(Reading time: 31 - 61 minutes)

தேவை நாற்பது லட்சம்!!! இப்போது மேகலா குடும்பத்தை பொறுத்தவரை அது மிகப்பெரிய தொகை.!!!! வீட்டை விற்ற பிறகு கடனை எல்லாம் அடைத்து விட்டு கையில் மீதம் இருப்பது வெறும் ஐந்து லட்சம். எங்கே போயிற்று நான் சம்பாதித்த பணமெல்லாம்???? தெரியவில்லை!!!

இதில் என்ன இருக்கு வெறும் பணம். சொல்வார்கள் சிலர். வெறும் பணம் தான். அதை எனக்கு கொடுக்க ஆள் இல்லையா??? கிட்டத்தட்ட 24 மணி நேரமாக போராட்டம். அவர்கள் குடும்பத்தின் மீது சமூகத்தில் மரியாதை இல்லாத நிலையில், மேகலாவை பற்றிய நல்ல அபிப்பிராயங்கள் யாரிடமுமே இல்லாத நிலையில் யாருமே அவரை நம்பத்தயாராக இல்லை.

நிறைய பேரிடம் கேலி சிரிப்பும், எகத்தாள பேச்சும்!!!! நான் புகழையும், வெற்றியையும் மட்டுமே தேடித்தேடி, அகங்காரத்தை மட்டுமே வளர்த்துக்கொண்டு நல்ல நண்பர்களை இழந்து நிற்கிறேனா என்ன???

'அப்பா மெடிக்கல் இன்ஷூரன்ஸ். எதுவுமே எடுக்கலையா டா???

எங்கேயாவது ஏதாவது வழி தென்ப்பட்டு விடாதா என்ற ஒரு ஏக்கத்துடன் வெளிவந்தது மேகலாவின் குரல். இன்று வரை வீட்டில் பணம் எங்கிருந்து வருகிறது, எங்கே போகிறது என்று கூட யோசிக்காமல் தான் ஒரு மகாராணி என்ற எண்ணத்துடனே வாழ்ந்தாகி விட்டது..

'எதுவும் எடுக்கலைமா' என்றான் அஸ்வத். பணம் புரட்ட அவன் எடுத்த முயற்சிகளும் படு தோல்வி. அவனது தொழிலில் ஏற்பட்ட நஷ்டங்களே அவனது பல நண்பர்களை அவனிடமிருந்து விலக்கி இருந்தன.  

'உன் தங்கிச்சி புருஷன் கிட்டே கேட்க வேண்டியதுதானே' என்பது போன்ற ஏளன பார்வை அவனது மற்ற நண்பர்களிடம்.

'கையிலே பணம் இருக்காமா? இல்லைனா சொல்லுமா!!!

யாரு அவன் கேட்க சொன்னானா??? அவன்கிட்டே போய் நிக்கற அளவுக்கு என் நிலைமை இன்னும் அவ்வளவு தூரம் கீழே போகலைன்னு சொல்லு இப்போ கிளம்பு' அருந்ததியிடம் எள்ளலாக சொன்னது நினைவில் ஆடியது. இதோ தாழ்ந்துவிட்டது. கீழே போய் விட்டது நிலைமை.!!!

தே நேரத்தில் அங்கே சஞ்சாவின் கெஸ்ட் ஹவுஸில் எல்லாரும் கூடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க காரை நிறுத்திவிட்டு உள்ளே ஓடி வந்தான் நண்பன். நம் சஞ்சா!!!! அவன் பின்னாலேயே அஹல்யா.

அவனை பார்த்தவுடனே 'டாடி... அவனுடன் சேர்ந்து ஒட்டிக்கொண்டது தீக்ஷா.

'என்ன சஞ்சா அதுக்குள்ளே வந்திட்டே....' முதலில் அவனை பார்த்தது அருந்ததி. 'என்ன சஞ்சா நீ ??? நான் தான் சொன்னேன்ல நாங்க சமாளிச்சுகரோம்னு

'நீ வேறே' சிரித்தாள் அஹல்யா. 'போன் பேசும் போது ஏர்போர்ட்லே தான் இருந்தோம். இவர்  யோசிச்சிட்டே உட்கார்ந்து இருந்தார். அடுத்த அரை மணி நேரத்திலே நேரத்திலே அடுத்த நியூஸ் ..

'மருத்துவமனையில் நடிகர் ரிஷி தாக்கப்பட்டார்ன்னு. அடுத்த பத்தாவது நிமிஷத்திலே அடுத்த பிளைட்ட்டுக்கு டிக்கெட் புக் ஆகியாச்சு'

'இவர்கள் பேசுவது எதுவுமே சஞ்சாவின் காதில் ஏறவில்லை. நேராக சென்று ரிஷியின் முன்னால் நின்றிருந்தான். ஏதோ நண்பனை புதிதாக பார்ப்பதைப்போல் அவனையே சில நொடிகள் பார்த்துக்கொண்டே இருந்தான். அவன் முகம் கை என எல்லாவற்றையும் ஆர்ய்ந்து விட்டு

'உனக்கு ஒண்ணுமில்லையேடா??? கேட்டான் சஞ்சா. பதில் சொல்லவில்லை ரிஷி.

'எவன்டா உன்னை குத்த வந்தவன் அந்த பரந்தாமனா??? எப்படி ஜெயிலை விட்டு வெளியே வந்தான்??? பாவம் பரிதாபம் பார்த்து என் கூட வெச்சிருந்தேன் பாரு என் தப்பு. இனி நான் பார்த்துக்கறேன். அவ்வளவுதான். அவன் இனி ஆயுசு முழுக்க ஜெயில்லதான்' ரிஷியிடமிருந்து பேச்சே இல்லை.

'என்னடா அப்படி பாக்கறே???' சஞ்சா கேட்க

'ஏன்டா இப்படி பண்றே???' அவனை நேராக பார்த்து கேட்டான் ரிஷி.

இத்தனை நாள் எல்லாவற்றையும் அவனிடம் மறைத்துவிட்டேன் என்ற கோபமா???  என்று யோசித்தபடியே 'இல்லடா உண்மையெல்லாம் தெரிஞ்சா நீ தாங்க மாட்டியோன்னு..'.

ஏன்டா இப்படி பண்ணேன்னு கேட்கலை... ஏன்டா இப்படி பண்றேன்னு கேட்டேன். ஏன்டா என் மேலே இவ்வளவு பாசம் வெச்சிருக்கே??? நண்பனை தன்னோடு சேர்த்துக்கொண்டான் ரிஷி 'உனக்கு நான் என்னடா செஞ்சிருக்கேன்??? இப்படி எனக்காக ஓடி வரியே???

'டேய் லூசு....' என்றபடியே நண்பனை அணைத்துக்கொண்டான் சஞ்சா. 'நீ என் ஃப்ரெண்ட்டா... என்னை விட்டா உன்னை வேறே எவன்டா பார்த்துப்பான்???'

தே நேரத்தில் அங்கே மருத்துவமனையில்....

'அம்மா.. ' என்றான் அஸ்வத். 'அருந்ததிக்கு சொல்லிட்டியா???'

மேகலாவுக்கும் தெரியும். ரிஷிக்கு விஷயம் தெரிந்தால் போதும் அடுத்த அரை மணி நேரத்தில் பணத்துடன் வந்து நிற்பான் என!!!! அவன் என்ன சந்திரிகாவே வந்து நிற்பாள் என தெரியும்!!! ஆனால் எப்படி கேட்பது??? என்னவென்று கேட்பது???

'இன்னும் சொல்லலைடா...'

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.