(Reading time: 14 - 28 minutes)

கேட்டுக் கொண்டிருந்த ரூபனுக்கு இதுவும் கூட தவறாக தோன்றியது, 

“அப்போ என் மேல நம்பிக்கை இல்லாததனால் தான அம்மா என்னைத் திரும்பக் கூட்டிட்டுப் போறதாகச் சொல்றாங்க. ஒரு தடவை தப்புச் செஞ்சா நான் என்ன எப்பவுமே தப்புச் செய்வேன்னு நினைக்கிறாங்களா?” என மனதிற்குள் குமைந்தான்.

 இம்முறை தாமஸ் தன்னுடைய ஆலோசனைகள் எடுபடவில்லை என உணர்ந்தவராக இந்திராவின் சொற்படியே தேவையானது அனைத்தும் செய்து முடித்தார்.

 ஸ்டடி ஹாலிடேஸில் வீட்டிலிருந்து படித்தவன் பரீட்சைக்கு மட்டுமாக ஹாஸ்டல் சென்று வந்தான்.

 ரூபனால் தனக்கு வெகுவாக அவமானம் ஏற்பட்டு விட்டதாக கருதிய தாமஸ் , இந்திரா குடும்பத்திற்காக முன்போல் அவ்வளவாக அக்கறை எடுத்துக் கொள்ளாமல் ஒதுங்கியே இருந்தார். 

அந்தச் சம்பவத்தை நினைவில் வைத்து பக்கத்து வீட்டுப் பெண்மணி கேட்டது குறித்து அவருக்கு ஆற்றாமையாக இருந்தது. அந்த சம்பவம் நிகழ்ந்து வருடங்கள் பல ஆகியும் அதை மறக்காமல் எப்படி இருக்கிறார்கள் என ஆச்சரியமாகவும் கூட……

 நம்மை யாருமே கவனிக்கவில்லை என்றுப் பல நேரம் நாம் நினைத்துக் கொண்டிருப்போம், ஆனால் நம்மை உலகமே கவனித்துக் கொண்டிருக்கின்றது என்பது ஒரு சில நேரங்களில் தான் தெரிய வரும். இதுவும் கூட அப்படி ஒரு தருணம் தானோ? என்று பலவாறாக சிந்தித்துக் கொண்டிருந்த இந்திரா அப்போது இரவு வெகு நேரம் ஆகி விட்டதை உணர்ந்து இன்னும் வீடு திரும்பியிராத ரூபனுக்காக உணவை மேசையில் எடுத்து வைத்து விட்டு ஓய்வெடுத்துக் கொள்ளச் சென்றார்.

 அவர் சிந்தனையினின்று விடுபட்ட இடத்தினின்றே இக்கதையைத் தொடர்கின்றேன் நான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

புவனேஸ்வரியின் "நினைத்தாலே இனிக்கும்..." - கல்லூரி காதல் கதை...

படிக்க தவறாதீர்கள்...

டம்: சாரா இல்லம்

 தீவிரச் சிந்தனையோடு தன்னுடைய மடியில் படுத்திருக்கும் மகளை வாஞ்சையோடு பார்த்துக் கொண்டிருந்தார் சாரா. பட்டாம் பூச்சியாக பட படக்கும் அவளை ஒரு இடத்தில் பிடித்து வைப்பதே கடினம். இப்படி அவளாக அமைதியாக இருப்பதோ தீவிரமாக சிந்திப்பதோ அவளுக்கு ஒத்து வராத விஷயம், இப்போதும் கூட அவளாக வாய் திறந்து தான் என்ன யோசித்துக் கொண்டிருக்கிறாள் என்றுச் சொன்னால் தான் உண்டு என்று நினைத்துக் கொண்டார்.

 அப்படி என்ன யோசித்துக் கொண்டிருக்கிறாளோ? என்று எண்ணியவருக்கு அவள் இப்படி சீரியஸாக யோசித்துக் கொண்டிருந்த மற்றொரு நாள் நியாபகத்திற்கு வந்தது. அன்று ஜாக்குலின் திருமணத்திற்கு அடுத்த நாள். மறு வீடு என்னும் என்னும் சம்பிரதாயத்திற்காக மணப் பெண்ணின் வீட்டில் மதியம் உணவிற்கு சென்று அப்போது தான் வீடு திரும்பியிருந்தார்கள். தாமஸூம், கிறிஸ்ஸும் தங்கள் தொழில் ரீதியான முக்கியமான சந்திப்பு ஒன்றிற்க்கு சென்றிருந்தவர்கள் இன்னும் வீடு திரும்பியிருக்கவில்லை.

 இது போலவே தன் அன்னையின் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டு வெகு நேரம் யோசித்துக் கொண்டிருந்தவள் மெதுவாக தன் சிந்தனையிலிருந்து கலைந்து பேசத் தொடங்கினாள்.

“அம்மா, இனி ஜாக்குலின் அண்ணி டில்லி போயிடுவாங்க இல்ல”

ஆமாடா…..குட்டி……

 அதே நேரம் வீட்டிற்க்குள் வந்த தாமஸ் தன் மகளின் கால்களை தன் மடியில் எடுத்து வைத்தவராக அதே சோபாவில் அமர்ந்தார். என்னவென்று மனைவியிடம் சைகையால் கேட்டார். அவருக்கும் இது காணக் கிடைக்காத காட்சியல்லவா….

 தனக்கு ஒன்றும் தெரியாது என்றுச் சொல்லும் மனைவியின் சைகைக்கு தலையசைத்து பதில் சொல்லியவறாக..…தன்னிச்சையாக மகளின் கால் விரல்களுக்கு சொடுக்கெடுத்துக் கொண்டிருந்தார்.

அப்பா, அந்த பெரு விரல்ல நீங்க சரியா சொடுக்கெடுக்கலைப் பாருங்க….செல்லமாய் விரலை நீட்டிக் காட்டினாள் அவள்….

“அடக் கழுதை…அப்பாக்கிட்ட இப்படியா சொல்றது”..மகளைச் செல்லமாய் அதட்டினாள் சாரா.

 அதே நேரம் காரை பார்க் செய்து விட்டு உள்ளே வந்துக் கொண்டிருந்த கிறிஸ் வலிக்காத வண்ணம் அவள் தலையில் ஒரு கொட்டு வைத்துச் சென்றான்.

“அப்பா இந்த அண்ணனை பாருங்க……

 "ஏண்டா சின்ன பிள்ளையை அடிச்சிக்கிட்டு……” அவனை அதட்டியவராய் மகள் சொன்ன விரலில் கர்ம சிரத்தையாக சொடுக்கெடுக்க ஆரம்பித்தார்.

 அண்ணனுக்கு ஏச்சு வாங்கி கொடுத்த பெருமிதத்தில் அவனைப் பார்த்து பழிப்புக் காட்டியவளுக்கு பதிலாக பழிப்புக் காட்டியபடி கிறிஸ் மாடியில் தன் அறை நோக்கிச் சென்றான். 

“நான் வரும் போது என்னவோ பேசிக்கிட்டு இருந்த மாதிரி இருந்தது………………….”

ஆமா, அப்பா நான் தான்……. எனக்கு ஒரு டவுட் வந்திச்சா அதான் அம்மாகிட்ட கேட்டுட்டு இருந்தேன்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.