(Reading time: 16 - 32 minutes)

ஹேய்… லூசு… என்னடி பைத்தியமாட்டம் உளறுற?... என்னடி பேச்சு இது?.. இன்னொரு தடவை இப்படி பேசு… வாயிலேயே அடிப்பேன் உன்னை…” என்றபடி பொரிந்து தள்ளினாள் தைஜூ சதியை…

“ஹேய்… நான் சொல்லத்தானடீ செஞ்சேன்… அதுக்கு ஏன் இவ்வளவு இமோஷனல் ஆகுற?... நெருப்புன்னு சொன்னா சுட்டுடுமா என்ன?...” என இங்கே சதி இலகுவாக கேட்க,

அங்கே, ஜெய்யின் விழிகளோ ரத்தமென சிவந்திருந்தது…

“வார்த்தைகள் உனக்கு அவ்வளவு ஈசியா இருக்குதா?... உயிரோட நெருப்பு வைப்பேன்னு சொல்லிட்டு நெருப்புன்னு சொன்னா சுட்டுடும்மான்னா கேட்குற?...” என்றபடி போனில் கர்ஜித்துக்கொண்டிருந்தான் ஜெய்…

“நீ என்னை அரெஸ்ட் செய்வேன்னு சொல்லுற வார்த்தைகளும் உனக்கு ஈசியா தான இருந்துச்சு… அப்போ எனக்கும் நெருப்பு வச்சு கொளுத்துறது ஈசி தாண்டா… எனக்கு எதிரா எவன் சாட்சி சொன்னாலும் அவனை உயிரோட கொளுத்துவேன்… உன்னால முடிஞ்சா என்னை அரெஸ்ட் பண்ணிப் பாருடா…” என எதிர்முனையில் இருந்தவன் சவால் விட,

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தேவியின் "அன்பே உந்தன் சஞ்சாரமே" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

“பார்க்கலாம்டா அதையும்… நான் இருக்கும்போது எப்படி நீ கொளுத்துறன்னு…. எண்ணி இரண்டே நாள்… உன்னை அரெஸ்ட் பண்ணி உள்ளே வைக்குறேண்டா… அப்ப தெரியும்டா உனக்கு என்னைப்பத்தி…” என்றான் ஜெய் ஆத்திரம் மிக…

“என்னை உள்ளே மட்டும் வச்சிருவ நீ?... என் மேல கை வச்சிட்டு நீ வெளியே உயிரோட இருந்துடுவ??... உன்னையும் சேர்த்தே கொளுத்துவேண்டா உயிரோட… அப்புறம் சாம்பலா நீ பறந்து வந்து என் காலில் தான் விழணும்… நியாபகம் வச்சிக்கோ…” என அவனும் வார்த்தைகளை அள்ளி தெளிக்க,

“மரணத்தை வென்றவண்டா நான்… எங்கிட்டேயே உன் பூச்சாண்டி வேலையை காட்டுறீயா?..” என ஜெய் கண்களில் கோபத்துடன் கேட்கவும்,

“உனக்குன்னு குடும்பம், குழந்தை, சொந்தம், பந்தம், எதுவும் இல்லாத திமிருல பேசுறீயாடா?.. உன்னை நான் கொளுத்தலைன்னா பாருடா…” என்று அவனும் தனது அகங்காரம் குறையாது பேச,

“என்னை நீ கொல்லப்போறீயா?.. ஆமாடா எனக்கு திமிரு தான்… ஆனா அதே திமிரோட உன்னை கொன்னு புதைச்சிட்டு தான்டா அடுத்த வேலை எனக்கு… ராஸ்கல்… வைடா போனை…” என போனை கட் செய்து சோபாவில் தூக்கி போட்டவன், நிமிர்ந்த போது, அங்கே இஷான் நின்றிருந்தான்…

“எதுக்குடா இவ்வளவு கோபம்?... யாருடா போனில்?... என்ன சொன்னாங்க?...” என்று கேட்க,

“பச்… எதுவுமில்லை… நீ எதுக்கு இங்க வந்த இப்போ?... முதலில் கிளம்பு…” என விடாப்பிடியாக இஷானைப் பிடித்து தள்ளிய ஜெய்யை முறைத்தவன்,

“நீ இன்னும் திருந்தவே இல்லையாடா?... நடந்ததை மறக்கப் பாருடா… இன்னும் அதையே நினைச்சிட்டிருந்தா எப்படி?...” என கேட்க,

“எதைடா மறக்க சொல்லுற?... மறக்க கூடிய விஷயமா அது?.. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செகண்டும் கண்ணுக்குள்ள வந்து வந்து போகுதுடா… அதை மறக்க சொல்லுறீயா நீ?...” என கோபத்தின் மொத்த உருவமாக ஜெய் கேட்க, ஒரு நிமிடம் அரண்டு தான் போனான் இஷான் அவனின் கோப முகத்தைப் பார்த்து…

“சரி… சரி… வா… போகலாம்…” என நண்பனின் கையைப் பிடித்து இழுக்க, ஜெய் அசையவில்லை….

“டேய்… வாடா… போகலாம்…” என அவன் மீண்டும் அழைக்க,

“நீ முன்னாடி போ… நான் அப்புறம் வரேன்…” என்றபடி அவனை விரட்டினான் ஜெய்…

“சரிடா கிளம்பி தொலைக்கிறேன்… நீ சாப்பிட்டியா இல்லையா?.. அத சொல்லு முதலில்…”

“நான் சாப்பிட்டுப்பேன்… நீ கிளம்பு…” என அவனை அங்கிருந்து அகற்றுவதிலேயே குறியாக இருந்த ஜெய்யை “இவனை என்னதான் செய்வது….” என்ற ரீதியில் பார்த்தான் இஷான்…

“நீ சாப்பிட்டு கிழிச்சிருப்ப… இந்தா சாப்பிடு…” என ஒரு கவரை அவனின் முன் நீட்ட, இப்போது ஜெய் முறைத்தான்…

“டேய்… நீ நினைக்குற மாதிரி இது வீட்டு சாப்பாடு இல்ல… கடை சாப்பாடு தான்… கொட்டிகிட்டு வந்து சேரு சீக்கிரம்… நான் முன்னாடி போறேன்… உங்கூட வரலை…” என்றபடி ஜெய்யின் வீட்டை விட்டு வெளியேற, நண்பன் சென்ற வழியை பார்த்தவன் சில நிமிடத்திற்குப் பிறகு, அந்த கவரை எடுத்தான்…

“இரு… இரு… நீ வர வர சரியில்லை… என்னவோ போல எல்லாம் பேசுற… நான் இன்னைக்கே உன் வீட்டுக்கு வந்து சொல்லிக்கொடுக்குறேன்…” என்ற தைஜூவின் வாய் மூடியவள்,

“ஹேய்… டைம் ஆச்சுடி… கொஞ்சம் படிச்சிட்டு, வீட்டுக்குப் போய் சீக்கிரம் சாப்பிட்டு காலேஜ் போக வேண்டாமா?..” என சதி கேட்க,

“ஓஹோ… படிப்பே மேடமுக்கு இப்போதான் நியாபகம் வருதோ?...” என்றபடி தைஜூ அவளை கேலி பண்ண,

“ஹேய்… சும்மா ஓவரா பண்ணாதடீ… நேத்து நைட் தான இரண்டு பேரும் எல்லாம் படிச்சோம்… இப்போ அகைன் ஒரு சின்ன ரிவைஸ் தான?... அதுக்கு ஏண்டி இப்படி அலுத்துக்குற?..” என்றாள் சதி அவளை முறைத்தபடி…

“ஓ… ரிவைஸ்க்கு எதுக்கு இங்க வரணும்?... அதை வீட்டிலேயே செய்யலாமே?... எதுக்கு கஷ்டப்பட்டு என்னை காலையிலேயே முழிக்க வச்சு, குளிக்க வச்சு, இங்க கூட்டிட்டு வந்து இம்சை பண்ணுற?...”

“ஹ்ம்ம்… சரி… இனி நீ வர வேண்டாம்… நான் மட்டும் வந்து தனியாவே படிச்சுக்குறேன்… த….னி….யா….வே….. பார்த்துக்குறேன்…” என அவள் இழுத்து சொன்னதும்,

“ஆ…. ஹ்ம்ம்… அது… வந்து… நீ அப்படி தனியா வந்து கஷ்டப்பட கூடாதுன்னு தான் நானும் துணைக்கு வரேன்…” என தைஜூவும் மழுப்பி சொல்ல

“அப்படியா மேடம்… இனி அந்த கஷ்டம் உங்களுக்கு வேண்டாம்… நானே பார்த்துக்கறேன்…” என்றபடி அவள் புத்தகத்தை எடுத்துக்கொண்டு நகர,

“ஹேய்… ஹேய்…. நான் சும்மாதாண்டீ சொன்னேன்… எனக்கு எந்த கஷ்டமும் இல்லடீ… நானும் வருவேன் இங்க உங்கூட படிக்க… சே… சே… இல்ல… ரிவைஸ் பண்ண…” என்றபடி சதியிடம் சொல்ல, சதி விழுந்து விழுந்து அழகாய் சிரிக்க ஆரம்பித்தாள்…

தொடரும்

Episode # 01

Episode # 03

{kunena_discuss:1001}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.