(Reading time: 14 - 28 minutes)

தே எண்ணத்தில் தான் ரூபன் சார்பாக பேச வந்திருந்த அவனது உறவினர் முன்னும் தன் திட்டத்தை செயல் படுத்த ஆரம்பித்தான். முதலில் தாமஸ் மற்றும் தீபனுடன் பேசவே விருப்பம் தெரிவிக்காத அவன் தந்தை தாமஸை அடையாளம் கண்டு பிடித்தவுடன் கொஞ்சம் கோபம் குறைந்தவராக பேச ஆரம்பித்தார்.

 தன்னுடைய மகனின் காயங்களை காண்பித்து அவர் உருக்கமாக பேசியது ஒரு காரணம் என்றால் , அவர் தனக்கு உறவினர் முறை என்று தெரிந்தது மற்றொரு காரணமாகி விட தாமஸ் முற்றிலுமாக அவர்கள் சார்பாக சாய்ந்து விட்டார் என்பதை அவர் கூட வந்திருந்த தீபன் உணர்ந்தான். தன்னுடய வாய்க் காயங்களால் பேச முடியாமல் இருந்தவன் தன் தந்தையிடம் தான் எழுத விரும்புவதாகச் சொன்னதும் அவன் தந்தை அவனுக்கு எழுத தாளையும் பேனாவையும் கொடுத்தார்.

 “ரூபனை காலேஜிலிருந்து எடுக்க வேண்டாம் அவனை என்னிடம் மன்னிப்புக் கேட்கச் சொன்னால் போதும்,” என்று அவன் எழுதிக் காண்பித்தான். 

அதைப் படித்துக் காண்பித்த அவன் தந்தை

“பார்த்தீர்களா, என் பையனுக்கு எவ்வளவு இரக்க குணம்”

என்று மெய் சிலிர்க்க அவரும் தாமஸும் வெயிற்காலத்தில் ஃபிரிட்ஜிற்கு வெளியே வைத்த பனிக்கட்டிப் போல உருகிப் போனார்கள். 

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மனோஹரியின் "காதல் பின்னது உலகு" - கல்யாணமாம் கல்யாணம்…

படிக்க தவறாதீர்கள்...

 தீபனுக்கோ இதில் ஏதோ உள்ளர்த்தம் இருப்பதாக தோன்றியது, ஆனாலும் அவன் அங்கு ஒன்றும் சொல்வதற்கும் செய்வதற்கும் இல்லையே? என்னச் செய்து பிரச்சினையைத் தீர்க்கலாம் என்ற ஒரே குறிக்கோளில் அவன் தாமஸை பின் பற்ற முடிவுச் செய்தான்.

 பல மணித் துளிகளுக்குப் பின்னர் ரூபனையும் இந்திராவையும் சந்திக்க வந்த இந்த இருவரும் தாங்கள் ஹாஸ்பிடலில் சந்தித்ததவர்களையும், அங்கு பேசியவைகளையும் குறிப்பிட்டனர். இருவரும் சமரசமாக போவது தான் நல்லது என்று தாமஸ் அறிவுரைக் கூறினார்.

 இந்திராவிற்கு அங்கு நிகழ்ந்த எதுவுமேச் சரியாகப் படவில்லை. அங்கிருந்த ஒரு சில மணித்துளிகளிலேயே அங்கிருந்த இறுக்கமான சூழ் நிலையில் அவருக்கு மூச்சு விடவே சிரமமாகி இருந்தது.

 மூச்சு விட ஆக்ஸிஜன் மட்டும் தானே தேவை என்று ஒருவேளை நாம் நினைக்கலாம், ஆக்ஸிஜன் மட்டுமா தேவை?!.

 நம் இல்லத்தில், சுற்றுப் புறத்தில் நம் மேல் அன்பும் ஆதரவும் காட்ட யாருமில்லாமல், நம்மை தம்முள் ஒருவராக ஏற்று உறவாடாமல், நாம் என்னச் செய்தாலும் குற்றம் சாட்டும் மனிதர்களும், நம்மை எப்போதும் தாழ்வாக அற்பமாக நினைக்கும் ஆணவ முகங்களும், அவற்றின் அலட்சிய முகச் சுளிப்புக்களும் சூழ வாழும் மணித்துளிகளெல்லாம் நமக்கு மூச்சு விட இயலாத சிரமமான நேரங்கள் தானே? என்னச் சொல்லுகிறீர்கள்?

 தன்னால் ஒரு சில மணித்துளிகளைக் கூட இங்குச் செலவிட முடியவில்லையே? தன்னுடைய மகனை எத்தனை ஆண்டுகளாக தான் இங்கு விட்டு வைத்திருந்தோம் என்ற குற்ற உணர்ச்சியால் அவர் வெந்துக் கொண்டிருந்தார். ஒரு நல்ல நண்பன் கூடவா என் மகனுக்கு இல்லை? இவன் சார்பாக பேசவோ ஆதரவு காட்டவோ ஒருவரும் முன் வரவில்லையே? இப்படி பற்பல எண்ணங்கள் அவர் மனதினில் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தன.

 முதன் முறையாக அன்று அவர் தனக்கு சரியெனப் படும் முடிவொன்றை பிறர் வருந்தினாலும் பரவாயில்லை என்ற நிலையில் எடுக்க வேண்டிய சூழ்நிலையில் இருந்தார். தன்னுடைய மகனின் முகத்தைப் பார்த்தார். ஏற்கெனவே குற்ற உணர்ச்சியால் குன்றிப் போன அவனுடைய தரை நோக்கித் தாழ்ந்த முகம் அவன் மன்னிப்புக் கேட்கவும் தயார் எனச் சொல்லும் விதமாக இருந்தது.

 இருவருக்கிடையில் சண்டை ஏற்பட்டால் இருவரும் அமர்ந்துப் பேசி சமரசமாவது உலக நடப்பு. இங்கோ ஒரு தரப்பாக எல்லாம் நிகழ்வது போல அவருக்கு வெட்ட வெளிச்சமாகத் தோன்றியது. அதனை உள்ளபடியே எடுத்துரைக்கவும் அவருக்கு மனதில்லை. தாமஸ் பல்வேறு வகையில் அவருக்கு உதவியிருக்கிறார். அது மட்டுமல்ல அவர் தன் கணவனின் தங்கைக் கணவர். அவர் சொல்வதைப் போலச் செய்ய இயலாது என்று அவரது மனம் கோணாமல் சொல்ல வேண்டும் என்று சிந்தித்தவராக அவரிடம்…..

 “ எனக்கென்னமோ இவ்வளவு பிரச்சினை ஆனதுக்கு அப்புறம் இங்கே ரூபன் படிக்க வேண்டான்னு தோணுது………. இப்பவே இவனை நாம கூட்டிட்டுப் போயிடலாம். அவங்க கிட்ட ரிக்வெஸ்ட் செஞ்சு எக்ஸாம் மட்டும் எழுத பர்மிஷன் கேட்டுத்தாங்க. அடுத்த வருஷம் நம்ம தீபன் படிச்ச காலேஜிலயே இவனும் படிக்கட்டுமே “ 

“கொஞ்சம் ரிக்வெஸ்ட் செஞ்சு இவன் சர்டிபிகேட் எதிலும் அவனைப் பத்தி தப்பா எழுதிராம பாத்துக்கோங்க…” என்றுச் சொல்லி முடித்தார்.

 என் மகனை யார் முன்னும் மன்னிப்புக் கேட்க விட மாட்டேன் என்னும் தீவிரம் அவர் எண்ணத்தில் இருந்ததை தீபனும் உணர்ந்தான். அவனுக்கு தன் தாயின் முடிவு மிக சரியானதாகத் தோன்றிற்று.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.