(Reading time: 21 - 41 minutes)

ல்லை சார் சாதரணமா விடல.  ஸ்ரீதர் அப்பா அந்த எவிடென்ஸ் எல்லாம் விமலா வீட்டுல கொடுத்துட்டார்ன்னு தெரிஞ்ச உடனே, நான் கொஞ்சம் விட்டுப் பிடிக்கலாம்னு நினைச்சேன்.  எப்படியும் அவங்க உஷார் ஆகி இருப்பாங்க அப்படின்னு தெரியும்.  இன்னும் நிறைய தகவல்கள் திரட்டிட்டு போலீஸ்க்கு போகலாம்ன்னு இருந்தேன்.  எனக்கு காயம் எல்லாம் ஆறின உடனே, நான் மறுபடி இந்த விஷயத்துல இறங்கினேன்.  ஆனா நான் நினைச்சா மாதிரியே, விமலாக்கு சப்ளை பண்ற ஆள் அந்த ஏரியாலையே இல்லை.  விமலா அப்பா கடைலயும் எந்த சரக்கும் இல்லை சார்.  நான் கடை முழுக்க தேடிப்பார்த்துட்டேன்”

“கடைல தேடினீங்களா....  அவர் இல்லாத போது போனீங்களா?  மத்த கடைகள்ள ஆளுங்க இருந்து இருப்பாங்களே.  அதுவும் அது காம்ப்ளெக்ஸ் வேற.  மெயின் கதவு ராத்திரி பதினோரு மணியோட க்ளோஸ் பண்ணிடுவாங்களே”

“நான் போனது ராத்திரி நேரங்கழிச்சு சார்.  விமலா அப்பா செவ்வாய், வெள்ளி ரெண்டு நாளும் ஏழு மணியோட கடை மூடிடுவார்.  அவர் பக்கத்து கடை ஒரு கார்மென்ட்.  அங்க பொண்ணுங்க வேலை செய்யறதால எட்டு மணிக்கு மூடிடுவாங்க.  நான் வெள்ளிக்கிழமை ஒன்பது மணிப்போல போய்த் தேடினேன்.  சின்ன இடம், நிறைய சாமானும் இல்லை.  சீக்கிரமே முடிஞ்சு போச்சு சார்.  ஆனா என்ன....  டைம் வேஸ்ட் ஆனதுதான் மிச்சம்.  ஒண்ணும் கிடைக்கலை”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

மனோஹரியின் "காதல் பின்னது உலகு" - கல்யாணமாம் கல்யாணம்…

படிக்க தவறாதீர்கள்...

“ராமு..... விமலாக்கூட பேசிட்டு இருத்தான்னு சொன்னீங்களே, அவனோட போட்டோ உங்கக்கிட்ட இருக்கா?”, மதி கேட்க ராமு அவனிடம் இருந்த போட்டோவை மதியிடம் காட்டினான்.

“ஓ இவனா, கொருக்குப்பேட்டை பாபு.  இவன்  ஏற்கனவே ரெண்டு, மூணு வாட்டி அடிதடில அர்ரெஸ்ட் ஆகி இருக்கான்.  இவன ட்ரேஸ் பண்றது ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை.  இந்த பாபு யார்கிட்டயோ பார்சல் வாங்கினான்னு சொன்னீங்களே. அவன் போட்டோ உங்ககிட்ட இருக்கா அகில்”

“அந்த போட்டோவும் அதே SD கார்ட்லதான் சார் இருக்கு.  ரூம்க்கு போன உடனே அதைத் தேடறதுதான் முதல் வேலை சார்”

“ஹ்ம்ம் ஓகே.  இந்த விஷயம் இருக்கட்டும்.  கார்டு கிடைச்சா ஓகே.  கிடைக்கலை அப்படின்னாலும் நாம இதைக் கண்டுபிடிக்கணும்.  சாவித்ரி அம்மா   அப்பறம் ஸ்ரீதர் இவங்கல்லாம் சொன்னதை வச்சுப் பார்த்தா அந்த விமலாவும், அவங்க அப்பாவும் பயங்கர உஷார் பேர்வழிகளா இருக்காங்க.  எந்த ஆதாரம் இருந்தாலும், அது மத்தவங்க  கைல மாட்டறா மாதிரி வச்சு இருக்க மாட்டாங்க.  அதே மாதிரி அவங்க வீட்டுல இல்லாத நேரத்துல மத்தவங்க தேடினாலும் கிடைக்காத  இடமாத்தான் வச்சுட்டு போவாங்க.  அவங்க ரெண்டு பேர் ஃபோனும் நமக்கு கிடைச்சா பெரிய ஜாக்பாட் அடிச்சா மாதிரி.  கண்டிப்பா நிறையத் தகவல் அதுல இருக்கும்”

“அந்த வீட்டுக்குள்ள போகாம அதை எடுக்கறது கஷ்டம் மதி.  சாவித்ரி அம்மாக்கிட்ட ஓரளவுக்கு மேல நாம ஹெல்ப் கேக்க முடியாது.  பயந்தே காட்டி கொடுத்துடுவாங்க”

“நீங்க சொல்றது கரெக்ட் மாமா.  அவங்க ஃபோனை மறந்து வச்சுட்டுப்போற ஆள் மாதிரி எல்லாம் தெரியல.  நாம எடுக்கணும்ன்னா அதுக்கு ராத்திரிதான் சரியான நேரம்.  அவங்களுக்கு தூக்க மாத்திரை எப்படியானும் கொடுத்து நல்லாத் தூங்க வச்சுட்டா அப்பறம் முழு ராத்திரி நமக்கு இருக்கும்.  வீடு முழுக்க அலசிடலாம்.  ஸ்ரீதர் நான் உங்கக்கிட்ட கொடுக்கற தூக்க மாத்திரையை நீங்க ரூபாக்கிட்ட நாளைக்கு காலேஜ்ல பார்த்து கொடுத்துடுங்க.  அவங்கள எப்படியாவது விமலாவும், அவங்க அப்பாவும் சாப்பிடற ஏதாவது சாப்பாட்டுல கலந்துட சொல்லுங்க.  அவங்க சாப்பிட்டு தூங்க ஆரம்பிச்ச உடனே நமக்குத் தகவல் கொடுக்க சொல்லுங்க.  எப்படியும் மாத்திரை வேலை செய்ய ஒரு மணி நேரம் ஆகும். அதுக்குள்ள நாம அங்க ரீச் ஆகிடலாம்.  அதே மாதிரி ரூபாவை  அவசரப்பட வேண்டாம்ன்னு சொல்லுங்க.  அவங்களுக்கு சந்தேகம் துளி அளவுக்கூட வராம இருக்கணும்.  கொஞ்சம் சந்தேகப்பட்டாலும், எவிடென்ஸ் எல்லாம் மறைச்சுடுவாங்க.   ரெண்டு மூணு நாள் டைம் எடுத்துட்டாலும் பரவாயில்லை”

“கண்டிப்பா சார், நான் ரூபாக்கிட்ட டீடைல்லா எல்லாம் சொல்லிடறேன்.  அவங்களை கவனமா இருக்க சொல்றேன்.  தேவி மேடம் இப்போவானும் என் மேல எந்தத் தப்பும் இல்லைன்னு ஒத்துக்கறீங்களா.  ஆண்கள்லயும் நல்லவங்க இருக்காங்க அப்படின்னு நம்பறீங்களா”, ஸ்ரீதர் தேவியைப் பார்த்து கேட்க தேவி ஆமாம் என்று தலை அசைத்தாள்.

“அப்போ நீங்க ஒரு வாக்கு கொடுத்தீங்க  ஞாபகம் இருக்கா.  இந்த வழக்குல என்மேல தப்பு இல்லைன்னு தெரிஞ்சா வரதன் சாரை அப்பான்னு கூப்பிடறதா  சொல்லி இருந்தீங்க.  எப்போ ஆரம்பிக்கப் போறீங்க”

“ஸ்ரீதர், பெண்கள்லயும் கெட்டவங்க இருக்காங்கன்னு ஒத்துக்கறேன்.  உடனே முடியாது.  ஆனா கொஞ்ச கொஞ்சமா மாத்திக்கறேன்.  இது ஏதோ சபதத்துக்காக அப்படின்னு சொல்லலை.  உணர்ந்துதான் சொல்லறேன்”,என்று கூற ஸ்ரீதர், ராமு, அகில் மூவரும் விடை பெற்று கிளம்பினார்கள்.

“ஏன் மாமா.... மங்கம்மா சபதம் மாதிரி இந்தம்மா ஆண்களுக்கு எதிரா சபதம்  போட்டு இருந்ததை என்கிட்ட சொல்லவே இல்லை.  சொல்லி இருந்தா  அப்படியே என் சார்பா, என்னோட எட்டு வருஷக் காதலை ஏத்துக்கணும் அப்படின்னும் ஒரு சப் கிளாஸ் வச்சு இருக்கலாமே”, தேவியை லுக் விட்டபடியே வரதனிடம் பேசினான் மதி.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.