எல்லாவற்றையும் சொல்லி முடித்தாள் அவள்.

'தப்புமா. நீ செய்யறது தப்பு.' சில நொடிகள் கழித்து அந்த அறையில் இருந்த நிசப்தத்தை கிழித்துக்கொண்டு வந்தது சந்திரிக்காவின் குரல். அங்கே ஹாஸ்பிட்டல்லே இருக்கறது உன்னை பெத்தவர்'

'இல்லமா... நான் செய்யறது கரெக்ட்தான். அப்பாக்கு தெரிஞ்சா கூட நான் செய்யறது கரெக்ட்தான்னு சொல்வார். வரட்டும். அம்மா வரட்டும்'

கண்களை மூடிக்கொண்டு அவள் சோபாவின் பின்னால் சாய்ந்துக்கொண்டு அமர அம்மாவின் கண் அசைவை புரிந்துக்கொண்டவனாக அவள் அருகில் வந்து அமர்ந்தான் ரிஷி.

'ரோஜாப்பூ கிளம்பு ஹாஸ்பிடல் போலாம்...' கண் திறந்தாள் அவள்.

'வேண்டாம் வசி அம்மா வரட்டும்..'

'இந்த நேரத்திலே நாம இப்படி பண்றது தப்புமா. கிளம்பு போய் பணம் கொடுத்திட்டு அப்பாவை பார்க்கலாம். அங்கே இருக்கிறது உங்க அப்பாடா. அவர் பிழைக்கறது தான் முக்கியம். மத்ததை அப்புறம் யோசிக்கலாம்.'

'அது எப்படி வசி??? நேத்து காலையிலே வரைக்கும் நம்மை சொல்லி சொல்லி அடிச்சிருக்காங்க. இன்னைக்கு காலையிலே நாம அவங்களுக்கு உதவி பண்ணனுமா??? இப்போ நான்  போய் பணம் கொடுத்தா அவங்க மாறிடுவாங்கன்னு நினைக்கறியா??? உங்க அப்பாவை நீ காப்பத்த வந்திருக்கே இதிலே எனக்கென்ன ஆச்சுன்னு சொல்லுவாங்க. புரியணும் வசி. அவங்களுக்கும் அவங்க செஞ்ச தப்பு புரியணும். நான் அவங்களை அவமான படுத்ததெல்லாம்  மாட்டேன். வரட்டும். வந்து நம்ம முன்னாலே நிக்கட்டும்!!! அது போதும்!!!. நான் பணம் கொடுத்திடறேன்'

யார் சொன்ன சமாதானமும் அங்கே எடுபடவில்லை!!!

'.அவங்க வரட்டும். அப்படி அவங்க வரலன்னா அவங்களுக்கும் எங்க அப்பாவுக்கும் இனிமே எந்த சம்மந்தமும் இல்லை. ஈவினிங் வரைக்கும் பார்க்கலாம்.' அருந்ததியின் குரலில் இரும்பின் தன்மை.

அருந்ததி சொன்னதை அம்மாவிடம் சொல்லிவிட்டு அதற்கு மேல் எதுவும் பேசாமல் வெளியேறினான் அஸ்வத். மறுபடி மறுபடி இயக்குனரின் முகமே கண்முன் வந்து போகிறது மேகலாவுக்கு. அணை உடைந்தது போல் கொட்டுகிறது கண்ணீர். குலுங்குகிறது உடல்.

'சந்திரிக்கா அழணும் எல்லார் முன்னாலேயும் அழணும் .அன்று சொன்னேனே. இன்று நான் கதறுகிறேனே??? இவ்வளவு தான் வாழ்க்கையா??? இறைவா.... '' நீண்ட நாட்களுக்கு பிறகு இறைவனை தேடியது மனம்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.