(Reading time: 18 - 35 minutes)

விதி அவனை மறுநாளே அவள் கண்முன்னே காட்டியது யாரோ ஒரு பொண்ணை கல்லூரியில் சேர்க்க வந்திருந்தான் ... இருவர் கண்களும் சந்தித்து ஆயிரம் கதைகள் சொல்லியது ...

அவர்கள் ஒருவரை ஒருவர் பேர் கேட்பதில் துடங்கி .... காபி குடிக்க அழைத்து ... முன் அறிவிப்புடனும் ...இல்லாமலும் கடைவீதிகளிலும் பூங்காவிலும் சந்தித்து ... இலை மறை காயாக நட்பையும் அதனூடே காதலையும் வளர்த்தார்கள் 

இவள் காதல் வானில் பறக்கும்போதுதான் சாட்டை அடியாய் விழுந்தது முதல் தடை ..

இவர்களை சிலமுறை ஒன்றாக பார்த்த அந்த பெண் அதுதான் அவன்  சேர்த்து விட்ட  பெண் ...அக்கா நீங்க சார் லவ் பண்ணறீங்களா ????? என கேட்க  இவள் நாணத்துடன் இல்லை என்றாள் 

கண்டிப்பா அவர் உங்கமேல் தனி பிரியம் வைத்திருக்கிறார் .. அவர் கண்களில் காதல் நன்றாக தெரிகிறது ..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

VJ Gன் "அனு என் அனுராதா..." - காதல் கலந்த குடும்ப தொடர்

படிக்க தவறாதீர்கள்...

எங்க எஸ்டேட் உள்ள எல்லா பொண்ணுங்களுக்கு அவர் ந அம்புட்டு இஷ்டம் ... பக்கத்து எஸ்டேட் மீனா கூட இவர் பின்னாடியே சுத்தும் ஆனா இவர் யார் முகத்தையும் பார்த்துகூட பேசமாட்டார் ...

அவள் பேச பேச ந வறண்டு போனது ... இவளவு நாட்கள் பழகியும் நான் எப்படி அவனை பற்றி தெரிந்து கொள்ளாமல் போனேன் ..அவன் வீட்டில் அவன் ..அவனது தம்பிகள் ....ஒரு தங்கை .. அம்மா ...அப்பா...  பாட்டி ...உண்டு என்று தெரியும் ... ஓரளவு வசதி என்று அவன் உடுத்தும் உடையிலும் அவன் கூறிய விஷயங்களை வைத்தும் யூகிக்க முடிந்தது ... 

நாங்களும் ஒன்றும் வசதிக்கு குறைந்தவர்கள் இல்லை சொந்தமான வீடு கணிசமான பாங்க் பாலன்ஸ் ...என நினைத்திருக்க ..இந்த பெண் கூறியது தலை சுற்றியது ..

இரண்டு எஸ்டேட் ... உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை ...ஜமீன் பரம்பரை ...எஸ்டேட் சங்க ப்ரெசிடெண்ட் அவன் அப்பா ... உட்க்கார்ந்து சாப்பிட்டாலும் 7 தலை முறைக்கும் இருக்கும் சொத்து ..

நினைக்கும் போது தலை சுற்றியது இதை எப்படி நான் கவனிக்காமல் போனேன் .. எப்படியோ அந்த பெண்ணை சமாளித்து அனுப்பிவிட்டு மரத்தடியில் இருந்த பென்ச் மேல் உட்கார்ந்தேன் 

தீடிர் என்று என் உலகம் தரை மட்டமாய் போனது வானம் இருட்டாகி வாழ்வே சூனியமானது .. நான் அவனை சேருவதும் சந்தோஷமாய் இருப்பதும் கடவுளுக்கே பிடிக்காமல் போனதாய் தோன்றியது .

ஒருமுடிவுடன் நான் எழுந்தேன் அவன் என்னை சந்திக்க வேண்டி குறுஞ்செய்தி அனுப்பினான் ... நான் எடுத்த முடிவுக்கு ஆயுசு கம்மி என்றும் அதை உடைக்கும் ஆயுதத்துடன் அவன் அங்கே காத்திருப்பதை நான் அறியவில்லை .

அவர்கள் அடிக்கடி சந்தித்து கொள்ளும் பூங்கா அது ...தூரத்தில் அவனை பார்த்தவள் அவனை கண்களால் விழுங்கிக்கொண்டே அடிமேல் அடிவைத்து நடந்தாள் ...

அந்தி மாலை நேரத்தில் அந்த பூங்காவின் செடிகளுக்கிடையே ஒரு மலராய் மஞ்சள் வண்ண உடையில் அவளை காணும்போதே கைகளில் ஏந்த மனம் துடித்தது......அவனுக்கு தெரியும் அவள் மனதில் அவன் நுழைந்து பல நாட்கள் ஆனதென்று ..இருப்பினும் தண்வளிடத்தில் தன் காதலை நேரடியாய் வெளிப்படுத்தும்போது கொஞ்சம் படபடப்பை இருந்தது 

அவனின் அருகே சென்றால் மூச்சே நின்றுவிடும்போல கைநிறைய ரோஜாவுடன் முகம் முழுக்க சந்தோஷத்துடன் அவனுக்கே உரித்தான புன்னகையுடன் நின்று கொண்டிருந்தான்...

என் இதயம் ஒரு நொடி நின்று துடித்தது அடுத்து என்ன நடக்கும் என யாரும் சொல்லாமலே எனக்கு புரிந்தது ... ஒரு நிமிடம் அந்த இடமே ரம்யமானது போல் ஒரு உணர்வு ...கால்கள் வலுவிலக்க அருகில் இருந்த பெஞ்சில் உட்கார்ந்தேன் ..

அதுவே வசதியாக தான் நீள கால்களை மடக்கி மண்டியிட்டு  என் முன்னே ரோஜாக்களை நீட்டி 

வாழ்நாள் முழுவதும் என்னோடு இருப்பாயா. உன் முதல் குழந்தையாக என்னைத் தத்தெடுத்துக் கொள்வாயா?. 

நீ ... நீங்க என்ன சொல்றீங்க விக்ரம் , எனக்கு ஒன்றும் புரியவில்லை. 

அவன் என்  கையைப் பற்றிக்கொண்டு, ஒவ்வொரு பெண்ணுக்கும் அவனுடைய கணவன் தான் முதல் குழந்தை, ஒவ்வொரு ஆணுக்கும் அவனுடைய மனைவிதான் இரண்டாவது தாய். உன்னை இரண்டாவது தாயாக என் மனம் ஏற்றுக்கொண்டுவிட்டது. அதே போல என்னை உன் மனம் முதல் குழந்தையாக ஏற்றுக்கொள்ளுமா?. 

காதலை எத்தனையோ விதமாகக் கூறி கேள்விபட்டிருக்கிறாள். ஏன் இவளிடமே சிலர் காதலிப்பதாகக் கூறியிருக்கிறார்கள். ஆனால் இவ்வளவு அழகாக யாருமே கூறியது இல்லை. அவன் சொல்லிய விதமும், விசயமும் மனதிற்கு பிடித்தாலும் மூளை மனதிற்கு எதிர்புரம் நின்று விவாதம் செய்தது. 

 இல்லை விக்ரம்  உன் வாழ்க்கை முறை வேறு என் வாழ்க்கை முறை வேறு. நீ  வசதியானவன், நான் சாதாரண  குடும்பத்துப் பெண். உனக்கும் எனக்கும் ஒத்துவராது. உன் வசதிக்கும் , தகுதிக்கும் ஏற்றார்போல ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள் என்று ஒரு வழியாகக் கூறி முடித்துவிட்டாள். உண்மைக்காரணமும் அதுதான். 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.