(Reading time: 31 - 61 minutes)

'ஸ்வத் சும்மா வாய் விடுவானே தவிர ஆளுங்களை வெச்சு கொலை பண்ற அளவுக்கு எல்லாம் போக மாட்டான் எனக்கு தெரியும். நேத்துதான் தெரிஞ்சது. அது இவரோட ஆளுங்கன்னு. இவரோட மொபைல் ட்ரேஸ் பண்ணிட்டே வந்திருக்கானுங்க. அவனுங்க என்கிட்டே மாட்டினானுங்க அதை வெச்சு இந்த ஆளையும் உள்ளே போட்டுட்டேன்.'

இவர் எதுக்கு நம்மை...'

'சொல்றேன் இரு..'

'முன்னாடி அவர் ஒரு பொண்ணை கூட்டிட்டு வந்து உனக்கும் அவருக்கும் பிரச்சனை ஆச்சு ஞாபகம் இருக்கா???'

'ஆமாம்.... அப்போ எல்லாம் இந்த மாதிரி பொண்ணுங்களை கூட்டிட்டு வர்றதுதான் அவர் வேலை. இந்த மாதிரி என் பேரை சொல்லி சில பெண்களோட அவர் விளையாட ஆரம்பிச்ச அப்புறம் தான் அவரை தூக்கி கொஞ்ச நாள் உள்ளே வெச்சேன்'

'கரெக்ட். அதனாலே அவர் குடும்பத்திலே நிறைய பிரச்சனை. அவர் வொய்ஃப் அவரை விட்டு பிரிஞ்சு போயிட்டாங்க. வயத்திலே எட்டு மாச குழந்தையோட... அதுக்கு அப்புறம் ஒரு பெண் குழந்தை பிறந்ததுன்னு நான் கேள்விப்பட்டேன். அதை அவர் நெருங்க கூட அவங்க அனுமதிக்கலை. அதுக்கு அப்புறம் அவங்க வேறே கல்யாணம் பண்ணிகிட்டாங்கன்னு கேள்விப்பட்டேன்.

கொஞ்ச நாள் கழிச்சு. எனக்கு வேலை இல்லை சார்ன்னு என்கிட்டே வந்தார். அழுதார். நான் திருந்திட்டேன்னு சொன்னார். சரி போகட்டும்னு சேர்த்துக்கிட்டேன். ஆனா எப்பவும் அவர் மேலே ஒரு கண்ணு வெச்சிட்டு தான் இருந்தேன். ஒழுங்கா தான்டா இருந்தார். ஆனா அவர் அடி மனசிலே நிறையவே வெறுப்பு இருந்திருக்கு. உன்னாலே தான் அவர் வாழ்கை கெட்டு போச்சுன்னு ஒரு வெறுப்பு.

'இது எனக்கு அன்னைக்கு தங்கச்சி கல்யாணத்திலே நீ அருந்ததிக்கு மோதிரம் போடும் போது தான் தெரிஞ்சது. நான் பார்த்தேன் நீ சந்தோஷமா இருக்கறதை அந்த ஆளாலே தாங்கிக்கவே முடியலை'

நிஜமாகவே நம்பவே முடியவில்லை ரிஷியால். 'இப்படி எல்லாம் கூட இருக்குமா???'

நீ ஊருக்கு வந்திலேர்ந்து உன்னை எப்படியாவது, அழிச்சிடணும் இல்லை அட்லீஸ்ட்  நிம்மதி இல்லாம பண்ணிடணும்னு முயற்சி பண்ணிட்டே இருந்திருக்கார்.

'முதலிலே அஹல்யா நடிச்ச புது படத்தை ஓட வைக்கனும்னு தான் நாங்க ரெண்டு பேரும் பேசறா மாதிரி ஒரு கான்வர்செஷன் ரெடி வாட்ஸ் ஆப்லே போட்டிருக்காங்க. அதுக்கு பரந்தாமன் ஹெல்ப் பண்ணி இருக்கார். அன்னைக்கு பரந்தாமன் போன்லே என் மாமனார் பேசினதை நான் கேட்டேன். அதுக்கு அப்புறம் ரெண்டு பெரும் குளோஸ் ஆயிட்டாங்க.

இதை பத்தியெல்லாம் என்கிட்டே சொன்னது அகல்யா. சொல்லப்போனா நான் அவளை விரும்பறேன்னு முதலிலே அவளையே நம்ப வெச்சிருக்காங்க. அதுக்கு அப்புறம் தான் எல்லாம் புரிஞ்சுகிட்டு அவ நமக்கு ஹெல்ப் பண்ண வந்திருக்கா.

தங்கச்சி கல்யாணம் முடியட்டும்ன்னு நான் கொஞ்சம் கேப் விட்டேன் அதுக்குள்ளே விளையாடிட்டாங்க. திவாகர், தீக்ஷா பத்தி தெரிஞ்சுகிட்டு அவங்களுக்கு எல்லாம் சொன்னதும் அவர் தான்டா ' பேச்சு வாக்கில் மறந்தவனாக சட்டென சொன்னான் சஞ்சா.

'தீக்ஷா பத்தியா??? என்னன்னு சொன்னார்???'

'அதான்டா அவ...' என்று ஏதோ சொல்ல வந்தவன் நிறுத்திக்கொண்டான் அதெல்லாம் உனக்கு எதுக்கு??? 'நீ கேர் ஃபுல்லா இருன்னு சொல்றேன். மனசில வெச்சுக்கோ. ஜாக்கிரதையா இருடா..'   முடித்து விட்டான் அந்த நண்பன்.

அவன் அப்போது அறிந்திருக்கவில்லை. 'ஜானகி அம்மாவின் புகைப்படத்தை தீக்ஷாவின் கையில் முதலில் பார்த்ததும் பரந்தாமன் தான் என்பதும் ஜெயிலுக்கு போவதற்கு முன்னால் அதை மேகலாவுக்கு சொல்லிவிட்டு போனதும் அவர்தான் என்பதும்!!!!

மைக்கை பிடித்தவன் கவனம் சில நொடிகள் மறைந்து மறைந்து நிற்கும் பரந்தாமனிடம் சென்று திரும்பியது.ஜெயிலிலிருந்து தப்பி வந்திருக்க வேண்டுமோ???? ரசிகர்களின் உற்சாக கூச்சல் அவனை தரை இறக்க...

'எல்லாருக்கும் வணக்கம்..' துவங்கினான் அவன். 'என் மேலே நீங்க வெச்சிருக்கிற அன்புக்கும் பாசத்துக்கும் ரொம்ப நன்றி. என் சொந்த வாழ்க்கையில ஒரு சின்ன தடுமாற்றத்தை நான் சந்திச்ச இந்த நேரத்திலே இத்தனை பேர் வந்து நிக்கறீங்கன்னு நினைக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. நான் உங்களுக்கெல்லாம் அப்படி என்ன செஞ்சிட்டேன்னு தெரியலை. செய்யணும். உங்களுக்கெல்லாம் ஏதாவது நல்லது செய்யணும். கண்டிப்பா செய்யறேன்'

'தலைவா அடுத்த படம் எப்போ தலைவா??? கூட்டத்திலிருந்து ஒரு குரல் கேட்க, அருகில் இருந்த பத்திரிக்கையாளரும் அதையே கேட்டார்

'சொல்லுங்க சார்.. அடுத்த படம் எப்போ...'

'அடுத்த படம்...' புன்னைகைத்தான் ரிஷி. 'எனக்கும் ஆசைதான். யோசிப்போம். காலம் பதில் சொல்லட்டும்..' அவன் சொல்ல ரசிகர்களிடம் உற்சாக கூச்சல் எழ அவன் எதிரே பார்க்காத அந்த தருணத்தில், ஓடி வந்தனர் அவனை நோக்கி.. உதவியாளர்கள், போலீசார்கள் சுதாரிக்கும் முன்  கூட்டம் அவனை சூழ்ந்துக்கொண்டது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.