(Reading time: 21 - 41 minutes)

ரெக்ட் சரியா சொன்ன.  அவங்களும் நீயும் ஒண்ணு கிடையாது.  அவங்க முதல் கணவரோட மனசு ஒத்து வாழ்க்கைய வாழ்ந்திருப்பாங்க.  உன் நிலைமை வேற.  உன் விஷயத்துல நடந்தது, கற்பழிப்பு.  உன்னோட சம்மதம் ஒரு சதவிகிதம் கூட இல்லாம, மனசாலையும், உடலாலையும் பலகீனமா இருந்த உன்னை தன்னோட உடல் பலத்தால நாசம் பண்ணினதுக்கு பேரே வேற.  தயவு செய்து நீ செய்யாத தப்பை நினைச்சு என்னை விலக்காத.  எனக்கு தேவிங்கற மனுஷிதான் முக்கியம் அவளோட பாஸ்ட் பத்தி எல்லாம் எனக்குத் தேவையே இல்லை”

“உங்களுக்கு ஏன் புரிய மாட்டேங்குது.  நான் உடல் அளவுல எத்தனை காயம் பட்டிருக்கேன் தெரியுமா.  இன்னும் கூட சில இடங்கள்ள, அந்த நாய் பதிச்ச தடம் இருக்கு.  உடலுறவு அப்படிங்கற வார்த்தைய கேட்டாலே எனக்கு வாந்திதான் வருது. கல்யாணம் பண்ணியும் இதே மாதிரி உடலளவுல இல்லாம மனசால மட்டும் இணைஞ்சு இருக்கலாம் அப்படிங்கறது எல்லாம் கேட்க நல்லா இருக்கும்.  ஆனா நடைமுறைக்கு சாத்தியமே இல்லை”, தேவி கொஞ்சம் கூட புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறானே என்று கண்ணீருடனே கோவத்துடன் பொரிந்து தள்ளினாள்.

“ச்சு மொதல்ல இப்படி ஹை பிட்ச்சில் அழுதுட்டே பேசறதை நிறுத்து.  நீ என்னைப் பத்தி என்ன நினைக்கற.  கல்யாணம் முடிஞ்ச உடனேயே உன் மேல பாஞ்சுருவேன்னா, அவ்ளோ கேவலாமா இத்தனை நாளா என்னைப் பத்தி நினைச்ச”, மதி மிக வேதனையுடன் கேட்க, தேவி இதற்கு என்ன பதில் கூற என்பதுபோல் பார்த்தாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

வத்சலாவின் "காற்றினிலே வரும் கீதம்" - விறுவிறுப்பான குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

“இங்க பாரு தேவி, கல்யாண வாழ்க்கைல செக்ஸ் அப்படிங்கறது ஒரு பார்ட், அதுவே வாழ்க்கை கிடையாது.  அதுக்குன்னு அது இல்லாமையே இருக்கலாம் அப்படின்னு சொல்லலை.  என்னாலயும் அப்படி சாமியார் வாழ்க்கை எல்லாம் வாழ முடியாது.  அதுவும் மனசுக்கு பிடிச்ச பெண்ணை கல்யாணம் பண்ணிட்டு, முடியவே முடியாது. மொதல்ல நட்போட நம்ம வாழ்க்கைய ஆரம்பிக்கலாமே.  மத்ததெல்லாம் தானா நடக்கும்.  என்னால உன் மனசு மாறுற வரைக்கும் காத்திருக்க முடியும் தேவி”, மதி பேச.... தேவி இன்னும் விசும்பிக் கொண்டே இருந்தாள்.

“இன்னும் என்னம்மா.....”

“எனக்கு பயமா இருக்கு ACP சார்.  கல்யாண வாழக்கை ஏதோ ஒண்ணு ரெண்டு வருஷத்துல முடியறது இல்லை.  இன்னும் எத்தனை காலம் நாம வாழப்போறோமோ அது வரைக்கும் இருக்கறது.  இதுல எனக்காக எத்தனை நாள் நீங்க காத்து இருப்பீங்க.  ஒரு வேளை  என்னால மாறவே முடியலைன்னா.  ஏதோ ஒரு சந்தர்ப்பத்துல உங்களுக்கு நாம வாழற வாழ்க்கைல  ஒரு அலுப்பு வந்துடுச்சுன்னு வச்சுக்கோங்க.  அப்பறம் வாழ்க்கையே நரகம் ஆகிடும்”

“எதுக்கு நெகடிவ்வாவே யோசிக்கறே.  நீ பட்ட கஷ்டங்கள்ள இருந்து வெளிய வருவேன்னு நினைச்சியா, இல்லை ரூம் விட்டு கூட வெளிய வராம இருந்த நீ வக்கீலுக்கு படிச்சு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவா வழக்கு எடுத்து நடத்துவேன்னு நினைச்சியா,  இல்லையே.  கடவுள் எப்பவும் கஷ்டம் மட்டுமே கொடுக்க மாட்டான்.  ஒரு பீரியட் கஷ்டப்பட்டேன்னா அடுத்த பீரியட் சந்தோஷமா இருப்ப.  ஏற்கனவே ஏகப்பட்ட கஷ்டங்கள நீ அனுபவிச்சுட்ட.  இனி இருக்கற வாழ்க்கை சந்தோஷப்பட மட்டுமே.  அதுனாலதான் கடவுள், என்னை மாதிரி ஒரு நல்லவனை, வல்லவனை நாலும் தெரிஞ்சவனை உனக்காக அனுப்பி இருக்கார்”, அவனின் கடைசி வரியில் தேவி முறுவலித்தாள்.

“என்ன சிரிக்கற.  நிஜமாவே இந்தக் கடவுள்தான் ஏதோ மேஜிக் பண்ணி உன்னை லவ் பண்ண வச்சுட்டார்.  இல்லைனா என் ரேஞ்சுக்கு நான் சமந்தா, ஸ்ரீதிவ்யா இப்படித்தான் லவ் பண்ணி இருப்பேன் தெரியுமா”, மதி சிரித்தபடியே கூற தேவி முறைத்தாள்.

“சரி சரி முறைக்காத.  இந்த மதியோட சதி... தேவிதான் போதுமா.  ஜோக்ஸ் அபார்ட்.  இப்போ என்னோட இத்தன வருஷ லவ்க்கு என்ன பதில் சொல்லப் போற”

“எனக்கு தெரியல ACP சார்.  இன்னும் கொஞ்சம் டைம் கொடுங்களேன் ப்ளீஸ்.  இவ்ளோ நாள் காதல், கல்யாணம் அப்படிங்கறத பத்தியெல்லாம் யோசிக்கவே இல்லை.  முதல்ல நான் அதுக்கெல்லாம் மனசளவுல தயார் ஆகணும்.  அதுக்கப்பறமா உங்களுக்கு பதில் சொல்றேனே”

“சரி தேவி, டைம் எடுத்துக்கோ.  ஆனா அதுக்குன்னு நீப்பாட்டுக்கு என்னை வருஷக்கணக்கா காய விட்டுடாத.  இன்னும் கரெக்டா உனக்கு ஆறு மாசம்தான் டைம்.  அதுக்குள்ள உன் முடிவை சொல்லிடு”

“சப்போஸ் அப்போவும் என் மனசுக்கு ஒத்து வரலைன்னா  என்னை விட்டுடுவீங்களா”, தேவி எதிர்பார்ப்புடன் கேட்க, மதி முறைத்தபடியே

“நீ திருந்த மாட்ட.  அப்படியும் நீ ஒத்துக்கலைன்னா உன்னைத் தூக்கிட்டு போய்  தாலி கட்டிடுவேன்.  அப்பறம் இந்த ப்ளாக் மேஜிக் மாதிரி மஞ்சள் கயிறு மேஜிக் வேலை செஞ்சு நம்மை சேர்த்து வச்சுடும்”, என்று கூற, தேவி அடப்பாவி என்பதுபோல் பார்த்தாள்.

“என்னா லுக்கு.  பின்ன நீ சொன்ன உடனே சரிம்மா, நீ இப்படியே இருன்னு விட்டுட்டு இருப்பேன்னு நினைச்சியா.  சான்சே இல்லை.  காலம் முழுக்க இந்த மதிதான் உன் பதி.  சரி வா நமக்காக எல்லாரும் வெளில என்னாச்சோன்னு கவலைல காத்திருப்பாங்க, எல்லாம் சுபமா முடிஞ்சு போச்சு, நீ ஓகே சொல்லிட்டேன்னு சொல்லி, அத்தை கிட்ட ஸ்வீட் செய்ய சொல்லலாம், எனக்கு கேசரி பிடிக்கும், உனக்கும் ஓகேவா”

“ஹான் நான் எப்போ ஓகே சொன்னேன்.  இப்படி பொய் சொல்றீங்க”

“அதுதான் யோசிக்கறேன்னு சொன்னியே.  உனக்குத்தான் யோசிக்கத் தேவையான சாமானை கடவுள் உள்ள வைக்க மறந்து போயிட்டாரே.  உனக்கும் சேர்த்து உன்னோட பாதியான நான்தானே அந்த வேலைய செஞ்சாகணும்.  நான் ஓகே சொல்லிட்டேன், ஸோ நீயும் சொன்னா மாதிரிதான்.  அதனால இப்போ வாயை கேசரி சாப்பிட மட்டும் திற ஓகே கண்மணி.  வா வா வா சீக்கிரம் போய் எல்லார்க்கிட்டையும் சொல்லலாம்.  உன்னோட மல்லுக்கட்டி எனக்கு பசி உயிர் போகுது”, என்று கூறியபடியே மதி கதவைத் திறந்து வெளியில் போக, அவனின் அட்டகாசத்தில் சிரித்தபடியே தேவியும் உடன் சென்றாள். 

தொடரும்

Episode # 22

Episode # 24

{kunena_discuss:857} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.