(Reading time: 18 - 35 minutes)

ம்..... நீ சொல்லும் கதையை நம்ப நான் முட்டாள்   இல்லை. பணம் ஒரு மனிதனின் தகுதியை எவ்வாறு நிர்ணயிக்கும். அப்படி நிர்ணயிக்க முடியும் என்றால் உன் குணத்திற்கும், தகுதிக்கும் ஈடாக இந்த உலகத்தில் உள்ள அத்தனை பணத்தையும் கொண்டுவந்தாலும் உனக்கு முன்னால் அது சிறு துரும்பு தான்..... ஐயோ என்னை சினிமா வசனமெல்லாம் பேசவைக்காதே என்று கூறியவன் அவள் முகத்தை தன் கைகளால் நிமிர்த்தி, என் கண்களைப் பார்த்து சொல் உனக்கு என்னை பிடிக்கவில்லை, என் மீது காதல் இல்லை என்று கேட்டு அவள் கண்களைக் கூர்ந்து நோக்கினான். 

அந்தப் பார்வை கண்களின் வழியே இதயம் சென்று நோக்கியது. அந்த கண்களைப் பார்த்து பொய் சொல்லும் திறமையற்றவளாய் பார்வையை தாழ்த்திக் கொண்டாள். 

மீண்டும் அவள் முகத்தை நிமிர்த்தினான். அவள் மனதை முகம் தெளிவாகக் காட்டியது. அதைப் புரிந்துகொண்டவன் கண்களில் குறும்பு மின்ன லேசாக புன்னகைத்தான். அதன் அர்த்தம் புரியவே முகம் சிவக்க அவன் நெஞ்சில் முகம் புதைத்தாள். அங்கிருந்த பறவைக் கூட்டங்கள், ஒரு புது காதல் ஜோடி தங்கள் கூட்டத்தில் சேர்ந்துவிட்டது என்ற எண்ணத்திலோ என்னவோ மகிழ்ச்சியில் சிறகடித்து ஆர்ப்பரித்துக் கொண்டன.

டோங் டோங் டோங் என 12 முறை அடித்த கடிகாரம் இவளை சுய நினைவிற்கு கொண்டு வந்தது .. அவன் நினைவுகள் தந்த புன்னகை நிஜம் உணர்ந்ததும் மறைய கண்ணீர் தன் வேலையை தொடங்கியது ....

ஒரு பெருமூச்சுடன் தூங்கப்போனால் ... நினைவுகளின் போராட்டம் தூங்கவிடாமல் செய்ய கடவுளை வேண்டி கொண்டே தூங்க முயன்று அதில் வெற்றியும் கண்டாள் ..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீரா ராமின் "மருவக் காதல் கொண்டேன்..." - காதல் கலந்த குடும்ப தொடர்

படிக்க தவறாதீர்கள்... 

மறுநாள் காலை விடிய மனதின் வலியுடன் அவள் வேலைகளை பார்க்க சென்றாள் ....காலத்திற்க்கு எவ்வளவு சக்தி உள்ளது ... எந்த வித வலியையும் மறக்கவைக்கக்கூடியது எந்த வித காயத்தையும் ஆற்ற கூடியது ..இவள் வரையில் காயங்கள் ஆறவில்லை .... வலி குறையவில்லை ... ஆனால் காலம் அதனுடன் வாழ கற்றுக்கொடுத்தது ... வலியுடன் சிரிக்கும் புன்னகையை கற்றுக்கொடுத்தது காலத்தினை விட சிறந்த ஆசான் இந்த உலகத்தில் இல்லை ...

அடுத்தவர் பிரச்சனைக்களுக்கு சுலபத்தில் தீர்வுகளை உரைக்கும் நமக்கு. நம் பிரச்சனைக்களுக்கு தீர்வுகளை காண்பது சிக்கலாக இருக்கிறது. ஏனேனில் அடுத்தவர் பிரச்சனைகளை நாம் தள்ளி நின்று விளையாட்டை பார்பவர்களை போல் கையாள்கிறோம். நம் பிரச்சனையை விளையாடிக்கொண்டிருப்பவர்களைப் போல் சிந்திக்கிறோம்.

மனிதனின் குற்றங்களில் பெரும்பாலானவை அவனது நாவிலிருந்துதான் பிறக்கின்றன. என் நாவில் இருந்து நான் செய்த குற்றத்திற்கு என்று விடுதலை கிடைக்குமோ ????

யோசிப்பினூடே சமையலை முடித்து கிளம்பி சிவாவை எழுப்ப .. அவள் உடம்பு நெருப்பாய் கொதித்தது ...

அய்யோ சிவா என்ன ஆச்சி என்னை கூப்பிட மாட்டாயா லூஸ் மாதிரி நீ .. என்று திட்டிக்கொண்டே அவளை  தூக்கி உட்கார வைத்தேன் .. வேர் அருந்த மரமாய் சாய்ந்தாள் ...

அவளின் நிலைமை உணர்ந்து ...அவளை வாகாக படுக்கவைத்துவிட்டு வேகமாக பாலை சூடுசெய்து எடுத்துக்கொண்டு அதனுடன் காய்ச்சலுக்கு மாத்திரையும் கொண்டுசென்று ..படுக்கையில் சாய்வாக அவளை அமர்த்தி .. மெல்ல தலை அடியில் கைகொடுத்து பாலை புகட்ட கொஞ்சமே கொஞ்சம் மட்டும் அவளால் குடிக்க முடிந்தது மற்றவை அப்படியே வாந்தி எடுத்துவிட்டாள் ... 

புடவை அலசிவிட்டு அவளையும் சுத்தம் செய்துவிட்டு ..மாத்திரை கொடுத்தாள் ..

அக்கா என்னை மன்னிச்சிடுங்க என அரற்றினாள் .... வாந்தி எடுத்ததிற்காக மன்னிப்பு என புரிந்துகொண்டு ..

ஆறுதலாக தட்டி கொடுக்க மடியில் தலை வைத்து என்னை காட்டிக்கொண்டே தூங்கிவிட்டாள்..

எதனால் இவளுக்கு எப்படி காய்ச்சல் என புரியாமல் அவளை மெதுவாக கீழே படுக்கவைத்துவிட்டு ..சங்கீதாவுக்கு கால் செய்து 

சங்கீ சிவாக்கு ரொம்ப முடியலை பா அதுனால எனக்கு இன்னைக்கு லீவ் சொல்லிவிடு ...

சரி டி நான் சொல்லிடுறேன் நீ அவளை ஹொஸ்பிடல் கூட்டிட்டிபோனாயா ???

இல்லமா இப்போதான் காய்ச்சலுக்கு மருந்து கொடுத்தேன் கொஞ்ச நேரம் கழித்து காய்ச்சல் குறையலைனா அவளை ஹொஸ்பிடல் கூட்டிட்டு போறேண்டா ... அப்டியே நேத்து மானேஜர் கேட்ட பைல் முடிச்சு என் மேஜையில் இருக்கு அதை அவர் கிட்ட குடுத்துடுமா ..

ஹே அதெல்லாம் நான் பார்த்துகிறேன் நீ சிவாவை பார்த்துக்கோ ஈவினிங் நானும் அவரும் அவளை வந்து பார்க்கிறோம்...

சரிடி என கால் கட் செய்துவிட்டு உள்ளே வந்துஅசந்து தூங்கும் சிவாவை பார்த்தாள் ...காய்ச்சலில் முகம் சிவந்துபோய் கண்களில் கண்ணீருடன் தூங்கியிருந்தாள் .... ரொம்ப காய்ச்சல் வரும்போது கண்களில் நீர் வருவது இயல்புதான் என்பதால் இவள் மற்ற வேலை பார்க்க சென்றாள் ..

வேலைகள் முடிந்தது .. அடுத்து என்ன செய்வது என்று புரியவில்லை பகலில் தூங்கி பழக்கமும் இல்லை ... டிவி போட்ட ஒரே சீரியல் .. என்ன செய்வது என்று அங்கே இருந்த ஒரு வார பத்திரிக்கை எடுத்து புரட்ட அதில் 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.