(Reading time: 20 - 40 minutes)

ப்ப ஒரு நாள் சரோஜா ஆன்டிக்கு…அவங்கதான் நீரா அம்மா அவங்களுக்கு ஃபோன் வருது நீரா ஹஸ்பண்ட்ட இருந்து…. அவ சூசைட் செய்துகிட்டான்னு…. அங்க அவ வீட்டுக்கு போனா….நீரா தூக்கு போட்டுகிட்டான்னு அவ ஹஸ்பண்ட் சொல்றாரு….ஆனா அவ கழுத்துல  சின்னதா கூட கயிறோட தடம் கிடையாது……

சூசைட் செய்ற ஆள் அவ கிடையாது….அதுவும் அவ பொண்ண அந்த மிருக கூட்டத்துட்ட விட்டுட்டுப் போற அளவுக்கு அவ கிறுக்கும் கிடையாது…..

ஆனா செய்துட்டான்னே வச்சுகிட்டாலும்…கண்டிப்பா அவ தூக்குப் போட்ட சாகலை….அப்டின்றப்ப அந்த ஆள் ஏன் தூக்குப் போட்டான்னு சொல்லனும்….?

அவளைப் பார்க்கவும் நீரா அம்மாவும் அப்பாவும் போலீஸ்ட்ட போய்ட்டாங்க….. அப்டி அவங்க போலீஸ்ட்ட போனதும் அங்க வச்சே நீரா ஹஸ்பண்ட் அவனோட குழந்தைய தூக்கி இவங்க கைல கொடுத்துட்டான்….இனி உங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாதுன்னு சொல்லி….

இவங்கதான் சொத்த எல்லாம் நீரா பேர்ல மாத்திட்டாங்களே……கேஸ் நடத்தவே காசு இல்ல….அவனோ நீராட்ட இருந்த சொத்துல ஒரு சின்ன கட்டிடத்தை தவிர எல்லாத்தையும் ஏற்கனவே வித்து அதை வச்சு அவன் பேர்ல அங்கங்க சொத்து வாங்கி வச்சிறுந்தான்…..கைல நல்ல காசு……..ஆக காசு குடுத்து கேஸை அடிச்சுட்டான்….

சொத்து எல்லாம் அவன் பேர்ல இருந்ததால….அதுவும் அவனே வாங்கின மாதிரி இருந்ததால…சுயசம்பாத்தியம்னு ஆகிடுதுலயா அது….. அதனால அது எதுலயும் நீரா குழந்தைக்கு சட்டப்படி உரிமை கோர முடியாதாம்…...மிச்சம் நீரா பேர்ல இருந்த அந்த சின்ன ப்ராப்பட்டில மட்டும் மனைவி சொத்துல பாதி உரிமை கணவனுக்கு மீதி உரிமை குழந்தைக்குன்னு தீர்ப்பாச்சு….

நீராவோட அப்பா இந்த வயசில ஒரு மரக்கடையில அக்கவ்ண்ட்ஸ் பார்த்து கொடுத்துட்டு அத வச்சு அந்த குழந்தைய வளத்துட்டு இருக்காங்க…… எப்டி இருந்தவங்க இப்ப எப்டி ஆகிட்டாங்க தெரியுமா? அதுல இத்தனை வயசுல இந்த குழந்தைய எப்டி வளத்து சேக்கப் போறோம்னு அவங்களுக்கு இருக்கிற பயம் வேற…..

நீராவோட ஹஸ்பண்டோ கொஞ்ச மாசத்துல இன்னொரு கல்யாணம் செய்து அந்த மேரேஜ்ல இப்ப ரெண்டு குழந்தைங்க அவனுக்கு…..

 ஒரே பொண்ணுன்றதுக்காக ப்ளான் பண்ணி…கரையா கரச்சு கல்யாணம் செய்து அத்தனை சொத்தையும் பிடுங்கிட்டு….அவளை கொல்லவும் செய்துட்டு…..எந்த கில்டி கான்ஷியஃஸும் இல்லாம அவன்பாட்டுக்கு சந்தோஷமா அலையுறான்….

ஆனா நீரா நிலமை?

இதுக்குப் பிறகு எனக்கு ஒரே பொண்ணா இருக்றதே ரொம்ப இன்செக்யூர்டா ஆகிட்டு….யாரை நம்பி நான் மேரேஜ் செய்ய?

ஏற்கனவே நம்ம நாட்ல நடக்கிற 90% கல்யாணம் பொண்ணு வீட்ல இருந்து வர்ற காசுக்காகதான் நடக்கு…….. நிறைய வரதட்சணை கொண்டு வர்ற பொண்ண்ணுதான் நல்ல இடம்…..இதுல ஒத்தப் பொண்ணுங்கிறவங்க பணம் காய்ச்சி மரமாதான் மாப்ளவீட்டுக் கண்ணுக்கு தெரியுறாங்க…..

அதோட பிள்ளைகளே பெற்றோரை கவனிச்சுக்கோங்கன்னுதான் பைபிள்ள இருக்கு….மகன்களே உன் பெற்றோரை கவனிச்சுகோங்கன்னு இல்லை….ஆனா நம்ம சமுதய அமைப்புல மகனுக்கு மட்டும் தான் பேரண்ட்ஸ பார்த்துக்குற உரிமை கடமை எல்லாம் இருக்கு…..

ஒரு மகள் தன் வீட்ல  தன்னோட வயசான பேரண்ட்ஸை கூட வச்சுக்கிறதோ……தன் செலவுல அவங்கள பராமரிக்கிறதோ… நோய்னா அவங்களுக்கு ட்ரீட்மென்ட் பண்றதோ இங்க அவ்ளவு ஈசி கிடையாது…..அவங்களோட காசு வேணும்….ஆனா அவங்க வேண்டாம்…..

என்னைப் பொறுத்தவரை எனக்கு என் அம்மா அப்பா முக்கியம்…..என்னை உயிருக்கு உயிரா வளத்துறுக்காங்க….ஒரு பையன பெத்துக்கிறதுக்கு ஒரு அம்மாவுக்கு எவ்ளவு வலிச்சிறுக்குமோ அதே அளவு வலியத்தான் என் அம்மாவுக்கு கொடுத்துட்டு நான் பிறந்தேன்….ஒரு பையனுக்கு செய்ற எதையும் விட குறைவா கஷ்டபட்டு என் பேரண்ட்ஸ் என்ன வளக்கலை….. அதிலும் ஒரே குழந்தைன்றதால அவ்ளவு தூரம் பார்த்து பார்த்துதான் வளத்துறுக்காங்க…..படிக்க வச்சுறுக்காங்க…..

அவங்கள கடைசி காலத்துல நான் பார்த்துக்காம யார் பார்த்துப்பா? அதோட  நான் ஏன் பார்த்துக்க கூடாது? அதான் எனக்கு மேரேஜ்ல ஆரம்பத்துல இருந்து இஷ்டம் இல்லை…..நீரா மாட்ன மாதிரி மாட்டிப்பனோன்னு ரொம்பவே பயமும் கூட… ஒரே ஒரு நீராவப் பார்த்து நான் இவ்ளவு பயந்தேன்னு இல்லை…..கொலைன்ற அளவுக்கு போகலைனாலும் கூட நான் சுத்தி சுத்தி பார்க்கிற அத்தனை வீட்லயும் ஏதோ ஒரு நீரா தன் அம்மா அப்பாக்கு நியாயமா செய்ய வேண்டியதை கூட செய்ய அனுமதி இல்லாம…..ஹஸ்பண்ட் மற்றும் அவனோட குடும்பத்தோட நியாயமில்லாத கோரிக்கைகளை கூட செய்து கொடுத்துட்டு வாழ்க்கையை சகிச்சுகிட்டுதான் போறாங்க…..அதான் எனக்கு மேரேஜ் செய்ய சுத்தமாவே பிடிக்கலை “

 நிலவினி பேசிக் கொண்டு போக அவளையே பார்த்திருந்தான் யவ்வன்…..அவள் அழுதிருந்தால் ஆறுதல் சொல்லி இருப்பானாய் இருக்கும்…..ஆனால் அவளோ கனன்று கொண்டிருந்தாள்….. அத்தனை பயந்த சுபாவமான பொண்ணுக்குள் இத்தனை நெருப்பா என்றும் இருக்கிறது இவனுக்கு….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.