(Reading time: 20 - 40 minutes)

வள் பதிலேதும் சொல்லும் முன்னும் இவள் கணவனோ “இல்லடா இவ்ளவு நேரம் ஆகும்னு நான் நினைக்கலை…..இந்த இடம் வரைக்கும் சிக்னலும் இருக்காது…..அதுமாதிரி ப்ரச்சனையும் கிடையாது….இங்க வரவும் உன்னை கூப்டனும்னு தான் நினச்சிறுந்தேன்… “ சொல்லியபடியே தன் பைக்கை அண்ணனிடம் ஒப்படைத்தவன்….

“கார்ல ஏறு வினி” என்றான் இவளிடமாக… அந்த இடத்தில் கார் செல்லும் அளவு பெரிய சாலையில் வந்து இணைந்திருந்தது அதுவரை அவர்கள் வந்த சாலை.

பசங்கட்ட வழிப் பறி பண்ணுவாங்கன்னா அதிபன் மட்டும் தனியா வர்றது சரிதானாமா? அவங்கட்ட போய் இவன் என்ன பைக்கை கொடுத்துட்டு இருக்கான்? வினி மனம் இப்படி ஓட

“அத்தான் நீங்களும் எங்க கூட கார்ல வாங்க….நாளைக்கு வந்து பைக்க எடுத்துக்கலாம்…” அவசரமாக அவளுக்கு தெரிந்த ஐடியாவைச் சொன்னாள் இவள். ‘நீங்க எங்க ரெண்டு பேருக்கும் இடையில வர்றதா  நான் நினைக்கவே இல்லை’ என்ற செய்தியும் அதில் வெளிப்படையாகவே இருந்தது.

இப்போது சகோதரம் நிறைந்த ஒருப் புன்னகை வந்திருந்தது அதியின் முகத்தில். “இல்ல வினி நானும் அபயுமாத்தான் வருவோம்…..அதுவும் உங்க கார் கூடவே தான் வருவோம்….இத்தனை பேரா சேர்ந்து வர்றப்ப யாரும் ப்ரச்சனைலாம் செய்ய மாட்டாங்க….” இவளுக்கு அதி விளக்கம் சொல்ல

அதற்குள் அபயனின் சத்தம்…. “சரி இப்ப கிளம்பலாம்…. எதுனாலும் வீட்ல போய் பேசிக்கலாம்….அண்ணி வீட்ல இருந்து அப்பவே ரெண்டு பேரும் கிளம்பிட்டீங்கன்னு கேள்விபட்டதுல இருந்து அங்க எல்லாரும் கொஞ்சம் டென்ஷனா இருக்காங்க….”

அவ்வளவுதான் நிலவினியின் ஏகாந்த பலூனில் இன்ஸ்டென்டாய் காற்றுப் போய்விட்டது…..இப்ப இவங்கள நினச்சு இவ அம்மா அப்பா டென்ஷனா இருப்பாங்கன்னா……மாமனார் மாமியார் என்னதா இருப்பாங்க? அதிபனும் அபயனும் இந்த ஜெனரேஷன்…..இவங்க புரிஞ்சுகிட்டதுல ஆச்சர்யம் இல்லை……ஆனா மாமனார் மாமியார்? அவங்க என்னல்லாம் இவள சொல்லுவாங்களோ? கல்யாணம் ஆகி ரெண்டே நாள்ள பையனை பிரிக்க ஆரம்பிச்சுட்டான்னு நினைப்பாங்களோ?….

ந்த ஃபார்சுனரில் தன்னவன் அருகில் முன் இருக்கையில் ஏறி அமர்ந்திருந்த நிலவினி இந்த நினைவில் வெளிறி இருந்தாள்…. கசந்தும் தான்…

முன்னால் செல்லும் தமையன்களின் பைக்கை தொடர்வதில் மட்டுமாக கவனம் செலுத்தி இருந்த யவ்வனோ மனைவியின் நிலை அறியாமல்…. அவள் முகம் பாராமல்  “வினு நீ ஒன்னு பண்னேன்…. என் மொபைல்ல  நம்பர் இருக்கு….அம்மாவையும் அத்தையையும்  இப்பவே கூப்டு பேசிடேன்….ரிலாக்‌ஸாகிடுவாங்க….” என சொல்ல

அதற்கு அவள் புறம் எந்த அசைவும் இன்றிப் போக, அப்போதுதான் அவளைக் கவனித்தவன் குழம்பிப் போனான்….. ‘தனியா வர்றப்ப இல்லாத பயம் இப்ப எதுக்காம்?’ என்றிருக்கிறது அவனுக்கு….

“ஹேய் என்ன ஆச்சு வினு..” தன் இடக்கையால் அவள் கையைப் பற்றினான்.

“எல்லோரும் இப்ப நம்மள திட்டுவாங்களாப்பா?” இருந்த மன அழுத்தத்தில் அவன் கரிசனையில் அழத்தான் தோன்றுகிறது அவளுக்கு.

‘இவ்ளத்துக்கும் காரணம் இவந்தான என தோன்றி இருந்தால் ஒரு வேளை அவனை குதறி விட்டு சற்று தைரியமாகவே சூழ்நிலையை எதிர் கொண்டிருப்பாளோ என்னவோ?....இப்பொழுதோ ‘எனக்காகப் பார்த்து இப்ப இவன் வேற வாங்கிக் கட்டப் போறான்’ என்ற இரக்க நினைவில் இன்னுமாய் பலவீனம்தான் வந்து சேர்கிறது.

அவனோ இவள் நினைவுக்கு சற்றும் சம்பந்தம் இல்லாமல்…. “அம்மாடியோவ் இப்டி வேற ஆசை இருக்கா? ” என்றவன் சிரித்தான்.

வரவா வரவா என எட்டிப் பார்த்த கண்ணீர் இப்போது காணாமல் போய் சின்னதாய் சிரிப்பும் முழுதுமாய் முறைப்பும் மனைவியின் கண்களில்….

அவன் சிரித்ததிலே ஏனோ இவள் மனம் இலகுவாகிப் போக…. விஷயத்தை விளக்கமாக சொல்லாததற்காக முறைத்தாள்…..

“அம்மா முன்னால எந்த பொண்ண யார் திட்னாலும் அம்மாவுக்கு கோபம் வரும்….. இதுல உன்னைய யாராவது திட்டவா?” என ஆரம்பித்தவன்

“இத நீ கொஞ்சம் சரியா புரிஞ்சிக்கனும் வினு…” என நிறுத்தினான்.

 “நம்ம விஷயத்துல…. நாம எங்க போறோம் வாரோம்ங்கிறதுலலாம் தலையிடுறாங்கன்னு யோசிச்சுடாத…. அதுவும் அத்த மாமாவலாம் கூப்டு விசாரிக்காங்களேன்னுலாம் நினைக்காத…. அப்டிலாம் யாரும் தலையிட மாட்டாங்க….”

“……………….” ‘இப்ப நடந்துட்டு இருக்றத வேற என்னதுன்னு நினைக்கனுமாம்?’ என்கிறது இவள் மனது. ஆனாலும் இவள் எதுவும் வாய்விட்டு கேட்கவில்லை.

 “இந்த ரோட்ல கொஞ்சம் அதி சொன்ன மாதிரி ப்ரச்சனை உண்டு” யவியே தொடர்ந்தான்.

“ அதோட கொஞ்ச நாள் முன்னால பைக்ல  வந்த couple ல ….பொண்ண…….கேங் ரேப்….மர்டர்……அந்த இடத்துல இப்ப போலீஸ்லாம் போஸ்ட் பண்ணி இருக்காங்கனாலும் வீட்ல பயம் இருக்கும்ல….. கார்ல வந்திருந்தோம்னா யாரும் நமக்கு கால் பண்ணி இருக்க கூட மாட்டாங்க…. பைக்னதும் லேட்டாகவும் கூப்டுறுப்பாங்க…. நாம இந்த ஃபங்ஷன் போறத யார்ட்டயும் நான் சொல்லலை…. அங்க சிக்னல் இல்லாம ஸ்விட்ச் ஆஃப்னு வந்திருக்கும்….அடுத்து வேற வழியே இல்லாம உங்க வீட்டுக்கு கூப்டுறுப்பாங்க…..அங்கருந்து கிளம்பி டைம் ஆகிட்டதுன்னதும்…..நான் இங்கதான் வந்திருப்பேன்னு ஒரு யூகத்துல வந்திருப்பாங்க…..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.