(Reading time: 14 - 28 minutes)

"ன்னடா டவுட்?…."

"இல்ல. ஜாக்குலின் அண்ணி இப்போ டில்லி போயிடுவாங்கல்லபா…"

"ஹ்ம்ம்"

 "அப்புறம் அத்தையை யாரு பாத்துப்பாங்க…..அவங்க பிளட் பிரஷர் மாத்திரை எல்லாம் யாரு நேரத்துக்கு கொடுப்பாங்க………ஜீவன் எப்ப பாரு விளாடிட்டே இருப்பான்பா…..அவண்ட சொன்னாலும் கேட்க மாட்டான் அதான்………."

மகள் சொன்னதைக் கேட்டவருக்கு தன் மகளை நினைத்து பெருமிதமாக இருந்தது…….பார்த்தியா? எனும் விதமான உணர்வோடு மனைவியைப் பார்த்து புன்னகைத்தார்.

"அடடே…ஜீவன் பேச்சை கேட்க மாட்டேங்கிறானா.....அப்போ என்னச் செய்யலாம்……இந்த பாய்ஸ் எல்லாமே யூஸ்லெஸ் ஃபெலோஸ் என்னடா." எனச் சாரா கேட்க.

"ஆமாம்மா……." என்று ஆமோதித்தாள் அவளும்

"என்ன செய்யலாம் ….நம்ம ஃபேமிலில வேற கர்ள்ஸ் கூட இல்லையே.".என யோசிப்பவராக பாவனைச் செய்ய…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

வத்சலாவின் "காற்றினிலே வரும் கீதம்" - விறுவிறுப்பான குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

"அம்மா நான் இருக்கேன்ல"….எதையோ கண்டு பிடித்த பாவனை அவளிடம்..

'இனிமே நான் அத்தையை நேரத்துக்கு டேப்லெட்ஸ் சாப்பிட வைக்கிறேன் சரியா?"………. என்றுத் துள்ளி எழுந்தவள்….. காற்றின் வேகத்தில் பறந்து தன் அறை நோக்கி விரைந்தாள்.

 தங்கள் மகளுக்கு எவ்வளவுக்கு விளையாட்டுத்தனம் இருக்கிறதோ அவ்வளவுக்கு பொறுப்பும் இருக்கிறது என்று சாராவும், தாமஸும் அன்றுப் பேசிக் கொண்டனர்.அத்தோடு மட்டுமா அக்கம் பக்கம் நிகழும் ஒவ்வொரு விஷயத்தையும் கவனித்து அதற்கு நாம் என்னச் செய்யல்லாம் என்றுக் கேள்விகள் கேட்பவள் தான் அவள்.

அதுப் போல இன்று அவள் எதைக் குறித்து யோசிக்கிறாளோ? என்று எண்ணியவறாக அவளேச் சொல்வாள் என்று தன் மகளின் வார்த்தைக்காக காத்திருந்தார்.

"அம்மா......."

"என்னடா.....".

"ரூபன் அத்தான் மறுபடியும் டிஷ்யும், டிஷ்யும் ஃபைட் போட்டுட்டாங்களோ?…."

"இல்லையே..ஏண்டா?….."

இல்லம்மா கொஞ்ச நாளா அவங்க ரொம்ப (sad) சேடா இருக்காங்க……….யாருக்கிட்டயும் பேசுறதில்லை. அவங்க ரூமை விட்டே வெளில வரலம்மா………

ம்ம்ம்…….

ஒரு வேளை அவங்களுக்கு எதுவும் அடிப்பட்டிருக்குமோ……………

 அவள் சொல்வது போல அவனுக்கு அடிப்பட்டுத் தான் இருந்தது, உடலில் அல்ல மனதில்.சாரா தன் மகள் சொன்னதை அசட்டைச் செய்யாமல் இந்திராவிடம் சொல்ல, அவரும் தங்கள் குடும்ப மருத்துவரை நாடினார்.அவரது வழிநடத்துதல் படியே ஸைக்காலஜிஸ்டிடம் ஆலோசனைப் பெறச் சென்றனர்.

 அவனது மன அழுத்தத்தின் தற்போதைய நிலையை எடுத்துக் கூறிய மருத்துவர் அவர்களை எச்சரித்தார். ஏற்கெனவே, பல்வேறு மனப் பிரச்சினைகளில் இருந்தவன் பரீட்சை எழுதச் சென்றிருந்த போது எதிர் கொண்ட அளவு கடந்த அவமானப் படுத்தலில் துவண்டு போயிருந்தான்.

 அவனுடைய தற்போதைய நிலை நீடித்தால் அவனுடைய வாழ்க்கை நிலை முழுவதுமாக பாதிக்கப் படும் என்றும், கூடிய அளவு அவன் தன்னுடைய தனிமையிலிருந்து வெளி வந்து பிறரோடு பழகுவது மட்டுமே அதற்கான தீர்வு என்றுச் சொன்னதைக் கேட்டு இரண்டு பெண்களும் பேரும் சேர்ந்து எடுத்த முடிவு தான் அவன் ஜீவன் மற்றும் அனிக்காவிற்கு டியூஷன் எடுக்க வேண்டுமென்பது…..

 இந்த இரண்டு வாலில்லா வாரனமும் அவன் மன அழுத்தத்தை குறைப்பார்களா? இல்லை கூட்டுவார்களா? என்பது அடுத்த அத்தியாயத்தில்……………

தொடரும்

Episode # 03

Episode # 05

{kunena_discuss:970}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.